ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சிறுமிகள் சவுதியில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதாக சவுதி இளவரசியொருவர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். சவுதி அரேபியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அல்வலீத் பின் தலால் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரின் முன்னாள் மனைவி அமீரா பின்த் அய்தான் பின் நயீப் சவுதியில் பாலியல் அடிமைகளாக சிறுமிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளார். இளவரசி அமீராவின் மேற்படி விடயம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பும் தகவல்களைக் கொண்ட பேட்டி கடந்த ஞாயிறுக்கிழமை, பிரான்ஸ் சஞ்சிகையான லீ மொண்டெவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, இலங்க…
-
- 0 replies
- 487 views
-
-
முன்னாள் போராளிகளுக்கான நலத்திட்டங்கள் நாளை ஆரம்பம்! தமிழ் மக்களுக்கான தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள் மற்றும் விசேட தேவையுடைய முன்னாள் போராளிகளுக்கான நலத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வல்வெட்டி துறையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்தில் வைத்து நாளைய தினம் இந்த நலத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று இடம்…
-
- 1 reply
- 354 views
-
-
ஒற்றுமை எனும் மாயை!! உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் ஜனவரியில் நடக்காது என்பது உறுதியாகியும், அது எப்போது நடக்கும் என்பது தெரியாத நிலையும் நீடித்தாலும், தேர்தலுக்குத் தயார்ப்படுத்தும் கட்சிகளின் நகர்வுகள் தீவிரமாகத் தொடர்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து தனியே தேர்தலைச் சந்திப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழர்களின் ஒற்றுமை என்கிற கோசம் மீண்டும் மேலெழுவதைக் காணமுடிகின்றது. தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டதன் மூலம் அரசியல்வாதிகள் அட…
-
- 0 replies
- 397 views
-
-
மாணவி வித்தியா இன்று புங்குடுதீவில் நினைவுகூரப்பட்டார்! யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் 21ஆவது பிறந்த தினமான இன்றைய நாள், குறித்த மாணவியின் மரணத்திற்கான நினைவஞ்சலியும், விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மாணவி வித்தியா கல்வி கற்ற பாடசாலையான புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு, முன்னாள் நடிகையான சுகினிதா வீரசிங்க மற்றும் அவரது கணவரான களனி பல்கலைகழக விரிவுரையாளர் நந்தலால் மலான்கொட ஆகியோரால் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது. நாட்டில் இனி எங்கும் வித்தியாவுக்கு இடம்பெற்றது போன்றதான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்ற விழிப்…
-
- 0 replies
- 479 views
-
-
மஹிந்தவை சந்தித்தேன்; உண்மையை ஒப்புக்கொண்டார் மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தமக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வியாழக்கிழமை நான்கு முன்னணி தேரர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த தகவலை உறுதிசெய்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கு தயாராகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பான நிலை குறித்து கேட்பதற்காக நாயக்க தேரர்கள் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர். இந்த கலந்துரையாடலின்போது, ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தேரர்களுக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதுடன், தனக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரா…
-
- 0 replies
- 310 views
-
-
“புதிய அரசியல் அமைப்பில் சட்டம் மற்றும் நிர்வாகத்தை ஆக்கும் உரிமை வழங்கப்பட்டால், அது உள்ளக சுயநிர்ணய உரிமையாக கருதப்படும்” புதிய அரசியல் அமைப்பின் ஊடாக சட்டம் மற்றும் நிர்வாகத்தை ஆக்கும் உரிமை வழங்கப்பட்டால், அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளபெறமுடியாதவாறு இருந்தால் அது உள்ளக சுயநிர்ணய உரிமையாக கருதப்படும் என, எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் இன்றைய (25.11.17) கல்முனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், புதிய அரசியல் யாப்பில் ‘ஒற்றை ஆட்சியும்’, ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்ற பதங்கள் இருக்காது எனவும…
