ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
‘பஸ் நிலையத்தில் அனுஷ்டிக்க ஏற்பாடு’ -எஸ். நிதர்ஷன் தென்மராட்சிப் பகுதிக்கான மாவீரர் தினம், இம்முறை சாவகச்சேரி நகர மத்தியில் உள்ள பஸ் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. தென்மராட்சியின் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதால், இந்த வருடத்துக்கான மாவீரர் தினம், சாவகச்சேரி நகர மத்தியில் மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது, பிரதான ஈகைச்சுடரை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றுவாரென்றும் இந்நிகழ்வில், தென்மராட்சியில் வசிக்கின்ற மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமென்றும், ஏ…
-
- 0 replies
- 440 views
-
-
“இடைக்கால அறிக்கை தொடர்பில் கூச்சலிடுவோர் முதல் 2 பக்கங்களை வாசித்து தெளிவடையுங்கள்” இடைக்கால அறிக்கை தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்போர் அறிக்கையில் முதல் இரண்டு பக்கங்களை வாசித்து தெளிவடைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் இன்றைய கல்முனைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் உள்ளடங்கிய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவாக்குவதற்கான பொறுப்பை மக்கள் தமது கட்சிக்கு வழங்கியிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய …
-
- 3 replies
- 445 views
-
-
முள்ளியவளை மாவீர் துயிலுமில்லத்தில் மாவீரர் பசீலனின் தாயார் சுடரேற்றுவார் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒருவருடைய தாயார் நாளை ஈகைச் சுடரேற்றுவார் என துயிலும் இல்லப் பணிக்குழு தெரிவித்தது. முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியில் தற்போதும் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அந்த இடத்தின் ஒரு பகுதி படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில், படையினருடைய முகாமுக்கு அருகில் மாவீரர் நாளை எழுச்சியாக நினைவு கூறுவது என அந்தப் பகுதி மக்கள் முடிவு செய்தனர். குறித்த இடம் சிரமதானம் செய்யப்பட…
-
- 0 replies
- 676 views
-
-
சிங்கள ஆட்சியாளர்களை கதிகலங்கவைத்த ஈழத் தமிழ் மக்களது பாதுகாவலன் பிரபாகரன் தந்தை செல்வநாயகத்திற்குப் பின்னர் இந்த நாட்டுத் தமிழ்மக்களது தேசியத்தலைவராகப் பிரபாகரன் இருந்தார். 1983 ஆம் ஆண்டுக்குப்பின்னர் உலகத்தமிழர்களின் அடையாளமாகவும், தமிழர்களின் தலைநிமிர।்வுக்கும், பலத்திற்கும் உயர்வுக்கும் காலம் தந்த சரித்திரத் தலைவனாகவும் விளங்கிய பிரபாகரனது 63ஆவது பிறந்தநாளாகிய இன்று அவரது போரியல் சிந்தனைகள், சாதனைகள் அவரின்சிறப்புகள், தனித்துவங்கள் பற்ற।ி நினைவுகூருதல் பொருத்தமானது. ஈழத்தமிழினத்தை வழிநடத்த உருவாகிய தலைவனான பிரபாகரன் ஒரு தமிழ்த்தேசிய…
-
- 0 replies
- 300 views
-
-
வவுனியா எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை அங்கு மீளக் குடியமர்த்துங்கள் வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் 25 ஆண்டுகளாக மக்கள் மீள் குடியமராது உள்ள தமிழ் கிராம மக்கள் பெரும் பான்மை இனத்தவர்களின் ஆக்கிரப்புக்குள் வந்துவிடும் அபாயம் உள்ளது. அந்தக் கிராமங்களை முற்றாக அழியவிடாது வசதிகளை ஏற்படுத்தி அந்தக் கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை மீள்குடிய மரத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாவது; வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ…
-
- 0 replies
- 162 views
-
-
முல்லைத்தீவில் பொலிஸார் – தங்க வேட்டை!! தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளைத் தேடும் நடவடிக்கைளை முல்லைத்தீவு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு- சுதந்திரபுரம் நிரோஸன் விளையாட்டு மைதானத்தில் இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன், பொலிஸ் சிறப்புப் படையணியின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் இந்தத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தோண்டப்பட்ட இடங்களில் எவ்வித பொருள்களும் மீட்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். http://newuthayan.com/story/507…
-
- 2 replies
- 263 views
-
-
யாழ்.பல்கலைகழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி… http://globaltamilnews.net/archives/51644
-
- 1 reply
- 474 views
-
-
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 22 பேர் கைது ! சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட, 22 பேர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலையடுத்தே, புத்தளம் பாலாவி பகுதியில் உள்ள விடுதியொன்றிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மன்னார், புதுகுடியிருப்பு, யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 18 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளத்திலுள்ள முகவர் ஒருவரிடம் பணம் செலுத்தி அவுஸ்திரேலியா செல்ல சந்தேகநபர்கள் முயற்சித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை…
