ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்தியாவின் பாதுகாப்பும் தமிழரின் தாயகப் பூமியான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் கையை விட்டு சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். இந்தப் பேராபத்தை கருத்தில் கொண்டு இதனைக் கரிசனையில் எடுத்து இந்திய அரசாங்கம் தமது வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியிருக்கின்றார். இந்திய ஊடகவியலாளர் தி. இராமகிருஷ்ணன் எழுதிய '' ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்'' என்ற நூலி…
-
- 16 replies
- 2.1k views
-
-
ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: தஸநாயக்க, ரணசிங்கவுக்கு மீளவும் கடற்படையில் பதவி சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் பாதுகாப்புச்செயலாளர் கபில (எம்.எப்.எம்.பஸீர்) ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்பில் பிரதான சந்தேக நபர்களாக கருதப்படுபவர்களும் தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்களுமான முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, கொமாண்டர் சுமித் ரணசிங்க ஆகியோர் கடற்படையில் மீள சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, கடற்படை நலன்புரி பிரிவின் பணிப்பாளராக புதிய பத…
-
- 0 replies
- 321 views
-
-
காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார். காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதே இந்த பணிமனையின் முக்கிய நோக்கமாகும். குறித்த விசாரணை நிபுணர்கள் மற்றும் தடயவியலாளர்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இந்த பிரிவு நியமிக்கப்படவுள்ளது. இதையடுத்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி. மாத்தளை மற்றும் மாத்தறை முதலான பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த பணிமனைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ,இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை அ…
-
- 0 replies
- 524 views
-
-
வவுனியாவில் புதையலைக் கண்டறியும் கருவியுடன் 8 பேர் கைது வவுனியாவில் புதையல் இருக்கும் இடத்தை கண்டறியும் கருவியுடன் 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வவுனியா - நொச்சிமூட்டைப் பகுதியில் வைத்து புதையலைக் கண்டறியும் கருவியுடன் 8 பேரை இன்று சனிக்கிழமை காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அம்பாந்தோட்டை, கிளிநொச்சி, அனுராதபுரம், வவுனியாவை, சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்னர். இது தொடர்பாக பொலிசார் கூறுகையில் குறித்த நபர்கள் வவுனியாவிலுள்ள ஒருவரிடம் சொகுச…
-
- 0 replies
- 436 views
-
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. ஊடகவியலாளர் தராகி சிவராமின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் சிவராம் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று காலை நடைபெற்ற குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஊடகவியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/2018/76858/
-
- 0 replies
- 358 views
-
-
பாரிய குற்றங்களின் பின்னணியில் STF – யஸ்மின் சூக்கா – பொய் என்கிறது சிங்கள இணையம்.. போர் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் கூறி விசேட அதிரடிப்படையின் 56 அதிகாரிகளுக்கு எதிராக அதிரடிப்படையின் முன்னாள் சிப்பாய் சிலரே ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும். இந்த முன்னாள் அதிரடிப்படையின் சிப்பாய்களுக்கு அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றே வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டள்ளத. இந்த அரசசார்பற்ற நிறுவனம் அதிரடிப்படையின் முன்னாள் சிப்பாய்களிடம் சாட்சியங்களை பதிவுசெய்துள்ளது. போர் குற்றம் சுமத்தப்படும் அதிரடிப்படையின் அதிகாரிகளின் உயர் அதிகாரிகளும் இருப்பத…
-
- 0 replies
- 314 views
-
-
வத்தளை தனியார் வங்கியில் ஏழரை இலட்சம் ரூபா கொள்ளை காவலாளியின் முகத்தில் மிளகாய் தூள் தூவி பட்டப்பகலில் துணிகரம் (எம்.எப்.எம்.பஸீர்) வத்தளையில் அமைந்துள்ள தேசிய அபிவிருத்தி வங்கியில் நேற்று ஏழரை இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரி யாத நபர் ஒருவர், வத்தளை தேசிய அபிவிருத்தி வங்கியில் காவல் கடமையில் இருந்த காவலாளியின் முகத்தில் மிளகாய் தூளினை தூவி விட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காவலாளி மீது மிளகாய் தூள் தாக்குதல் நடாத்திய பின்னர், வங்கியின் கவுண்டருக்கு சென்று குறித்த நபர் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணத்தை …
