Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பையிலிருந்து ஆணின் தலை மீட்பு கொழும்பு- கெசல்வத்த பண்டாரநாயக்க மாவத்தையில் பை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (7) அதிகாலை இந்தத் தலையை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கறுப்பு நிற பையொன்றில் குறித்த தலை போடப்பட்டிருந்ததாகவும், புதுக்கடை நீதிமன்றத்திலிருந்து 200 மீற்றர் தொலைவிலேயே இந்த பை காணப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பையிலிருந்து-ஆணின்-தலை-மீட்பு/175-212368

  2. பூரண ஹர்த்தால் : பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் - 30 பேர் கைது.! அம்பாறை நகரில் ஊழித்தாண்டவம் ஆடிய இனவாதம் நேற்று முன்தினம் கண்டி தெல்தெனிய மற்றும் திகன ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் மதவாதமாக உருவெடுத்து சேதங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தி பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்திருந்தது. இந்நிலையில் முஸ்லிம்கள் மீதான இனவாத, மதவாத தாக்குதல்களைக் கண்டித்து நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதேவேளை ஹர்த்தால் நடவடிக்கையுடன் வீதித்தடை, ரயர் எரிப்பு மற்றும் பஸ்களுக்கு கல்வீச்சு போன்ற செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றதன் பேரில் மருதம…

  3. நாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் கோரிக்கை.! அம்பாறை மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற இனவாத வன்முறை சம்பவங்களை அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் என்ற ரீதியில் இவ்வாறான சட்ட விரோத மற்றும் வன்முறை சம்பவங்களை அனுமதிக்க போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த வன்முறைகள் திட்டமிட்ட இனவாத செயற்பாடுகளாகும். அரசியல் அதிகார மோகம் கொண்ட ஒரு குழுவின் சூழ்ச்சியே இதன் பின்னணியில் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, அம்பாறை, திகன பகுதியில் இடம்பெற்ற இன வன்முறைகள் தொடர்பிலும் அவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெற…

  4. மெனிக்கின்னயில் அசாதாரண சூழ்நிலை கண்டி நிர்வாக மாவட்டத்துக்குள் ஊரடங்கு சட்டம் அதுமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மெனிக்கின்ன பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 400 பேர் கொண்ட குழுவினர் குறித்த பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டதாகவும், இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்,தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/மெனிக்கின்னயில்-அசாதாரண-சூழ்நிலை/175-212367

  5. அச்சுறுத்தும் வகையில் வெடிபொருள் மீட்பு ; ஆரையம்பதியில் பதற்றம் மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள வீடொன்றில் அச்சுறுத்தும் வகையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆரையம்பதியில் தாயும் மகளும் தங்கியிருந்த வீடொன்றில் இருந்து குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிக்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீட்டின் வேலியொன்றில் தீவிரவாத அமைப்பொன்றின் வாசகம் எழுதப்பட்ட சுலோக அட்டையொன்றும் தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/…

  6. அவசரகாலச்சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்- அமெரிக்கா அழுத்தம் சிறிலங்காவில் நேற்று பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச்சட்டம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பரவியுள்ள நிலையில்- அவசரகாலச்சட்டம் நேற்று பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பன அமைதியான சகவாழ்வுக்கு முக்கியம். மத வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக செயற்படவும், மத சிறுபான்மையினரையும் அவர்களின் வழிபாட்டு இடங்களையும் பாதுகாக்க சிறிலங்கா அர…

  7. சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை சிறிலங்காவில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளைக் கருத்தில் கொண்டே, சிறிலங்காவில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இந்த பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடரும் சமூக பதற்ற நிலையினால், சிறிலங்கா அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தை பிரகடனம் செய்துள்ளதுடன், கண்டி மாவட்டம் உள்ளிட்ட சில இடங்களில் ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. அடுத்த சில நாட்களில் மேலும் சம்பவங்கள் நிகழும் சாத்தியங்கள் உள்ளன. உள்ளூர் ஊடகங்களின் அறிவிப்புகளை கவனத்தில்…

  8. தமிழர்களை மேலும் பிளவுபடுத்துவது ஏற்கத் தக்கதல்ல தமிழர்களை மேலும் பிளவுபடுத்துவது ஏற்கத் தக்கதல்ல தமிழ்க் கட்­சி­கள் ஒன்­றி­ணைந்து பொது­வா­ன­தொரு கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் செயற்­பட வேண்­டு­மெ­னக் கோரிக்­கை­கள் விடுக்­கப்­பட்டு வரு­கின்ற இந்த வேளை­யில், அத­னைக் குழப்­பும் வகை­யில் சில அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் கருத்து வெளி­யிட்டு வரு­கின்­றமை வேத­னைக்­கு­ரி­யது. நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வடக்­குக் கிழக்­கைப் பொறுத்த வரை­யில் த…

