ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143326 topics in this forum
-
மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு உதவுவோம் : மலேஷிய பிரதமர் அப்துல் ரஸாக் அறிவிப்பு (நமது நிருபர்) சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மனித உரிமை விவகாரங்களில் ஆதரவு வழங்குவதற்கு மலேஷியா தயாராக இருப்பதாக மலேஷிய பிரதமர் அப்துல் ரஸாக் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்திருக்கிறார். மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை நியாயப்படுத்திய மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மனித உரிமைகள் தொடர்பில் மேற்குலக நாடுகளின் வியாக்கியானங்களை தனது நாடு ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் அப்துல்…
-
- 2 replies
- 223 views
-
-
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் – மஹிந்த குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு கோரினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான பேச்சுவார்த்தைகளோ அழைப்போ இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2017/55984/
-
- 3 replies
- 607 views
-
-
ஸ்ரீலங்கா இராணுவத்தின் மீது ஹைட்டி பெண்கள் ஜீவனாம்சம் கோரி வழக்கு! ஸ்ரீலங்கா உட்பட சில நாடுகளில் இருந்து ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணிக்கு அனுப்பப்பட்ட படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கருத்தரித்து குழந்தைகளை பிரசவித்த ஹைட்டியைச் சேர்ந்த தாய்மார்கள் ஜீவனாம்சம் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர். பெண்கள் பத்துபேர் இணைந்து தமது குழந்தைகள் 11 பேர் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையிடமும், சம்பந்தப்பட்ட படையினரிடமும் ஜீவனாம்சம் கோரி வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். இவர்களில் ஒன்பது வயது குழந்தை சார்பில் ஹைட்டியில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் கடமையாற்றிய ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரிடமும் ஜீவனாம்சம் க…
-
- 2 replies
- 525 views
-
-
"பதவியை வழங்க அவர் முட்டாளும் அல்ல வாய்ப்பை நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல" (லியோ நிரோஷ தர்ஷன்) தலைமை பதவியை வழங்குவதற்கு அவர் முட்டாளும் அல்ல அவ்வாறு வழங்கியும் நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சோடிக்கப்பட்ட பொய்யாக பல கருத்துக்கள் உலாவுவதாகவும் குறிப்பிட்டார். சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை தருவதாக கூறியதாகவும் கூறுகின்றனர். அவ்வாறு வழங்குவதற்கு அவர்கள் முட்டாள்களும் அல்ல. அதே போன்று அவ்வாறானதொரு வாய்ப்பு வரும் போது நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல. உள்ளுராட்சிமன்ற தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
-
- 0 replies
- 322 views
-
-
மனித உரிமை விவகாரங்களில் மலேசியா ஆதரவு வழங்கும் ; ஜனாதிபதியிடம் மலேசியப் பிரதமர் உறுதி சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மனித உரிமை விவகாரங்களில் ஆதரவு வழங்குவதற்கு மலேசிய தயாரக இருப்பதாக மலேசிய பிரதமர் அப்துல் ரஷாக் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரஷாக் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து உத்தியோகபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மலேசியா ஆதரவு வழங்கியமை தொடர்பிலும் ஏனைய சர்வதேச மட்டத்தில் இலங்…
-
- 0 replies
- 192 views
-
-
மாநகர முதல்வர் பதவிக்கு தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளராக மணிவண்ணன்! உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முதல்வர் வேட்பாளராக தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளரும் இளம் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனை நியமிக்குமாறு வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் பலவற்றின் சார்பாக தமிழர் சம உரிமை இயக்கம் தமிழ் தேசிய பேரவையின் தலைமைப் பீடத்தை கோரியுள்ளது. யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் அனைத்து கட்டிசிகளிடையே பாரிய போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழ் தேசிய பேரவை சார்பில் போட்டியிடுவதற்கு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்…
-
- 0 replies
- 818 views
-
-
பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய இறுவட்டுக்கள் மீட்பு கிளிநொச்சி-இராமநாதபுரம் பகுதியில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் பழைய முகாம் ஒன்றிலிருந்து இறுவட்டுக்கள் சில மீட்கப்பட்டுள்ளது. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கக் கூடிய இறுவட்டுக்களே இராமநாதபுரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தை மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட பின்னர் வீடுகள் அமைப்பதுக்காக இடத்தின் உரிமையாளர்கள் அத்திவாரம் வெட்டும் போதே பாதுகாப்பான கொள்கலன் ஒன்றிலிருந்து 91 இறுவட்டுக்களும், 61 பாதுகாப்பு உறைகளும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறுவட்டுக்களில…
-
- 0 replies
- 317 views
-
-
