ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
பொறுத்திருந்து பாருங்கள்! எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மகிந்த கருத்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொறுத்திருந்து பார்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரியிருப்பதாகவும் கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்குவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை தேவையில்லை. ஜனாதிபதியின் அதிகாரத்தை கொண்டே அவரை பதவி நீக்கலாம். புதிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அதற்கு ஒருபோது ஆதரவு வழங்கப் போவதில்லை. …
-
- 0 replies
- 157 views
-
-
புனரமைக்கப்பட்ட இரணைமடுவில் போதிய நீரின்மையால் சிறுபோகம் நெற்செய்கை கேள்விக்குள்ளாகியுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் தற்போது 16.6 அடியாக இருப்பதனால் சிறுபோகம் நெற்செய்கை கேள்விக்குள்ளாகியுள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னைய காலங்களில் இரணைமடுகுளத்தில் 30 அடியாக நீர் சேமிக்கப்படுகின்ற போது பெப்ரவரி மார்ச் மாதங்களில் குளத்தின் நீர் மட்டம் 24 அடியாக காணப்படும். இந்தநேரங்களில் இரணைமடுகுளத்தின் கீழ் 8000 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கடந்த இரண்டு வருடங்களாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்…
-
- 0 replies
- 149 views
-
-
“ ரணிலை தூக்கிவிட்டு சம்பந்தனை பிரதமராக்குங்கள்” ( இராஜதுரை ஹஷான்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை பிரதமராக்கி ஆட்சியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ள முருதெட்டுவே ஆனந்த தேரர் , தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தீர்வு காணாமல் வெறுமனே பெயரளவில் ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தாமல் வெறும் நாம நிர்வாகியாகவே செயற்படுகின்றமை கண்டிக்கத்தக்கது. நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பில் உடனடி தீர்மானத்தினை ஜனாதிபதி மேற்கொள்ள…
-
- 0 replies
- 404 views
-
-
'ஏன் A/L படிக்கவில்லை?' விமலிடம் ராஜித்த கேள்வி அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோருக்கிடையில், சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. நாடாளுமன்றில் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே, இந்த மோதல் சூடுபிடித்துள்ளது. ராஜித்த: (அலைபேசியை பார்த்துக்கொண்டு) இவர்கள் இன்று காலை, தேசிய அரசாங்கமொன்று இல்லையென, பெரிதாகப் பேசினர். இதோ, தான் புதிய பிரதமரொருவரை நியமிக்குமாறு கோரவில்லையென, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விமல்: ஏதாவதொரு ஆவணத்தைப் பற்றித் தெரிவிப்பதாயின், அதை சபையில் சமர்ப்பியுங்கள். அப…
-
- 0 replies
- 461 views
-
-
“எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மஹிந்த” அங்கீகாரம் இல்லாத தேசிய அரசாங்கத்தில் பிரதமர் நாற்காலியில் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி ஆசனத்தில் சம்பந்தனும் அமர முடியாது. ஆகவே உடனடியாக பிரதமர் இராஜினாமா செய்யவும், சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக் ஷவை எதிக்கட்சி தலைவராக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். தனி அரசாங்கத்தின் அமைச்சரவை உருவானால் மாத்திரமே அடுத்தகட்ட விவாதத்தை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்ற வரைவு நிலையியற் கட்டளைகள் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேலையில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றினை எழுப்பி உர…
-
- 0 replies
- 233 views
-
-
த.தே.கூட்டமைப்புடன் கருணா இணைவு? Report us Shalini 4 hours ago தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா இணையலாம் என வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளில் வவுனியா மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை 4 சபைகளுக்கும் தெரிவு செய்வதில் கூட்டமைப்பின் தலைமை பிழை விட்டுள்ளது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டமைப்பின் தலைமையோ அடுத்த இடத்தில் உள்ள தலைவர்களோ உள்ளூராட…
-
- 0 replies
- 450 views
-
-
கச்சதீவு திருவிழாவிலும் புகுந்தது சிங்களம் – இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கொமடோர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார். “இந்திய- சிறிலங்கா யாத்திரிகள் ஒன்று கூடுகின்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்தமுறை திருவிழாவில் இந்தியாவில் இருந்து 5000 பேரும், சிறிலங்காவில் இருந்து 8000 பேரும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் இருந்து வரும் யாத்திரிகள், அனைத்துலக கடல் எல்லையில் இருந்து சிறிலங்கா கடற்படையின் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவர். …
-
- 1 reply
- 234 views
-
-
“பட்டறிவைப் பயன்படுத்தத் தெரியாதவன்….” – கூட்டமைப்பு தொடர்பில் வித்தியாதரன் கடும் விமர்சனம்! தோல்வியிலும் பின்னடைவிலும் பாடம் படிக்காதவன், பட்டறிவைப் பயன்படுத்தத் தெரியாதவன், முன்னேறப் போவதில்லை. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்களினால் பிரதிபலிக்கப்பட்ட மனப்போக்கை தமிழ்க் கூட்டமைப்பு உணரவில்லையோ அல்லது உணரத் தலைப்படவில்லையோ என்பது புரியவில்லை. மக்கள் அளித்த தீர்ப்பு தெளிவானது. முன்னைய தேர்தல்களில் ஏறத்தாழ ஏகமனதாகக் கூட்டமைப்புக்கு பின்னால் நின்ற மக்கள் இன்று அதிலிருந்து கலைந்து போகத் தலைப்பட்டு விட்டார்கள். வடக்கு, கிழக்கில் இத்தனை தமிழ் எம்.பிக்களில் இத்தனை பேர் நாங்கள் என்று இதுவரை காலமும் பீற்றியடித்த கூட்டமைப்புப் பேச்சாளர் எம்…
