ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரிக்கவேண்டும் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆழமான முறையில் செயற்படவேண்டும். இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்துகொள்ளவேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் இலங்கை குறித்து செயற்படும் அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் ஜெனீவாவில் வலியுறுத்தினர். இலங்கைக்கான கால அவகாசம் இன்னும் ஒரு வருடத்தில் முடிவடையப்போகின்றது. இக்…
-
- 0 replies
- 180 views
-
-
ஈழம் மலரப்போவதாகக் கூறி நாட்டில் இனவாதத்தை தூண்டியது ராஜபக் ஷ குடும்பமே : மக்கள் விடுதலை முன்னணி கூறுகிறது எஸ்.வினோத் நாட்டில் இனவாதத்தை அதிகமாக தோற்றுவித்தது ராஜபக் ஷ குடும்பத்தினரே. அவர்களின் தேர்தல் பிரசாரத்தில் பிரிவினை வாதத்தை முதன்மையாகக் கொண்டு மக்களைத் திசைதிருப்பினர். அவர்கள் கூறும் பொய்யான இனவாதக் கருத்துக்களின் உண்மைத்தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த ஜனாதிபதியும் பிரதமரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க நேற்று வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார். இது…
-
- 0 replies
- 321 views
-
-
கறுப்பு ஜூலையை அரசு மறந்து விடக்கூடாது: மோடியின் பாதையில் நாடு பயணிப்பதே வன்முறைக்கு கராணம் என்கிறார் - திஸ்ஸ விதாரண லியோ நிரோஷ தர்ஷன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் சாயலில் இலங்கை பயணிக்கின்றமையே நாட்டில் இன வன்முறைகள் ஏற்படக் காரணமாகியுள்ளது என தெரிவித்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண மூன்று தசாப்தகால உள்நாட்டு போரின் வடுக்களையும் கறுப்பு ஜுலையினையும் நல்லாட்சி அரசாங்கம் மறந்து விடக் கூடாது எனவும் தெரிவித்தார் இலங்கையில் அண்மைக்காலமாக இன மோதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்கள் நாட்டை சர்வதேச ரீதியில் அபகீர்த்திக்கு உள்ள…
-
- 0 replies
- 154 views
-
-
யாழ். மாநகரசபை ஆசனப் பிரச்சினை – உலக வங்கி உதவியுடன் தீர்வு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆசனப் பிரச்சினை உலக வங்கியின் உதவியுடன் தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த தேர்தலில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இந்த எதிர்வரும் 20ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, முன்னரை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், பல்வேறு சபைகளிலும் சபை அமர்வுகளை நடத்துவதற்கான வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் 119 உறுப்பினர்களும் இணைந்து சபை அமர்வுகளை நடத்த இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய சபைகளின் அமர்வுகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கணிசமான நிதி செலவ…
-
- 0 replies
- 260 views
-
-
நீக்கப்படுகிறது அவசரகாலச்சட்டம் சிறிலங்காவில் நடைமுறையில் இருக்கும் அவசரகாலச்சட்டம் உடனடியாக நீக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியதும், உடனடியாக அவசரகாலச்சட்டத்தை இரத்துச் செய்யும் அரசிதழில் கையெழுத்திடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறிலங்கா அதிபரின் செயலக வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்ததை அடுத்து, கடந்த மார்ச் 6ஆம் நாள் அவசரகாலச்சட்டம் சிறிலங்கா அதிபரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. http://www.puthinappalakai.net/2018/03/18/news/29864
-
- 0 replies
- 235 views
-
-
சிறிலங்கா அதிபரின் பிரதிநிதியும் ஜெனிவா செல்கிறார் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாளையும், எதிர்வரும் 21ஆம் நாளும் சிறிலங்கா தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன. நாளைய அமர்வில், சிறிலங்கா தொடர்பான பூகோள காலமீளாய்வு அறிக்கை பற்றிய விவாதம் இடம்பெறவுள்ளது. அதேவேளை, வரும் 21ஆம் நாள், ஜெனிவாவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, மீண்டும் 2017 ஆம் ஆண்டு மீளவும் காலநீடிப்புச் செய்யப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றிய விவாதம் இடம்பெறவுள்ளது. இதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இடைக்கால அறிக்கையும் ச…
-
- 0 replies
- 112 views
-
-
தமிழ் அரசுக் கட்சியை ஆதரித்தால் கடும் நடவடிக்கை – ஆனந்தசங்கரி எச்சரிக்கை உள்ளூராட்சி சபைகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலர் வீ.ஆனந்தசங்கரி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுடன், நாளை மறுநாள் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் செயற்படத் தொடங்கவுள்ளன. வடக்கு, கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சபைகளே அமைந்துள்ளன. …
-
- 0 replies
- 220 views
-
-
யாழ்ப்பாணத்தில் மக்கள் குடியிருக்காத வீடுகள், பயன்படுத்தப் படாத காணிகள் குறித்த விபரங்கள் எடுக்கப்டுகின்றன. பல வீடுகள் குடியிருப்பார்கள் இன்றி வெறுமனே உள்ளன. பயிர் செய்கை இன்றி பல விளை நிலங்கள் பத்தை வளர்ந்து காணப் படுகினற்ன. இந்த ஆதனங்களின் உரிமையாளர்கள், வெளி நாடுகளிலோ, தொடர்பு கொள்ள முடியாத நிலையிலோ காணப் படுகின்றனர். அதே வேளை மக்கள் குடியிருக்க வீடுகள் இன்றி, பயிர் செய்ய காணிகள் இன்றி தவிக்கின்றனர். இவை குறித்த விபரங்களை சேகரித்து, உரிமையாளர்களை தொடர்பு கொண்டு, நீண்ட கால குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெறும் நோக்கில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார் என மாவடடத்தின் மேலதிக காணி அரச செயலாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார். படையினரால் வி…
