ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
தேசிய, மாவட்ட ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு! கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் வடக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று(08.01.2018) காலை நடைபெற்றது. ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து, பரிசுப் பொருட்களையும் வழங்கினார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன், குணசீலன், சர்வேஸ்வர…
-
- 3 replies
- 496 views
-
-
கச்சதீவு அந்தோனியார் திருவிழா பெப்ரவரியில் வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை இலங்கையில் இருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயர்த்த கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொ…
-
- 0 replies
- 285 views
-
-
"கடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் வென்றார்களே தவிர மக்கள் வாக்களித்துவிட்டு தோற்றுப்போனார்கள்" "வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தங்களின் பிரதிநிதிகளாக வினைதிறனும், ஒழுக்கமும் உள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அதுவே அளிக்கபோகும் வாக்கை அர்ததமுள்ளதாக்கும்" என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவமும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார் நேற்று கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், "உள்ளூராட்சி சபை மக்களுக்கான அரசியல் உர…
-
- 0 replies
- 154 views
-
-
11 தமிழர்கள் கடத்தல்: தசநாயக்க உட்பட 5 பேருக்குப் பிணை 11 தமிழர்கள் கடத்தல்: தசநாயக்க உட்பட 5 பேருக்குப் பிணை 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் சந்தேகநபரான முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டோர் டி.கே.பி.தசநாயக்க உட்பட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று பிணை வழங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி கொமாண்டோர் டி.கே.பி.தசநாய…
-
- 0 replies
- 250 views
-
-
ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன பாய்கிறார் சுமந்திரன் ஊடகங்கள் பொய் விளம்ப கூடாது என நான் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்க என்னை பார்த்து சிரிப்பது போலவும், மக்களை பார்த்து ஏளனம் செய்வது போலவும் ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன. தாங்கள் சொல்வதைதான் மக்கள் நம்புவார்கள் என்று ஊடகங்கள் நினைக்ககூடாது. மேலும் சிலர் ஊடகங்களை பகைத்தால் தேர்தலில் வெற்றியடைய இயலாது என சொல்கிறார்கள். ஊடகங்களுக்கு பயந்து நாங்கள் மக்களிடம் சென்று பொய்யை சொல்ல இயலாது. எவ்வளவு பலமான ஊடகங்களாக இருந்தாலும் நாங்கள் மக்களிடம் சென்று உண்மையைதான் சொல்வோம். பொய் சொல்லும் ஊடகங்களை பகைத்தே நாங்கள் தேர்தலில் வெற்றியடைய வேண்டும். உள்ளூராட்சி சபை தேர்த…
-
- 3 replies
- 574 views
-
-
“எமது இயற்கைக்குணமே எமக்கு பாதகமாக அமைந்துவிடுகிறது”…. வாரத்துக்கொரு கேள்வி – 07.01.2018 இவ் வாரத்துக்குரிய கேள்வி சற்று வித்தியாசமாகக் கேட்கப்பட்டுள்ளது. கேள்வி இதோ- கேள்வி – அடுத்த மாதம் நான்காந் திகதி 70வது சுதந்திர தினம். எழுபது வருடங்களாகத் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகப் போராடி வருகின்றனர். கண்ட பலன் என்ன? இருந்தவற்றை இழந்தோமேயொழிய என்ன நன்மைகளை நாம் பெற்றுள்ளோம்? தமிழ் மக்களின் விடிவுக்காக உங்களிடம் தீர்வு இருக்கின்றதா? அப்படியானால் அது என்ன? பதில் – உங்கள் கேள்வி விசித்திரமாக உள்ளது. போராட்டங்களினால் கண்ட பலன் ஒன்றுமில்லை என்றால் என்னிடம் இருந்து எதனை எதிர்பார்க்கின்றீர்கள்? எமது போராட்டத்திற்குக் காரணம் பெரும்…
-
- 3 replies
- 518 views
-
-
ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்! கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளாா். அங்கு காணாமல் போன உறவினர்களையும்,கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களையும், மற்றும் விடுவிக்கப்பட்ட இடங்களையும் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று (08) காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போன உறவினர்கள் நடத்தும் போராட்ட கொட்டகைக்கு சென்ற ஹரி ஆனந்த சங்கரி அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி விட்டு கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொள்ளும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் பின்னர் கேப்பாபு…
-
- 5 replies
- 823 views
-
-
கூட்டமைப்பின் மேடையிலும் ஏறத்தயாராகும் மேர்வின் சில்வா சிங்கள பௌத்த மதத்தை பாதுகாப்போம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகக் கூறினால் அந்தக் கட்சியில் எந்தவித பதவியையும் எதிர்பாராமல் இணைந்துகொள்ளத் தயார் என்று முன்னாள் மக்கள் தொடர்பாடல் அமைச்சராக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். வடக்கிற்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ள நல்லிணக்கச் செயற்பாடுகளை திட்டமிடுகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் தொலைநோக்கானது ஸ்ரீலங்காவை பிளவுபடுத்துவதே ஆகும் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மிகநீண்ட நாட்களுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சரான மேர்வ…
-
- 3 replies
- 661 views
-
-
திருமலையில் கடத்தப்பட்ட வர்த்தகரின் மகன் மிரிஸ்வத்தையில் மீட்பு : நடந்ததென்ன ? திருகோணமலையில், காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை அவர் கம்பஹா, யக்கல - மிரிஸ்வத்தை பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் இவ்வாறு நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாகவும், கடத்தல் முறைப்பாடு தொடர்பில் திருமலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதால் அவரை திருகோணமலைக்கு நேற்று இரவோடிரவாக அழைத்துச் சென்று ஒப்படைத்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். …
-
- 1 reply
- 312 views
-
-
ஜெனிவாவில் இருந்து தூக்கப்படுகிறார் ரவிநாத ஆரியசிங்க – மார்ச் அமர்வுக்கு முன் இடமாற்றம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு வரும் பெப்ரவரி 26ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க அங்கிருந்து திருப்பி அழைக்கப்படவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு வரும் பெப்ரவரி 26ஆம் நாள் தொடங்கி, மார்ச் 26ஆம் நாள் விரை இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில், சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை நிறைவேற்றப்படவுள்ளது. அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1ஆம் நாள் சிறிலங்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட, 30/1 தீர்மானம் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பத…
-
- 2 replies
- 237 views
-
-
‘சட்டத்தரணியான எனது மாணவன் துரைராஜசிங்கம் பல விடயங்களை அறியாதிருப்பதும், என்னை தவறாக சித்தரிக்க முயல்வதும் அவருக்கு அழகல்ல’ வாரத்துக்கொரு கேள்வி – இவ் வாரக் கேள்வி இதோ…. கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்….. கேள்வி :- சேர்! உங்கள் சென்ற வாரக் கேள்விக்கான பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரை பதில் தர வைத்துள்ளது. அதற்கு உங்கள் மறுமொழியை எதிர்பார்க்கின்றோம். பதில் :- ஏட்டிக்குப் போட்டியாக பதில்கள் இறுத்து பத்திரிகைகளுக்கு நல்ல தீனியைப் போட்டுக் கொண்டு இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பல சிக்கல்களை இது ஏற்படுத்தும். அதனால் நான் பொதுவாகத் தக்க, முக்கிய காரணங்கள் இருந்தாலே அன்றி இவ்வாறான வாதப் பிரதிவாதங்களில…
-
- 11 replies
- 732 views
-
-
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நேற்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக்கட்சி உட்பட கட்சிகள், அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆதரித்திருந்தன. 60க்கும் மேற்பட்ட கட்சிகளும் அமைப்புக்களும் பொது உடன்பாடொன்றினை கைச்சாத்திட்டு பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கின. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவ…
