ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
"ஊழல், மோசடிகளில் ஈடுபடும் சகலருக்கும் அரசியல் கட்சி, பதவி பேதமின்றி உயர்ந்தபட்ச தண்டனை" ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு அரச சொத்துக்களுக்கும் உடமைகளுக்கும் இழப்பினை ஏற்படுத்தும் சகலருக்கும் அரசியல் கட்சி, பதவி வேறுபாடுகளின்றி உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதற்கான பின்னணி உருவாக்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். பொலன்னறுவை, தியசென்புர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்குடன் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. …
-
- 1 reply
- 183 views
-
-
முல்லைத்தீவு நந்திக்கடலில் சட்டவிரோத வலைகள் மீட்பு முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி வலைகளைக் கைப்பற்றியுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்தது. சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன. நந்திக்கடல் பகுதியில் ஒருசில மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் இறால், மீன், நண்டு இனங்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்ட…
-
- 0 replies
- 253 views
-
-
வேட்பாளரின் வீட்டின்மீது பொற்றோல் குண்டுத் தாக்குதல் : மட்டக்களப்பில் சம்பவம் மட்டக்களப்பு - மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி தாக்குதல், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக போட்டியிடும் எஸ்.சிவசுந்தரம் என்பவரது வீட்டின் மீது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இப் பெற்றோல் குண்டுத் தாக்குதலில் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 247 views
-
-
"தமிழ் மக்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம்" ஒற்றையாட்சி என்பதே ஏக்கிய இராஜ்ய ஆகும். இந்நிலையில் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்காக வக்காலத்து வாங்குபவருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம் என கூறுவது மிக மிக நகைப்புக்குரியது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து நேற்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்…
-
- 0 replies
- 232 views
-
-
சில அமைச்சுக்களை ஜனாதிபதி விரைவில் தன்வசப்படுத்தலாம்.! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று சுமார் 1098 நாட்கள் நிறைவடைந்து விட்டன. இன்னும் 696 நாட்கள் மாத்திரமே உள்ளன. இதன்படி மோசடிக் காரர்களை கைதுசெய்வதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற சட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சுக்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்தை தன்வசம் கையகப்படுத்தக்கூடும் என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், தனது பத…
-
- 0 replies
- 164 views
-
-
சூடைக்குடா மத்தளம் மலை விவகாரத்தில் ஏழுபேருக்கு அபராதம்.! மூதூர் சூடைக்குடா மத்தளம்மலை விவகாரத்தில் தொல்பொருட்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆலய நிர்வாகம் உள்ளிட்ட ஏழுபேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து மூதூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்போது தொல்பொருட்களை சேதப்படுத்தியதாக குறித்த சட்டத்தின் 15 ஆவது பிரிவின் கீழ் எதிராளிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது பற்றி அரசதரப்பு சட்டத்தரணி மன்றுக்கு தெளிவுபடுத்தினார். சட்டப்பிரிவின் கீழ் இனம்காணப்படும் தொல்பொருட்களான கட்டடங்கள், கற்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்துவது குற்றமாகும். அ…
-
- 0 replies
- 443 views
-
-
அட்டமி, நவமி பிரச்சினையையும் ஆராய்ந்தது மாகாண சபை!! அட்டமி, நவமி பிரச்சினையையும் ஆராய்ந்தது மாகாண சபை!! வடக்கு மாகாண சபையின் அமர்வை அட்டமி நவமியில் ஆரம்பித்தமை சரியா? தவறா? என்று நேற்று ஆராய்ந்தது வடக்கு மாகாண சபை. அது தொடர்பாக இறுதிவரை முடிவெடுக் கப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் நடப் பாண்டுக்கான முதலாம் அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அமர்வு ஆரம்பிக்கும்போது முதலமைச்சர், அமைச்சர்கள் உட்படச் சில …
-
- 1 reply
- 381 views
-
-
சபையில் கடும் மோதல் : விரட்டி விரட்டி மோதிக்கொண்ட எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டு இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது. இதனால் பாராளுமன்றத்தை 10 நிமிடங்கள் ஒத்தி வைக்க வேண்டியேற்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையை நிகழ்த்த தயாரான போது ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது எம்.பிக்கள் சிலர் துரத்தி துரத்தி அடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. -( http://www.samakalam.com/செய்திகள்/சபையில்-கடும்-மோதல்-விரட/ நாடாளுமன்றில் அமளி; சபை ஒத்திவைப்ப…
-
- 8 replies
- 874 views
-
-
தீர்ந்தது ஜனாதிபதியின் குழப்பம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற நாள் முதல் ஆறு வருடங்கள் (2021 வரை) அவர் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும் என சட்டமா அதிபர் சற்று முன்னர் தெரிவித்தார். தன்னால் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் அபிப்பிராயம் கோரியுள்ள நிலையில், அது குறித்து ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு ஆராய்ந்து வருகின்றது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று உயர் நீதிமன்றில் கூடி ஆராய்ந்து வருகின்ற நிலையில்சட்டமா அதிபர் மேற்படி தனது கருத்தை தெரிவித்துள்ளார். …
