Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிர­த­மரை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வது இல­கு­வான விட­ய­மல்ல! : 113 பெரும்­பான்மை உள்­ளது என்­கிறார் ராஜித எஸ்.வினோத் நடை­மு­றையில் உள்ள 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் பிர­த­மரை பத­வியில் இருந்து நீக்­கு­வது இல­கு­வான விடயம் அல்ல.பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு பாரா­ளு­மன்­றத்தில் 113 பெரும்­பான்மை உள்­ளது. எனவே அவரை பதவி நீக்­கு­வது சாத்­தி­ய­மற்­றது. இதற்­காக உயர் நீதி­மன்­றத்தின் ஆலோ­ச­னையை பெறு­வதும் அவ­சி­ய­மற்­றது என சுகா­தார அமைச்­சரும், அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது; உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் முடி­வு­களை வைத்­துக்­கொண்டு …

  2. மாகா­ண­சபைத் தேர்­தல்கள் பழைய முறைப்­படி நடை­பெறும்? : தொகு­தி­மு­றைக்கு சிறு­கட்­சிகள் எதிர்ப்பு எஸ்.கே தொகு­தி­மு­றைப்­படி மாகாண சபை­களின் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்கு சிறு­கட்­சிகள் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் , தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, ஜாதிக ஹெல உறு­மய உட்­பட பல சிறு­கட்­சிகள் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரி­விக்க இப்­போதே தீர்­மா­னித்­துள்­ளன. உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­முறை தொகு­தி­மு­றையில் சாத்­தி­ய­மாக அமை­ய­வில்லை. இதேபோல் மாகாண சபைத் தேர்­தல்­களும் தொகு­தி­மு­றையில் நடத்­தப்­ப­டு­மானால் சாத்­தி­ய­மாக அமை­யாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­திச்­செ­ய­லாளர் நிசாம் காரி­யப்பர் தெரி­வி…

  3. அடுத்த பாய்ச்­ச­லுக்கு மஹிந்த தயார் எம்.சி.நஜி­முதீன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­தா­ன­மாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன அடுத்த கட்ட நட­வ­டிக்­கைக்குத் தயா­ரா­கி­யுள்­ளது. அதற்­கி­ணங்க எதிர்­வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி நுகே­கொ­டயில் பேரணி நடத்­து­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது. அப்­பே­ர­ணியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்ஜித் சொய்சா தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்­சியின் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நல்­லாட…

  4. இலங்கையின் நம்­ப­கத்­தன்­மையை ஐ.நா. உறுதி செய்ய வேண்டும் : தமி­ழ­ரசுக்கட்சி வலி­யு­றுத்து வழங்­கிய வாக்­கு­று­திகள் மற்றும் பொறுப்­பு­கூ­றலின் அடிப்­ப­டையில் இலங்கை நம்­ப­கத்­தன்­மை­யுடன் செயற்­ப­டு­வதை ஐ.நா.மனித உரிமை ஆணை­யா­ளரின் அலு­வ­லகம், சர்­வ­தேச அமைப்­புக்கள் மற்றும் ஏனைய அங்­கத்­துவ நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ள தமி­ழ­ரசுக் கட்சி, மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் அறிக்­கையை வர­வேற்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை மற்றும் அமர்­வுகள் குறித்து நேற்று வெளி­யிட்ட விசேட அறிக்­கை­யி­லேயே இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளது. கொழும்பில் நேற்றுக் கூடிய இ…

  5. திருகோணமலையில் பிரித்தானியர் கால பீரங்கிகள் மீட்பு திருகோணமலையில் பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மேலும் இரண்டு பாரிய பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவுக்கான புதிய விடுதியை அமைப்பதற்காக குழி தோண்டிய போது, பாரிய பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது, மண்ணில் புதைந்து கிடந்த மேலும் இரண்டு பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பீரங்கிகள் அனைத்தும் பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுமணதாச தெரிவித்தார். …

  6. பிரிகேடியர் பிரியங்கவின் பதவிக்காலம் முடிந்து விட்டதாம் – இனி லண்டன் செல்லமாட்டார் பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பதவிகாலம் முடிந்து விட்டதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டின் இராணுவத் தளபதி என்ற வகையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது கடமை. இன்னொரு நாட்டின் சட்டத்தின் கீழ், தமது கடமைகளை அவர் நிறைவேற்றும் போது, அவரது பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவது சாத்தியமில்லை. இந்த விடயங்கள் குகறித்துப் பேசவே …