வல்லைக் கடலுக்குள் பாய்ந்த வாகனம் யாழ்ப்பாணம், வல்லை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த அரச திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனமொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்துள்ளது. குறித்த விபத்து சம்பவானது இன்று காலை வல்லைவெளி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. அரச திணைக்களத்திற்கு சொந்தமான டபிள்கப் ரக வாகனமொன்றே இவ்வாறு வல்லை பாலத்திற்கு அருகிலுள்ள கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான போதும் இச் சம்பவத்தில் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/28415
-
- 0 replies
- 339 views
-
-
முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து ஹக்கீமிடம் கேட்டறிந்த மலேசிய தலைவர் நல்லாட்சி அரசில் முஸ்லிம் மக்களின் இருப்பு மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து மலேசிய தலைமை அமைச்சர் நஜீப் ரஸாக், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் விரிவாகக் கேட்டறிந்துள்ளார். அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே மலேசிய தலைமை அமைச்சர் இவ்வாறு இலங்கையின் முஸ்லிம் அரசியல் குறித்து ஆவலுடன் விவரங்களைக் கேட்டிருக்கிறார். முன்னதாக மலேசிய தலைமை அமைச்சரை வரவேற்…
-
- 1 reply
- 247 views
-
-
உள்ளுராட்சி தேர்தல் ஜெனிவா சம்பந்தப்பட்டது அல்ல –முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் உள்ளுராட்சிமன்ற தேர்தலானது அடிப்படையான மக்களின் தேவைகளோடும் பிரச்சனைகளோடும் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாளுகின்ற மக்களுடைய தேவைகளை திருப்தி செய்கின்ற மக்களுடைய தேவைகளை கவனிக்கின்ற அடிப்படை நிறுவனங்களான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலாகும். இந்த தேர்தலானது ஜெனிவா சம்பந்தப்பட்டதோ காணாமல் போனோர் சம்பந்தப்பட்டதோ அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டதோ அல்ல என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அலுவலகத்தில் …
-
- 3 replies
- 599 views
-
-
குழப்பத்தில் மக்கள்.....? கடந்த 30 வருடகாலமாக தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதவழிப்போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த மக்களின் அபிலாசைகளையும், உரிமைக் கோரிக்கைகளையும், அவர்களுக்கான தேவைகளையும் தொடர்ந்தும் முன் கொண்டு சென்று அதனை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் தோள்களில் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் யுத்தம் முடிவடைந்து கடந்த எட்டரை ஆண்டுகளில் அதன் நகர்வுகள், செயற்பாடுகள் என்பன எவ்வாறு அமைந்திருக்கின்றது என்ற கேள்வி உள்ளது...? அவர்களின் தற்போதைய நகர்வு தமிழ் மக்களுக்கு தீர்வை…
-
- 0 replies
- 227 views
-
-
செப்டெம்பரில் ஐ.நா. செயற்குழுவின் அறிக்கை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கியநாடுகள் செயற்குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கையில் தடுத்து வைக்கும் விவகாரம் , பயங்கரவாத தடைச்சட்டம், பொறுப்புக்கூறல் பொறிமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகளை இந்த அறிக்கையில் ஐக்கியநாடுகள் செயற்குழு முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கை விஜயத்தை ம…
-
- 0 replies
- 224 views
-
-
கிளிநொச்சியில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே இருவர் பலி கிளிநொச்சி, தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இதன் போது இரு மோட்டார் சைக்கிள்களையும் செலுத்திச் சென்றவர்களே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரு மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 235 views
-
-
வெளிநாட்டு நீதிபதிகளுக்கு சிறிலங்காவில் இடமில்லை – என்கிறார் மைத்திரி உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்புபட முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கொழும்பில் கலதாரி விடுதியில் நேற்று, நீதித்துறை அதிகாரிகளுக்கான கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே சிறிலங்கா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார். ‘நீதியை வழங்குவதில் சுதந்திரமாக தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவையான பின்புலமும், தீர்ப்புகளில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாத நிலையும் நாட்டில் உள்ளதாக நம்புகிறேன். எந்த நேரத்திலும் வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்காவுக்குள் கொண்டு வரக் கூடாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது நீதித்து…
-
- 0 replies
- 269 views
-
-
மன்னார் இளைஞனின் மர்மக்கொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்திலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பேசாலை பொலிஸார் கைது செய்துள்ளதோடு,கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சான்றுப்பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனுடன் வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் பேசாலையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்டனிஸ்லஸ் நளின் குரூஸ் (வயது-29) என்னும் இளைஞர் கடந்த 8 ஆ…
-
- 0 replies
- 277 views
-
-
அமைச்சர் மனோவிடம் பிறந்தநாள் பரிசு கோரிய பிரதமர் ரணில் கொழும்பில் ஒன்றிணைந்து போட்டியிட வருமாறு அழைப்பு (நமது நிருபர்) கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்திருந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருக்கின்றார். அமைச்சர் மனோ கணேசனின் பிறந்த தினம் நேற்றுமுன்தினமாகும். அன்று காலை மனோ கணேசனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் தனக்கு பிறந்த நாள் ப…
