ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
மரைன் படைப்பிரிவை வேகமாகப் பலப்படுத்தும் சிறிலங்கா கடற்படை சிறிலங்கா கடற்படையில் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட மரைன் படைப்பிரிவு வேகமாக பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறுகிய காலத்துக்குள் மரைன் படைப்பிரிவின் மூன்றாவது அணி பயிற்சியை முடித்து வெளியேறியிருக்கிறது. சம்பூரில் உள்ள மரைன் பற்றாலியனின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வில், 16 அதிகாரிகள் மற்றும் 123 மரைன் கொமாண்டோக்கள் பயிற்சிகளை முடித்து வெளியேறினர். கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் நிமல் சரத்சேன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று மரைன் படையணியின் புதிய கொமாண்டோக்களுக்கான பட்டிகளை அணிவித்தார். 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்…
-
- 0 replies
- 333 views
-
-
ஒரே ஆண்டில் கொழும்பு வந்த 65 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் சிறிலங்காவில் சீன கடற்படைக் கப்பல்களின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிராகரித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று முன்தினம் இந்திய கடற்படையின் ஏற்பாட்டில், நடந்த இந்தோ-பசுபிக் பிராந்திய கலந்துரையாடலில், உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”கொழும்புத் துறைமுகத்துக்கு சீனக் கடற்படையின் போர்க்கப்பல்களின் வருகை அதிகளவில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டில் 14 நாடுகளின் 65 போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்தன. இதில் பெருமளவு இந்தியக் கடற்படை மற்றும் இந்திய கடலோரக் காவல் படை…
-
- 0 replies
- 183 views
-
-
சில அரசியல்க் கட்சிகள் நாங்கள் இந்தியாவுடன் கிட்டிய உறவைப் பேணுவதை விரும்புகின்றார்கள் இல்லை தமிழ் மக்கள் பேரவை – விசேட கூட்டம் தமிழ் மக்கள் பேரவை தனது வேகத்தைக் கூட்டிப் பயணிக்க வேண்டிய தருணம் தற்போது உருவாகியுள்ளது. சென்ற முறை நாம் கூடிய போது தேர்தல்கள் விரைவில் நடைபெற இருப்பதாகக் கூறினோம். ஆனால் தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம் என்ற ரீதியில் பக்கச் சார்பற்று விளங்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் எம்முடன் இருக்கும் கட்சிகள் தேர்தலில் கலந்து கொண்டதை தமிழ் மக்கள் பேரவை எதிர்க்கவில்லை. தேர்தல் முடிவுகளின் படி எமது இயக்கம் வெளியிட்டு வந்த கருத்துக்கள், கொள்கைகளை மக்கள் போதிய அளவு ஏற்றுக் கொண்டதாக தெரியவந்…
-
- 0 replies
- 286 views
-
-
இன்றுடன் ஒரு வருடத்தைக் கடந்த நிலமீட்புப் போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தைக் கடந்த நிலமீட்புப் போராட்டம் கேப்பாபுலவு நிலமீட்புப் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகிய இந்தப் போராட்டம் ஒரு வருடமாகியும் தீர்வின்றித் தொடர்கின்றது. 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்தனர். http://…
-
- 1 reply
- 181 views
-
-
சீனத்தூதுவரை கோதபய ராஜபக்ஸ சந்தித்துள்ளார்…. இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய சீனத்தூதுவர் செங் செயுவானை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஸ சந்தித்துள்ளார். தூதுவருடான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோதபய சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எதனையும் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/68872/
-
- 0 replies
- 228 views
-
-
ராஜாங்கனை குளத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கெதிரான ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட 44 பேர் கைது குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம காவல்துறை சந்தியில் காவல்துறையினர் மீது; கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாங்கனை குளத்தை சுற்றியுள்ள 17,000 ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் ராஜாங்கனை குளத்தை குடிநீர் போத்தல்களை; தயாரிக்கும் சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளமைக் கெதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசயதாகவும் இதனால் 4 காவல்துறையினர…
-
- 5 replies