  7. இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை மாற்றம் சிறப்புச் செய்தியாளர்Feb 25, 2018 | 0:29 by in செய்திகள் சிறிலங்காவில் இன்று அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. அதிபர் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பொறுப்பேற்கவுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, ஐதேக தரப்பில் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் உள்ள நெடுஞ்சாலைகள், மற்றும் உயர்கல்வி அமைச்சு கபீர் காசிமிடம் கையளிக்கப்படும் என்றும், கபீர் காசிமிடம் உள்ள பொது தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சு லக்ஸ்மன் …

  8. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு கி.தவசீலன்Feb 25, 2018 | 0:39 by in செய்திகள் சிறிலங்காவில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவது தொடர்பான தீர்மானம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை அடுத்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், “ கொழும்பில் கூடிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவானது சிறிலங்காவில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐ.நா…

  9. கச்சதீவில் சிங்களத்தில் ஆராதனை – இந்திய, இலங்கை பக்தர்கள் அதிர்ச்சி அ.எழிலரசன்Feb 25, 2018 by in செய்திகள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சிங்களத்தில் ஆராதனை நடத்தப்பட்டமை குறித்து- விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் இலங்கை பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்த கச்சதீவு புனித ஆலயத்தின் இரண்டு நாள் திருவிழா நேற்று நிறைவடைந்தது. இந்த திருவிழாவில், தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2000 பேரும், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 4000 பேரும், கலந்து கொண்டனர். வழக்கமாக இந்த திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் இலங்கையைச். சேர்ந்த தமிழ் பக்தர்களே கலந்த…

  10. கிறிஸ்தவ,முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை சர்வதேச ரீதியில் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் அற்ற அச்சுறுத்தல் மிகுந்த நாடுகள் பட்டியலில் ஸ்ரீலங்காவும் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலுடன் கூடிய உணர்வுகள் ஸ்ரீலங்காவில் கடந்த வருடத்தில் பௌத்த மக்களிடையே அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கொழும்பு கல்கிஸை பகுதியில் ஐ.நா பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் கவனிப்பில் தங்கியிருந்த ரோஹ…

  11. ஆதரவு தர முன்வரும் தமிழ் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேசும் ஆதரவு தர முன்வரும் தமிழ் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேசும் உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ரவு வழங்க முன்­வ­ரும் தமிழ்க் கட்­சி­க­ளு­டன் பேச்சு நடத்­து­வது என்று, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் நேற்று முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டம், கொழும்­பில் நேற்று மாலை 5.30 மணி தொடக்­கம் 6.30 மணி வரை நடை­பெற்­றது. …

  12. கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுவர் இல்ல சிறுமிகள் : 2 இளம் பிக்குகள் உட்பட 8 பேர் கைது!!! குருநாகல் - ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டில் பிக்குகள் இருவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 32 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென விசாரணைகளிலிந்து தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட பிக்குகள் இருவரும் 16 மற்றும் 17 வயதுகளைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனையோர் 20 ம…

  13. "எப்போது தோற்றார் மகிந்த ராஜபக்சே?" ஒட்டுமொத்த இலங்கை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் கூட்டணிக் கட்சி பெரும்பான்மை வெற்றிபெற்றது. பெப்ரவரி பத்தாம் திகதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தென்னிலங்கையின் அரசியல் காட்சிகள் களேபரக் கைகுலுக்கல்களோடு தோன்றத்தொடங்கிவிட்டன. “நல்லிணக்க அரசு” என்றழைக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன அணியினரின் ஆட்சி கவிழ்க்கப்படலாம் எனவும் எதிர்வுகூறல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. போதாதற்கு அரசியல் அவதானிகள் சிலர் மஹிந்தவின் மீள் எழுச்சி அரசியல் காலமாக இதனைக் கருதினர். ஆனால், உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து அரங்கேறும் காட்சிகள் யாவும் …

