ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
10 Jul, 2025 | 10:27 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் செய்த குற்றங்களை பிறிதொரு அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில், உண்மையான நீதி வேண்டுமாயின் செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது. அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, செம்மணி மனித புதைகுழி விவ…
-
- 0 replies
- 100 views
-
-
10 Jul, 2025 | 12:24 PM இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் "அருண குமார திசாந…
-
- 0 replies
- 120 views
-
-
செம்மணி மனித புதைகுழி: இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம். செம்மணி மனித புதைகுழியில் கடந்த 15 நாட்களாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று நண்பகலுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் “தடயவியல் …
-
- 1 reply
- 118 views
-
-
10 Jul, 2025 | 07:58 PM (இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன்,விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவஞானம் முன்வைத்த கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை விரிவான பதிலளிப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற அமர்வின் போது 27/2 இல் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவி…
-
- 0 replies
- 100 views
-
-
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கம்? 10 July 2025 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, புதுக்குடியிருப்பு காவல்துறையினரால், நீதிமன்றத்திற்குச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, குறித்த பதுங்கு குழியை அகழ்வு செய்வதற்கு முன்பாக, நீதவான் நேற்றைய தினம், குறித்த இடத்திற்குச் சென்று, கள ஆய்வில் ஈடுபட்டார். நீதவானின் ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும…
-
- 1 reply
- 231 views
-
-
10 JUL, 2025 | 09:35 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கினை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உரையாற்றும் போது, இது…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
09 JUL, 2025 | 08:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசப்பற்றாளர்களின் அதிகாரத்திற்கு அச்சப்பட்டே அரசாங்கம் மனித புதைகுழிகள் விடயத்தில் கவனம் செலுத்தாது இருக்கின்றது., செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ செல்லவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாம் அனைவரும் கவலையடையும் விடயமொன்று தற்போது இடம்பெறுகின்றது. அதாவது செம்மணியில் மனித புதைகுழிகள் அகழப்படுகின்றன. தினம…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
யாழ். தையிட்டியில் கவனயீர்புப் போராட்டம்! யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டத்தில், காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsயாழ். தையிட்டியில் கவனயீர்புப் போராட்டம்!யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இ…
-
- 0 replies
- 85 views
-
-
தேசியத் தலைவருக்கு சுடரேற்றிவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்..? July 10, 2025 தேசியத் தலைவருக்கு சுடரேற்றிவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்..? இந்தப் பதற்றம் பலரை பீடித்துள்ளது என்பதை நாம் அறிகிறோம். ஏன் இந்தப் பதற்றம். தேசியத் தலைவர் தனது வீரச்சாவின் மூலம் தமிழீழக் கொள்கையினை ஒவ்வொரு மானமுள்ள தமிழர் நெஞ்சங்களிலும் ஆணியடித்தாற் போல் பதித்துவிட்டார். தமது அரசியற் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக்கொள்வோர் தேசியத்தலைவரின் வீரமாண்பை மறைத்துவிடவே முயற்சிப்பார்கள். தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றுவிட்டால் தலைவர் இறுதிவரை அடிபணியாது கட்டிக்காத்த தமிழீழக் கொள்கை ஈழத்தமிழினத்தின் அசைக்கமுடியாத அரசியற் கொள்கையாக நிலைபெற்றுவிடும். தலைவரது உயிர்த்தியாகத்தை முன்னிறுத்தியே அரசியல் …
-
- 0 replies
- 252 views
-
-
தமிழ் எம்.பி.-இன் தலையீட்டால், காணியை அபகரிக்கும் பொலிஸாரின் முயற்சி தடுக்கப்பட்டது July 10, 2025 10:47 am வடக்கில் ஒரு தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடமிருந்து உத்தரவைப் பெறுவதற்கு, ஒரு தமிழ் மக்களின் தலைவர் ஒருவர் நாடாளுமன்றம் வரை செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள தனக்குச் சொந்தமான சுமார் அரை ஏக்கர் தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்த முயற்சிப்பது குறித்து காணி உரிமையாளர் வவுனியா பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்திருந்தார். ஜூலை 7ஆம் திகதி, வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியை கையகப்படுத்தி மேம்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு பொ…
-
- 0 replies
- 177 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு இந்த அரசாங்கத்திற்குள்ளும் செயற்பட்டு வருகிறது – முஜிபுர் குற்றச்சாட்டு 10 JUL, 2025 | 10:30 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது . சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் சஹ்ரானின் மனைவி ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது, சாராவை ஒருவர் துக்கிச்செல்வதைகண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச்சென்றதை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், மேஜர் சுபசிங்கவிடம்…
-
- 0 replies
- 101 views
-
-
முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கைகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி By SRI July 10, 2025 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்ஜிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று புதன்கிழமை (09) நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்துள…
-
- 0 replies
- 159 views
-
-