-
- 3 replies
- 240 views
-
-
பழைய முறையின்படி மாகாணசபை தேர்தலை உரிய நேரத்தில் நடத்துங்கள்: த.மு.கூ., மு.கா, அ.இ.ம.க., ஈ.பி.டி.பி. கூட்டாக தீர்மானம் (நமது நிருபர்) மாகாணசபைகளுக்கான தேர்தலை காலதாமதமின்றி நடத்தவேண்டும். எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு புதிய முறை யின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு காலதாமதம் ஆகும் என்றால் பழைய முறையின் படி தேர்தலை நடத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசாங் கத்தை கோருவதற்கு சிறுபான்மை கட்சிகள் தீர்மானித்துள்ளன. அமைச்சர் மனோ கணேசன் தலைமை யில் நேற்று முன்தினம் ஒன்றுகூடிய சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். தமிழ் முற்போக்குக்கூட…
-
- 0 replies
- 192 views
-
-
அமைச்சர்களை விசாரித்து அறிக்கையிடுவது அவசியம் வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான மோசடி மற்றும் முறைகேட்டுக் குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன. அவற்றின் விசாரணைகள் ஒளிவு மறைவு இன்றி நடத்தப்பட்டு முடிவுகள் பகிரங்கமாக அறிவிக்கப்படவேண்டும். தற்போதுள்ள அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்ட தரவு சேகரிப்பு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதுடன், அதன் மீதான நடவடிக்கைகளும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படவேண்டும். ஏற்கனவே இருந்த அமைச்சர்கள் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டுக…
-
- 0 replies
- 243 views
-
-
20ஆவது திருத்தத்தை கூட்டமைப்பு ஏற்குமா? புதிய அரசமைப்பு ஊடாக அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கு இடையில் அரச தலைவரின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்படும் 20ஆவது திருத்தத்தை அதன் தற்போதைய வடிவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்காது என்று தெரிகின்றது. நிறைவேற்று அரச தலைவர் முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்கிற கட்சியின் கொள்கையில் மாற்றம் இல்லை என்றபோதும் அரசியல் தீர்வு, தேர்தல் முறை மாற்றம் என்பவற்றைவிட்டுவிட்டு அரச தலைவரின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டும் ஒழிப்பதை ஏற்க முடியாது என…
-
- 0 replies
- 276 views
-
-
கொக்குவிலில் வாள்வெட்டு; குடாநாட்டில் எண்மர் கைது!! கொக்குவிலில் வாள்வெட்டு; குடாநாட்டில் எண்மர் கைது!! கொக்குவிலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவரும், ஆவாக் குழுவின் ஒளிப்படத்தில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸாரால் அறுவருமாக எண்மர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 471 views
-
-
சிறை அலுவலர்கள் மீது யாழ். நகரில் தாக்குதல்!! சிறை அலுவலர்கள் மீது யாழ். நகரில் தாக்குதல்!! யாழ். நகரில் நேற்றிரவு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் தாக்கப்பட்டனர். அவர்கள் பயணித்த வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது. சிறை அலுவலர்களைத் தாக்கினார் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் சம்பவ இடத்தில் இருந்து பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் இது தொடர்பில் உத்…
-
- 0 replies
- 280 views
-
-
புதிய அமைச்சரவையில் ரவி, விஜேதாச – சரத் பொன்சேகாவுக்கு சட்டம் , ஒழுங்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில், ரவி கருணாநாயக்கவும், விஜேதாச ராஜபக்சவும் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளை அடுத்தும், விஜேதாச ராஜபக்ச, அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறிய குற்றச்சாட்டை அடுத்தும் பதவி விலகியிருந்தனர். இந்த நிலையில் விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஐதேக திட்டமிட்டுள்ளது. அதேவேளை, புதிய அமை…
-
- 0 replies
- 203 views
-
-