  9. கண்டியில் முஸ்லிம்களின் பெருமளவு சொத்துக்கள் அழிவு கண்டி மாவட்டத்தில் உள்ள திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களில் முஸ்லிம்களின் பெரும் எண்ணிக்கையான வீடுகள், சொத்துகளும், பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டுள்ளன. 04 பள்ளிவாசல்கள், 37 வீடுகள், 46 வாணிப நிலையங்கள், 35 வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர், ஹிதாயத் சத்தார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று கண்டிக்குச் சென்றுள்ளது. விமானப்படையின் சிறப்பு உலங்குவானூர்தி மூலம் இவர்கள் நாடாள…

  10. கண்டி மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு – பாதுகாப்பு அதிகரிப்பு (படங்கள்) கண்டி மாவட்டம் முழுவதும், இன்று மாலை 6 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெல்தெனிய, திகண பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கண்டி நகரப் பகுதியெங்கும் சிறிலங்கா இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு…

  11. இலங்கை: இனக்கலவரங்களின் பின்னணி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கை இனக்கலவரங்களுக்கு பழகிப்போன நாடுதான். இங்கு தமிழருக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த வன்செயல்கள், அதனைத் தொடர்ந்த கலவரங்கள் பெரும்பாலும் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்ட, பலரும் அறிந்த விடயங்கள். ஆனால், இலங்கையில் நடந்த முதலாவது வன்செயல் அல்லது கலவரம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது பலரும் அறிய…

  12. பௌத்தர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – லக்ஸ்மன் கிரியல்ல குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பௌத்தர்கள், முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பௌத்தர்கள், முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரும் வகையிலான தீர்மானமொன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் செயலிழந்துள்ள காரணத்தினால் திகன, தெல்தெனிய பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரதேசத்திற்கு வந்த வெளிநபர்களினால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாகவும் இது குறித்து …

  13. ஆர்ப்பாட்டத்தை கைவிட்டார் ஆறுமுகன் தொண்டமான் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவை இடமாற்றம் செய்யக் கோரி மஸ்கெலியா அப்கட் பிரதான வீதியை மறித்து செய்யப்பட்ட வீதி மறியல் போராட்டம் தற்பொழுது நிறைவுக்கு வந்துள்ளது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்து கொண்ட இந்த வீதி மறியல் போராட்டம் இ.தொ.காவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. கட்சி சார்பாக தமது அரசாங்க தொழிலை துஷ்பிரயோகம் செய்வதாக இ.தொ.கா.வின் ஆதரவாளர்கள் கொடுத்த புகாருக்கு அமைவாகவே இந்த வீதி மறியல் போராட்டம் இன்று மாலை 6 மணியளவில் சுமார் 2 மணி நேரமாக பொலிஸ் நிலையத்…

  14. மட்டு. வில் முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தால் அனுஷ்டிப்பு கண்டி மற்றும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறையினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு ஹர்த்தாலில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு நகரில் இன்று காலை முதல் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதுடன் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று இயங்கியதை காணமுடிந்தது. அனைத்து அரச தனியார் நிறுவனங்களும் வழமைபோன்று செயற்பட்ட நிலையில் கல்முனை மற்றும் அம்பாறை, அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் …

  15. கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து அக்கரைப்பற்று முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்க ஹர்த்தால் போடப்பட்டுள்ளது . 


 அங்கு வந்த தமிழ் இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்தபோது இரு முஸ்லிம் இருவர் அந்த இளைஞனை தாக்கியுள்ளனர் . இதனையடுத்து அங்கு தமிழ் மக்கள் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளனர். அதன் பின் போலீசார் , இராணுவம் வரவழைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது . ஏற்கனவே நான்கு பேர் செய்த வேலையால் ஒரு சமூகத்திற்கு இப்படியான இன வெறி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இன்னும் இன்னும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறகூடாது . http://www.thaarakam.com/முக்கிய-செய்திகள்/அக்கரைப்பற்றில்-தமிழர்/