அமெரிக்க வரிவிதிப்பு: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல் Editorial / 2025 ஜூலை 10 , மு.ப. 11:01 அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய அதிகாரிகளுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கலந்துரையாடலில், வியாழக்கிழமை (10) ஈடுபட்டார். முன்மொழியப்பட்ட அமெரிக்க இறக்குமதி வரிகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது, இது ஆரம்பத்தில் இலங்கை ஏற்றுமதிகளில் 44 சதவீதத்தை பரிந்துரைத்தது, பின்னர் அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-வரிவிதிப்பு-ஜனாதிபதி-அவசர-கலந்துரையாடல்/175-360822
-
- 0 replies
- 130 views
-
-
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 30 ஆண்டு நினைவேந்தல்! adminJuly 10, 2025 யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைறைய தினம் புதன்கிழமை (09.07.25) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 ப…
-
- 0 replies
- 75 views
-
-
சர்வதேச விசாரணை குறித்து நீதி அமைச்சருக்கு விளக்கிய சாணக்கியன்! செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். எனினும் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாணக்கியன் தெரிவித்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” ‘மாண்புமிகு நீதி அமைச்சர் அவர்களே, இலங்கையின் சட்டத்தின் கீழ், சர்வதேச விசாரணை நடைபெறக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான வழிகள் உள்ளன. இதற்கான OMP ச …
-
- 0 replies
- 82 views
-
-
செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்! adminJuly 10, 2025 யாழ்ப்பாணம் செம்மணியில் இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் அகழ்வாய்வு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த புதைகுழியில் இருந்து நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (08.07.25) வரையில் 56 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 50 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அந்நிலையில், செய்மதி படங்களின் அடிப்படையில் அருகிலுள்ள ஒரு பகுதியும் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் த…
-
- 0 replies
- 91 views
-
-
அதிகரித்து வரும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை! நாட்டின் சிறைச்சாலைகளில் அதிகளவிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்” சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை மட்டும் அடைக்கும் வசதி உள்ளபோதும், தற்போது 33,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.” கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது ” சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பற்றாக்குறை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு சிறைவாசம் குறைக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் இந்த நாடு …
-
- 0 replies
- 64 views
-
-
நிலவிவரும் வறட்சியான காலநிலை! நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நிலவும் வறட்சியான காலநிலையினால் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதோடு நீரின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. எனவே, குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு…
-
- 0 replies
- 107 views
-
-
பால்மாவின் விலை அதிகரிப்பு! இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால் மா பொதியொன்றின் புதிய விலை 1,200 ரூபாயாகும். அதேபோல், 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438673
-
- 0 replies
- 103 views
-
-
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த அதிசொகுசு கடுகதி ரயில், நாளை (7) முதல் கல்கிஸ்ஸ மற்றும் காங்கேசன்துறை இடையே தினமும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு இணையாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு தினமும் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் யாழ்தேவி ரயில் புறப்படும் நேரமும் நாளை முதல் திருத்தப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து ரயில் புறப்படும் நேரம் காலை 6.40 மணியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒ…
-
-
- 6 replies
- 545 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 03:59 PM செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும், இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன், அதில் சர்ச்சைக்குரிய விடையங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும். செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் ந…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை! வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தை கடுமையான விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் உரையாற்றிய அவர், மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்களை (LCs) திறந்துள்ளது. இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டி…
-
- 1 reply
- 183 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 JUL, 2025 | 04:00 PM ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சம்பள விபரத்தை இவ்வாறு பகிரங்கப்படுத்தியமை இதுவே முதல் தடவையாகும். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாத சம்பளம் (கழிவுகள் போக) 3 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும். ஆரம்பத்தில் எனது சம்பளத்தை ஏற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. பின்பு அதை சமூக சேவைகளுக்கு செலவிட நான் முடிவு செய்தேன். எனக்கு சம்பளம் அவசியமில்லை நான் ஒரு வர்த்தகர் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/…
-
- 2 replies
- 193 views
- 1 follower
-
-
அறுகம்பையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு! இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இலங்கை அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம், பொலிஸார் மற்றும் கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. மேலும் முக்கிய சந்திகள், வர்த்தக நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 121 views
-
-
வடக்கில் பொலிஸாரின் டிப்பர்களில் மணல் கடத்தல்? வட மாகாணத்தில் இடம்பெற்று வரும் சில சட்ட விரோத மணல் கடத்தல் சம்பவங்களில் பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மா…
-
- 0 replies
- 129 views
-