-
- 0 replies
- 167 views
-
-
ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி மோசடி குறித்து விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை துரித கதியில் வெளியிட்ட முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை…
-
- 0 replies
- 230 views
-
-
மற்றைய அறிக்கை ஏன் வெளியாகவில்லை? மற்றைய அறிக்கை ஏன் வெளியாகவில்லை? மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பான அரச தலைவர் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் முக்கிய விடயங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன.அறிக்கை வெளியாவதற்கு முன்னர் வாள்வீச்சு, உருளும் தலைகள் என்றெல்லாம் வீரவசனங்கள் பேசப்பட்டாலும், அந்தளவுக்கு எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் நாட்டின் தற்போதைய தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தைச் செலுத்தக்கூடியதாக அந…
-
- 0 replies
- 188 views
-
-
கிளிநொச்சி பளை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம் கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாகிக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த நபரது மார்பு, கை பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை, அவர் பயணித்த மோட்டார் சைக்கிளிலும் துப்பாக்கி ரவைகளின் துளைகள் உள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்…
-
- 2 replies
- 736 views
-
-
27 இந்தியர்கள் நேற்று வவுனியாவில் கைது!! இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 27 இந்தியர்கள் வவுனியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர். குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் வவுனியாவில் நேற்று ஆறு மணி நேர தேடுதல் நடத்தப்பட்டது. அதிலேயே உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றித் தங்கியிருந்த இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 27 இந்தியர்களினதும் கடவுச்சீட…
-
- 1 reply
- 375 views
-
-
இரும்புத் திருட்டால் நலிகிறது யாழ்தேவி!! காங்கேசன்துறை பிரதேச மக்கள் விசனம் On Jan 9, 2018 காங்கேசன்துறையில் கைவிடப்பட்டுள்ள பழைய யாழ்தேவி தொடருந்தின் பாகங்கள் இரும்புக்காகத் தொடர்ச்சியாகக் களவாடப்படுகின்றன என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர். “யாழ்தேவி தொடருந்து கைவிடப்பட்டுக் காணப்படுகின்றது. அவற்றின் பாகங்கள் அறுத்துச் செல்லப்படுகின்றன. உந்துருளி, முச்சக்கர வாகனங்களில் வரும் இனந்தெரியாதவர்கள் வாகனங்…
-
- 0 replies
- 235 views
-
-
கடனில் மூழ்கியுள்ள நல்லாட்சி அரசாங்கம் : 36 மாதங்களில் 14.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் என்கிறார் மஹிந்த (லியோ நிரோஷ தர்ஷன், வினோத்) இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு காலப்பகுதி யிலும் காணப்படாத மீளமுடியாத பாரிய கடன் சுமையை நல்லாட்சி அரசாங்கம் நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ளது. உலக நிதி சந்தையின் கதவடைப்பை தவிர்க்க தேசிய சொத்துக்களை விற்றேனும் கடனை செலுத்த வேண்டிய நெருக்கடியான நிலைமையில் அரசாங்கம் உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் தினமாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ …
-
- 0 replies
- 293 views
-
-
வட மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சீவி கோரிக்கை இன்னும் சில மாதங்களே நாங்கள் நாம் ஆட்சியில் இருப்போம். எனவே கடந்தகாலத்தில் எமக்கு தரப்படாமல் இருந்தவற்றை இந்த வருடத்திலாவது எமக்கு தருவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருடங்கள் நிறைவினை கொண்டாடும் வகையில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நிகழ்வு ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், புதுவருடத்திற்கும் புதிய அரசாங்கங்களுக்குமிடையில் ஒ…