-
- 0 replies
- 210 views
-
-
ஆசனப் பங்கீட்டில் அநீதி – கூட்டத்திலிருந்து சித்தார்த்தன் வெளியேற்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான ஆசனப் பங்கீட்டில் புளொட் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து தற்போது இடம்பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியேறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டம் யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் இன்றிரவு 7 மணி முதல் நடைபெற்றது. உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்திலும் தமிழ் அரசுக் கட்சிக்கு 60 சதவீதமும் ரெலோ, புளொட் கட்சிகளுக்கு தலா…
-
- 1 reply
- 380 views
-
-
செயல்களே தேவை; உரைகள் அல்ல! அன்பு மற்றும் சமாதானத்தின் செய்தியை உலகுக்குக் கொண்டுவரும் நத்தார், இனங்களுக்கு இடையில் சக வாழ்வையும், நல்லிணக்கத்தையும் பலப்படுத்து வதற்கு மிகமுக்கியமான சந்தர்ப்பமாகும் என்று தெரிவித்துள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. திருகோணமலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அரச நத்தார் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்துக்காக இனங்களுக்கு இடையில் சமாதானமும் நல்லிணக்கமும் பலமாக இருக்க வேண்டும். நாட்டில் மீண்டும் ஒரு போர் இடம்பெறாத வகையில் அனைத்து…
-
- 0 replies
- 351 views
-
-
வடக்கில் ஒரேயொரு வைத்தியசாலை மட்டுமே இராணுவக் கட்டுப்பாட்டில்! வடக்கு மாகாணத்தில் உள்ள 108 வைத்தியசாலைகளில், ஒரேயொரு வைத்தியசாலை மட்டுமே இலங்கை இராணுவத்தால் கையளிக்கப்படாது இன்னமும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் அமைந்து…
-
- 0 replies
- 466 views
-
-
மஹிந்தவின் மற்றுமொரு உறுப்பினர் மைத்திரியுடன் இணைந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரும், மேல்மாகாண சபையின் பிரதித் தலைவருமான யசபால கோரளகே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று திங்கட்கிழமை மாலை சந்தித்த அவர் தனது ஆதரவை பகிரங்கப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஹொரனை தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியை ஜனாதிபதி வழங்கிவைத்தார். இதேவேளை இதற்கு முன்னதாக ஒன்றிணைந்த எதிரணியில் இருந்த பல உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டனர். இதுதவிர, ஒன்றிணைந்த எத…
-
- 0 replies
- 205 views
-
-
ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார் மலேசியப் பிரதமர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசியப்பிரதமர் நஜீப் ரஸாகிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த மலேசியப் பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இவ்வரவேற்பு இடம்பெற்றது. இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மலேசியப் பிரதமரின் இவ்விஜயம் இடம்பெறுவதுடன், இரு நாடுகளு…
-
- 1 reply
- 556 views
-
-
யாழ். மாநகர மேயர் ஆர்னோல்ட் போட்டி! யாழ். மாநகர மேயர் ஆர்னோல்ட் போட்டி! யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் நேற்றுக் கையளித்தார். வடக்கில் உள்ள ஒரே ஒரு மாநகர சபையான யாழ்ப்பாணம் மாநகர சபையின் தலைவர் பதவி இராஜதந்திர…
-
- 4 replies
- 921 views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எங்களிடம் உள்ளது தேசிய மாநாட்டில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு (ஆர்.யசி) வரலாற்றில் முதல் தடவையாக வடக்கில் மக்கள் விடுதலை முன்னணி களமிறங்கியுள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் என்னவென்பது எமக்கு நன்றாகத் தெரியும். அதேபோல் அவர்களுக்கான தீர்வுகளையும் நாங்கள் பெற்றுத்தருகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தமிழ், சிங்கள மக்களின் சம உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் அந்த இடத்திலேயே மக்கள் விடுதலை முன்னணி உள்ளது. சிங்கள மக்களை போலவே தமிழ் மக்களையும் தாங்கிக்கொள்ள…
-
- 1 reply
- 558 views
-
-
யாழ் மாநகரசபைத் தேர்தல்: பொது அணி ஒன்றைக் களமிறக்க நடவடிக்கை! யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் மூத்த ஊடகவியலாளர் ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி, பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுக்கள் தற்பொழுது மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பொது அணிக்கு சமூக அமைப்புக்கள், தமிழ் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன உள்வாங்கப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவை குறித்த பொது அணிக்காக பெறுவதற்கு தற்போது பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. முக்கியமாக, வடக்கு …
-
- 1 reply
- 591 views
-
-
பழமைவாய்ந்த நாகலிங்கச்சிலை மீட்பு.! கலஹா புபுரஸ்ஸ டெல்டா தோட்ட பச்சைக்காட்டுப் பிரிவில் கற்குகை ஒன்றினுள்ளிருந்து பழமைவாய்ந்த நாகலிங்கச்சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அருள் வாக்குக்கூறும் நபரொருவரின் தகவலின் அடிப்படையிலேயே குறித்த சிலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சிலையானது தோட்டத்தில் அமைந்துள்ள ஆறு ஒன்றுக்கு அருகில் இருந்த கற்குகை ஒன்றுக்குள்ளிருந்தே மீட்கப்பட்டுள்ளது. குறித்த தோட்டத்தில் மார்கழி பஜனையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் கரகம் பாலிக்கும் நிக ழ்வு இடம் பெற்றுள்ளது. இதன் போது பஜனை குழுவில் பிரதான பங்கு வ…
-
- 0 replies
- 548 views
-