ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143324 topics in this forum
-
மைத்திரி– பசில் திடீர்ப் பேச்சு! மைத்திரி– பசில் திடீர்ப் பேச்சு! இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சிகள் தேக்கமடைந்துள்ள நிலையில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய பேச்சு இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்குப் பசில் ராஜபக்ச முயற்சித்து வருகிறார் என்று சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாலேயே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவரும் ந…
-
- 0 replies
- 354 views
-
-
தமிழ் கட்சிகளின் தலைமைகள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கிணங்க 93 சபைகளுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யும் காலமாகவும் ஏனைய 243 சபைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து தொடர்ச்சியான பேச்சுக்களில் ஈடுபட்டு வரு…
-
- 0 replies
- 380 views
-
-
சர்வதேச ஆதரவை தக்க வைக்கும் நோக்குடனையே கூட்டமைப்பு பயணிக்கின்றது. – சுமந்திரன் கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் சர்வதேச நாடுகளின் ஆதரவை தக்க வைக்க வேண்டும். அதற்கு ஆதரவான நகர்வுகளையே மேற்கொள்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 0 replies
- 427 views
-
-
வாள் வெட்டுக் குழுவுகளில் தொடர்புடைய 6 பேர் வட்டுக் கோட்டையில் கைது யாழ்ப்பாண மாவட்டத்தில் வாள் வெட்டுக் குழுக்களின் சிறிய குழுவொன்று சாவகச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 06 பேர் இன்று மதியம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி எச். எம்.பி.குணதிலக்க தெரிவித்தார். அது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் நேற்று இரவு வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சந்தேக நபர்களை வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த சம்பவம் வன்முறைச் சம்பவங்களை தூண்டும் அடிப்படையில் வாள் வெட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்…
-
- 0 replies
- 405 views
-
-
கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகள் நில அளவீடு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மன்னார், பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணியை விடுவிப்பதற்காக நிள அளவை செய்யப்பட்டன. மன்னார் பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணிகளையும் வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அவற்றை விடுவிக்குமாறு கோரி பாதிப்படைந்துள்ள பள்ளிமுனை மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளைக்கு அமையவும் இரு பகுதினரின் சம்மதத்துடன் அக் காணிகளை அளக்கும் நடவடிக்கையில் மன்னார் பிரதேச செயலகம் இன்று வியாழக்கிழமை (07.12.2017) நடவடிக்கையை மேற்கொண்டது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரை அண்ட…
-
- 0 replies
- 178 views
-
-
கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியது. இன்று மதியம் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு.சந்திரகுமார் தலைமையில் சுயேச்சை குழுவினர் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கரைச்சி, பூநகரி, பளை பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் கருத்து தெரிவித்து அமைப்பின் உறு…
-
- 0 replies
- 186 views
-
-
தொடரும் வேலை நிறுத்தம் : மக்கள் அசௌகரியத்தில்.! ரயில்வே சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ரயில்வே சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜகன பெர்னான்டோ தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 260 views
-
-
சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கில் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை ( ரி.விரூஷன்) சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கின் 2 ஆவது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜனுக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, ஸ்ரீகஜனுக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டுமென மன்றைகோரியதற்கு இணங்க மேற்கண்டவாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/27865
-
- 2 replies
- 445 views
-
-
கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளின் 15 சடலங்கள் தோண்டியெடுப்பு மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்கள் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பொது மயானத்தில் இறந்த மக்களினதும், கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோரின் சடலங்கள்அடக்கம் செய்யப்பட்டு வந்தன. கடந்த சில வருடங்களுக்கு முன் மன்னார் பொது மயானத்திற்கு அருகில் உயிரிழந்த கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்த…