-
- 1 reply
- 267 views
-
-
"உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தை" உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார். ஹட்டனில் இன்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உண்மையான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும், ஒன்றினைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடே ஆகும். …
-
- 0 replies
- 221 views
-
-
துவிச்சக்கர வண்டிகளை களவாடிய சந்தேகத்தில் நால்வர் கைது:- யாழ்.போதனா வைத்திய சாலைக்கு முன்பாக நிறுத்தப்படும் துவிச்சக்கர வண்டிகளை களவாடிய சந்தேகத்தில் நால்வர் கைது செய்யபப்ட்டு உள்ளனர். போதனா வைத்திய சாலைக்கு முன்பாக விடப்படும் துவிச்சகர வண்டிகள் தொடர்ந்து ஒரு குழுவினால் திருடப்பட்டு வந்துள்ளன. அந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை துவிச்சக்கர வண்டிகளை திருட முற்பட்ட இருவரை அங்கு நின்றவர்கள் கையும் மெய்யுமா பிடித்தனர். அவர்கள் இருவரையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் அங்கிருந்தவர்கள் ஒப்படைத்தனர். அந்த சம்பவம் நடைபெற்று சில மணிநேரத்தில் வேறு இருவர் போதனா வைத்திய சாலை முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த துவிச்சக்கர வண்டியை திருட முற்பட…
-
- 0 replies
- 308 views
-
-
பிரபாகரனின் படத்துடன் வடமராட்சியில் சுவரொட்டிகள் பிரபாகரனின் படத்துடன் வடமராட்சியில் சுவரொட்டிகள் தமிழீழ விடுதலைப் புலிகளிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. எனினும் இன்று காலையில் அவை அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர னின் பிறந்தநாள், தமிழர் தாயக மண்ணிலும், புலம் பெயர் தேசங்களிலும் நாளை கொண்டாடப்படவுள்ளது. 1954ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார். தமி…
-
- 1 reply
- 584 views
-
-
பண்ணை உல்லாசக் கடற்கரை மேலும் விஸ்தரிப்பு 50 மில்லியன் ரூபா நிதியில் பண்ணை உல்லாசக் கடற்கரைப் புணரமைப்பு பணிகள் இடம்பெறவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜ.கே.குணதிலக தெரிவித்தார். பொதுமக்கள் தமது நேரத்தை பிரயோசனமாகவும் இலகு நடைப்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் வசதியாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் 18 மில்லியன் ரூபா செலவில் பண்ணையில் உல்லாசக் கடற்கரை அமைக்கப்பட்டு யாழ்.மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கடற்கரையின் ஒரு கிலோமீற்றர் நீளமான பகுதி மேலும் 50 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. குறித்த வேலைத்திட்டங்கள் அடுத்த ஆண்டு ஆரம்பி…
-
- 1 reply
- 847 views
-
-
சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் கதை சொன்ன சுமந்திரன் எம்.பி. அதிகாரப் பகிர்வு தொடர்பில் சிங்கள மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதற்கு உதாரணமாக குடும்பக் கதை ஒன்றையும் சிங்கள மக்களுக்குச் சிங்களத்தில் எடுத்துக் கூறினார். புதிய அரசமைப்புக்கு ஆதரவான பரப்புரை மாத்தறை நகரில் நேற்று நடைபெற்றது. பெருமெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுமார் ஆயிரம் பேர்வரையிலானோர் கலந்துகொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நவசமசம…
-
- 3 replies
- 673 views
-
-
உறுப்பினர்களின் அசமந்தத்தால் மாகாண மூலதன நிதி கிடப்பில் 61 சதவீதமானது இன்னும் செலவு செய்யப்படவில்லை நடப்பு வருடத்தில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்ககளின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் மேற்கொள்ள சமர்ப்பித்த வேலைத்திட்டங்கள் இழுத்தடிப்பு நிலையில் காணப்படுவதாக மாகாண பேரவைச்செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக நடப்பு வருடத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றிய விவரங்களை கேட்டபோதே இவ்வாறு பதிலளிக்கப்பட்டது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும…
-
- 0 replies
- 191 views
-
-
