ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
எதிர்க் கட்சி தலைவர் பதவியில் மாற்றம் வேண்டாம்; அமைச்சர் மனோ அதிரடி புதிய அரசியலமைப்பு ஊடாக, தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் வரை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அமைச்சர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க் கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினருக்கு உரிமை இருக்கிறது. எனினும் அதனை யாருக்கு வழங்குவது என்பதை சபாநாயகர் கருஜயசூரியவே தீர்மானிப்பார் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள சுதந்திர சதுர்க்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும…
-
- 0 replies
- 361 views
-
-
வாள்கள், துப்பாகியுடன் எட்டுப் பேர் கைது- மானிப்பாய் பொலிஸார் அதிரடி!! வாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் எட்டுப் பேரை இன்று மாலை மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. சிவில் உடையில் வந்த மானிப்பாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாயிலிருந்து வந்த பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/17/வாள்கள்-துப்பாகியுடன்-எட்டுப்-பேர்-கைது-மானிப்பாய்-பொலிஸ…
-
- 2 replies
- 571 views
-
-
திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் நண்பர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய முயற்சி சாத்தியமாக அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க நான் தயாராக உள்ளேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் சுவாமிநாதனுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, …
-
- 1 reply
- 195 views
-
-
சட்ட விரோதமாக மீன்பிடித்தோரை – உபசரித்து அனுப்பிய பொலிஸார்!! முல்லைத்தீவுக் கடலில் நேற்று அதிகாலை பெரும்பான்மையின மீனவர்கள், கடற்தொழில் அமைச்சின் உத்தரவையும் மீறி தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடியில் ஈடுபட்டனர். அவர்களைப் பிரதேச மீனவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்கள். பொலிஸார் அவர்களுக்கு உணவளித்து, அறிவுரை கூறி விடுவித்துள்ளார்கள். இவ்வாறு உள்ளூர் மீனவர்கள் குற்றஞ்சாட்டினர். முல்லைத்தீவுக் கடலில் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தனர் என்று தெரிவித்து பெரும்பான்மையின மீனவர்கள் மூவர் பிரதேச மீனவர்களால் பிடிக்கப்பட்டனர். அவ…
-
- 1 reply
- 504 views
-
-
வடக்கில் அதிகரிக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய விடயமல்ல: முதலமைச்சர் வடபகுதியில் வாழுகின்ற மக்கள் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற மக்களின் தேவைகளை விட அதிக அளவு தேவைகளையுடையவர்கள். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பல தேவைகளை அவர்கள் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'உத்தியோகபூர்வப் பணி' ஜனாதிபதி மக்கள் சேவையின் 8வது வேலைத்திட்டம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், எமது மக்களில் பலர் போரின் விளைவாக உயிர் இழப்புக்களையு சந்தித்தது ஒருபுறமிருக்க, …
-
- 78 replies
- 7.6k views
-
-
வவுனியா வர்த்தக சங்கத்தின் அதிரடி நடவடிக்கையினால் ஸ்தம்பிதம் அடைந்துள்ள வவுனியா நகரம் வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரால் வியாபார நிலையங்களுக்கு துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன் பிரதிபளிப்பாக இன்றையதினம் வவுனியா நகரிலுள்ள 95 வீதமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தனர். மூடப்படாத வர்த்தக நிலையங்களுக்கு வர்த்தக சங்க உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டு வர்த்தக நிலையத்தினை மூடி ஒத்துளைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இந் நிலையில் இன்றையதினம் கால…
-
- 1 reply
- 534 views
-
-
வைத்தியசாலைக்குள் தோண்டப்பட்ட பாரிய குழி; அதிர்ச்சியடைந்த பொலிஸ்! (புதிய புகைப்படங்கள் இணைப்பு) மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலுள்ள ஆயுர் வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் மற்றும் கோயில் ஐயர் உட்பட ஐந்துபேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விளக்கமறியல் உத்தரவை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் ஒன்பதாம் நாள் வரை என குறிப்பிட்டு கட்டளையிட்டது. வாகரை கண்டலடியில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டிடத்திற்குள் புதையல் தோண்டப்படுவதாக வாகரைப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்படி வைத்தியசாலைச் சூழலை சுற்றிவளைத்த பொலிஸார் சனிக்கிழமை அதிகாலை இந்த ஐவரையும் கைது செ…
-
- 0 replies
- 579 views
-
-
வடமாகாண சபையில் தொடரும் ஊழல்! துணை நிற்பவர்கள் இவர்களா?...டெனிஸ்வரன்
-
- 0 replies
- 350 views
-
-
நாமலுக்கு நிமல் கூறிய யோசனை (ஆர்.ராம்) முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும், அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு தனிப்பட்ட விடயமொன்றுக்காக தொலைபேசி அழைப்பொன்றை எடுத்துள்ளாராம். இச்சமயத்தில் குறித்த விடயம் சம்பந்தமான பேச்சுக்கள் நிறைவடைந்ததையடுத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பான வேட்பாளர் தொடர்பாக பேச்சுக்கள் நிகழ்ந்துள்ளன. அத்தருணத்தில் அமைச்சர் நிமல், கோத்தாபய ராஜபக் ஷவினை வேட்பாளராக களமிறக்கினால் அனைவரினது ஆதரவினையும் பெறு…