- 482 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 350 பொலிஸாருக்கு இடமாற்றம் வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 350 பொலிஸார் நாட்டின் இதர பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஜே.ஜாகொட ஆராச்சி நேற்று தெரிவித்தார். ஜனவரி மாத ஆரம்பம் தொடக்கம் இந்த வருடாந்த இடமாற்றம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் நடைபெற்று முடிந்து உள்ளுராட்சித் தேர்தல் காரணமாக இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்ததன் பின்னர் இந்த இடமாற்றம் தற்போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த வார இறுதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார். மட்டக்களப்ப…
-
- 0 replies
- 239 views
-
-
கின்னஸ் உலக சாதனைக்காக 2.9 மீற்றர் நீளமான ‘பிளக் பொயின்ற்’ தயாரித்த வவுனியா இளைஞர்; ரொக்கெட் தயாரிப்பு சோதனைகளிலும் ஈடுபடுகிறார் (கதீஸ்) வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை முயற்சிக்காக 2.9 மீற்றர் நீளமான பிளக் பொயின்ற் தொகுதி (Longest Power Strip) ஒன்றை தயாரித்துள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியலாளருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞரே உலகில் அதிக நீளமான நீள் மின் இணைப்பு பொருத்தி (Longest Power Strip) தயாரித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்…
-
- 0 replies
- 200 views
-
-
"போர்க்குற்றங்களை நிராகரிக்கும் எமது நிலைப்பாட்டை இம்முறையும் தெரிவிப்போம்" போர்க்குற்றங்களை நிராகரிக்கும் எமது நிலைப்பாட்டை இம்முறையும் ஜெனிவாவில் தெரிவிப்போம் என எலிய அமைப்பின் பிரதிநிதியாக ஜெனிவா செல்லவுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் ஜெனிவா செல்லவுள்ளதாகவும் அறிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர எலிய அமைப்பின் பிரதிநிதியாக ஜெனிவா செல்லவுள்ளதாக தெரியவருகின்றது. இது குறித்து வினவியபோதே அ…
-
- 0 replies
- 266 views
-
-
யாழ் நகர உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் புழுக்கள்… யாழ் நகரில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் சிலர் அதை சுகாதார துறையினருக்கு அறிவித்த போதும் உரியவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் விசனம் தெரிவித்துள்ளனர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகத்தில் நேற்று(28) மதியம் சோற்றுப்பாசலை வாங்கிச்சென்றுள்ளனர். பின்னர் அலுவலகத்துக்கு சென்று அங்கு உணவை உண்ணுவதற்காக சோற்றுப்பாசலை விரித்த போது சோற்றினுள் இருந்த இறைச்சியினுள் புழுக்கள் இருப்பதை அவதானித்துள்ளனர். …
-
- 0 replies
- 226 views
-
-
சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி பொன்சேகாவுக்கு வழங்கப்படலாம் : ஆதரவும் எதிர்ப்பும் உள்ளதாம் - ராஜித சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாகவே வகித்துக்கொண்டிருக்கின்றார். அதனை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கவேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டிலிருக்கும் சரத் பொன்சேகா நாடு திரும்பியதும் அதனை அவருக்கு வழங்குவதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாநாயக்க தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுக…
-
- 0 replies
- 171 views
-
-
"கோழியை பாதுகாக்கும் பொறுப்பை நரியிடம் ஒப்படைக்க வேண்டாம்" ஊடகவியலாளர் லசந்த விக்ர மதுங்கவின் படுகொலையைமை யப்படுத்தி என்னை கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , இந்த விடயத்தில் அப்போதைய இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகவை விசாரிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கோழியை பாதுகாக்க நரியிடம் அதனை ஒப்படைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எவன்காட், ரக்னா லங்கா ப…
-
- 0 replies
- 203 views
-
-
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அமெரிக்கா சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் பீ தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய அவர், ஈரான் போன்ற மனித உரிமைகளை மீறும் நாடுகளை ஒரு விதமாகவும், இஸ்ரேல் விடயத்தில் பாரபட்சமாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடந்து கொள்கிறது என்று குற்றம்சாட்டினார். “ஏனைய உறுப்பு நாடுகளில் இருந்து இஸ்ரேலை வேறுபட்ட முறையில் கையாளுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. சிறிலங்…