ஐந்து மாத உறக்கத்துக்குப் பின்னர் கூடவுள்ளது வழிநடத்தல் குழு ஐந்து மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிநடத்தல் குழு அடுத்த மாதம் மீண்டும் கூடவுள்ளது. வழிநடத்தல் குழு உறுப்பினர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்காக சிறிலங்கா நாடாளுமன்றம், அரசியலமைப்பு பேரவையாக அறிவிக்கப்பட்டதுடன், 21 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 2016 ஏப்ரல் 5ஆம் நாள் தொடக்கம், 2017 ஆம் நாள் நொவம்பர் 16ஆம் நாள் வரை 75 கூட்டங்களை நடத்தி, அரசியலமைப்பு திருத்தத்துக்கான இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்திருந்தது. கடந்த ஆண்டு நொவம்பரில் வழிநடத்தல் குழுவின் இடைக்கா…
-
- 0 replies
- 297 views
-
-
மைத்திரி- ரணில் இடையே புரிந்துணர்வு உடன்பாடு – அதன் பின்னரே அமைச்சரவை மாற்றம் சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் தொடர்பாக, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்படவுள்ளது. கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்த தகவலை நேற்று வெளியிட்டார். “இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு தற்போது வரையப்பட்டு வருகிறது. புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னரே, புதிய அமைச்சரவை பதவியேற்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/04/28/news/30613
-
- 0 replies
- 175 views
-
-
சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு எச்சரிக்கை சிறிலங்காவில் நடைபெறவுள்ள மே நாள் பேரணிகள் தொடர்பாக அமெரிக்கா பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் மே நாள் பேரணிகள் நடைபெறவுள்ள மே 1ஆம் நாளுக்கும் 7ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க குடிமக்களுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “உலகத் தொழிலாளர் நாளை முன்னிட்டு. பல்வேறு அரசியல் கட்சிகள், குழுக்கள், பேரணிகளை நடத்தவுள்ளன. கொழும்பில் மாத்திரமன்றி, யாழ்ப்பாணம், காலி, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் இந்தப் பேரணிகள் இடம்பெறவுள்ளன. இந்தப் பேரணிகள் அமைதியாக நடைபெறும் என்று எதிர்பார்க்…
-
- 0 replies
- 220 views
-
-
அமெரிக்க கடற்படை மருத்துவர்களுக்கு அனுமதி மறுத்த சிறிலங்கா மருத்துவர் சங்கம் திருகோணமலைக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், சிறிலங்காவின் மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பசுபிக் ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ், 1000 படுக்கைகள், 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்கள், அதிநவீன பரிசோதனை வசதிகளைக் கொண்ட அமெரிக்க கடற்படையின், USNS Mercy என்ற மிதக்கும் மருத்துவமனை கடந்த 25ஆம் நாள் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது. எதிர்வரும் மே 8ஆம் நாள் வரை திருகோணமலையில் தரித்து நிற்கவுள்ள இந்த மிதக்கும் மருத்துமவனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் கடற்படையினர், திருகோணமலைப் பகுதியில்…
-
- 0 replies
- 139 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிக்க சிறுபான்மையினக் கட்சிகள் கங்கணம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தப் பிரேரணையை தோற்கடிப்பதென ஏற்கனவே 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீ்ர்மானித்திருப்பதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் பிரேணையை, எதிர்வரும் மே 8ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது, முன்வைக்கப் போவதாக ஜேவிபி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன், “ இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீவிரமாக முயற்சிக்கும். இது அரசியல் ரீதியாகவும், சமூக …
-
- 0 replies
- 112 views
-
-
வெசாக் அலங்காரத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதியில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு! கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினர் வெசாக் தினத்தை முன்னிட்டு அலங்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி நகரத்திலும் புத்தர் சிலை அமைத்த பகுதியில் வெசாக் வெளிச்சக் கூடுகள் மற்றும் இராணுவத்தினரின் இலட்சினைகள் மற்றும் பௌத்த இலட்சினைகள் பொறித்த கூடுகள் கொடிகள் என்பன பறக்கவிடப்பட்டுள்ளன. இதேவேளை கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பாரியளவிலான வெசாக் அலங்கார காட்சிகளுக்கான ஏற்பாடுகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அலங்கார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதியால் செல்லும் தமிழ் பெண்களுக்கு த…
