Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியாவில் சாரதி இன்றி ஓடிய பஸ்சால் மக்கள் பதறி ஓட்டம் வவுனியா, புகையிரத நிலைய வீதியில் சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால் மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, புகையிரத நிலைய வீதிசென்ற மினி பஸ்சை அரச வங்கி ஒன்றின் முன்னால் நிறுத்திய அதன் சாரதி வங்கிக்குள் சென்றுள்ளார். இதன்போது குறித்த பஸ் சாரதி இன்றி அவ்விடத்தில் இருந்து புகையிரத வீதி நோக்கி நகர்ந்து சென்று எதிரே வந்து கார் மற்றும் மோட்டர் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகி தொடர்ந்தும் சென்றுள்ளது. சாரதி இன்றி குறித்த மினிபஸ…

  2. 100 கிலோ போதைப்பாக்குடன் பருத்தித்துறை கடலில் மூவர் கைது! தடை செய்யப்பட்ட போதைப்பாக்கினை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் உள்ளுர் மீனவர்கள் மூவரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனா். அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பாக்கினை கைபற்றியுள்ளதாக கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இன்று(23) விசேட ரோந்து சுற்று கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த படகு ஒன்றினை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதன் போது தடைசெய்யப்பட்ட போதை உணர்வை தூண்டும் பாக்கு பைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் நிறை 100…

  3. கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் -வளிமண்டவியல் திணைக்களம் தெரிவிப்பு! நாட்டின் வானிலை தொடர்பாக வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. வளிமண்டவியல் திணைக்களம் வெளியிடுள்ள அறிக்கையில், காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பகுதியிலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழமற்ற கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 55 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கும். காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும். காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கலாம். இதனால் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பா…

  4. கசப்பான உண்மை பாடம் கற்பிக்கட்டும்!! இலங்கை மத்­திய வங்கி, மேற்­படி மாவட்­டங்­களை உரி­ய­வாறு ஆராய்ந்­த­தன் பிர­கா­ரம் உரி­ய­த­ர­வு­க­ளின்­படி வறு­மை­யில் கூடிய மாவட்­டங்­க­ளாக அறி­வித்­துள்­ளது. வறுமை என்­றால் என்ன? என்று கேள்வி எழுப்­பும் மனி­தர்­கள் வாழு­கின்ற இந்த மண்­ணில், நாளாந் தம் கொட்­டப்­ப­டும் உண­வு­களை மதிப்­பீடு செய்­வோ­மாக இருந்­தால் அவற்­றின் பெறு­மதி கோடி ரூபாய்­கள் பெறும் என்­பது எனது தனிப்­பட்ட அபிப்­பி­ரா­யம். வீடு இல்­லாது, வரு­மா­னம் இல்­லாது, தொழில் இல்­லாது, கழிப்­ப­றை­யில்­லாது, நில­மில்­லாது, உணவு இல்­லாது, உற­வில்­லாது, உறக்­க­மில்­லாது வாடு­கின்ற மக்­க­ளையே வறுமை என்ற நோ…

  5. நீல நிற வேனை வெள்ளை நிறமாக மாற்றியே 'வெள்ளை வேன்' நீல நிறத்தினை உண்மை நிறமாக கொண்ட வேனுக்கு வெள்ளை நிறமடித்து, வேறு எஞ்ஜினை அதற்கு பொருத்தியே வெள்ளை வேன் கடத்தல்கள் முன்னெ டுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் இவை கண்டறியப்பட்டுள்ளதாக அது தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப் புலனாயவுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இதனை நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார். இது குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க ஜயரத்ன முன்னிலையில் மீளவும் நேற்று விசா…

  6. இன, மத­வா­த­மற்ற பிர­சா­ரங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சியம் நாடு­த­ழு­விய ரீதியில் 341 உள்­ளூ­ராட்­சி­ச­பை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டு­விட்­டன. வேட்­பு­ம­னுத்­தாக்­கலை அடுத்து பிர­தான அர­சியல் கட்­சிகள் உட்­பட பிராந்­தியக் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் என்­பன பிர­சா­ரப்­போரை ஆரம்­பிப்­ப­தற்­கான முன்­மு­யற்­சியில் ஈடு­பட்­டுள்­ளன. எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் இப்­போ­தி­ருந்தே பிர­சா­ரப்போர் ஆரம்­பித்­துள்­ளது. தற்­போ­தைய நிலையில் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான நட­வ­டிக்…