-
- 0 replies
- 167 views
-
-
சிறிலங்கா குறித்த தவறான புரிதல்களைக் கொண்டிருந்தது இந்தியா – மகிந்த சிறிலங்காவில் இந்தியா துறைமுகங்களைக் கட்டவோ, நெடுஞ்சாலைகளை அமைக்கவோ இந்தியா ஆர்வம்காட்டவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் பெங்களூரு வழியாக க்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, அன்றிரவு அங்கு தங்கியிருந்து நேற்று அதிகாலையில் ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, நேற்று மீண்டும் பெங்களூரு வழியாக கொழும்பு திரும்பியுள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் ‘தி ஹிந்து’ செய்தியாளருக்கு, சிறிலங்காவில் சீனாவின் திட்டங்களின் மீது அதிகரித்துள்ள ஆர்வம் குறித்து அளித்துள்ள செவ்வியில் அவர், “துறைமுகங்கள், நெடுஞ…
-
- 0 replies
- 157 views
-
-
கொத்தணிக் குண்டுகளை தடை செய்யும் பிரகடனத்தில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா கொத்துக்குண்டுகளை (கிளஸ்டர்) தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கான அனுமதியைக் கோரும் பத்திரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையிடம் முன்வைத்திருந்தார். இதற்கமைய, கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில், கையெழுத்திட்ட 102 நாடுகளுடன் சிறிலங்காவும் இணைந்து கொள்ளவுள்ளது. அதேவேளை, போரின் போது சிறிலங்கா படையினர் ஒருபோதும், கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்றும், எதிர்காலத்திலும் அவர்கள் அதனைப் பயன்படுத்தமாட்டார்கள் என்றும் சி…
-
- 0 replies
- 95 views
-
-
இன்று சிங்கப்பூர் செல்கிறார் சிறிலங்கா பிரதமர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் முதலீடு செய்வது குறித்த மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் செல்லவுள்ளார். இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதில் பிராந்தியத்தின் முக்கியமான முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கு முன்னதாக, சிறிலங்கா முதலீடு என்ற பெயரிலான மாநாடுகள், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இடம்பெற்றிருந்தன. http://www.puthinappalakai.net/2018/03/01/news/29412
-
- 0 replies
- 143 views
-
-
காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் – இராணுவ பிரதிநிதிக்கும் இடமளிப்பு காணாமல் போனோர் பணியகத்தின் ஏழு உறுப்பினர்களின் நியமனங்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அங்கீகாரம் அளித்துள்ளார். அதிபர் சட்டவாளர் சாலிய பீரிஸ், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராகச் செயற்படுவார் என்றும், ஏனைய ஆறு உறுப்பினர்களும் அவருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்தின் ஏனைய உறுப்பினர்களாக, ஜெயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ், கலாநிதி சிறியானி நிமல்கா பெர்னான்டோ, மிராக் ரகீம், சுமணசிறி லியனகே, கணபதிப்…
-
- 0 replies
- 168 views
-
-
ஜெனிவா காய்ச்சல்!! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 37ஆவது பொதுக்கூட்டத்தொடர் சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று ஆரம்பமானது. தமிழர், சிங்களவர், பன்னாட்டுச் சமூகம் என்று அனைத்துத் தரப்புக்களாலும் கூர்ந்து அவதானிக்கப்படும் விதமாக நடப்பு வருட கூட்டத் தொடர் அமைந்துள்ளமை அவதானிப்பு. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற 36ஆவது கூட்டத் தொடரில் கொழும்பு அரசுக்கு இரண்டு வருடகால அவகாசத்தை கொடுத்திருந்தது ஐக்கிய நாடுகள் சபை. இந்த அவகாசத்தின் பாதிப்பகுதியில் கொழும்பு அரசு…
-
- 0 replies
- 301 views
-
-
தமிழர்கள் பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்!! தமிழர்கள் பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்!! பொதுக்கொள்கை ஒன்றின் அடிப்படையில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ரெலோ அமைப்பின் தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு தமிழ்க் கட்சிகளிடமிருந்து சாதகமான பதிலெதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ரெலோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றதொரு கட்சியாகும். இந்தக் கட்சியை விட புளொட், இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆகியனவும் அந்த…