-
- 1 reply
- 306 views
-
-
பிரபாகரன் : ஆட்டிப்படைக்கும் ஆளுமை.! விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று. இத்தகைய நிலையில், கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா உரையாற்றிய போது, வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தொட்டுச் சென்றிருந்தார். அவரது உரையின் முக்கியமான பகுதி அது. “பிரபாகரனிடம் தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிரபாகரன் உருவாகியதால் தான், பீல்ட் மார்ஷல் ஒருவரும் உருவானார்” என்று அவர் கூறியிருந்தார். 2011ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய, நோர்வேயின், இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், அமெரிக்காவி…
-
- 1 reply
- 609 views
-
-
கிளிநொச்சியில் 68 சமூர்த்தி வெற்றிடங்கள் : 5 பேருக்கே நியமனம்.! கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 68 சமூர்த்தி வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதும் 5 பேருக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சமூர்த்தி திணைக்களத்தின் கீழ் தற்போது 68 வெற்றிடங்கள் காணப்படுகிறன. ஆனால் கடந்த 15ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் வைத்து நாடளாவிய ரீதியில் சமூர்த்தி நியமனங்கள் வழங்கப்பட்டது. இதில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 5 நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை யாழ். மாவட்டத்திற்கு 45 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 42 பேருக்கும் சமூர்த்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிளிநொச்சியில் வெற்றிடம் அதிகமாக காணப்படுகின்ற போதிலும் …
-
- 0 replies
- 189 views
-
-
சட்டவிரோதமாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட 26 பேர் கைது ! சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படும் 26 பேர் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த நபர்கள், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. புத்தளம் தில்லையடிப் பகுதியிலுள்ள திருமணமண்டபமொன்றில், இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர்களுடன் பெண்ணொருவரும் இருந்ததாகவும், பொலிஸாரைக் கண்டதும் அவர் தப்பிச்சென்று விட்டதாகவும் பொலிஸ் அதி…
-
- 0 replies
- 306 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் வைத்திய நிபுணர் ஒருவர் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட நோயாளி தெரிவிப்பு Newsfirst.lk tamil
-
- 1 reply
- 338 views
-
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பதற்றம்: அச்சுறுத்துகின்றதா இராணுவம்? யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், நினைவேந்தன் நிகழ்வுகள் நடத்தப்பட ஏற்பாடாகியுள்ள நிலையில் இன்று காலை குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஏற்பாட்டுக்குழுவினர் அலங்கார வேலைப்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மாவீரர் துயிலுமில்லத்தில் முகாம் அமைத்திருக்கும் இராணுவத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
தேசியக் கொடியை அவமதிக்கும் இனவாதிகளை நாட்டிலிருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் சிவாஜிலிங்கம் பைத்தியம் பிடித்தவர் என்கிறார் ஜயசேகர ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ் ''தேசியக் கொடிக்கு மதிப்பளிக்க முடியாவிட்டால் அது யாராக இருந்தாலும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். தேசியக் கொடியை அவமதிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. வடக்கில் அடிப்படைவாதிகள் இருக்கும் போது அரசியலமைப்பின் ஊடாக தீர்வு வழங்குவது தொடர்பில் எப்படிப் பேச முடியும்'' என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார். அத்துடன் சி.வி.விக்கினேஸ்வரனை ஒருபோதும் தமிழர்களின் தலைவராக நாம் ஏற்க மாட்டோம். அதே போன…
-
- 1 reply
- 276 views
-
-
பிரபாகரனின் படத்துடன் சுவரொட்டிகள் யாழ். பல்கலை முன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டே இந்த ஒளிப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளே ஒட்டப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/50548.html
-
- 2 replies
- 756 views
-
-
தமிழர் விடுதலைக்காக களமாடிய மாவீரர்களுக்கு அஞ்சலி : சபையில் சிறிதரன் எம்.பி. ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் தமிழர் விடுதலைக்காக களமாடிய மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் அஞ்சலி செலுத்தியதோடு உணர்வு பூர்வ கருத்துக்களையும் முன்வைத்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை வெளிவிவகார, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள், அபிவிருத்தி, பணிப்பொறுப்பு ஆகிய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், …