-
- 0 replies
- 285 views
-
-
கோத்தா இணைந்தால் வெளியேறுவேன்! – சரத் பொன்சேகா முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அரசுக்கு ஆதரவளித்தால், நான் அரசிலிருந்து விலகிக் கொள்வேன் என்று அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பகாவில் நடைபெற்ற வைபவத்தில் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியும் எந்த வகையிலும் இணையக்கூடாது. இந்த கட்சிகள் இரண்டு இணைவது என்பது பாம்பும் கீரியும் திருமணம் செய்வது கொள்வதற்கு ஒப்பானது. மகிந்த ராஜபக்ச போன்றவர் தற்போதைய அர…
-
- 1 reply
- 501 views
-
-
“என் மரணத்தின் பாதையை நான் அறிவேன்” “எத்தனை ராஜபக்சக்கள் இணைந்தாலும் மனித நேயத்தை அழிக்க முடியாது.” லசந்த விக்ரமதுங்கவின் கொலையும் கடந்து போன 9 வருடங்களும்…. தொகுப்பு – குளோபல் தமிழ் செய்தியாளர்: ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 9 வருடங்கள் ஆகின்றன. 2009ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார். லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ததாக சந்தேகிக்கும் இரண்டு சந்தேகநபர்களின் மாதிரி ஓவியங்களை கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி பொலிஸார் வெளியிட்டனர்.…
-
- 2 replies
- 852 views
-
-
யாழ். கல்லுண்டாயில் மலக்கழிவுகளைக் கொட்டுவதற்குத் தடை! யாழ்ப்பாணம் - காரைநகர் வீதி கல்லுண்டாயில், யாழ்ப்பாண மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் இடத்தில் மலக்கழிவுகளைக் கொட்டுவதற்கு, மல்லாகம் நீதிவான் நீதிமன்று தடைவிதித்திள்ளது. கல்லுண்டாயில் திண்மக் கழிவுகள் கொட்டப்படும் இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட பிற்பாடே, மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சன், இந்த உத்தரவை வழங்கினார். இது தொடர்பான உத்தியோகபூர்வ கட்டளையை, மல்லாகம் நீதிவான் நீதிமன்று வரும் 21ஆம் திகதி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள், யாழ்.- காரைநகர் வீதி கல்லுண்டாய் பகுதியில் …
-
- 0 replies
- 284 views
-
-
என்னை அரசியலிலிருந்து ஓரம் கட்ட முயற்சிக்கின்றார்கள் – ரவி கருணாநாயக்க குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தம்மை அரசியலிலிருந்து ஓரம் கட்ட முயற்சிப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதியொன்றை தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் தமக்கு வழங்குமாறு இன்று ரவி கருணாநாயக்க கோரியிருந்தார். இவ்வாறு கோரிக்கை விடுத்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். மேலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியல் இருப்பிற்காக இவ்வாறு தம்மை இலக்கு வைத்து …
-
- 0 replies
- 237 views
-
-
கடனுக்கு கொத்துரொட்டி வழங்காததால் கடையை உடைத்த விசமிகள்!! Image கடனுக்கு கொத்துரொட்டி வழங்காததால் கடையை உடைத்த விசமிகள்!! கல்வியங்காட்டில் இன்று மாலை சம்பவம் கடனுக்குக் கொத்து ரொட்டி கேட்டவர்கள் உணவக உரிமையாளர் தர மறுத்ததால் உணவகத்தை அடித்துச் சேதப்படுத்தினர். இந்தச் சம்பம் இன்று மாலை கல்வியங்காட்டில் நடந்துள்ளது. அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு வந்தவர்கள் கடனுக்கு கொத்துரொட்டு தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு உணவக உரிமையாளர் மறுப்புத் தெரிவித்தார். உடனே அவர்கள் உணவகத்…
-
- 0 replies
- 358 views
-
-
சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழியச்சிறை சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழிச்றைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். கடந்த 2012 ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 6 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவிறின் 3 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். குறித்த வழக்கானது சட்டமா அதிபரால் யாழ். மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அது வழக்கு விசாரணை…
-
- 0 replies
- 364 views
-