  7. சுனாமி பீதி காரணமாக நள்ளிரவில் வீடுகளை விட்டு ஓடிய மக்கள்! அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் உள்ள மக்கள், சுனாமி பீதி காரணமாக, நேற்று(22.12.2017) நள்ளிரவு வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஒடியதாக அந்தக் கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் சுனாமி பீதி காரணமாக, மருதமுனை,கல்முனை அக்கரைப்பற்று, தம்பட்டை திருக்கோவில், கோமாரி, பொத்துவில் போன்ற கரையோரப் பிரதேசங்களில் வாழும் சில குடும்பங்கள், அச்சம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று மீண்டும் காலை வேளையில் தங்களது வீடுகளுக்கு திரும்பியதாக சம்மந்தப்பட்ட கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மாவட்ட கரைய…

  8. சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – அரசாங்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழு அளவில் நிறைவேற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க பெல்ஜியத்தின் பிரசல்லஸிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியமே இலங்கையின் தனிப்பட்ட வர்த்தக பங்குதாரர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மாதம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டமை இலங்கைக்கு பாரியளவில் நலன்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இல…

  9. தரவுகளை பெற்றுக்கொண்டா டிலான் என்னை விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டார்? விக்கி கேள்வி; அமைச்சருக்கு செலவு விவர பட்டியலையும் அனுப்பினார் (நமது நிருபர்) எம்மை குறைகூறி ஏற்கனவே நொந்துபோன தமிழ் மக்களின் வெறுப் புகளை மென்மேலும் சம்பாதித்துக் கொள்வதற்குப் பதிலாக உண்மை நிலையை உணர்ந்துகொண்டு இம் மக்களின் அடிப்படைத் தேவைகளை யாவது நிறைவேற்றுவதற்கு டிலான் பெரேராவும் அவர் சார்ந்த கட்சியின் அமைச்சுக்களும் முன்வரவேண்டும் என அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். டிலான் பெரேரா தரவுகள் எதையாவது பெற்று என்னை விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டாரா? அல்லது எழுந்தமானமாக வடமாகாண சபை…

  10. ''எந்த கடினமான சூழலிலும் பலஸ்தீனுடன் கைகோர்ப்போம்'' (ஆர்.யசி) பலஸ்தீன விடுதலையை உறுதிப்படுத்தி எந்த கடின மான சூழலிலும் பாலஸ்தீனுடன் கைகோர்ப்பதாக இலங்கையின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளதுடன் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஏற்றுகொள்ள முடியாது எனவும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. "உலகின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளி ! கிழக்கு ஜெருசலேத்தை பலஸ்தீனத்தின் தலைநகராக ஏற்றுக்கொள்" என்ற தொனிப்பொருளில் பலஸ்தீன் இலங்கை நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாடு நேற்று கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில…

  11. வடக்கின் ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்­பது என்ன....? யுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் வடக்­கிற்­கான பொரு­ளா­தார தடைகள் ஏற்­பட்ட போது இந்­தி­யாவில் இருந்தே பெரு­ம­ள­வான பொருட்கள் கடல் வழி­யாக கொண்டு வரப்­பட்­டன. மண்­ணெண்ணெய், கோதுமை மா, பற்­ற­ரிகள், பெற்றோல் என பல பொருட்கள் கடல் ஊடா­கவே பரி­மாற்­றப்­பட்­டன. கடல் வழி­யாக பலர் இந்­தி­யா­வுக்கு சென்று வரு­வதும், இடம்­பெ­யர்ந்து செல்­வதும் சர்வ சாதா­ர­ண­மாக இடம்­பெற்­றது. ஆனால் அந்த காலப்­ப­கு­தியில் கூட வடக்­கிற்கு போதைப்பொரு­ளான கஞ்சா கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. அதனைப் பயன்­ப­டுத்­துப­வர்­களும் சொல்லக் கூடிய வகையில் வடக்கில் இருக்கவில்லை. இறுக்கமாகவும், கட்டுக் கோப்­பு­டனும் இருந்த தமிழ…