  14. சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை பொன்சேகாவுக்கு வழங்க வேண்டாம்: அலறும் பிக்குகள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை அரசாங்கத்தில் இருக்கும் எவருக்கு கொடுத்தாலும், சரத் பொன்சேகாவுக்கு வழங்க வேண்டாம் என பிக்குகள் சிலர் ஜனாதிபதியிடம் வலிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் விவகாரங்களில் உதவி வரும் பிக்குகள் சிலர், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் மூலம் இந்த விடயத்தினை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் கோத்தபாய ராஜபக்சவின் எளிய அமைப்பு மற்றும் விமல் வீரவங்சவின் இராவணா பலய அமைப்பு உட்பட அமைப்புகளின் பிக்குகள் அடங்குவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதிக்க…

  15. ஐ.நா. ஆணை­யா­ளரின் அழுத்­தமும் அர­சாங்­கத்தின் அக்­க­றை­யின்­மையும் இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று சர்­வ­தேசம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்ற போதிலும் அதற்­கான உரிய நட­வ­டிக்­கைகள் இன்­னமும் இடம்­பெ­ற­வில்லை. இதனால் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதி வழங்­கப்­ப­டாத நிலையில் நிர்க்­கதி நிலை­யினை அடைந்­துள்­ளனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களின் உயி­ரி­ழப்­புக்­க­ளுக்கு மத்­தியில் யுத்தம் முடி­வுக…

  16. பிற்போக்கான சிந்தனை!! வடமா­காண மட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில், யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இரவு நடை­பெ­ற­வி­ருந்த 20வயது பெண்­கள் பிரிவு இறு­தி­யாட்­டத்­தில் பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி சமுகம் தந்­தி­ருக்­க­வில்லை. மாகா­ண­மட்டத் தொட­ரொன்­றின் இறு­தி­யாட்­டத்தைத் தவ­ற­வி­டும் அள­வுக்கு, அதன் கன­தித் தன்­மையை உண­ராத அள­வுக்கு அந்­தப் பாட­சா­லை­யின் நிர்­வா­கம் அமைந்­துள்­ளமை காலக்­கொ­டு­மையே தவிர வேறொன்­று­மில்லை. பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் பாட­சாலை அணி இறு­தி­யாட்­டத்­தில் கள­மி­றங்­கா­தமை அதிர்­வ­லை­க­ளைத் தோற்­று­வித்­துள்­ளது. விட­யம் பர­ப­ரப்­பா­கி­யுள்…

  17. அமெரிக்காவின் பாரிய மருத்துவக் கப்பல் யுஎஸ்என்எஸ் மேர்சி சிறிலங்கா வரவுள்ளது அமெரிக்க கடற்படையின் பாரிய மருத்துவக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேர்சி (USNS Mercy) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் மிகப் பெரிய மனிதாபிமான மற்றும் அனர்த்த மீட்பு தயார் நிலை நடவடிக்கையை அமெரிக்கா இந்த ஆண்டும் முன்னெடுக்கவுள்ளது. பசுபிக் ஒத்துழைப்பு ஒத்திகை என்ற பெயரிலான அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் கீழ் கடந்த ஆண்டு யுஎஸ்எஸ் போல் ரிவர் என்ற கப்பலில் வந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடற்படையினர் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்திருந்து மனிதாபிமான உதவிப் பணிகளை மேற்கொண்டனர். இந்த ஆண்டு யுஎஸ்என்எஸ் மேர்சி என்ற மருத்துவக் கப்பல் சி…

  18. வவுனியாவிற்கு வந்தடைந்த உலகசாதனை வீரன் வவுனியா பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரமபித்த மரதன் ஓடடம் இன்று வவுனியாவை வந்தடைந்தது. கனடாவில் இருந்து ஆரம்பித்த மரதன் இன்று வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை வந்தடைந்தது. ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாலையை ஏந்தியவாறாக 72 நாட்டுக்கு 123 நாட்களில் சுமார் 4000 கிலோமீற்றர் ஓடிச்செல்லவுள்ள இப்பயணமானது இன்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஆரம்பித்திருந்தது. யுத்த பிரதேசமான பாலஸ்தீனத்தில் இருந்து ஆரம்பித்த இவ் மரதன் ஒட்டமானது வவுனியா, மாங்குளம், கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணத்தை சென்று முடிவடையவுள்ளது. மாலை 03.00 மணிக்கு …

  19. சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க இலங்கைக்கு அழைக்கப்பட்டதற்கான காரணம் வெளியானது!!! பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தொடர்பிலான ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இலங்கைக்கு வரவழைக்கப்பட்டமை அவரது பாதுகாப்பினை கருத்திற் கொண்டே என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவில் அவர்…