  16. ஜெய்ப்பூர் நிறுவனத்துக்கு 1.3 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் - டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன் ஜெய்ப்பூர் நிறுவனத்துக்கு 1.3 மில்லியன் பெறுமதியான அவயங்கள் செய்யும் உபகரணங்களை ஜோர்தான் இளவரசரும், நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதுக்கு பொறுப்பான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியுமான மிரேந் அல்குஷேன் வழங்கி வைத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (06) விஜயம் செய்த ஜோர்தான் இளவரசர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெய்ப்பூர் நிறுவனத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஆத்துடன் இளவரசர், செயற்கை அவயங்கள் செய்யும் தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், கண்ணிவெடிகளால் அவய…

  17. கலவரத்திற்கான காரணம் குறித்து ஞானசார தேரர் அதிரடி அறிவிப்பு ! (இராஜதுரை ஹஷான்) தெல்தெனிய இனக்கலவரம் தீவிரமைடைய தொடர்பில பிரதமரும் , பொலிஸ் பிரிவினருமே பிரதான காரணம் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரும் , பொலிஸ் பிரிவினருமே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும். தேசிய அரசாங்கத்தில் மக்களின் தகவல் அறியும் சட்டமூலம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், …

  18. ஐ.நா. வின் விசேட தூதுவர் முகமாலைப் பகுதிக்கு விஜயம் நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கு பொறுப்பான ஐ.நா.வின் விசேட தூதுவர் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன், இன்று கிளிநொச்சி, முகமாலை கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்களை சென்று பார்வையிட்டார். இன்று காலை பத்துமணியளவில் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் பணிகளை முன்னெடுக்கின்ற அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பில் உரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றுகின்ற பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் , தான் இரண்டு நாட்களாக இவ் கண்ணிவெடி அகற்றும் பணிநடைபெறும் இடங்களை பார்வையிட்டு வருவதாகவும்…

  19. அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானம் :வர்த்தமானி விரைவில் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப் படுத்தவதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளதாகவும் மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரமே பாராளுமன்றத்தில் அதற…

    • 2 replies
    • 378 views
  20. மருதமுனையில் கண்ணீர்ப்புகை தாக்குதல்; சிலர் கைது அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கலைப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/அம்பாறை/மருதமுனையில்-கண்ணீர்ப்புகை-தாக்குதல்-சிலர்-கைது/74-212342

  21. பிரதமருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை: கூட்டு எதிரணி சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும் (ஆர்.யசி) பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவிற்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கை யில்லா பிரேரணையை பொது எதிரணி இன்று சபாநாயகரிடம் கையளிக் கும் என்று அவ்வணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இதேவேளையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை பொது எதிரணி ஆதரிக்கும் எனவும் ஆட்சியை வீழ்த்தும் வரையில் நெருக்கடி கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பு நம்பிக்கை…

  22. கண்டி - திகன சம்பவம் : கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த அதரடி உத்தரவு Weiterempfehlen கண்டி - தெல்தெனிய, திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 24 பேரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவ…

  23. மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கு­வதில் எமக்கும் விருப்­பமே மஹிந்த தரப்பு எம்­முடன் இணை­ய­வேண்டும் என்­கிறார் அமைச்சர் அம­ர­வீர (ஆர்.யசி) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்கும் விருப்பம் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல எமக்கும் உள்­ளது. எப்­ப­டி­யேனும் மஹிந்த தரப்பை எம்­முடன் இணைத்­துக்­கொண்டு பய­ணிக்க முடி­யு­மாயின் அதனை செய்­ய­வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள வேண்­டிய பல கார­ணி­களில் அர­சாங்கம் தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­பட்­டமை எமது தோல்­வி­க­ளுக்கு பிர­தான காரணம் எனவும் அவர் குறிப்­பிட்டார். வீரக்­கெட்­டிய பிர­தே­சத்தில்…

    • 1 reply
    • 311 views
  24. அம்பாறையில் இன்று முழு கதவடைப்பு அம்பாறையில் இன்று முழு கதவடைப்பு அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இன்று முழு கதவடைப்பு கடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.. நாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கன்டித்தும் இந்தக் கதவடைப்பு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/73899.html

  25. கண்டியில் தற்போதைய நிலைமை என்ன ? தீயில் கருகி இளைஞர் பலி கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து தற்போது நிலைமை வழமைக்குத் திரும்புவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கு ஏற்பட்ட தீயில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சனநடமாட்டம் குறிப்பிட்டளவில் இருப்பதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார். நேற்று நண்பகலில் இருந்து மெதுவாக ஆரம்பித்த வன்முறைச் சம்பவங்கள் மாலையாகும் போது பலத்த வன்முறையாக மாறியதாகவும் பின்னர் அங்கு பெய்த கடும் மழையையடுத்த ஓரளவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.