-
- 0 replies
- 441 views
-
-
இலங்கையில் தெற்காசிய குற்றவியல் புலனாய்வு தகவல் பரிமாற்ற மையம் இந்தியா உட்பட 6 நாடுகள் ஏகமனதாக தீர்மானம் லியோ நிரோஷ தர்ஷன் கொழும்பில் இடம்பெற்ற தெற்காசிய குற்றவியல் புலனாய்வு தகவல் பரிமாற்றத்துக்கான அமைப்பை உருவாக்குவதற்கான பிராந்திய உயர் மட்டக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கென்ய தலைநகர் நைரோபியில் இயங்கிவரும் அலுவலகத்தை கொழும்புக்கு மாற்றுதல் உள்ளிட்ட 9 முக்கிய விடயங்களை குறித்தும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக சட்ட ஒழுங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு,நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய …
-
- 0 replies
- 194 views
-
-
பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் வாய்காலுக்குள் போடப்பட்டிருந்த பழைய துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் சில யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டன. “பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவை மீட்கப்பட்டன. எப்போது போடப்பட்டன என்பது தெரியாது. நீதிமன்றின் அனுமதியுடன் சிறப்பு அதிரடிப் படையினர் ஊடாக அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் தெரிவித்தனர். http://globaltamilnews.net/archives/51527
-
- 1 reply
- 426 views
-
-
வல்வெட்டித்துறையில் “பிரபாகரனின்“ பிறந்தநாள் நள்ளிரவில் கொண்டாட்டம்!! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் இன்று அதிகாலை 12 மணிக்கு குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வெடிகொழுத்தி, கேக்வெட்டிக் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்த வீட்டின் முன்பாகவும் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/50577.html
-
- 2 replies
- 741 views
-
-
சட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன. பிரச்சினைகளற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்காக வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதியில் இருந்து 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன. http://www.virakesari.lk/article/27508
-
- 1 reply
- 336 views
-
-
பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடிய யாழ். பல்கலை மாணவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை இன்று காலை கொண்டாடினர். தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை பல்கலைக்கழக மாணவர்கள் கைலாசபதி மண்டபத்தின் முன் கேக் வெட்டி கொண்டாடினர் எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/50582.html
-
- 0 replies
- 364 views
-
-
34 கிலோ போதைப்பொருளுடன் தலைமன்னார்வாசி கைது தலைமன்னாரில், ஹாஷிஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 34 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமன்னாரின் உருமலை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 34 வயது நபர் என்றும் தலைமன்னாரைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை தொடர்கிறது. http://www.virakesari.lk/article/27520
-
- 0 replies
- 159 views
-
-
மட்டக்களப்பில் கன மழை! பல இடங்களில் வெள்ளம்! மட்டக்களப்பில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையால், கடந்த 24 மணித்தியாலத்தில் 75.1 மில்லி மீற்றர் கன மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு கடற்பகுதியில் குழப்பமான வானிலை நிலவுவதனால் இன்றும் அதிக மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காராணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பிரதேசவாசிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரியவருகிறது. இந்தக் காலநிலை அடுத்த நான்கு நாட்களுக்கும் நீடிக்கும் என்பதால், 30 திகதி வரை மட்டக்களப்பு, திருகோணாமலை, காங்கேசன்துறை, கொழும்பு மற்றும் காலி வரையான பகுதிக…
-
- 0 replies
- 178 views
-
-
தலைவர் பிரபாகரன் வீட்டில் இன்று சிரமதானம் வடமராட்சி வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுத் சிரமதானப்பணி இடம்பெறுகிறது. நீண்ட வருடமாக துப்புரவு செய்யப்படாது இருந்த வீடு பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கத்தின் தலைமையில் இன்று சிரமதானப் பணிகள் இடம்பெறுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/50543.html
-
- 0 replies
- 199 views
-
-
வல்வெட்டித்துறையில் பறந்தது புலிக்கொடி வல்வெட்டித்துறை வன்னிச்சி அம்மன் கோயில் பகுதிக்கு அண்மையில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/50551.html
-
- 0 replies
- 321 views
-