ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142652 topics in this forum
-
Published By: VISHNU 13 MAY, 2025 | 02:09 AM யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவரை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணாது உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர் தாயாரின் வீட்டிற்கு பின்னால் சடலமாக காணப்பட்டார். அவரது சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை ஊசி மூலம் ஹெரோயின் பாவித்ததன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின்…
-
-
- 3 replies
- 254 views
- 1 follower
-
-
13 MAY, 2025 | 02:21 PM காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கண்ணீர் சிந்திய எத்தனையோ கண்கள் இன்று மூடி விட்டன. இன்னும் எத்தனை கண்கள் மூடப் போகின்றதோ தெரியாது. இதற்கு சர்வதேசம் என்ன பதில் சொல்லப் போகின்றது? என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (13) மதியம் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி நினைவு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும்…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-
-
13 MAY, 2025 | 04:19 PM வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று (13) அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஈழத் தமிழர்களின் அரசியல் எழுச்சியையும், அதன் தாகத்தையும், அதற்கான போராட்ட வலிமையையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்க சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாரிய போர் தொடுத்து இறுதியில் இனப்பட…
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
12 MAY, 2025 | 11:18 PM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டார். அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கிடையாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (12) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக…
-
- 1 reply
- 321 views
- 1 follower
-
-
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையினை உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே நடந்துகொள்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல்கைதிகளுக்கான நீதியான நடவடிக்கைகள், தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது என்ற விடயத்தினை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டக்கள…
-
- 0 replies
- 131 views
-
-
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம் – கஜேந்திரகுமார் May 13, 2025 10:04 am பெரும்பாண்மையை பெறாத உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய பேரவையின் நிலைப்பாடுகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது குறிப்பிட்ட அவர், ‘ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கடந்த உள்ளுராட்சித் தேர்தலை தம் தனியே சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்தார்கள். தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழ்த் தேசிய பேரவையுட…
-
- 0 replies
- 128 views
-
-
வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் By Admin May 10, 2025 யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (8) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பழம் வீதியில் உள்ள வைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. அன்றிரவு சுவாமி வெளிவீதியுலாவின் போது வானவேடிக்கைகள் இடம்பெற்ற வேளையில் அதிலிருந்து பறந்த தீப்பொறி அரங்காலய மேற்கூரையில் பட்டு எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும், பொலிஸாருக்கும், அரங்காலய நிர்வாகத்தினருக்கும் அறிவித…
-
-
- 4 replies
- 227 views
-
-
Published By: DIGITAL DESK 2 10 MAY, 2025 | 04:47 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 4 பெண் சிறைக்கைதிகளும், 384 ஆண் சிறைக்கைதிகளும் உள்ளடங்குகின்றனர். வெசாக் பௌர்னமி தினத்தன்று இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 40 கைதிகளும், வாரியப்பொல சிறைச்சாலையிலிருந்து 38 கைதிகளும், அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 36 கைதிகளும், மஹர சிறைச்சாலையிலிருந்து 30 கைதிகளும் உள்ளடங்களாக 388 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். …
-
-
- 17 replies
