Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “புதிய அரசியல் அமைப்பில் சட்டம் மற்றும் நிர்வாகத்தை ஆக்கும் உரிமை வழங்கப்பட்டால், அது உள்ளக சுயநிர்ணய உரிமையாக கருதப்படும்” புதிய அரசியல் அமைப்பின் ஊடாக சட்டம் மற்றும் நிர்வாகத்தை ஆக்கும் உரிமை வழங்கப்பட்டால், அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளபெறமுடியாதவாறு இருந்தால் அது உள்ளக சுயநிர்ணய உரிமையாக கருதப்படும் என, எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் இன்றைய (25.11.17) கல்முனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், புதிய அரசியல் யாப்பில் ‘ஒற்றை ஆட்சியும்’, ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்ற பதங்கள் இருக்காது எனவும…

  2. "உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தை" உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார். ஹட்டனில் இன்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உண்மையான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும், ஒன்றினைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடே ஆகும். …

  3. துவிச்சக்கர வண்டிகளை களவாடிய சந்தேகத்தில் நால்வர் கைது:- யாழ்.போதனா வைத்திய சாலைக்கு முன்பாக நிறுத்தப்படும் துவிச்சக்கர வண்டிகளை களவாடிய சந்தேகத்தில் நால்வர் கைது செய்யபப்ட்டு உள்ளனர். போதனா வைத்திய சாலைக்கு முன்பாக விடப்படும் துவிச்சகர வண்டிகள் தொடர்ந்து ஒரு குழுவினால் திருடப்பட்டு வந்துள்ளன. அந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை துவிச்சக்கர வண்டிகளை திருட முற்பட்ட இருவரை அங்கு நின்றவர்கள் கையும் மெய்யுமா பிடித்தனர். அவர்கள் இருவரையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் அங்கிருந்தவர்கள் ஒப்படைத்தனர். அந்த சம்பவம் நடைபெற்று சில மணிநேரத்தில் வேறு இருவர் போதனா வைத்திய சாலை முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த துவிச்சக்கர வண்டியை திருட முற்பட…

  4. பிரபாகரனின் படத்துடன் வடமராட்சியில் சுவரொட்டிகள் பிரபாகரனின் படத்துடன் வடமராட்சியில் சுவரொட்டிகள் தமிழீழ விடுதலைப் புலிகளிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. எனினும் இன்று காலையில் அவை அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­ னின் பிறந்­த­நாள், தமி­ழர் தாயக மண்­ணி­லும், புலம் பெயர் தேசங்­க­ளி­லும் நாளை கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது. 1954ஆம் ஆண்டு வல்­வெட்­டித்­து­றை­யில் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் பிறந்­தார். தமி…

  5. பண்ணை உல்லாசக் கடற்கரை மேலும் விஸ்தரிப்பு 50 மில்லியன் ரூபா நிதியில் பண்ணை உல்லாசக் கடற்கரைப் புணரமைப்பு பணிகள் இடம்பெறவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜ.கே.குணதிலக தெரிவித்தார். பொதுமக்கள் தமது நேரத்தை பிரயோசனமாகவும் இலகு நடைப்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் வசதியாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் 18 மில்லியன் ரூபா செலவில் பண்ணையில் உல்லாசக் கடற்கரை அமைக்கப்பட்டு யாழ்.மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கடற்கரையின் ஒரு கிலோமீற்றர் நீளமான பகுதி மேலும் 50 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. குறித்த வேலைத்திட்டங்கள் அடுத்த ஆண்டு ஆரம்பி…

  6. சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் கதை சொன்ன சுமந்திரன் எம்.பி. அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் சிங்­கள மக்­கள் அச்­சப்­பட வேண்­டி­ய­தில்லை எனத் தெரி­வித்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், அதற்கு உதா­ர­ண­மாக குடும்­பக் கதை ஒன்­றை­யும் சிங்­கள மக்­க­ளுக்­குச் சிங்­க­ளத்­தில் எடுத்­துக் கூறி­னார். புதிய அர­ச­மைப்­புக்கு ஆத­ர­வான பரப்­புரை மாத்­தறை நக­ரில் நேற்று நடை­பெற்­றது. பெரு­மெ­டுப்­பில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த நிகழ்­வில் சுமார் ஆயி­ரம் பேர்­வ­ரை­யி­லா­னோர் கலந்­து­கொண்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. நிதி மற்­றும் ஊட­கத்­துறை அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, நவ­ச­ம­ச­ம…