-
- 10 replies
- 837 views
-
-
மீசாலை பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இளைஞர் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று இரவு 7:30 மணியளவில் மீசாலை பகுதியில் இடம்பெற்றதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர். http://globaltamilnews.net/archives/53078
-
- 7 replies
- 646 views
-
-
கோத்தா மீதான நடவடிக்கைக்கான தடைக்கு கடும் ஆட்சேபம் பொதுச் சொத்து துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என அறிவித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு நீதிமன்றில் கடும் ஆட்சேபம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பிலான ரிட் மனு இன்று (6) விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, இந்தத் தடை உத்தரவு ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்டது எனவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் கடும் தொனியில் வாதிட்டார். மனுதாரரான கோத்தபாய ராஜபக்ச சார்…
-
- 2 replies
- 324 views
-
-
இந்தியா சென்ற காரணம் எனக்கு மட்டுமே தெரியும்!- சுரேஸ் இந்தியா சென்ற காரணம் எனக்கு மட்டுமே தெரியும்!- சுரேஸ் நான் ஆயிரம் தடவை இந்தியாவுக்குச் சென்று வந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் எதற்காக இந்தியா சென்றேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் சுரேஸ் …
-
- 1 reply
- 402 views
-
-
கூட்டு எதிர்க்கட்சிக்குள் குழப்பம் நெருக்கடியில் மஹிந்த ராஜபக் ஷ பஷில், நாமல், பங்காளித்தரப்புக்களிடையே கடும் தர்க்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற் குள் ஆசனப்பங்கீடு தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தன்னிச்சையாக செயற்படுகின்றார் என்று பங்காளிக்கட்சிகள் குற்றம் சாட்டியமையாலும் மறுபக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிஅணியினருடன் இணையது தனித்துபோட்டியிட வேண்டும் என்றும், கூட்டிணைந்து போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று இரு க…
-
- 0 replies
- 379 views
-
-
இணைவதற்கு மஹிந்த, பஷில் விருப்பம் இரு நபர்கள் மட்டுமே எதிர்க்கின்றனர் : இதன் விளைவை வெகுவிரைவில் எதிர்கொள்வார்கள் என்கிறார் தயாசிறி (ரொபட் அன்டனி) சுதந்திரக் கட்சியுடன் கூட்டு எதிரணி இணைவதை மஹிந்த ராஜபக் ஷவும் பஷில் ராஜபக் ஷவும் விரும்புகின்றனர். ஆனால், கூட்டு எதிரணியிலுள்ள எதிர்காலத்தில் மன்னராக வர எதிர் பார்க்கும் இரண்டு நபர்களே இதனை எதிர்க்கின்றனர். இதன் விளைவை அவர்கள் வெகு விரைவில் எதிர்கொள்வார்கள் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கூட்டு எதிரிணியை எம்முடன் இணைப்பதற்காக நாங்களே கை நீட்டினோம். ஆனால், அவர்கள் அதனை நிராகரித்து விட்டார்கள…
-
- 0 replies
- 228 views
-
-
கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எதற்கும் தயார்! கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எதற்கும் தயார்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயார் என்று பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார் என்று அறிய முடிகின்றது. உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பாக நேற்றுமுன்தினம் நடந்த சந்திப்புக் குழப்பத்தில் முடிந் தது. அதன்பின்னர் த…
-
- 2 replies
- 474 views
-
-
சாய்ந்தமருதைப் பற்ற வைத்தது யார்?; சபையில் கடும் வாக்குவாதம் சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேச சபை அமைப்பது தொடர்பில், அரசாங்கத் தரப்பினரே தவறிழைத்ததாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டதுடன், இந்தப் பிரச்சினை பற்றி எரிவதற்கு யார் காரணம் என்பதில் அவருக்கும் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இடையில் நாடாளுமன்றில் நேற்று கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. 2015ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றில் நேற்று நடைபெ…
-
- 0 replies
- 341 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபட அழுத்தம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபட அழுத்தம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஊடாகவும், பல நாடுகளின் தூதரகங்கள் ஊடாகவும் இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆசனப் பங்கீட்ட…
-
- 0 replies
- 304 views
-
-