-
- 0 replies
- 293 views
-
-
புதிய அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் இருந்து ஒதுங்கியது கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நடக்கும் எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெப்ரவரி 10 தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் தற்போதைய சூழல் வெறுப்பை ஏற்படுத்துகிறது. அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க கூட்டமைப்பு விரும்பவில்லை. பெருமளவு பேச்சுக்களை நடந்து கொண்டிருப்பதை ந…
-
- 1 reply
- 277 views
-
-
கூட்டமைப்பு உருவாக்கத்தில் பங்கெடுத்த மூத்த சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் மறைவு! மூத்த சட்டத்தரணியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் பிரதான வழிகாட்டியாக செயற்பட்டவருமான கந்தையா நீலகண்டன், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொழும்பில் காலமாகிவிட்டார். யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாயைச் சேர்ந்த கந்தையா நீலகண்டன், அகில இலங்கை இந்து மா மன்றத்தின் தலைவராகவும் மன்னார் திருக்கேதீஸ்வரம் திருப்பணிச் சபையின் தலைவராகவும் சைவ விருத்திய சங்கத்தின் செயலாளராகவும் இறக்கும் வரை செயற்பட்டவர். வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நீண்டகால உறுப்பினராகவும் அங்கம் வகித்த அவர், பல தடவைகள் தலைவராகவும் பதவி வகித்திருந்தார். தமிழர் அரசியலில…
-
- 8 replies
- 853 views
-
-
15 பேருடன் வெளியேறி எதிரணிக்கு வருவேன் – மகிந்தவிடம் உறுதியளித்த சுசில் வாரஇறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிரணிக்கு வந்து விடுவோம் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த உறுதியளித்துள்ளார். சுதந்திரக் கட்சின் தேசிய அமைப்பாளரான சுசில் பிரேமஜெயந்த கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின் போதே, இந்த உறுதிமொழி வழங்கியுள்ளார். தற்போதைய கூட்டு அரசாங்கம் மக்களின் ஆணையை இழந்து விட்டது. எனவே, அதிலிருந்து வெளிய…
-
- 0 replies
- 234 views
-
-
ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு ! நாட்டிலேற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கிடையில் குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/30780
-
- 0 replies
- 200 views
-
-
சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக, சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/சபை-நடவடிக்கைகள்-ஒத்திவைப்பு/175-211689 சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம் கட்சித் தாவல்கள் இடம்பெறும் சாத்தியம் (எம்.எம்.மின்ஹாஜ்) தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமையினால் பிரதமர் பதவி நீக்கம், தனியாட்சி கோஷங்கள் மற் றும் கட்சிகளின் வெவ்வேறான குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு தினமும் நாட்டின் அரசியல் பரபரப்பாகும் சூழலில் இன்று திங்கட்கிழமை பாராளுமன்ற…
-
- 2 replies
- 400 views
-
-
ஊவா மாகாண முதலமைச்சரால் மண்டியிடப்பட்டதாக கூறப்படும் அதிபர் உள்ளிட்டோர் பயணித்த வேன் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து- இருபெண்கள் உட்பட நால்வர் காயம் (ரெ.கிறிஷ்ணகாந்) ஊவா மாகாண முதலமைச்சரால் மண்டியிடப்பட்டதாகக் கூறப்படும் அதிபர் உள்ளிட்ட குழுவினர் பயணித்த வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊவா மாகாண முதலமைச்சரால் அதிபர் ஒருவர் மண்டியிடப்பட்ட சம்பவம் தொடர்பான சாட்சிய விசாரணைகளுக்காக பாதிக்கப்பட்ட அதிபர் கடந்த 15 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு மேலும் 6 பேருடன் சென்றுள்ளார். பிரதான சாட்சியாளரான அதிபரை…
-
- 0 replies
- 146 views
-
-
கலப்புத் தேர்தல் முறையில் மாற்றம் தேவை!! கலப்புத் தேர்தல் முறையில் மாற்றம் தேவை!! உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிங்களக் கட்சிகள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளன. உள்ளூராட்சித் தேர்தலில் அதிகூடிய சபைகளைக் கைப்பற்றிய மகிந்த அணி அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தத் தேர்தல் முறைமையில் மாற்றம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. …
-
- 0 replies
- 260 views
-
-
கூட்டமைப்பும், முன்னணியும் இரகசிய நகர்வு!! கூட்டமைப்பும், முன்னணியும் இரகசிய நகர்வு!! கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அந்தந்த சபைகளில் ஆட்சி அமைப்பது என்ற புரிந்துணர்வை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குழப்புமாக இருந்தால், பதிலடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்னணி கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவருகின்றது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வடக்கி…
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கை விவகாரத்தை UN பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் – TNPF கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவசாகம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் எதுவிதமான ஆரம்ப நடவடிக்கையினைக் கூட மேற்கொள்ளாத நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தை உடனடியாக நிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என வலிறுயுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை மக்கள் மத்தியில் கையெழுத்துப் போராட்டமாகக் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இ…