-
- 1 reply
- 480 views
-
-
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்’ வெசாக் விழா யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்’ வெசாக் விழாவிற்கான முன்னாயத்தங்கள் நடைபெறுகின்றன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) முதல் 2018.05.01 ஆம் திகதி வரை யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தின் முன்பகுதியில் இவ்விழா நடைபெறவுள்ளது. இதன் போது முதன்முறையாக யாழ்ப்பாண பட்டினத்தில் புனித தாதுக்கள் காட்சிப்படுத்தல் வெசாக் வர்ண அலங்காரக்கூடு மற்றும் வெளிச்சககூடுகள் காட்சிப்படுத்தல் , பக்திப்பாடல் இசைத்தல்இ மற்றும் மூன்று நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்…
-
- 2 replies
- 512 views
-
-
வலி .கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளருக்கு கொலை மிரட்டல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நடைபெற்ற உள்ளுராட்ச்சி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி வலி .கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்ட திரு.மகேந்திரலிங்கம் கபிலனுக்கு இன்று பகல் தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் இன்று அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு அச்சுவேலி காவல்துறையினரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன . வலி.கிழக்கு பிரதேச சபையின் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் முதல்முறையாக போட்டியிட்ட திரு.ம.கபிலன் பிரதேச மக்களின் பேரபிமானத்துடன் வெற்றிபெற்ற…
-
- 0 replies
- 301 views
-
-
மாவீரர் துயிலுமில்லங்களை அரச நிர்வாக அலகுக்குள் கொண்டுவருவது சொந்த காசில் சூனியம் வைப்பதாகும் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்களின் உணர்வுகளோடு ஒன்றித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களை அரச நிர்வாக அலகுக்குள் கொண்டுவரும் பிரேரணை சொந்த காசில் சூனியம் வைப்பதாகும் என கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் த.ரஜனிகாந் தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச சபையின் முதலாவது அமர்வில் மாவீரர் துயிலுமில்லங்களை பிரதேச சபையின் ஆளுகைக்குள் கொண்டுவரவேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். துயிலுமில்லங்கள் துயிலுமில்லங்களாகவே இருக்க வேண்டும் அது தாவரவிய…
-
- 0 replies
- 202 views
-
-
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியாவின் வகிபாகம் இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலான அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்று இதுவரை முன்வைக்கப்படாத சூழலில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு விடிவைக் காண்பதற்கான முயற்சிகள் ஸ்தம்பிதமடைந்த நிலைமையே நீடிக்கின்றது. தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் மக்கள் தொடர்ந்து ஏமாற்றத்தையே எதிர்கொண்டு வந்துள்ளனர். இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் கைகூடி வருவதுபோன்று வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் தென்பட்டாலும் இறுதியில் அந்த முயற்சிகள் கைகூடாத நிலைமை ஏற்பட்டு விடுகின்றது. இந்த …
-
- 0 replies
- 263 views
-
-
கடைசி மூச்சை இழுக்கும் நிலையில் சுதந்திரக்கட்சி!! கடைசி மூச்சை இழுக்கும் நிலையில் சுதந்திரக்கட்சி!! மகிந்த ராஜபக்சவின் அரசில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டின் அரச தலைவர் தேர்தலுக்கான கட்சிகளது வேட்பாளர் தெரிவின் இறுதிக் கட்டம் வரையில் மெளனம் காத்து, 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதியன்று இரவு உணவின் போது கூட, மகிந்த ராஜ பக்சவுடன் இணைந்து முட்டை அப்பம் சாப்பிட்டு விட்டு…
-
- 0 replies
- 200 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு- யுத்தத்தினால் பாதிகப்பட்ட பிரதேசங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி தெரிவித்தார். -தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் அமைக்கப்பட்ட மடுமாதா கைப்பணி அமைப்பிற்கான கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை(27) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாஸ் தலைமையில் இடம்…
-
- 0 replies
- 173 views
-