  7. உறுப்பினர்களின் அசமந்தத்தால் மாகாண மூலதன நிதி கிடப்பில் 61 சதவீதமானது இன்னும் செலவு செய்யப்படவில்லை நடப்பு வரு­டத்­தில் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­க­ளின் பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை நிதி­யில் மேற்­கொள்ள சமர்ப்­பித்த வேலைத்­திட்­டங்­கள் இழுத்­த­டிப்பு நிலை­யில் காணப்­ப­டு­வ­தாக மாகாண பேர­வைச்­செ­ய­ல­கம் தெரி­வித்­துள்­ளது. தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக நடப்பு வரு­டத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும் திட்­டங்­கள் பற்­றிய விவ­ரங்­களை கேட்­ட­போதே இவ்­வாறு பதி­ல­ளிக்­கப்­பட்டது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும…

  8. மட்டக்களப்பு மீனவர்களின் உபகரணங்கள் மீது அசிட் வீச்சு மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னைக்குடா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மீன் பிடிப் படகு மற்றும் வலை என்பன மீது மர்ம நபர்கள் அசிட் ஊற்றி சேதப்படுத்தியுள்ளனர். சேதமாக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் பெறுமதி சுமார் பதினைந்து இலட்ச ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கொந்தளிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீன்பிடி உபகரணங்களும் சேதமாக்கப்பட்டிருப்பது மீனவர்களை கடும் பிரச்சனைகளுக்குள் தள்ளியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/27500

  9. மாவீ­ரர் வாரம் இன்று ஆரம்­பம் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக தமி­ழீழ இலட்­சி­யத்­துக்­கா­கப் போராடி வீரச்­சா­வ­டைந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வடக்கு, கிழக்­கி­லும், தமி­ழர்­கள் வாழும் புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றன. சுமார் 8 ஆண்­டு­க­ளின் பின்­னர் இந்த ஆண்டே மாவீ­ரர் வாரம் தாயக மண்­ணில் மீண்­டும் புதுப்­பொ­லி­வு­டன் சுடர்­விட ஆரம்­பித்­துள்­ளது. தமி­ழர்­க­ளின் ஆயு­தப் போராட்­டம் 2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்­கா­ லில் மௌ னித்த பின்­னர் மாவீ­ரர் நினைவேந்­தல் வாரத்தை வடக்கு, கிழக்­கில் தமிழ் மக்­கள் பகி­ரங்­க­மா…

  10. வடக்கு முதலமைச்சருக்கும் முன்னணியினருக்குமிடையே இன்று காலை சந்திப்பு! வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையே இன்று காலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றது. எனினும் சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவது இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, முதலமைச்சரின் தரப்பு இதுகுறித்த தகவலினை வழங்க மறுத்துவிட்டது. இந்தச் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்ன…

  11. ஏழு வய­தான சிறு­வன் ஒரு­வனை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் மௌலவி ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக களுத்­துறை – வெலி­பென்ன பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர் வெலி­பென்ன நகரைச் சேர்ந்த 34 வய­தான மௌலவி ஒரு­வ­ரென பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். பாதிக்­கப்­பட்ட சிறுவன் பள்­ளி­வா­ச­லுக்கு சென்று கடந்த 2 வரு­டங்­க­ளாக மார்க்கக் கல்­வியை கற்று வந்­துள்­ள­தா­கவும், அண்­மையில் சில நாட்­க­ளாக தமது பிள்ளை இவ்­வாறு மௌல­வி­யினால் பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக சிறு­வனின் பெற்றோர் வெலி­பென்ன பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். சந்­தேக நபர் சிறு­வ­னுக்கு ஆபாசப் படங்­களைக் க…

    • 3 replies
    • 1.5k views
  12. யாழில். வீட்டில் கஞ்சா வியாபாரம் செய்த பெண் கைது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் ஒரு தொகை பணமும் யாழ்ப்பாண காவல்துறையினரினால் மீட்கப்பட்டு உள்ளது. கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதன் போது , குறித்த வீட்டில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் , ஒரு தொகை பணத்தினையும் ; கைப்பற்றிய காவல்துறையினர் வீட்டில் இருந்து குடும்ப பெண்ணையும் கைது செய்துள்ளனர். …

    • 17 replies
    • 1.7k views
  13. வெடிபொருட்கள் மீட்பு -சண்முகம் தவசீலன் உடையார்கட்டு - குரவில் காட்டுப் பகுதியில், விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்டு அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குரவில் காட்டுப்பகுதியில் போர் நடைபெற்ற காலத்தில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இரணைமடு விமானப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, இன்று (25) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய, புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரி ஜி.பி.சந்திரபால தலமையிலான பொலிஸ் குழுவினரும், விமானப்படையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் பதுக்கு குழி ஒன்றில் புதைக்கப்பட்ட வெ…