-
- 1 reply
- 359 views
-
-
மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுக்க உழைக்க வேண்டும் – டக்ளஸ் எடுத்துரைப்பு மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அமைவாக மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 98 உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த தேர்தல் வெற்றியானது ஈ.பி.டி.பி கட்ச…
-
- 0 replies
- 478 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்: சரத் பொன்சேகா! நாட்டில் ஏற்பட்டுள்ள தேவை மற்றும் மக்களின் அழைப்பின் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மாகாண அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை குறித்து சிங்கள ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தான் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளத் தயங்கப்போவதில்லை எனவும் அதற்காக தான் வெட்கப்பட போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப்பதவியை வழங்க பரிந்துரை செய்தும் ஜனாதிபதி அதனை ஏற்கவில்லை எனவும் சரத் பொன்சேகா குற்றம்சுமத்தினார். …
-
- 0 replies
- 208 views
-
-
எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவார்களா? கடினமான ஒரு தேர்தல் முறைமைக்குள் தத்தளித்து ஒரு வாறு உள்ளூராட்சி சபைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றின் ஆட்சி ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டி ருக்கின்றன. இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்து அடுத்த மாதத்தின் நடுப் பகுதி வரைக்குமான காலத்தில் ஒவ்வொரு சபைகளும் தமது ஆட்சியை ஆரம்பிக்கவுள்ளன. போருக்குப் பின்னரான காலத்தில் வடக்கு மாகாணத்தில் இயங்கிய உள்ளூராட்சி சபைகளில் நடந்த ஆட்சி மெச்சிக்கொள்ளும் தரமன்று. ஒரு சில சபைகளைத் தவிர, அனேகமாக எல்லாச் சபைகளுமே பிரச்சினைக்குரியனவாகவே இருந்தன. இவற்றில் பெரும்பாலான சபைகள், தமிழ்த் த…
-
- 0 replies
- 199 views
-
-
யாழில் 2ஆயிரம் பேருக்கு மேல் குழந்தைப் பேறின்மை? வடக்கு கிழக்கில் பல ஆயிரங்களை எட்டலாம்! தொகுப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு கிழக்கில் குழந்தைப் பேறின்மை அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுகாதார நலக் கண்காட்சி அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டவர்ககள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட புள்ளி விபரங்களில் இந்த நிலவரம் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியின்போது இந்தியாவில் இருந்து பல்வேறு தனியார் மகப்பேற்று வைத்திய சாலைகளிலி…
-
- 0 replies
- 237 views
-
-
ஜெனிவாவில் திங்கள் இடம்பெறுகிறது இலங்கை குறித்த முதலாவது விவாதம் ; 2 ஆவது விவாதம் புதன்கிழமை (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைப்பெறவுள்ளது. இந்த விவாத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் விசேட கருத்திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம உள்ளிட்ட உயர் மட்ட தூதுக்குழுவினர் திங்கட்கிழமை ஜெனிவாவிற்கு வரவுள்ளனர். அத்துடன் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டோர் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட ப…
-
- 0 replies
- 212 views
-
-
த.தே.கூ.தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் சிறிதரனிடம் வலியுறுத்தல் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. இலங்கைக்கான கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசாங்கம் எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. எனவே இந்த கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்கும் நோக்கில் ஜெனிவா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 0 replies
- 174 views
-
-
ஐ.நா.வில் பிரேரணை கெண்டுவந்த நாடுகள் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து ஒத்தாசை வழங்க வேண்டும் ; விக்கினேஸ்வரன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு இலங்கை தொடர்பான பிரேரணையை கொண்டுவந்த அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாண தமிழ் மக்களுடைய பிரதிநிதியாக இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கருதகிறீர்கள்? என கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்…
-
- 0 replies
- 191 views
-
-
இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்ற பொலிஸார் ; யாழில் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவமானது இன்று முற்பகல் யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் தமது சிறு பிள்ளையுடன் யாழ்.வைத்தியசாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போக்குவரத்து பொலிஸார் மறித்து வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியவற்றை சோதனையிட்டுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் வாகனத்தின் அனுமதிப் பத்திரம், காப்புறுதி ஆகியவற்றையும் காட்டியதுடன் வாகனம் செலுத்துவதற்…
-
- 0 replies