வடக்கில் புதிய கூட்டணி உதயமாகியது; ஒருமித்த நாட்டுக்குள் தமிழர்களுக்கான சுயாட்சி வேண்டும் மாற்று தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கியுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று ( 06.12) காலை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் உட்பட பலர் மூத்த அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வீ. ஆணந்தசங்கரியுடன் சந்தித்து கலந்துரையாடினர். அந்த சந்திப்பின் பின் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய ஒரு கூட்டணி அமைத்து அந்த க…
-
- 2 replies
- 1.1k views
-
-
முன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு! காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் நேற்றுமுன் தினம் இரவு உயிரிழந்தார்.பிறையாளன் என்று அழைக்கப்படும் மாமடு, சேவைப்பிலவு, நெடுங்கேணியைச் சேர்ந்த இரத்தினசிங்கம் ஆனந்தராசா (வயது-–42) என்பவரே உயிரிழந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் பொறுப்பாளர் பதவியில் இருந்தவர். போரின் பின்னர் மறுவாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். …
-
- 1 reply
- 387 views
-
-
கூட்டமைப்புக்குள் குழப்பம் – ரணிலும் அக்கறை! கூட்டமைப்புக்குள் குழப்பம் – ரணிலும் அக்கறை! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆசனப் பங்கீட்டு விவகா ரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்திருக்கும் குழப்பம் தொடர்பில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங் கவும் அக்கறை செலுத்தியுள்ளார் என்று தெரியவருகின்றது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தியுள்ளார். அத்துடன் கூட்டமைப்பின் …
-
- 1 reply
- 643 views
-
-
809 தமிழ் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வாசிப்பு மனிதனை பூரணமாக்கும் என்ற அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறமையை அதிகரிக்கும் முகமாக அவர்களுக்கு எதிர்வரும் வருடங்களில் அவர்களின் வாசிப்புக்கு ஏற்ப பதக்கங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக 809 தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கல்வி அமைச்சின் மூலமாக மாணவர்களின் வாசிப்பு திறமையை விருத்தி செய் …
-
- 0 replies
- 240 views
-
-
கடும் காற்றுடன் இன்று கனமழை.! வட அந்தமானில் ஏற்பட்ட குறைந்த வலுவான தாழமுக்கத்தின் தொடராக வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கத்தினால் உருவாகும் கடுங்காற்று இலங்கை திருகோணமலையிலிருந்து 850 கிலோமீற்றர் தூரத்திலேயே இன்று பயணிக்கின்றது. இது கடலின் வடக்கு திசையில் இந்தியாவை நோக்கி பயணிப்பதால் இன்று இலங்கையிலும் இடிமின்னலுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகின்றது என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரேமலால் தெரிவித்தார். நேற்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் குறி…
-
- 1 reply
- 277 views
-
-
வடக்கு, மேற்கு, மலையகத்தில் தனித்தும் சேர்ந்தும் சேவல் கூவும் க.ஆ.கோகிலவாணி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில், சில பகுதிகளில் தனித்தும் சில பகுதிகளில் ஏனையக் கட்சிகளுடன் கூட்டாகவும் இணைந்தும் போட்டியிடவுள்ளதாக, மத்திய மாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறியதாவது, “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது, எதிர்வரும் உள்ராட்சிமன்றத் தேர்தலில், சில தொகுதிகளில் தனித்து தனது சேவல் சின்னத்திலும் சில பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய…
-
- 0 replies
- 194 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 9 ஆம் திகதி முதல் செயற்படவுள்ள சீன நிறுவனங்கள் துறைமுக அதிகார சபையும் சீன நிறுவனமும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்ட இர ண்டு நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளன என்று அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார். அவர் மேலும் குறிப்பிடுகைய…
-
- 0 replies
- 219 views
-
-
மன்னார் பிரதான பாலத்தில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரிப்பு மன்னார் பிரதான பாலத்தில் தொடர்ச்சியாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதினால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது விவசாய செய்கை இடம்பெற்று வருகின்ற நிலையில், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் உள்ள கல் நடைகளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு மற்றும் அதனை அண்டிய இடங்களில் உள்ள மேச்சல் தரைகளுக்கு கால்நடை வளர்ப்பாளர்களினால் அனுப்பப்பட்ட நிலையில், விவசாயிகளின் விவசாயச் செய்கைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் …
-
- 0 replies
- 198 views
-