-
- 4 replies
- 784 views
-
-
நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சு.க.வேண்டுமானால் பெரும்பான்மையை நிரூபிக்கட்டும் ரணில் தெரிவிப்பு; மோடியையும் உதாரணம் காட்டினார் (எம்.எம்.மின்ஹாஜ்) எமது நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எமக்குள்ள பெரும்பான்மையினை நாம் தற்போது காண்பிக்கத்தேவையில்லை. சுதந்திரக் கட்சியினர் தமக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கருதினால் அவர்கள் அதனை நிரூபிக்கட்டும். அவ்வாறான நிலை ஏற்பாட்டால் நாம் எமது பெரும்பான்மையினை நிரூபிக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. பல பிராந்தியங்களில்…
-
- 0 replies
- 109 views
-
-
மஹிந்தவினால் பதவியை தட்டிப்பறிக்க முடியாது .! (ஆர்.யசி) பாராளுமன்ற எதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் எதிர்க்கட்சி பதவியை தட்டிப்பறிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக் ஷவும் அவரது அணியும் தனித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தினால் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து பார்க்கலாம் எனவும் கூறியது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதிக வாக்குகளை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு எத…
-
- 1 reply
- 442 views
-
-
கடும் அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ள ஹுசைன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் 26 ஆம் திகதி திங்கட்கிழமை முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். இதன்போது இவர்கள் இருவரும் இலங்கை தொடர்பில் சில விடயங்களை முன்வைப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளதுடன் இலங்கை குறித்து பல்வேறு அறிக்கைகளும் தாக்கல் செய்…
-
- 0 replies
- 258 views
-
-
கஞ்சாவுடன் ஒருவர் கைது ; வவுனியாவில் சம்பவம் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்திச் சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு 11.15 மணியளவில் கைது செய்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற கிளிநொச்சி விவேகானந்த நகர் கிழக்கை சேர்ந்த நடராஜா பிரசன்னா ( வயது 33 ) என்பவரின் பயணப்பொதியினை சோதனையிட்ட போது, சுமார் 2 கிலோ 10 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒ…
-
- 0 replies
- 164 views
-
-
தென்னிலங்கையின் மாறாத விசுவாசம்! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய! இலங்கையின் அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திரும்புமுனைகளுடன் இன்றைய மணித்துளிகள் நகர்ந்து செல்கின்றன. 2015ல் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து கடந்து மூன்று வருடங்களாக ராஜபக்ஷர்களினால் வகுக்குப்பட்ட மாற்று நடவடிக்கைகளுக்கு இன்று மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. பறிபோன அதிகாரங்களை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்ட ராஜபக்ஷகள் அதற்கான ஆணையை முழுமையாக பெற்றுள்ளதாகவே இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. ராஜபக்ஷ மீண்டும் இலங்கையை முழுமையாக ஆட்சி செய்வதற்கு தென்னிலங்கை மக்கள் விரும்பம் கொண்டுள்ளதாக தமது ஜனநாயக …
-
- 23 replies
- 2k views
-
-
உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண் உறுப்பினர்களின் நியமனம் – இன்றைய கூட்டத்தில் முடிவு புதிய கலப்பு முறையின் கீழ் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில், 25 வீதம் பெண் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட அவர், “சட்டத்தின்படி, உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பிரதிநிதித்துவம் பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இம்முறை தேர்தல் முடிவுகள் வழக்கத்துக்கு மாறான முறையில் அமைந்திருப்பதால், 25 வீத இ…
-
- 0 replies
- 220 views
-
-
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சம்பந்தன் விடுக்கும் வேண்டுக்கோள்.! தேசிய அரசாங்கத்தை நீடித்து செல்வதில் தடைகளை தகர்க்கும் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும், தேசிய அரசாங்கத்தின் தேவை மற்றும் அவற்றில் ஜனாதிபதி - பிரதமரின் இணக்கப்பாடு தொடர்பாகவும் நட்புறவு ரீதியில் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெளிவுபடுத்தியுள்ளார். ஜனாதிபதி- பிரதமர் இருவரும் மக்கள் ஆணையினை முதன்மைப்படுத்தி பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணவேண்டியதன் அவசியத்தையும் இருவருக்கும் வலியுறுத்தியுள்ளார். தேசிய அரசாங்கத்தின் நகர்வுகளில் பிரதான இரண்டு கட்சிகளுக…
-
- 0 replies
- 168 views
-
-
அரசிலிருந்து விலகுகிறது சுதந்திரக்கட்சி நல்லாட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சி தீர்மானித்திருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேச்சாளர் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அறிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தின் அபிப்பிரயாத்தை கோரவுள்ளதாகவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றுமாலை…
-
- 0 replies
- 152 views
-