- 548 views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 MAY, 2025 | 07:33 PM குருந்தூர்மலை அடிவாரத்தில் தமது பூர்வீக விவசாய நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 10.05.2025 அன்று தமிழ் விவசாயிகள் மூவர் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபோது, தொல்லியல் பகுதிக்குள் பண்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பௌத்த பிக்குகள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிசார் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் குறித்த நிலங்கள் முழுவதும் தமிழ் மக்களின் நிலங்கள் எனக்குறிப்பிட்டுள்ள வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தொல்லியல் பகுதிக்குள் குறித்த விவசாயிகளால் பண்படுத்தல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தா…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தை உதாசீனப்படுத்துகின்றது - மட்டக்களப்பில் தமிழ் இன அழிப்பு வாரத்தை ஆரம்பித்து வைத்து சிறிநாத் தெரிவிப்பு 12 May, 2025 | 01:27 PM தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கும் தமிழ் மக்கள் இந்த நாட்டிலே நியாயமான உரிமைகளும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் நடந்துகொள்கின்றதென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளுக்கான நீதியான நடவடிக்கைகள், தாயக நிலங்கள் விடுவி…
-
- 0 replies
- 97 views
-
-
12 May, 2025 | 05:01 PM வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள் திங்கட்கிழமை (12) நடைபெற்றன. விமான நிலைய பணியாளர்களின் ஏற்பாட்டில் வெளிச்சக் கூடுகளினால் விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், விமான பயணிகளுக்கு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன. வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள் | Virakesari.lk
-
- 0 replies
- 168 views
-
-
தேசிய பேரவையின் கலந்துரையாடல்! http://seithy.com/siteadmin/upload/tnc-120525-seithy.jpeg தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர்களுக்கும் தலைமைகளுக்கும் இடையிலான யாழ் மாவட்ட சந்திப்பு நேற்று (11) யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கிறிஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசிய பேரவையின் தேர்தல் கால சவால்கள், எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன் பொழுது தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம் , பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தல…
-
- 0 replies
- 195 views
-
-
12 MAY, 2025 | 02:20 PM இத்தாலிய கப்பலான AIDAstella சொகுசு கப்பல் திங்கட்கிழமை (12) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மலேசியாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (11) இரவு அம்பாந்தோட்டையை வந்தடைந்த இந்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 254 மீட்டர் நீளமுள்ள AIDAstella சொகுசு கப்பல் திங்கட்கிழமை (12) இரவு மாலைத்தீவை சென்றடையவுள்ளது. AIDAstella சொகுசு கப்பல் 2022 சுற்றுலா பயணிகளையும் 628 பணியாளர்களையும் கொண்டுள்ளது. இந்த கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் திங்கட்கிழமை (12) இரவு கொழும்பு, பின்னவல, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளனர். https://www.virakesari.lk/article/214520
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
12 MAY, 2025 | 01:05 PM இறுதி யுத்தத்திலே கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்றைய காலத்திலே தற்போதைய அரசும் கடந்த கால சூழ்நிலைகளை அவதானிக்கின்ற போது போரிலே இறந்த அனைவருக்குமான ஒரு பொது நினைவுத் தூபி ஒன்றை அமைக்க திட்டமிடுறார்கள். அதுவும் முள்ளிவாய்க்காலிலே நாங்கள் நிறுவ இருக்கின்…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் - எம்.ஏ சுமந்திரன் ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும். அந்த கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளிக்குமாறு தமிழ்க் கட்சிகளிடம் விநயமாக கோருவதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (10) இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி தேர்தலில் 58 சபைகளில் தேர்தலில் போட்டியிட்டோம. ஆகக் குறைந்தது 35 சபைகளில் நாம் தனிப்பெரும் கட்சியாக உறுப்பினர்களை பெற்றுள்ளோம…
-
-
- 3 replies
- 338 views
-
-
12 MAY, 2025 | 10:08 AM மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (09) கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை சித்தங்கேணிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்புக்கு வருகைதரும் மாணவன் ஒருவர் 'பட்டப் பெயர்' கூறி அழைத்ததாகத் தெரிவித்து மாணவரை ஆசிரியர் வகுப்புவேளையில் அடித்துத் தாக்கியுள்ளார். இந்தநிலையில் மாணவனின் பெற்றோர் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது கைதுசெய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியரை எதிர்வரும் செவ்வாய்க்கி…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