-
- 0 replies
- 233 views
-
-
உயிருடன் மீட்கப்பட்ட கடலாமைகள் மண்டைதீவுக் கடலில் விடப்பட்டுள்ளன குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக உயிருடன் மீட்கப்பட்ட 3 கடலாமைகள் தீவகம் மண்டைதீவுக் கடலில் சேர்க்கப்பட்டன. பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக 3கடலாமைகள் உயிருடன் உள்ளன என்று யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டன. இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், அவற்றை மீட்டு, தீவகம் மண்டைதீவுக் கடலில் கடலில் சேர்ப்பித்தனர். இலங்கையில் கடலாமையை கொல்லுதல் மற்றும் அவற்றை உணவுக்காக விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamiln…
-
- 0 replies
- 299 views
-
-
மெனிக்பாம் பகுதியில் இராணுவ விடுதி: மெனிக்பாம் பகுதியில் இராணுவ விடுதி: உடன்தடுத்து நிறுத்தவும் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் தமிழர்களின் இடைத்தங்கல் முகாம் அமைந்திருந்த பிரதேசத்தில் படையினரின் ஆடம்பர உல்லாச விடுதி அமைக்கப்பட்டுள்ளமை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளைத் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இது தொடர்…
-
- 0 replies
- 227 views
-
-
ரணிலைப் பாதுகாக்க மேற்குலகம் கங்கணம் ரணிலைப் பாதுகாக்க மேற்குலகம் கங்கணம் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவருவதைத் தடுப்பதற்காக மேற்குலக நாடுகள் களமிறங்கியுள்ளன என்று இராஜதந்திர வட்டாரத்தில் இருந்து அறியமுடிகின்றது. உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் கூட்டு அரசிலும், ஐக்கிய தேசியக் கட்சியினுள்ளும் கடும் பிளவுகள் ஏற்பட்…
-
- 3 replies
- 488 views
-
-
இலங்கை படைகள் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை :அரசாங்கம் திட்டவட்டம் (ரொபட் அன்டனி) இலங்கை இராணுவப் படைகள் யுத்தத்தின்போது எந்தவொரு கட்டத்திலும் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்தவில்லை. இதுதொடர்பான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரிக்கிறது. இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் கொத்தணிக்குண்டுகளை பாவித்தமைக்கான எந்தவொரு சாட்சியமும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாநாயக்க தெரிவித்தார். அத்துடன் கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கு முதலில் முன்னாள் ஜனாதிபதியே இணங்கினார். தற்போதைய அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற…
-
- 2 replies
- 359 views
-
-
நல்லாட்சியில் எதுவும் நடக்கவில்லை. கனேடிய அரசு ஜெனீவாவில் குற்றச்சாட்டு போர் முடிவடைந்த பின்னரும் மீள் நல்லிணக்கத்தை கட்டியழுப்ப முடியும் என நம்பிக்கை கொண்ட அனைவரும் தற்போது விரக்கதியடைந்துள்ளதாக, கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபி றி லண்டின் (Chrystia Freelan) தெரிவித்துள்ளார். இலங்கையின் 26 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தமை ஒரு முக்கியமான தருணம். ஆனாலும் அதுவொரு முதற்படி மாத்திரமே என்று கூறிய அவர், போரின்போது ஏற்பட்ட அனைத்து வகையான பாதிப்புக்களின் வடுக்களை நீக்கவும் உண்மையான மீளிணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பிய அனைவரும் தொடர்ந்தும் விரக்தி நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். ஜெனீவா…
-
- 0 replies
- 258 views
-
-
சீனர்களின் கடைகள் கொழும்பில் அதிகரித்து வருவது எவ்வாறு.? கொழும்பு நகரில் சீனர்களது வியாபாரஸ்தலங்கள், கடைகள் அதிகரித்து வருவது எவ்வாறு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இங்கு உள்ளூர் சில்லறை வியாபாரிகளின் பிரச்சினை குறித்து கவனத்திற்கு கொண்டுவந்த ஜனாதிபதி கொழும்பு நகரில் சீனர்களது வியாபார நிலையங்கள், கடைகள் அதிகரித்து வருகின்றன. சீனாவிலிருந்து பொருட்களை நேரடியாக கொண்டு வந்து இவர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால்…
-
- 4 replies
- 577 views
-