- 258 views
-
-
வடக்கு மாகாண உள்ளூராட்சி சபை முதல் அமர்வு 20 இல் ஊர்காவற்துறை, கிளிநொச்சியில் பூநகரி, புதுக்குடியிருப்பு, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை அமர்வு 20 இல் யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு 26 இல் வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் ஊர்காவற்துறைப் பிரதேச சபை, கிளிநொச்சியில் பூநகரி பிரதேச சபை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை, வவுனியாவில் வவுனியா…
-
- 0 replies
- 312 views
-
-
திருமலையில் சி.வி. தலைமையில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை கரு த்தமர்வும் கலந்துரையாடல் நிகழ் வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பகிரங்க நிகழ்வாக இடம்பெறும் இந்நிகழ்வில் மக்கள் அனைவரும் பங்குகொள்ள முடியுமென்று பேரவையினர் அறிவித்திருக்கின்றனர். காலை 9.30 மணிக்கு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முதல் முதலாக திருகோணமலையில் மக்கள் நிகழ்வொன்றில் பங்குகொள்கின்றார். நிகழ்வில், 'வடக்கு –கிழக்கு …
-
- 0 replies
- 240 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் கைச்சாத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கைச்சாத்திட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, ஷமல் ராஜபக் ஷ, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில,டலஸ் அழகப் பெரும,மஹிந்த யாப்பா அபேவர்தன, சாலிந்த திஸாநாயக்க,ரஞ்ஜித் சொய்ஸா,மஹிந்தானந்த அழுத்கமகே, ஜானக வக்கும்புர, தாரக பாலசூரிய, இந்திக்க அனுருத்த, பந்துல குணவர்தன, நிரோஷன் பிரேமரத்ன, டி.வீ. ஷானக, நாமல் ராஜபக…
-
- 1 reply
- 242 views
-
-
‘தமிழன் குண்டுகள்’ மீட்டு அழிப்பு!! ‘தமிழன் குண்டுகள்’ மீட்டு அழிப்பு!! முல்லைத்தீவு காட்டில் சம்பவம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டு போர்க் காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படும் ‘தமிழன்’” கைக்குண்டுகள் 10 நேற்று மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன என்று சிறப்பு அதிரடிப்படை தெரிவித்தது. முல்லைத்தீவு முள்ளிவளை கொண்டைமடு காட்டுப் பகுதியில் ஒரு தொகுதி கைக்குண்டுகள் காணப்படுகிறது என…
-
- 0 replies
- 234 views
-
-
ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் அரசு எதனையும் செய்யவில்லை : சூக்கா (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்துவதில் அரசாங்கம் எந்த முன்னேற்றமும் காட்டவில்லை; எதனையும் செய்யவில்லை. காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அலுவலகமும் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திப்படுத்துவதாக இல்லை என்று சமாதானத்திற்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் தலைவர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார். ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மனித உரிமை நிலை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…
-
- 0 replies
- 184 views
-
-
தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். விடுதலைப்புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு எதிரான வழக்கில் பத்து வருடங்களின் பின்னர் இவருக்கு 2 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. தண்டனைக் கைதியான இவருக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னர் நீர்கொழு…
-
- 2 replies
- 351 views
-
-
ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலப்படுத்துமாறு உத்தரவு ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்முன்னிலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வழங்குவதற்காகவே ரியர் அட்மிரல் ஆனந்த முன்னலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது இம்மாதம் 23 ஆம் திகதி அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னர் இரு தடவைகள் ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்…
-
- 0 replies
- 151 views
-
-
தமிழ், முஸ்லிம் மக்களின் இணைவு இன்றி கூட்டாட்சி சந்தேகம்தான் அம்பாறை, கண்டிக் கலவரங்களுக்குப் பின்னர் வடக்கு மாகாண சபையில் உரையாற்றி இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அப்துல் நியாஸ் சீனி முகமத் காலத்துக்குப் பொருத்தமான கருத்து ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கக்கூடாது என்றால் இலங்கையில் கூட்டாட்சி, சமஷ்டி முறையான தீர்வு ஏற்படவேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். கடந்த 60 வருடங்களுக்கும் மேலாகவே இந்த விடயம்தான் சொல்லப்பட்டு வருகின்றது. குறிப்பாகத் தமிழர்கள் கூட்டாட்சியைத் தொடர்ந்து வலியுறுத்தி வரு…
-
- 0 replies
- 266 views
-
-
அரசு செயற்படாமல் இருக்கும் வரையில் மகிந்தவுக்கே அதிக வாய்ப்பு அரசு செயற்படாமல் இருக்கும் வரையில் மகிந்தவுக்கே அதிக வாய்ப்பு கண்டியில் இடம்பெற்ற கலவரங்களுக்கு அரசே முழுப்பொறுப் பையும் ஏற்க வேண்டுமெனக் கூறியுள்ளார் முன்னாள் அரச தலைவரான மகிந்த ராஜபக்ச. அமைதியை நிலைநாட்டுவ தற்கு அரசு செய்ய வேண்டிய வேலைகளைத் தாமே முன்னின்று செயற்படுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள் ளார். தம்மைப் புனிதராகக் காட்டிக் கொள்ள நாடகமாடும் மகிந்த …
-
- 0 replies
- 240 views
-