  12. கிழக்கில் பௌத்த தலங்கள் அழிப்பு நல்லாட்சி அரசு கண்மூடியிருக்கிறதா? திரு­கோ­ணமலை மாவட்­டத்­தின் சம்­பூர் சூடைக்­குடாக் கிரா­மத்­தி­லுள்ள பழைமை வாய்ந்த பௌத்த புனி­தத் தலங்­கள் கடந்த சில தினங்­க­ளில் அழிக்­கப்­பட்­டுள்­ளது. அது தொடர்­பில் நல்­லாட்சி அரசு எது­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­துள்­ள­தாக மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிசிர ஜய­கொடி குற்­றஞ்சாட்­டி­னார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பாடு செய்த செய்­தி­யா­ளர் சந்­திப்புக் கொழும்­பி­லுள்ள சிறி­வ­ஜி­ரா­சர்ம பௌத்த நிலை­யத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. இங்கு கலந்­து­கொண்டு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, …

  13. பவு­ணி­டம் ஆயு­தம் இருந்­த­மையை பாது­காப்­புத் தரப்பு அறிந்­தி­ருந்­தது!! தன்­னி­டம் ஆயு­தங்­கள் இருந்­தமை பாது­காப்பு அமைச்­சுக்­குத் தெரிந்­தி­ருந்­தது என்று நீதி­மன்­றத்­தில் நேற்றுத் தெரி­வித்­தார் வாள்­கள், துப்­பாக்­கி­க­ளு­டன் கைது செய்­யப்­பட்ட புளொட் அமைப்­பின் உறுப்­பி­னர். யாழ்ப்­பா­ணம் வைத்­தி­ய­சாலை வீதி­யில் உள்ள வீடு ஒன்­றில் இருந்து பயங்­கர ஆயு­தங்­க­ளைப் பொலி­ஸார் நேற்­று­முன்­தி­னம் மீட்­டி­ருந்­த­னர். அந்த வீட்டை அடாத்­தா­கப் பிடித்து வைத்­தி­ருந்த புளொட் உறுப்­பி­ன­ரான பவுண் எனப்­ப­டும் சிவ­கு­மார் (வயது– 55) கைது செய்­யப்­பட்­டார். …

  14. “தேர்தலில் போட்டியிட்டால், ரயர் போட்டு எரிப்பொம்” புளொட்டின் பெண் வேட்பாளரை மிரட்டிய சிவமோகனின் உதவியாளர் கைது.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்ட புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மிரட்டப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று (21.12.17) மிரட்டிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமது கட்சி சார்பில் மூன்று பிள்ளைகளின் தாயாராகிய பெண் வேட்பாளர் ஒருவரை, (ரெட்பான நிறுவனத்தில் இருந்து…

  15. நேர்­மை­யு­டன் செயற்­ப­டும் அர­சி­யல்­வா­தி­களே எமது தெரி­வாக அமை­தல் வேண்­டும் அடுத்த ஆண்டு வடக்கு மாகா­ண­ச­பைக்­கான தேர்­தல் இடம்­பெ­று­மெ­னத் தெரிய வரு­கின்­றது. மாகாண சபை­யின் ஐந்து ஆண்­டு­கால சாத­னை­களை எடை­போட்­டுப் பார்ப்­ப­தற்கு இந்­தத் தேர்­தல் மக்­க­ளுக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை வழங்­கப் போகின்­றது. தற்­போ­தைய முத­ல­மைச்­சர் மீண்­டும் அந்­தப் பத­வி­யில் நீடிப்­ப­தற்­கான சந்­தர்ப்­பம் இல்­லை­யென நம்­ப­க­மா­கத் தெரி­கின்­றது. ஆகவே இந்­தப் பத­விக்­குத் தகு­தி­யான வேறொ­ரு­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டிய தேவை­யும் எழுந்­துள்­ளது. கடந்த முறை ஏற்­பட்ட கசப்­பான அனு­ப­வம் இம்­மு­றை­யும் ஏற்­ப­டா­மல…