  20. சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ள பிள்ளையானின் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு திறந்த மனதுடன் பேசுவதற்கு தயாராகயிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும், கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் கிழக்கு, வடக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையான சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் கட்சிகளிடையே பெரும் இழுபறிநிலை தோன்றியுள்ளமை தாங்களும…

  21. இலங்கை உள்ளூராட்சித் தேர்தலும் ராஜபக் ஷவின் மீள்வருகையும் இலங்­கையில் பெரிது-ம் எதிர்­பார்க்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் எந்­த­வித பிரச்­சி­னையும் இன்றி 2018 பெப்­ர­வரி 10 இல் நடந்து முடிந்­தது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான புதி­தாக உரு­வான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன இத்­தேர்­தலில் நாடு­த­ழு­விய ரீதியில் பெரு­வெற்­றி­யீட்டி அவ­தா­னி­களை திகைப்­ப­டைய வைத்­தது. இந்தக் கட்சி நாட­ளா­விய ரீதியில் மொத்த வாக்கின் 45 வீதத்தை பெற்­றுள்­ள­துடன் சிங்­கள பெரும்­பான்மைப் பகு­தி­களில் அதிக வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது. குறிப்­பாக 16 மாவட்­டங்­களில், தமி­ழர்கள் அதிக அளவில் வாழும் வடக்கு கிழக்கில் உள்ள பல மாவட்­டங்­க…

  22. "வழக்கு விசாரணையில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் எதுவுமே தெரியாது" அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் உரிய தலைவர்களுடன் கதைத்து விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் மெதடிஸ் திருச்சபையின் போதகர் ஜெகதாஸ் அடிகளார் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலை…

  23. ஜெனி­வா­வுக்­கான புதிய தூது­வ­ராக அசீஸ் இம்­முறை கூட்டத் தொட­ரிலும் பங்­கேற்பார் (ரொபட் அன்­டனி) ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்­கான இலங்­கையின் நிரந்­தர வதி­விடப் பிர­தி­நி­தி­யாக ஏ.எல். ஏ. அசீஸ் வெளிவி­வ­கார அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மாகி, மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இந்த புதிய நிய­மனம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆஸ்­ரி­யா­விற்­கான இலங்­கையின் தூது­வ­ராக செயற்­படும், கல்­மு­னைக்­கு­டியைச் சேர்ந்த ஏ.எல்.ஏ. அசீஸ், G-77 நாடுகள் குழுவின் தலை­…

  24. பஸ்ஸில் வெடித்த குண்டை எடுத்து வந்­தவர் கஹ­கொல்ல முகாமின் சார்ஜன்ட் மேஜர்? சம்­பவம் தொடர்பில் பல தக­வல்கள் அம்­பலம்; முகா­முக்குள் கொண்டு செல்­லவே குண்டை எடுத்து வந்­துள்­ளாராம் (எம்.எப்.எம்.பஸீர்) தியத்­த­லாவ - கஹ­கொல்ல பகு­தியில் பஸ் வண்­டி­யினுள் வெடித்த கைக்­குண்­டா­னது, கஹ­கொல்ல இரா­ணுவ முகாமில் சேவை­யாற்றும் சார்ஜன்ட் மேஜர் தர இரா­ணுவ வீர­ரா­லேயே எடுத்து செல்­லப்­பட்­டுள்­ளமை பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. குறித்த சார்ஜன்ட் மேஜர், இயந்­திர பொறி­யியல் படை­ய­ணியின், கஹ­கொல்ல முகாமின் ஆயுத களஞ்­சி­யத்­துக்கு பொறுப்­பாக செயற்­பட்­டவர் எனவும் அவர் விடு­மு­றைக்­காக வீடு சென்று, குறித்த தினம் கஹ­கொல்ல முகா­முக்கு திரும்­பிக…

  25. பர­ப­ரப்­பான சூழலில் திங்­க­ளன்று ஆரம்­ப­மா­கி­றது ஜெனிவா சமர் (ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கின்­றது. மனித உரிமை பேர­வையின் தலைவர் தலை­மையில் நடை­பெறும் இந்த 37 ஆவது கூட்டத் தொடரில் நிலையில் இலங்கை மனித உரிமை நிலை­வரம் உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களின் மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் பிரே­ர­ணை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன. இதே­வேளை 37 ஆவது கூட்டத் தொடர் இலங்­கைக்கு மிக முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.