  14. நாடு பிரி­யா­மல் இருப்­ப­தற்கு அதி­கா­ரப் பகிர்வே அவ­சி­யம் -ஹக்­கீம் நாடு பிரி­யா­மல் இருப்­ப­தற்கு அதி­கா­ரப் பகிர்வே அவ­சி­யம் -ஹக்­கீம் உண்­மை­யில் நாடு துண்­டா­டப்­ப­டா­மல் இருக்க வேண்­டு­மா­னால் அதி­கா­ரப் பகிர்வு வேண்­டும். யதார்த்­த­பூர்­வ­மாக இது பற்­றிச் சிந்­திப்­பது அனை­வ­ரி­னதும் தார்­மீகக் கட­மை­யா­கும். இது அர­சி­யல் தலை­மை­க­ளுக்­குள்ள மிகப் பெரிய பொறுப்­பும் ஆகும். இதனை அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு விட்­டுச் செல்ல முடி­யாது. இவ்­வாறு சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வ­ரும் நகர திட்­ட­மி­டல் மற்­றும் நீர் வழங்­கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­…

  15. கூட்டு அரசு பத­வி­யில் தொட­ருமா? கூட்டு அரசு பத­வி­யில் தொட­ருமா? பத­வி­யில் இருக்­கும் ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி கூட்டு அரசு தொடர்ந்து பத­வி­யில் இருப்­பது சந்­தே­கத்துக்கி­ட­மாகி வரு­கின்­றது. இரு கட்­சி­க­ளுக்­கும் இடை­யி­லான இரண்­டாண்டு கால ஒப்­பந்­தம் டிசெம்­பர் 31ஆம் திக­தி­யு­டன் முடி­வ­டை­கின்­றது. அதற்­குப் பின்­னர் கூட்டு அர­சில் தொடர்ந்து இருக்க வேண்­டாம் என்று சுதந்­தி­ரக் கட்­சி­யின் முக்­கிய மூத்த தலை­வர்­கள் கட்­சித் தலை­வ­ரும் அரச தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­குக் கடும் அழுத…

  16. பாராளுமன்றத்தில் விசேட குழுவை அமைத்தாவது வடக்கு, கிழக்கில் மக்­களின் காணி­களை விடு­வி­யுங்கள் முழு­மை­யான ஆத­ரவு வழங்­குவோம் என்­கிறார் தினேஷ் குண­வர்த்­தன (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) பாரா­ளு­மன்­றத்தில் விசேட குழு­வொன்றை அமைத்­தா­வது வடக்கு கிழக்­கி­லுள்ள காணி­களை துரி­த­மாக விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். முன்­னைய ஆட்­சியின் போதும் எம்மால் முடி­யு­மான அள­விற்கு காணி­களை விடு­வித்தோம். தற்­போது பெரு­ம­ள­வி­லான நிலப்­ப­ரப்­பு­களில் கண்ணி வெடிகள் அகற்­றப்­பட்டு விட்­டன. ஆகவே, காணி விடு­விப்­புக்கு நாம் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­குவோம் என கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­ம…

  17. கோதபாயவை கைது செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு காவல்துறையினர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோதபாயவின் பெற்றோர்களான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதியினரின் நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில் 90 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முக்கிய பிரபு ஒருவரை கைது செய்யும் போது ஜனாதிபதியின் அனுமதி பெற்றுக் கொள்வது தற்போது வழமையாகியுள்ளது என தெரிவிக்கப்படுகி…

  18. தாய் உயி­ரி­ழந்த அதிர்ச்­சியில் மகனும் உயி­ரி­ழப்பு : யாழில் சோகம் தாய் இறந்த சோகம் தாங்­காது நெஞ்­சு­வலி ஏற்­பட்டு ஒரு­மணி நேரத்தில் மகனும் உயி­ரி­ழந்த சம்­பவம் யாழ்ப்­பா­ணத்தில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது. யாழ்ப்­பாணம், கச்­சேரி பகு­தியை சேர்ந்த பால­சிங்கம் தவ­மலர் (71 வயது) மற்றும் அவ­ரது மகனும் இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யு­மான பால­சிங்கம் பிர­சன்னா (38 வயது) ஆகிய இரு­வ­ருமே உயி­ரி­ழந்­த­வர்களாவர். இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நேற்றுக் காலை குறித்த தாயா­ருக்கு நெஞ்­சு­வலி ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அவ­ரது மக­னான பால­சிங்கம் பிர­சன்னா அவரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து சென்­றுள்ளார். …

  19. பகுதி பகுதியான தேர்தலுக்கு இடமில்லை ; ஐக்கிய தேசிய முன்னணி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை பகுதி பகுதியாக நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அனைத்து மன்றங்களுக்கும் ஒரேநாளி லேயே தேர்தல் நடத்தப்படவேண்டும். புதிய முறைமையில் சிக்கலாயின் சட்டத்திருத்தத்தின் மூலம் பழைய முறைமையை பின்பற்ற முடியும் இதுவே ஐக்கிய தேசிய முன்னணியின் இறுதியான நிலைப்பாடாகும் என நேற்று மாலை அக்கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இத் தீர்மானத்தினை முன்னணியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து திட்டவட்டமாக அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம…

