ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
மைத்திரி, கோத்தா கொலைச் சதி – ரிஐடியிடம் இருந்து இரு எல்எம்ஜி துப்பாக்கிகள் மீட்பு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டமை குறித்து விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகள் (எல்எம்ஜி) கைப்பற்றப்பட்டுள்ளன. பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட இந்த இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகளும், கொலைச் சதிக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிக்கு இலகு இயந்திரத் துப்பாக்கிகள் தேவையில்லை என்ற போதும், இவை அந்தப் பிரிவின் ப…
-
- 0 replies
- 272 views
-
-
மேலும் 69 சீனக்குடா எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் திருகோணமலை- சீனக் குடாவில் உள்ள 85 எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவின் உதவியுடன், கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய, சீனக்குடாவில் உள்ள, 85 மேல் நிலை எண்ணெய் தாங்கிகள், சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், லங்கா இந்தியன் ஓயில் நிறுவனமும் இணைந்து உருவாக்கும், கூட்டு துணை நிறுவனம் ஒன்றின் மூலம் அபிவிருத்தி செய்யப்படும். அபிவிருத்தி செய்யப்படும் 85 மேல் நிலைத் தாங்கிகளில் 16 தாங்கிகள், பின்னர் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வழங்கப்படும். எஞ்சிய 69 தாங்கிகளையும், லங்கா இந்த…
-
- 0 replies
- 279 views
-
-
போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை - மக்கள் ஆர்ப்பாட்டம் இரத்தினபுரி - கொலுவாவில - பாம்காடன் தோட்ட பிரதேசத்தில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா தலைமையில் நேற்று பகல் பாம்கார்டன் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் பெருந்திரலான தோட்ட மக்கள் கலந்து கொண்டனர். மேற்படி ஆர்ப்பாட்டம் சில மணி நேரம் இடம்பெற்றது. சந்தேகநபரை உடனடியாக கைதுசெய்வதாக. பொலிஸார் உறுதியளித்ததையடுத்து ஆரப்பாட்டம் கைவிடப்பட்டது. …
-
- 3 replies
- 851 views
-
-
இடமாற்றம் வழங்காமையால் அபிவிருத்தி உத்தியோகத்தர் நஞ்சருந்தி தற்கொலை மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்காத விரக்தியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்தி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குச் சென்று மேலதிக மாவட்டச் செயலரைச் சந்தித்து வெளியில் வந்து அவர் தனது உயிரை மாய்த்துள்ளார். புதிய உயர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவரான தில்லையம்பலம் கஜேந்திரகுமார் (வயது -32) என்ற அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது நண்பர்கள் …
-
- 2 replies
- 1.3k views
-
-
சம்மந்தன் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டுமானால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் ; சுரேஷ் தமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு சிறந்த தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் தனது எதிர் கட்சி தலைமை பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டுமென மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லையாயின் தமிழ் கூட்டமைப்பின் தலைவரும்; எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் சிறந்த தலைவராகவும் இருக்கவேண்டுமாக இருந்தால் அவர் இந்த தமிழ் மக்களுக்காக தனது எதிர்கட்சி பதவியையும் பா…
-
- 0 replies
- 460 views
-
-
வடமாகாண முதல்வர் தொடர்பில் வெளிவந்த பரபரப்புத் தகவல்! வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் கட்சியொன்று அடுத்த மாதமளவில் உதயமாகவிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகையொன்று இன்றைய தினம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குப் பதிலாக வடமாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்காக இந்தப் புதிய கட்சி உருவாக்கப்படவிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தேஷய என்கிற சிங்கள வார இறுதிப் பத்திரிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இந்தப் புதிய கட்சியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் சிலவும் இணைந்து செயற்படவிருப்பதாகவும் க…
-
- 0 replies
- 787 views
-
-
டக்ளசின் அண்மைய செவ்விக்கு கஜேந்திரன் அவர்களின் பதில்
-
- 0 replies
- 395 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை: சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பற்ற கால தாமதமே காரணம் – சுமந்திரன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பற்ற கால தாமதம் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்படாதுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். “மேலும் குற்றவாளிகளாக அவர்கள் காணப்பட்டாலும் கூட அவர்கள் தொடர்ந்தும் இவ்வளவு வருடங்கள் சிறையில் இருப்பது பற்றி சட்டமா அதிபருக்கு தெளிவுபடுத்தி, அவர்கள் கேட்டும் புனர்வாழ்வினை எடுத்துக்கொடுக்க முடியும். அவ்வாறு அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆட்சி வந்த பின்னர் விடுவிக்கப்பட…
-
- 0 replies
- 537 views
-
-
நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளை நடத்த தடை -எஸ்.நிதர்ஷன் தியாகி திலீபன் நினைவேந்தல் காலத்தில், யாழ்ப்பாணம் மாநகர சபை நியாயாதிக்க எல்லையினுள் வேறெந்த நிகழ்வையும் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று, யாழ்ப்பாணம் மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில், நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில், மாநகர சபை உறுப்பினர்களுக்கான ஒழுங்குபடுத்தல் கூட்டம், இன்று காலை யாழ். மாநகர சபையில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் ஒருவரால், “தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை ஒழுங்குபடுத்தும் அதேவேளை, மாநகர சபை எல்லையினுள் நிகழ்வொன்றை நடா…
-
- 0 replies
- 471 views
-
-
தொடருந்து நிலையத்தில் தீ -கொழும்பில் பதற்றம்!! கொழும்பு – தெமட்டகொட தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தொடருந்தின், இரண்டு தொடருந்துப் பெட்டிகளில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை. https://newuthayan.com/story/14/தொடருந்து-நிலையத்தில்-தீ-கொழும்பில்-பதற்றம்.html
-
- 0 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பில் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்து, போலி ஆவணங்களுடன் தமிழர்களுக்கே விற்பனை! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்… கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து, அவற்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து, மீண்டும் தமிழ் மக்களுக்கே அதனை விற்பனை செய்யும் மோசடிகள் இடம்பெறுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கேந்திர முக்கியவத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்த மோசடிகள் இடம்பெறுவதாகவும் இதற்கு அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் துணையிருப்பதாகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். பாசி…
-
- 0 replies
- 497 views
-
-
அரசியல் தீர்வினை அடையவே முயற்சி மங்கள முனசிங்க யோசனையை தமிழ் கட்சிகள் ஏற்றிருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும் என்கிறார் பிரதமர் (ஆர்.யசி) மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து முன்வைத்த யோசனைகளுக்கு அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த ஆட்சியில் மீண்டும் தீர்வு குறித்த நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றோம். இதில் சகலரதும் இணக்கப்பாடு ஏற்படும் நிலையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி தீர்வு காண முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட…
-
- 0 replies
- 379 views
-
-
மட்டு. படுகொலை செய்யப்பட்ட 33பேரின் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் படையினரினால் படுகொலை செய்யப்பட்ட 33பேரின் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி படையினரின் உதவியுடன் ஊர்காவல் படையினரால் படுகொலைசெய்யப்பட்ட 33பேரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த படுகொலை சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 33பேர் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையினை நினைவுகூரும் வகையில் சவுக்கடியிலுள்ள உயிர்நீர்த்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது இதன்போது படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கு இ…
-
- 0 replies
- 398 views
-
-
''சிலர் பிரிந்துபோக விரும்புவதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு'' எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விசேட செவ்வி வட மாகாண சபை தொடர்பில் ஒரு பொதுவான அபிப்பிராயம் உள்ளது. அதாவது இன்னும் கூடுதலான கருமங்களை வட மாகாண சபையில் நிறைவேற்றியிருக்கலாம் என்ற ஒரு அபிப்பிராயம் காணப்படுகின்றது. அந்தவகையில் இன்னும் கூடுதலான கருமங்கள் நடைபெற்றிருந்தால் அது எங்களுக்கு சந்தோஷத்தை தந்திருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு: க…
-
- 0 replies
- 615 views
-
-
“நிமால் சிறிபால சொன்னதை கேட்டதும் மோடியின் முகம் மாறியது” இந்திய பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் தேசிய சகவாழ்வு, அரச கருமமொழிகள் மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் விசேட செவ்வி . அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விட்டு வந்துள்ளனர். இதில் தமிழ் பேசும் தலைவர்களான சம்பந்தன் மனோ கணேசன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து அறிய வேண்டிய தேவை தமிழ…
-
- 0 replies
- 448 views
-
-
ரணிலை போன்று ரவீந்திர வாக்குமூலம் வழங்குவார் கைது செய்ய அவசியம் இல்லை என்கிறார் சட்டம் ஒழுங்கு அமைச்சர் (எம்.எப்.எம்.பஸீர்) ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப் பட்ட விவகாரத்தில் சந்தேகநபர் தப்பிக்க உதவிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத் னவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியம் வழங்கியதைப் போன்று, அட்மிரல் ரவீந்திர சி.ஐ.டி.க்கு வாக்குமூலம் வழங்குவார் என வும் அவர் மேலும் கூறினார…
-
- 0 replies
- 385 views
-
-
பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி… வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. புகையிரதம் வரும் வேளை காரில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன் போது காரில் பயணித்தவர்களில் நால்வர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தானர். இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். …