-
- 3 replies
- 470 views
-
-
யாழ். பல்கலைக் கழக மாணவரிடையே மோதல்!! யாழ். பல்கலைக் கழக மாணவரிடையே மோதல்!! நால்வருக்குக் காயம்! யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் நடந்துள்ளது. சற்றுமுன்னர் நடந்த இந்த மோதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கலைப்பீட மாணவர்களிடையிலேயே மோதல் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் சற்று அசாதாரண நிலைமை ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது. http://newuthayan.com/stor…
-
- 1 reply
- 425 views
-
-
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் குருக்களுக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் உபதேசம்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் சிலருக்கு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தை வழங்கியமை , தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளை மீறும் செயற்பாடு என அந்த ஆலயத்தின் குருக்களுக்கு மல்லாகம் நீதிமன்றால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களில் நடத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு முன்னரே தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ…
-
- 0 replies
- 444 views
-
-
பொய்யும் புரட்டும் கலந்த பரப்புரைகள் இலங்கைத் தேர்தல்களில் வழக்கமானவையே பொய்யும் புரட்டும் கலந்த பரப்புரைகள் இலங்கைத் தேர்தல்களில் வழக்கமானவையே அரசியல் பொய் வாக்குறுதிகளும், பொய்யான பரப்புரைகளும் இலங்கையைப் பொறுத்தவரை புதிய விடயங்களல்ல. ஆனால் கடந்த அரச தலைவர் தேர்தல் சமயத்தில் இந்த வழக்கம் பெரிய அளவில் தலையெடுத்திருந்ததாகக் கருதப்பட்டது. பொய்யான வாக்குறுதிகள், பொய்யான வாயடிப்புக்கள், பொய்யான குற்றச்சாட்டுக்கள் போன்றே பொய்யான விசாரணைகளும் கூட முன்னெடுக் கப்பட்டமை குறித்த அனு…
-
- 0 replies
- 278 views
-
-
தலைமுடிக்கு கலர் அடிச்சு நீதிமன்றுக்கு சென்றவர் சிறைக்கு சென்றார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி நீதிமன்றை அவமதிக்கும் முகமாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றுக்கு வந்த சந்தேகநபரொருவருக்கே நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் தண்டனை விதித்தார். அது குறித்து தெரியவருவதாவது, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணை நடைபெறும் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் தலைமுடிக்கு பல வர்ணங்களில் நிறம் பூசி , வித்தியாசமான முறையில் தலைமுடி அலங…
-
- 0 replies
- 334 views
-
-
பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பெண் ஒருவரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் நாகராசா பகிரதன் கைது செய்யப்பட்டார் என்று மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேட்பாளரின் குடும்பத்துக்கும் அயல் வீட்டிலுள்ள குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டநிலையில் வேட்பாளரின் மனைவி அயல் வீட்டுப் பெண்ணுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்தப் பெண் வேட்பாளரின் வீட்டுக்குச் சென்று பேசியுள்ளார். அதன்போது அந்தப் பெண்ணை வேட்பாளர் தாக்கியுள்ளார்.என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தா…
-
- 0 replies
- 231 views
-
-
பிணைமுறி ஊழல் தாக்கம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாதிப்பு.! (ஆர்.யசி) பிணைமுறி ஊழலில் தாக்கம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மக்களை பாதிக்கும் என்கிறார் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹம்மட் முஸம்மில். அனைத்து கட்சிகளின் கூட்டணி அமைத்த அரசாங்கத்திலேயே மத்திய வங்கி ஊழல் இடம்பெற்றுள்ளது. ஆகவே பிணைமுறி ஊழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்சியினை முன்னெடுக்கும் அரசாங்கமே இந்த அரசாங்கமாகும். குறுகிய காலத்தில் நாட்டினை வீணாக்கிய ஒரே அரசாங்கமே இதுவேயாகும். இவர்களின் மூலமே நாடு துண்டு தண்டாக சிதறி வருகின…
-
- 0 replies
- 259 views
-
-
மைத்திரி 2021ம் ஆண்டு வரையில் ஆட்சி செய்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன் – மஹிந்த குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் பதவியில் நீடித்திருந்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டம் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை பாதிக்காது என்றால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுதவற்கு தடையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டில் பதவி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு ஆண்டுகள்…
-
- 0 replies
- 163 views
-
-
வடக்கு எனும் பகடைக்காய்!! உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான பரப்புரைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. வழக்கம்போல் போர் வெற்றி, அது தொடர்பான உரிமை கோரல், புலிப் புராணம் என்று வடக்குப் பகுதியை தத்தமது தேர்தல் தந்திரோபாயமாகப் பயன்படுத்தி வருகின்றனர் கொழும்பு அரசியல் பிரதிநிதிகள். தமது அரசியல் இருப்பும், அதன் எதிர்காலமும் புலிப் புராணத்திலும், இனவாதத் துவேஷங்களிலுமே தங்கியுள்ளன என்று அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழமான வெளிப்பாடாகவே இந்த உள்ளூராட்சித் தேர்தலையும் பார்க்க முடிகிறது. யதார்த்தமும் அதுவே. முன்னாள் அரச தலைவர் மகிந்த, தனது வாக்கு வங்கியைத்தக்க வைப்பதற்காக தெற்கை உசுப்பிவிடும் வகையில் பரப்புரையொன்றை அண்மையில் மேற்கொண்டார். …