மட்டக்களப்பு மீனவர்களின் உபகரணங்கள் மீது அசிட் வீச்சு மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னைக்குடா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மீன் பிடிப் படகு மற்றும் வலை என்பன மீது மர்ம நபர்கள் அசிட் ஊற்றி சேதப்படுத்தியுள்ளனர். சேதமாக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் பெறுமதி சுமார் பதினைந்து இலட்ச ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கொந்தளிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீன்பிடி உபகரணங்களும் சேதமாக்கப்பட்டிருப்பது மீனவர்களை கடும் பிரச்சனைகளுக்குள் தள்ளியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/27500
-
- 0 replies
- 209 views
-
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் தமிழர்களின் உரிமைக்காக தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகின்றன. சுமார் 8 ஆண்டுகளின் பின்னர் இந்த ஆண்டே மாவீரர் வாரம் தாயக மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் சுடர்விட ஆரம்பித்துள்ளது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கா லில் மௌ னித்த பின்னர் மாவீரர் நினைவேந்தல் வாரத்தை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பகிரங்கமா…
-
- 12 replies
- 2.5k views
-
-
வடக்கு முதலமைச்சருக்கும் முன்னணியினருக்குமிடையே இன்று காலை சந்திப்பு! வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையே இன்று காலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றது. எனினும் சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவது இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, முதலமைச்சரின் தரப்பு இதுகுறித்த தகவலினை வழங்க மறுத்துவிட்டது. இந்தச் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்ன…
-
- 1 reply
- 320 views
-
-
ஏழு வயதான சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மௌலவி ஒருவரை கைது செய்துள்ளதாக களுத்துறை – வெலிபென்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வெலிபென்ன நகரைச் சேர்ந்த 34 வயதான மௌலவி ஒருவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுவன் பள்ளிவாசலுக்கு சென்று கடந்த 2 வருடங்களாக மார்க்கக் கல்வியை கற்று வந்துள்ளதாகவும், அண்மையில் சில நாட்களாக தமது பிள்ளை இவ்வாறு மௌலவியினால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறுவனின் பெற்றோர் வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சந்தேக நபர் சிறுவனுக்கு ஆபாசப் படங்களைக் க…
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழில். வீட்டில் கஞ்சா வியாபாரம் செய்த பெண் கைது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் ஒரு தொகை பணமும் யாழ்ப்பாண காவல்துறையினரினால் மீட்கப்பட்டு உள்ளது. கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதன் போது , குறித்த வீட்டில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் , ஒரு தொகை பணத்தினையும் ; கைப்பற்றிய காவல்துறையினர் வீட்டில் இருந்து குடும்ப பெண்ணையும் கைது செய்துள்ளனர். …
-
- 17 replies
- 1.7k views
-
-
வெடிபொருட்கள் மீட்பு -சண்முகம் தவசீலன் உடையார்கட்டு - குரவில் காட்டுப் பகுதியில், விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்டு அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குரவில் காட்டுப்பகுதியில் போர் நடைபெற்ற காலத்தில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இரணைமடு விமானப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, இன்று (25) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய, புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரி ஜி.பி.சந்திரபால தலமையிலான பொலிஸ் குழுவினரும், விமானப்படையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் பதுக்கு குழி ஒன்றில் புதைக்கப்பட்ட வெ…
-
- 0 replies
- 332 views
-
-
நாடு பிரியாமல் இருப்பதற்கு அதிகாரப் பகிர்வே அவசியம் -ஹக்கீம் நாடு பிரியாமல் இருப்பதற்கு அதிகாரப் பகிர்வே அவசியம் -ஹக்கீம் உண்மையில் நாடு துண்டாடப்படாமல் இருக்க வேண்டுமானால் அதிகாரப் பகிர்வு வேண்டும். யதார்த்தபூர்வமாக இது பற்றிச் சிந்திப்பது அனைவரினதும் தார்மீகக் கடமையாகும். இது அரசியல் தலைமைகளுக்குள்ள மிகப் பெரிய பொறுப்பும் ஆகும். இதனை அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியாது. இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்…
