ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
”ராஜபக்ஷகளுக்கு விரிக்கும் விசேட வலையே இது” (எம்.சி.நஜிமுதீன்) ராஜபக்ஷகளுக்கும் கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள தலைவர்களையும் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம்சாட்டினார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. அதற்கெதிராக நாம் உயர்நீதிமன்றில்…
-
- 0 replies
- 367 views
-
-
கோத்தாவின் கீழ் இயங்கியோரே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர் ; ஜெனிவாவில் தெரிவித்த பெண் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது. கப்பம் பெறும் நோக்கத்திலேயே இவ்வாறு எனது சகோதரர் கடத்தப்பட்டார் என்று ஜெனிவா வந்துள்ள பாதிக்கப்பட்ட ஜயனி தியாகராஜா என்ற பெண் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான நேரத்தின் போது இலங்கை தொடர்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையி…
-
- 0 replies
- 255 views
-
-
களேபரமான ஜெனிவா உபகுழுக்கூட்டம் : சரத் வீரசேகர குழுவினரும் புலம்பெயர் அமைப்பினரும் வாக்குவாதம் (ஜெனிவாவிலிருந்த எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் உபகுழுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த உபகுழுக்கூட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து ஜெனிவா வந்துள்ள எளிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த உபகுழுக்கூட்டத்தில் எளிய அமைப்பின் பிரதிநிதியான நாலக்ககொடஹேவா உரையாற்றுகையில், இலங்கையில் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து 1991 ஆம் ஆண்டு 48 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்டனர் என்று கூறிக்கொ…
-
- 0 replies
- 370 views
-
-
ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கருணை மனு : ஜனாதிபதி மாமா! கருணை உள்ளத்துடன் எமது தந்தையை விடுதலை செய்யுங்கள். அரசியல் கைதியாக ஆயுள்தண்டனை தீர்க்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் பா ம உ அங்கஜன் இராமநாதன் ஊடாக ஜனாதிபதிக்கு சற்று முன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர் கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார். இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு…
-
- 1 reply
- 625 views
-
-
இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள் இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள் நாமல் ராஜபக்ச பெருமிதம் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தின் விவசாயப் பண்ணைகளில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பணிகளில் ஈடுபடுவது பெருமை அளிக்கிறது என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான பதிவொன்றை நாமல் ராஜபக்ச தனது கீச்சகத்திலும் பதிவிட்டுள்ளார். சுயவிருப்புடன் இராணுவத்தில் இணைக்கப்பட்டு…
-
- 7 replies
- 724 views
-
-
முகப்புத்தகத்தில் இனஒற்றுமையை சிதைக்கும் கருத்துக்களை பதிவிட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு விளக்கமறியல் முகப்புத்தகத்தில் இனஒற்றுமையை சிதைக்கும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹாவைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று குற்ற விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட போது சந்தேகநபருக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான குறித்த சந்தேநபரை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 177 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதிக்கு ஆர்வம் உள்ளமை எமக்கு தெரியும் ; சம்பந்தன் (ஆர்.யசி) தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஆர்வம் ஜனாதிபதிக்கு உள்ளது என்பதை நன்றாக அறிவோம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். பிரிபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே தமிழ் மக்கள் முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியரியார் க…
-
- 4 replies
- 482 views
-
-
சங்கானை குருக்கள் படுகொலை – இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் – தூக்குத் தண்டனை வழங்குமாறு கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சங்கானையில் ஆலயக் குருக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தவர்கள் எதிரி கூண்டில் நிற்கும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு அதிஉச்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், தனது தொகுப்புரையில் கோரியுள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பு நாளைமறுதினம் வியாழக்கிழமை (22) வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ…
-
- 0 replies
- 242 views
-
-
இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய அதிகாரிகளின் சிறிலங்கா பயணம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய, ஓய்வுபெற்ற இந்திய இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் ஒன்பது பேர், மீண்டும் கடந்தமாதம் சிறிலங்காவுக்குச் சென்று திரும்பியுள்ளனர். இவர்கள் ஒன்பது பேரும், காடக்வாஸ்லாவில் உள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அகடமியில் 37 ஆவது கற்கைநெறியில் இணைந்திருந்தவர்களாவர். பின்னர் 1987-89 காலகட்டத்தில் இவர்கள் இந்திய அமைதிப்படையில் சிறிலங்காவில் பணியாற்றியிருந்தனர். தற்போது ஓய்வுபெற்றுள்ள இந்த அதிகாரிகள் ஒன்பது பேரும், சிறிலங்காவுக்கு கடந்த பெப்ரவரி மாதம் பயணம் செய்தனர். இவர்களின் குழு சிறிலங்காவின் வடபகுதிய…