-
- 0 replies
- 357 views
-
-
இலங்கை இராணுவ வீராங்கனைகள் மாலி பயணம்! மாலியில் சகஜ நிலையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா.வின் பாதுகாப்புப் படையில் இணைந்துகொள்ளும் முகமாக, இலங்கை இராணுவ வீராங்கனைகள் பதினெட்டுப் பேர் நேற்று மாலி நோக்கிப் புறப்பட்டனர். ஏற்கனவே இதே பணியில் ஈடுபடும் முகமாக, கடந்த 24ஆம் திகதி இராணுவ வீரர்கள் 150 பேர் அடங்கிய குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மாலியில் உள்ள ஐ.நா. படையில் இணைந்து பணியாற்ற மொத்தம் 200 வீர, வீராங்கனைகளை அனுப்பிவைக்க இலங்கை முடிவுசெய்துள்ளது. இவர்கள், ஒரு வருட காலம் மாலியில் இருந்து பணியாற்றவுள்ளனர். அதன்படி, இதுவரை மொத்தமாக 168 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவி…
-
- 0 replies
- 454 views
-
-
மைத்திரிக்கு இன்னும் – 696 நாள்களே மிச்சம்!! மைத்திரிக்கு இன்னும் – 696 நாள்களே மிச்சம்!! சட்டமா அதிபர் திணைக்களத்தை அதிரடி காட்டக் கோருகிறது ‘கபே’ அமைப்பு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்னும் 696 நாள்கள் மாத்திரமே (11.1.2018 -– 08.12.2019) அரச தலைவர் பதவியை வகிக்கமுடியும். அதன்பின்னர் கட்டாயம் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் சுட்டிக்காட்டி யுள்ளது. …
-
- 0 replies
- 200 views
-
-
தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை உதய சூரியன் சின்னத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது கட்சியின் பெயரை தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்று பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக் குழுவினருக்கும், கட்சிகளின் செயலர்களுக்கும் இடையே நேற்றுச் சந்திப்பு இடம்பெற்றது. உதய சூரியன் சின்னத்தில் உள்ளூராட்சித்…
-
- 0 replies
- 421 views
-
-
யாழில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியீடு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்த லில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த விபரங்களை யாழ்.மாவட்ட உள்ளூராட்சி அதிகார சபையின் தெரிவத்தாட்சி அலுவலர் த.அகிலன் யாழ்.மாநகர சபை ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச சபையின் செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். யாழ். மாநகர சபை, மூன்று நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் உள்ளிட்ட 17 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுபவர்களின் பெயர் மற்றும் அது குறித்த நியமனங்களின் விபரங்களே இவ்வாறு அனுப்பி…
-
- 0 replies
- 201 views
-
-
திருடர்கள் யார் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: ஜனாதிபதி “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றத்தில் இல்லாத நிலையில் ஏனைய தரப்பினர் ஒருவருக்கு ஒருவர் திருடர் பட்டம் சூட்டிக்கொண்டு பாராளுமன்றத்தில் சண்டை போடும் நிலைமை இன்று உருவாகியுள்ளது. இரண்டு தரப்பிலும் யார் திருடர்கள் என்பதை மக்களே தீர்மானியுங்கள்” என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். “சர்வதேச விசாரணை, மின்சாரக்கதிரை அழுத்தங்கள் எமக்கெதிராக எழுந்த நிலையில் நானே நாட்டினை மீட்டெடுத்தேன்” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின…
-
- 2 replies
- 559 views
-
-
வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்! வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்! வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த மாகாண சட்ட ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொலிஸ் மூத்த அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி சிறப்புச் செயலணியை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண சபையின் 115ஆவது அமர்…
-
- 0 replies
- 291 views
-
-
வடமாகாண சபையின் பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைப்பு! வடமாகாண சபையின் பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைப்பு! வடக்கு மாகாண திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் போக்கு வரத்து சேவைக்காக மாகாண சபையின் பேருந்து சேவைகள் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 115ஆவது அமர்வு நேற்றையதினம் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞா…
-
- 0 replies
- 581 views
-
-
தாளம் தப்பிப் பாடும் மகிந்த ராஜபக்ச !! தெற்கில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலின் பேசுபொருள் மாறிவிட்டபின்னரும் , பழைய பல்லவியையே திரும்பத் திரும்பப் பாடிவரும் மவுசுபோன பாடகரைப் போன்று பேசி வருகிறார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதன் மைய பேசுபொருளாக புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளும், ஏற்கனவே வெளியாகி இருக்கும் இடைக்கால அறிக்கையும் இருக்கும் என்று கணிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். அதனைக் கருத்திற்கொண்டே தாமரை மொட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட முதலாவது பரப்புரைக்கூட்…
-
- 0 replies
- 476 views
-