-
- 25 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சியில் பௌத்த சின்னங்கள் அழிப்பாம் – சபையில் சீறியது மகிந்த அணி!! வடக்கில் பௌத்த புராதன மற்றும் தொல்பொருளியல் சிறப்புமிக்க இடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக மகிந்த அணி நாடாளுமன்றத்தில் நேற்றுக் குற்றம் சுமத்தியது. கிளிநொச்சியில் பௌத்த தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தது. அது தவறானது என்று பதிலளித்த இராஜாங்க அமைச்சர், வடக்கை விட அநுராதபுரத்திலும், குருநாகலிலுமே அதிகளவு சின்னங்கள் அழிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட் டார். நாடாளுமன்றத்தில் மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன நிலையியற் கட்டளை…
-
- 0 replies
- 280 views
-
-
பிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி! பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மிகப் உயரிய விருதான செவாலியே விருது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெறுகின்றார். பிரான்சின் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சார்பாக பிரஞ்சு தூதுவர் ஜீன் மரின் சூ வழங்கினார். பாரிஸ் பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தில் அவர் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ம…
-
- 17 replies
- 2.7k views
-
-
ஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன் கடத்தப்பட்டார் ; சி.ஐ.டி.யினர். பரபரப்பு தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் டிபெண்டர் வண்டியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சி.ஐ.டி.க்கு கிடைத்துள்ள தகவலை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்னாயக்க, வசீம் தாஜுதீன் விவகாரத்தை விசாரணை செய்யும் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை குறித்த விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்குஹெட்டி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் மு…
-
- 2 replies
- 636 views
-
-
எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு தமிழ் அரசுக் கட்சியின் பழிவாங்கலே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்தியதாக தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் காழ்புணரச்சியாலும் பழிவாங்கலாலும் உந்தப்பட்டதே என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டு வழக்கில், சட்டத்தரணி வி.மணிவண்ண…
-
- 1 reply
- 371 views
-
-
சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சுமந்திரன் சமஷ்டி முறைமையைச் சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஆதவன் செய்திப் பிரிவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய பிரத்தியேக பேட்டியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரையான காலப்பகுதியில் நான் சிங்களப் பிரதேசங்களில் சமஷ்டி குறித்து பேசியபோதெல்லாம் அதற்கு ஆதரவாகவே சிங்கள மக்களின் தரப்பிலிருந்து அவர்களின் கருத்துக்கள் வெளிப்பட்டிருந்தன. சமஷ்டி முறைமையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா எனவும்…
-
- 5 replies
- 1.1k views
-
-
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த – அரசியல் கைதிகள் இருவர் மருத்துவமனையில்!! அநுராதபுரம் சிறைச் சாலையில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள இரண்டு அரசியல் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்றுச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒரு வரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகளின் உடல் நிலையும் பாதிப்புக்குள்ளான நிலையில் உள்ளதாகவும், அவர்களைச் சிகிச்சை பெறுமாறும் மருத்துவமனை வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளன. 9 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்ம…
-
- 0 replies
- 346 views
-
-
வலிகாமம் வடக்கிலும் மாட்டிறைச்சிக்கு தடை? வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்பகுதியில் மாட்டிறைச்சிக்குத் தடைகோரி சபை உறுப்பினர் என்.புரட்சிதாசனால் தீர்மான வரைபு கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மான வரைவு தொடர்பில் பின்னர் பரிசீலிக்கலாம் என்று சபை தெரிவித்தது. வலிகாமல் வடக்கு பிரதேச சபையின் இந்த மாதத்துக்கான அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன்போதே இவ்வாறான தீர்மான வரைவு கொண்டு வரப்பட்டது. ‘பல்வேறு ஆலயங்கள் காணப்படும் இந்தப் புனித பூமியில் பசுவதையை இல்லாமால் செய்ய வேண்டும். சபை எல்லைக்குள் மாட்டி றைச்சிக் கடைகளை இல்லாமல் செய்து இந்தப் பகுதியை புனித பூமியாக மாற்ற முன்வர வேண்டும்’ என்று தெரிவித்தே தனது தீர்மான வரைபை புரட்சிதா…
-
- 0 replies
- 425 views
-
-
அரசியல் கைதிகளுக்காக போராடுவது ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் கடமை: சிவாஜிலிங்கம் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் கடமை என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது. குறித்த போராட்டத்தில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மாகாண சபை உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர…
-
- 0 replies
- 381 views
-