  16. தமிழரின் ஒற்­று­மை­யை பாது­காக்­கும் பொறுப்பு தமிழ்க் கூட்­ட­மைப்­பி­டமே உள்­ளு­ராட்­சித் தேர்­தல் இடம்­பெ­ற­வுள்ள இந்த நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளின் ஒற்­று­மை­யைப் பாது­காக்க துணிந்து செயற்­பட வேண்­டும். என யாழ்ப்­பா­ணம் இந்­து­ச­ம­யப் பேர­வை­யின் செய­லா­ளர் சி.சக்­தி­கி­ரீ­வன் தெரிவித்தார். இது தொடர்­பாக அவர் அனுப்பி வைத்த செய்­திக்­கு­றிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: எமது நாடு அன்­னி­யர் ஆட்­சி­யில் இருந்­த­தி­ல் இருந்து இன்­று­வரை நாம் பல்­வே­று­பட்ட துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­கின்­…

  17. கோழிக்­கூ­டு­க­ளில் வாழும் கிளிநொச்சி மாவ­டி­யம்­மன் மக்கள் எமது கிரா­மத்­தில் கல்வி கற்­கக் கூடிய சூழல்­கள் இல்லை. குடி­யி­ருக்க வீடு­கள் இல்லை. நாங்­கள் கோழிக் ­கூட்­டில் தான் வாழ்ந்து வரு­கி­றோம். இவ்­வாறு இருக்­கும் போது கல்­வியை எவ்­வாறு தொடர முடி­யும்? இப்படி தெரி­வித்­தார் கிளி­நொச்சி வட்­டக்­கச்சி புதுக்­காடு மாவ­டி­யம்­மன் குடி­யி­ருப் பைச் சேர்ந்த மாணவி. இந்தக் கிராம மக்­கள் போர் முடி­வுற்ற பின்­னர் வவு­னியா செட்­டிக்­கு­ளம் நலன்­புரி முகா­மில் இருந்து வட்­டக்­கச்சி புதுக்­காடு மாவ­டி­யம்­மன் குடி­யி­ருப்­பில் மீள்­கு­டி­யமர்ந்தவர்­க­ளா­ வர். அன்­றில் இருந்து இன்று வரைக்­…

  18. காணிகள் விடுவிக்கப்படும் – லெப்ரினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… “யாழ்ப்பாண மவாட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் மேலும் சிலவற்றை விடுவிப்படு தொடர்பில் சாதகமான பதிலை தாம் விரைவில் வழங்கப்படும்” என இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரிடம் உறுதியளித்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்திரையாடினார் யாழ் மாவட்ட செயலகத்தில் இந்தச் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ். மாவட்டத்த…

  19. சொல்வதற்கு எதுவுமில்லை. எங்களை விடுங்கோ – மாவை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- சொல்வதற்கு எதுவுமில்லை. எங்களை விடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சி தலைவருமான மாவை சேனாதிராஜா ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார். யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வேட்பு மனுவை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். http://globaltamilnews.net/2017/56460/

    • 5 replies
    • 855 views
  20. 1500 வேட்பு மனுக்கள் தாக்கல் பொதுஜன பெரமுனவின் 5 மனுக்கள் உட்பட 29 நிராகரிப்பு (எம்.சி.நஜிமுதீன், ஆர்.யசி) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 248 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 1500 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 93 உள்ளூராட்சிமன்றங்களுக்கான முதலாம் கட்ட வேட்பு மனுத் தாக்கல்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேட்புமனுத்தாக்கல் நேற்று நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது. அதற்கிணங்க 17 மாநகர சபை, 23…