-
- 0 replies
- 338 views
-
-
பன்னாட்டுச் சமூகத்தின் தலையீடு மீதான எதிர்பார்ப்பு!! புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டால் மாத்திரமே நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும், கடும்போக்காளர்களின் கருத்துக்கு அஞ்சி புதிய அரசமைப்பு உருவாக்கப்பணிகளை அரசு தாமதப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இலங்கைக்கு வந்துள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் பட்ரிஸியாஸ் காட்லாண்ட் தன்னைச் சந்தித்தபோது இந்தக் கருத்துக்களைச் சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றதன் பின்ன…
-
- 0 replies
- 427 views
-
-
மணிவண்ணனுக்கு- இடைக்காலத் தடை!! யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன் சபை அமர்வுகள் பங்கேற்பதற்கு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. http://newuthayan.com/story/13/மணிவண்ணனுக்கு-இடைக்காலத்-தடை.html
-
- 2 replies
- 882 views
-
-
வாள்வெட்டுக் குழு கைது- நாளை பரீட்சை எழுதுபவர்களும் உள்ளடக்கம்!! மானிப்பாய் பொலிஸார் சிவில் உடையில் மறைந்திருந்து எட்டுப் பேரைக் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்டவர்கள் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடமிருந்து 3 வாள்கள், இரண்டு உந்துருளிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு (ஏ.எல்) தோற்றவுள்ளவர்கள் என்றும் மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டார்கள். யாழ்ப்பாண மாவட்டத்…
-
- 0 replies
- 558 views
-
-
பஞ்சாயத்து சபையை போன்றதே எங்கள் மாகாண சபை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 2009 ஆம் ஆண்டின் பின்வந்த எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றவில்லை எனக்கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ் மக்களின் அபிவிருத்தி பற்றிப் பேசும் அரசாங்கங்களால் ஏன் ஒரு தொழிற்சாலையைக் தமிழர் பகுதிகளில் நிறுவமுடியவில்லை என்று கேள்வியெழுப்புகின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் தமிழர்கள் பொருளாதார…
-
- 0 replies
- 603 views
-
-
விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளிற்கு எதிரான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளின் கீழ் ஐரோப்பிய ஓன்றியம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. விடுதலைப்புலிகளால் தொடர்ந்தும் ஆபத்து உள்ளது என்பதை ஐரோப்பிய ஓன்றியத்தின் 28 உறுப்புநாடுகளும் ஏற்றுக்கொள்ள செய்துள்ளோம் என பிரசல்ஸிற்கான இலங்கையின் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். பிரசல்ஸில் தொடர்ச்சியாக சந்திக்கும் பயங்கரவாத எதிர்ப…
-
- 0 replies
- 320 views
-
-
அமெரிக்காவின் பாதுகாப்பு உதவித் திட்டத்தில் சிறிலங்கா இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு உறவுகளை முன்னேற்றுவதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட 27 நாடுகளுக்கு சுமார் 300 மில்லியன் டொலர் பாதுகாப்பு உதவிகளை வழங்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் பம்பியோ அறிவித்துள்ளார். வொசிங்டனில் நேற்று நடந்த ஆசியான் பிராந்திய அமைப்பின் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த திட்டத்தின் கீழ், சிறிலங்கா, பங்காளதேஷ், இந்தோனேசியா, மொங்கோலியா, நேபாளம், பசுபிக் தீவுகள், பிலிப்பைன்ஸ், வியட்னாம் உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்காவின் இராணுவ உதவியைப் பெறவுள்ளன. கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தல், மனிதாபிமான உதவி அனர்த்த மீட்பு, அமைதி காப்பு திறன்…
-
- 0 replies
- 210 views
-
-
மகிந்தவின் கட்சியுடனான உறவுகளை வலுப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம் மேலதிக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின், அனைத்துலக உறவுகள் திணைக்கள உதவி அமைச்சர் கோ யிசோ, நேற்று முன்தினம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், சிறிலங்கா பொது ஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிசையும் சந்தித்துப் பேச்சு நடத்தினர். சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் எடுத்…
-
- 0 replies
- 229 views
-
-
யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வரை கட்டிவைத்து அடிக்க முடியாது என்கிறார் முதல்வர் ஆர்னோல்ட் யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வரை கட்டிவைத்து என்னால் அடிக்க முடியாது என யாழ். மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையின் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது நடைபெற்ற விவாதம் ஒன்றில் பிரதி முதல்வர் எதிர்க்கட்சி உறுப்பினர் மணிவண்ணன் விகிதாசார உறுப்பினர் என கூறி அவரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து , அவரின் கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், விகிதாசார உற…
-
- 2 replies
- 530 views
-
-
வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்பட்டுள்ளது(வீடியோ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியாவில் சுகாதார திணைக்கள ஊழியர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் முறைப்பாடுகளுக்கு அமைவாக மக்களின் நலனை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். -மன்னாரில் உள்ள உப அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் கருத்து தெரிவிக்கை…
-
- 0 replies
- 659 views
-
-
மன்னாரில் மனித எச்சங்களை அகழ்வதற்கு காணாமல் போனோர் அலுவலகம் நிதியுதவி! மன்னாரில் மனித எச்சங்களை அகழும் நடவடிக்கைகளுக்கு தேவையான மேலதிக நிதியுதவிகளை வழங்க காணாமல் போனோர் அலுவலகம் முன்வந்துள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். மன்னார் சதொச கூட்டுறவு நிலைய வளாகத்தில் மனித எச்சங்களை அகழும் நடவடிக்கைகளுக்கு போதுமான நிதி காணப்படாததை அடுத்து, குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த விடயங்களை கருத்தில் கொண்டே தாம் அதற்கான நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்…
-
- 0 replies
- 249 views
-
-
அடுத்த சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னர்: மைத்திரியே மஹிந்தவை பிரதமராக நியமிப்பார் சுதந்திரக் கட்சி மாற்று அணி நம்பிக்கை; தனி அரசு அமையும் என்கிறது (ஆர்.யசி) அடுத்த தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூலமாகவே மஹிந்த ராஜபக் ஷ பிரதமராவார். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து வெளி யேற்றி மீண்டும் எமது தனி அரசாங்கத்தை அமைப்போம் என பொது எதிரணி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் எந்த அரசியல் தீர்வு யோசனைகளையும் பெரும்பான்மை மக்கள் நம்ப மாட்டார்கள். மைத்திரி -மஹிந்த இண…
-
- 2 replies
- 384 views
-
-
அபிவிருத்தி உத்தியோகத்தராக -பிக்குவும் தெரிவு!! அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் நாக விகாரையைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவருடைய பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சால் பட்டாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாவட்டங்களில் இருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படும் 334 பட்டதாரிகளில் பௌத்த பிக்கு ஒருவரும் தெரிவாகி உள்ளார். …
-
- 0 replies
- 306 views
-
-
சம்பந்தனா? தினேஷா ? : செவ்வாய்க்கிழமை தீர்மானம்!!! (எம்.சி.நஜிமுதீன்) கூட்டு எதிர்க்கட்சி தம்மை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ளுமாறும் அதற்கிணங்க எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கூட்டு எதிர்கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள தினேஷ் குணவர்தனவிற்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே அது குறித்த தீர்மானத்தை சபாநாயகர் கருஜயசூரிய எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றில் அறிவிக்கவுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. எனவே இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துக்கொண்டது. எனினும்…
-
- 0 replies
- 261 views
-
-
காணாமல்போனோர் குறித்த பிராந்திய அலுவலகம் விரைவில் வன்னியில் (ஆர்.ராம்) காணமல்போனோர் பற்றி அலுவலகத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் ஓரிரு மாதங்களில் வன்னி பிரதேசத்திலேயே நிறுவப்படவுள்ளதாக அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். காணமல்போனோர் பற்றி அலுவலகத்தினையும் பிராந்திய அலுவலகங்களினதும் வினைத்திறனான செயற்பாடுகளுக்காக தற்போது வழங்கப்பட்ட தொகைக்கு அதிகமாக ஆட்சேர்ப்பினை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தினை பெறும் அமைச்சரவை பத்திரமொன்று இம்மாத இறுதிக்குள் தயாரிக்கபடும் என்றும் அவர் குறிப்பிட்டார். காணமல்போனோர் பற்றி அலுவலகச் சட்டத்தின் பிராகாரம், நாடுமுழுவதும் 12 பிராந்திய அலுவலகங்கள் நிறுவப்பட…
-
- 0 replies
- 244 views
-
-
வடக்கில் ஆதரவு வேட்டைக்கு வியூகம் வகுக்கும் கோத்தா!!! (லியோ நிரோஷ தர்ஷன்) செயற்பாட்டு அரசியலை தீவிரப்படுத்தியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வடக்கில் ஆதரவு வேட்டைக்கான வியூகத்தை வகுத்துள்ளார். இதன் அடிப்படையில் வடக்கிற்கு விஜயம் செய்யவும் தீர்மானித்துள்ளார். மேலும் 'வியத்மக " என்ற புத்திஜீவிகள் அமைப்பின் கிளை அலுவலகம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இதன் அடிப்படையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாவது வாரத்தில் இந்த அலுவலகம் யாழில் திறந்து வைக்கப்பட உள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் வெள்ளிக்கிழமை இட…
-
- 0 replies
- 598 views
-
-
பசுவதைக்கு எதிராக- யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்பு!! பசுவதைகளைத் தடுப்போம் என்ற தொணிப்பொருளில் யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்களான துவாரகன்,அபிராமி,அனுசாவதி மற்றும் வலிகாமம் இணைப்பாளர் ஞானசீலன்,சமூக ஆர்வலர் கின்ஸ்லி , வலிதெற்கு தவிசாளர் ஆகியோரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ராம நாம அமைப்பினால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. http://newuthayan.com/story/14/பசுவ…
-
- 0 replies
- 339 views
-