  20. வடக்கில் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி கவனம் : கயந்த கரு­ணா­தி­லக்க வடக்கில் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­ சேன விசேட அவ­தானம் செலுத்­தியுள் ளார். மாதாந்தம் முப்­ப­டை­யி­னரை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­கின்­றன. இதன்­படி வடக்கு காணி விடு­விப்பு தொடர்­பான நட­வ­டிக்­கைகள் வெற்­றி­க­ர­மான பாதையை நோக்கிப் பய­ணித்து கொண்­டிருக்கின்றன. அத்­துடன் மலை­ய­கத்தில் 50 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்களுக்கு காணி உறு­திப்­பத்­திரம் வழங்க நட­வ­டிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க சபையில் தெரி­வித்தார். பாரா­ளு…

  21. நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதால் தேர்­தலை நடத்த முடி­யாது : ல­க் ஷ்மன் கிரி­யெல்ல நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதன் கார­ண­மாக அர­சாங்­கத்­தினால் தேர்­தலை நடத்த முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷ்மன் கிரி­யெல்ல சபை யில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் காணி, வன ஜீவ­ரா­சிகள் அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­தத்தின் போது தினேஷ் குண­வர்­தன தேர்தல் விவ­காரம் தொடர்பில் கருத்து தெரி­வித்­ததை அடுத்தே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். தினேஷ் குண­வர்­தன கு…

  22. இந்­தி­யா­வு­ட­னான பொரு­ளா­தார, தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை குறித்து விரி­வாக பேசப்­பட்­டது இந்து சமுத்­திரம் தொடர்­பாக இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­குமி­ டையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளா­ தார மற்றும் தொழில்நுட்ப உடன்­ப­டிக்கை தொடர்­பாக இந்­தியத் தரப்­புடன் ஆழ­மான பேச்­சு­வார்த்­ தையில் ஈடு­பட்­ட­தா­கவும் அதற்­கான செயற்­பா­டு­களை துரி­தப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். கடந்த ஏப்ரல் மாத­மா­கும்­போது இரண்டு நாடு­களும் இணக்­கப்­பாட்­டிற்கு வந்த வேலைத்­திட்­டங்­களின் முன்­னேற்­றங்கள் தொடர்­பா­கவும் இதன்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தா­கவ…

  23. புதிய அதிகாரத்துக்குத் திட்டமிடும் வட மாகாண முதல்வர் வடபகுதியின் மீன்பிடி நடவடிக்கைகளுக்கான அதிகாரத்தை வடமாகாண அமைச்சின் கீழ் கொண்டுவர முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வரைவுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றன. நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது முதல்வர் இதுகுறித்துத் தம்மிடம் தெரிவித்ததாக, விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கான வட மாகாண அமைச்சர் கந்தையா சிவனேசன் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/27478

  24. மக்களுக்கு எச்சரிக்கை ! வங்­காள விரி­கு­டாவின் தாழ­முக்கம் இலங்­கையை பாதிக்கும் எதிர்­வரும் வாரங்­களில் மழை­யுடன் கூடிய கால­நிலை நிலவும் சாத்­தியம் உள்­ள­தாக கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது. மேற்கு வங்­காள விரி­குடா பகு­தியில் ஏற்­பட்­டு­ வரும் தாழ­முக்கம் இலங்­கையின் கரை­யோ­ரங்­க­ளையும், தென்­னிந்­தி­யா­வையும் அதி­க­ளவில் பாதிக்கும் சாத்­தியம் உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் பல்­வேறு பகு­தி­களில் தற்­போது கடும் வரட்சி நிலவி வரு­கின்­றது. குறிப்­பாக தென்­னி­லங்­கையில் பல்­வேறு மாவட்­டங்­களில் கடும் வரட்சி நிலவி வரு­கின்­றது. 50 வீதத்­திற்கும் குறை­வான வகை­யி­லேயே நீர் சேமிக்­கப்­பட்­டுள்­ளத…

  25. வடமாகாணத்திற்கு 07 தங்க விருதுகள்; முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அமைச்சுக்கும் விருது பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப் படுத்தப்பட்ட கணணி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாணசபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளடங்கலானதேசியமட்டத்திலான 831 நிறுவனங்களது 2015ம் ஆண்டிற்கான செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுள் அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய 81 நிறுவனங்களுக்கு தங்க, வெள்ளி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு 2017.11.13ம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மிகத்திறமையான ஏழு நிறுவனங்கள் வடமாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.