-
- 2 replies
- 447 views
-
-
யுத்தத்திற்குப் பின்னர் தடுமாறும் இலங்கை.! யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறுகால சூழலில் நாடு தடுமாறி திணறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியின் 143வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கல்லூரி தின நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். நேற்று கல்லூரி அதிபர் மரியான்தம்பி பற்ரிக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் போப்பாண்டவரின் இலங்கைக்கான பிரதிநிதி ஆயர் கலாநிதி பியரென் நுயன் வன் டொற், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜேசெப், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் …
-
- 2 replies
- 378 views
-
-
கடும்போக்குடைய பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடும்போக்குடைய பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிஹல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் இந்தக் கோரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/71575/
-
- 0 replies
- 194 views
-
-
ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் முல்லைத்தீவு அளம்பில் பிரதேசத்தில் செய்திச் சேகரிக்கச் சென்ற தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. அளம்பில் பிரதேசத்தில் துயிலும் இல்லங்கள் அமைந்திருக்கும் தனியார் காணியொன்றை கையகப்படுத்தும் முயற்சியில் இராணுவம் ஈடுபடுவதாக வெளியான தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் ஒருவர் சென்றுள்ளார். குறித்த இடத்துக்குச் சென்ற ஊடகவியலாளரை தடுத்த இராணுவத்தினர், அவருடைய கமராவை சோதனையிட முயற்சித்துள்ளனர். எனினும் அதற்கு ஊடகவியலாளர் மறுப்பு தெர…
-
- 0 replies
- 247 views
-
-
கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு - எஸ்.நிதர்ஷன் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (20) இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் வடமாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளருமான சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். http://www.tamilmirror.lk/யாழ…
-
- 0 replies
- 277 views
-
-
அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க முயற்சி! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகிய முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை நிரந்தரமாக இராணுவம் கையகப்படுத்த முயல்வதாகவும் இதனை இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். குறித்த காணியின் ஒரு பகுதியை இராணுவத்திற்கு சுபீகரிப்பதற்கு கிராம அலுவலர் ஊடாக துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டதாகவும் இந்த காணி இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமது உறவுகளை நினைத்து வருடத்தில் ஒரு முறையேனும் தாம் கண்ணீர் வி…
-
- 0 replies
- 323 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க வியூகம் அமைக்கும் ரணில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை அல்லது நாளை மறுதினம் கூட்டு எதிரணி சமர்ப்பிக்கவுள்ளதாக கூறி வருகின்ற நிலையில் அதனை எதிர்கொண்டு தோற்கடிக்கப்பதற்கான வியூகங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தரப்பினரிடமும் அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஐக்கிய…
-
- 0 replies
- 137 views
-
-
நாளை ஜெனிவாவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள இலங்கை அரசு (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேரவையில் நாளை நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இலங்கை அரசாங்கமானது ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்த விரிவான அறிக்கையொன்றை மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது. இலங்கையின் சார்பில் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள அமைச்சர்களான திலக் மாரப்பன, சரத் அமுனுகம, பைஸர் முஸ்தபா ஆகியோர் இந்த அறிக்கையை இலங்கையின் சார்பாக மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளனர். இதில் இலங்கையானது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 30-/1 பிரேரணையை இலங்கைய…
-
- 0 replies
- 155 views
-
-
ரணிலைக் கவிழ்க்க மைத்திரியிடம் உதவி கோருகிறது மகிந்த அணி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு பிரிவுகளும் ஆதரவளிப்பது முக்கியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமா…
-
- 0 replies
- 153 views
-
-