  21. பல இடங்­க­ளி­லும் நிரா­க­ரிப்பு!! வடக்கு மாகா­ணத்­தில் அனைத்து உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி தாக்­கல் செய்த சகல வேட்­பு­ம­னுக்­க­ளும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­ஸின் வேட்­பு­மனு ஓரி­டத்­தில் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­து­டன், தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­கான வேட்­பு­ம­னு­வில் 13 வேட்­பா­ளர்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­னர். அத்­து­டன் சிறி­லங்கா பொது மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பு­ம­னுக்­க­ளும் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. வடக்­கில் 33 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான…

  22. தீர்மானிக்கும் சக்தியாக ஆதிக்கம் செலுத்துவதே எமது நோக்கம் சண்.குகவரதன் தலைமையில் வெற்றி கிடைக்கும் என்கிறார் அமைச்சர் மனோ (ஆர்.யசி) கொழும்பு மாநகர சபையில் எமது மக்களுக்கு உரித்தான பங் கினை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஜனநாயக ரீதி யில் நாம் பெற்றுக்கொள்வோம். அதற்கு அப்பால் எதனையும் பெற் றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு எமக்கு இல்லை. எமக்கான அதிகாரங் களை பெற்றுக்கொண்டு அடுத்ததாக கொழும்பு மாநகரசபை நிர்வாகத்தை உருவாக்கும் பெரும் சந்தர்ப்பத்தில் ஆதிக்கத்தை தீர்மானிக்கும் மிகவும் முக்கியமான செயற்பாட்டினை நாம் செய்வோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபைக்கு…

  23. இந்து அமைப்­பு­க்கள் மீது தேர்­தல் முறை­கேடு பதிவு! எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் பகைப் பேச்­சைப் பரப்­பும் இந்து அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று தேர்­தல்­கள் ஆணைக்­குழு உறுப்­பி­னர் ரட்ணஜீவன் ஹுல் முறை­யிட்­டுள்­ளார். இந்­து­ச­மய பேரவை, சிவ­சேனை அமைப்­புக்­க­ளால் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் அறி­விக்­கப்­பட்ட பின்­னர் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­கள், துண்­ட­றிக்­கை­ க­ளுக்கு எதி­ராக, 2012ஆம் ஆண்டு உள்­ளூர் அதி­கார சபை­கள் சட்­டத்­தின் பிர­கா­ரம் துரித நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அவர் கேட்­டுள்­ளார். இது தொடர்­பில் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு அவர் எழுத்­து­ மூ­ல­மாக முறைப்­பாடு பதிவு செ…

  24. இந்தியாவுடன் மோதாதீர்! – ராஜித எச்சரிக்கை இலங்­கை­யில் புதிய நிலக்­கரி மின்­னுற்­பத்தித் தொழிற்­சா­லையை நிர்­மா­ணிப்­ப­தற்கு அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் நேற்­று­முன் தினம் கடும் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்ள அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன, மேற்­படி மின்­உற்­பத்­திக் கொள்­கை­யால் இந்­தி­யாவைப் பகைத்­துக் கொள்­ள­வேண்­டி­ வ­ரும் என­வும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார். தேசிய அர­சின் வாராந்த அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் முற்­ப­கல் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அரச தலை­வர் செய­ல­கத்­தில் நடை­பெற்­றது. இலங்­கை­யில் புதிய நிலக்­கரி மின்­னுற்­பத…

  25. பெண் வேட்பாளர்களின் அடையாள அட்டைகளை பறித்ததாக தம்பி மீது குற்றசாட்டு – பொய் என்கிறார் தம்பி…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் இரு பெண் வேட்பாளர்களின் ஆள் அடையாள அட்டையை , தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்டவரும் , சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவருமான த. தம்பிராசா பறித்து சென்றுள்ளதாக குற்றம் சாட்டபட்டு உள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை தம்பிராசா மறுத்துள்ளார். காரைநகர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவிருந்த முருகவேல் மஞ்சுளாதேவி, கோடிஸ்வரன் நிதுஷா ஆகிய இரு வேட்பாளர்களின் அடையாள அட்டைகளை த.தம்பிராசா பறித்துக்கொண்ட காரைநகர் பிரதேச சப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.