-
- 0 replies
- 261 views
-
-
கூட்டு அரசு பதவியில் தொடருமா? கூட்டு அரசு பதவியில் தொடருமா? பதவியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசு தொடர்ந்து பதவியில் இருப்பது சந்தேகத்துக்கிடமாகி வருகின்றது. இரு கட்சிகளுக்கும் இடையிலான இரண்டாண்டு கால ஒப்பந்தம் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதற்குப் பின்னர் கூட்டு அரசில் தொடர்ந்து இருக்க வேண்டாம் என்று சுதந்திரக் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் கட்சித் தலைவரும் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடும் அழுத…
-
- 0 replies
- 301 views
-
-
பாராளுமன்றத்தில் விசேட குழுவை அமைத்தாவது வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகளை விடுவியுங்கள் முழுமையான ஆதரவு வழங்குவோம் என்கிறார் தினேஷ் குணவர்த்தன (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) பாராளுமன்றத்தில் விசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கு கிழக்கிலுள்ள காணிகளை துரிதமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னைய ஆட்சியின் போதும் எம்மால் முடியுமான அளவிற்கு காணிகளை விடுவித்தோம். தற்போது பெருமளவிலான நிலப்பரப்புகளில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு விட்டன. ஆகவே, காணி விடுவிப்புக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும…
-
- 0 replies
- 225 views
-
-
கோதபாயவை கைது செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு காவல்துறையினர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோதபாயவின் பெற்றோர்களான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதியினரின் நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில் 90 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முக்கிய பிரபு ஒருவரை கைது செய்யும் போது ஜனாதிபதியின் அனுமதி பெற்றுக் கொள்வது தற்போது வழமையாகியுள்ளது என தெரிவிக்கப்படுகி…
-
- 5 replies
- 475 views
-
-
தாய் உயிரிழந்த அதிர்ச்சியில் மகனும் உயிரிழப்பு : யாழில் சோகம் தாய் இறந்த சோகம் தாங்காது நெஞ்சுவலி ஏற்பட்டு ஒருமணி நேரத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், கச்சேரி பகுதியை சேர்ந்த பாலசிங்கம் தவமலர் (71 வயது) மற்றும் அவரது மகனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான பாலசிங்கம் பிரசன்னா (38 வயது) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுக் காலை குறித்த தாயாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மகனான பாலசிங்கம் பிரசன்னா அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். …
-
- 0 replies
- 336 views
-
-
பகுதி பகுதியான தேர்தலுக்கு இடமில்லை ; ஐக்கிய தேசிய முன்னணி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை பகுதி பகுதியாக நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அனைத்து மன்றங்களுக்கும் ஒரேநாளி லேயே தேர்தல் நடத்தப்படவேண்டும். புதிய முறைமையில் சிக்கலாயின் சட்டத்திருத்தத்தின் மூலம் பழைய முறைமையை பின்பற்ற முடியும் இதுவே ஐக்கிய தேசிய முன்னணியின் இறுதியான நிலைப்பாடாகும் என நேற்று மாலை அக்கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இத் தீர்மானத்தினை முன்னணியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து திட்டவட்டமாக அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம…
-
- 0 replies
- 268 views
-
-
வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் : கயந்த கருணாதிலக்க வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன விசேட அவதானம் செலுத்தியுள் ளார். மாதாந்தம் முப்படையினரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன. இதன்படி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான நடவடிக்கைகள் வெற்றிகரமான பாதையை நோக்கிப் பயணித்து கொண்டிருக்கின்றன. அத்துடன் மலையகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க சபையில் தெரிவித்தார். பாராளு…
-
- 0 replies
- 199 views
-