ஜெனிவாவில் 53 பரிந்துரைகளை ஏற்க மறுத்தது சிறிலங்கா பூகோள கால மீளாய்வு அறிக்கையில் 53 பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீது நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. சிறிலங்கா தரப்பில் ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும், பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜெயசூரியவும் இந்த அமர்வில் பங்கேற்றனர். கடந்த 2017 நொவம்பர் 6ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை, ஜெனிவாவில் நடந்த பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விவாதம் நடத்தப்பட்டது. இதன்போது உரையாற்றிய சிற…
-
- 0 replies
- 146 views
-
-
"10 வருடங்களாக எனது மகனை தேடி அலைகின்றேன்" (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) எனது மகனை 10 வருடங்களாக தேடி அலைகின்றேன் என்று 2008 ஆம் ஆண்டில் காணாமல்போன மொரட்டுவை பல்கலைக்கழக மாணவனின் தந்தையார் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார். மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் அவரது தந்தையார் தர்மகுலசிங்கம் தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நீதி கேட்டு ஜெனிவா வந்துள்ளார். அவர் கேசரிக்கு தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில், எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி லங்கா பெல் நிறுவனத்திற்கு பயிற்ச்சிகளை பெற்றுக்கொள்ள சென்றிரு…
-
- 0 replies
- 270 views
-
-
விழித்துக் கொள்வோமா? தமிழர்கள் தமது தனித்துவத்தைக் காப்பாற்றத் தவறி வரு கிறார்களா என்கிற விவாதத்தை எழுப்பியிருக்கிறார் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பேராசிரியரான ஆசி.கந்தராஜா. எழுத்தாளருமான அவர் யாழ்ப்பாணம் முகாமையாளர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரை யாடலில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். பூகோளாமயமாக்கல் சூழலில் அதிக விளைச்சலையும் அதிக லாபத்தையும் நோக்கி நாம் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் எமக்குச் சொந்தமான, பாரம்பரியமான, எமது அடையாளங்களான பலவற்றையும் பேணிக் காக்கத் தவறியிருக்கின்றோம் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். யாழ்ப்பா…
-
- 0 replies
- 258 views
-
-
அரசியல் குழப்பங்கள் நீண்டு நிலைபெறும் அரசியல் குழப்பங்கள் நீண்டு நிலைபெறும் நாட்டின் அரசியல் குழப்பங்கள் 2020 ஆம் ஆண்டின் பின்னரும் தொடருமா? என்ற கேள்வி தற்போது மக்களின் மனங்களில் எழுந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அரச தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் இடம் பெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் மிகக் கடுமையான போட்டிகள் நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 283 views
-
-
ஜெனிவா உபகுழுக்கூட்டத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய சரத் வீரசேகர (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற உபகுழுக்கூட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து சென்றுள்ள எலிய அமைப்பின் பிரதிநிதியான சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கேள்விகளை ஏற்படுத்தியமையினால் உபகுழுக்கூட்டத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டதுடன் குறிப்பிட நேரத்திற்கு முன்தாகவே கூட்டம் நிறைவடைந்தது. குறிப்பாக சரத் வீரசேகர தலைமையிலான எலிய அமைப்பின் பிரதிநிதிகள் உபகுழுக்கூட்டத்தை வழிநடத்திய சர்வதேச பிரதிநிதியான போல் நியூமனுடன் முரண்பட்ட நிலையிலேயே…
-
- 1 reply
- 276 views
-
-
கொழும்பு மாநாகர முதல் பெண் மேயராக ரோஸி சத்தியப்பிரமாணம் (எம்.எம்.மின்ஹாஜ்) கொழும்பு மாநகர சபையின் பிரச்சினைகளை தீர்த்து பலமான கொழும்பை நாம் உருவாக்குவோம் என கொழும்பு மாநகர சபையின் முதல் பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார். கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றோர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், கொழும்பு மாநகர சபை என்பது தம…
-
- 0 replies
- 222 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. – அதற்கு மேல் செய்ய எதுவுமில்லை. குளோபல் தமிழ்ச்செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சட்டம் இயற்றி அதற்கு என ஒரு குழுவையும் நியமித்து உள்ளோம். ஆகவே அது தொடர்பில் திரும்பவும் பேச விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார். யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் தொழினுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்த பின்னர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்தப் பாடசாலைக்கு வரும் வழியில், காணாமல் போனோர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண…
-
- 1 reply
- 373 views
-
-
நாட்டில் இணைப்பு மொழி பாண்டித்தியம் உருவாக அனைவரும் செயற்பட வேண்டும் ; சி.வி. தெரிவிப்பு (எம். நியூட்டன்) இணைப்பு மொழிப் பாண்டித்தியம் உருவாக அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் அறிஞர்களும் இணைந்துகொண்டு இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும். முழு நாட்டையும் உள்நாட்டு மொழியொன்றே இணைக்க வேண்டும் என்ற அரசியல்வாதிகளின் எண்ணம் இன்று வரை கைகூடவில்லை. மாறாக இனங்களிடையே சந்தேகங்களையும் புரிந்துணர்வற்ற நிலைமையையுமே கொண்டு வந்துள்ளதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்த…
-
- 0 replies
- 359 views
-