09 MAY, 2025 | 05:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவியின் விவகாரத்தில் முதல் சம்பவம் இடம்பெற்றபோது அது முறையாக ஆராயப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயம் குறித்தும், ஆசிரியர் தொடர்பிலும் ஏன் கல்வி அமைச்சுக்கு முறையாக அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோர அமைச்சுக்கு முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற அமர்வின்போது கொழும்பு பாடசாலையின் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை மற்றும் நீதி கோரி பொதுமக்கள் போராட்டத்…
-
-
- 4 replies
- 377 views
- 1 follower
-
-
அரசாங்கத்துக்கு எதிரான சபைகளை நிறுவ எதிர்க்கட்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு! பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன. ஏனைய கட்சிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமான சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் இலட்சத்தில் அதிகரித்துள்ள நிலையில…
-
- 0 replies
- 161 views
-
-
11 MAY, 2025 | 11:16 AM (லியோ நிரோஷ தர்ஷன்) பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கவும், அதற்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நீக்காது திருத்தங்களை கொண்டு வரவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நீண்டகாலமாக உள்ளது. குறிப்பாக விடுதலை புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போர் 2009 ஆம் ஆண்டில் நிறைவடைந்த பின்னரும் இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி…
-
- 1 reply
- 223 views
- 1 follower
-
-
11 MAY, 2025 | 11:52 AM யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன், அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய முகாம் சனிக்கிழமை (10) நடைபெற்றது. அதன் போது, நூற்றுக்கணக்கானவர்கள் விசேட வைத்திய நிபுணர்களை சந்தித்து, தங்களுடைய நோய் நிலைகளுக்கான சிகிச்சைகளையும், தொடர்ந்து மேலதிக சிகிச்சை பெறுவதற்கான வழிமுறைகளையும் பெற்றுள்ளனர். இந்த மருத்துவ முகாமிற்கு யாழ் பிராந்திய கடற்படை தலைமையகம், கனடா அனலைதீவு ஒன்றியம் மற்றும் பல அமைப்புகள் அனுசரணை வழங்கியிருந்தன. https://www.virakesari.lk/article/214419
-
-
- 1 reply
- 178 views
- 1 follower
-
-
10 MAY, 2025 | 04:46 PM அரசியலமைப்பு பேரவையின் செயலாளராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட விடயங்கள் காரணமாக இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்மிக்க தசநாயக்க கடந்த 2023ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அதே ஆண்டில் அரசியலமைப்பு பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214379
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
10 MAY, 2025 | 05:22 PM பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டாண்மையின் புதுப்பிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/214386
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 10 MAY, 2025 | 07:51 PM கம்யூனிசம், சோசலிசம், பெரியாரியம் என்று காலத்துக்குக் காலம் மனுக்குலத்தை வழிநடத்துவதற்காக கோட்பாடுகள் உருவாகி வந்துள்ளன. தற்போது மானுடத்தையும் தாண்டி ஒட்டுமொத்த உலகையுமே உய்விக்க வந்த பெருங்கோட்பாடாகச் சூழலியம் உருவெடுத்துள்ளது. மாணவர்கள் சுற்றுச்சூழலை சூழலியற் கல்வியின் ஊடாக மாத்திரம் அணுகாமல் சூழலியம் என்ற சித்தாந்தத்தின் ஊடாகவும் அணுக முன்வரவேண்டும். அதுவே உலகளாவிய ரீதியில் நாம் இன்று எதிர்கொண்டுள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளைத் தரும் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் 2027 பிரிவு பயிலுகின்ற மாணவர்களுக்கான …
-
- 0 replies
- 72 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரும் பங்கேற்க வேண்டும் - மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் கோரிக்கை 10 MAY, 2025 | 09:39 PM வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமது கைகளினால் உறவுகளை வழங்கிய உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும். எதிர்வரும் மே 12 தொடக்கம் 18 வரையில் உயிர் நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஜனாதிபதி வரலாறு தெரியாத எங்கள் இளம் சமூகத்திடம் தன்னை நல்லவராக காட்டும் செயற்பாட்டினையே முன்னெடுத்துவருகின்றார். …
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 10 MAY, 2025 | 07:52 PM யாழ் மாவட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் ஒரு பக்கெட் உப்பு 179 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருலிங்கநாதன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது. எனவே 179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை பொதுமக்கள் இன்று சனிக்கிழமை (10) முதல் கொள்வனவு செய்ய முடியும். பொதுமகன் ஒருவர் ஆகக் கூடியது 3 உப்பு பக்கெட்களையே கொள்வனவு செய்ய முடியு…
-
- 0 replies
- 76 views
- 1 follower
-