ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
அமெரிக்காவை தொடர்ந்து வருகிறது சீனாவின் பாரிய போர்க்கப்பல் லியோ நிரோஷ தர்ஷன் இந்து சமுத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவின் பாரிய போர் கப்பல் ஒன்று இவ்வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இந்த போர்க் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக கடற்படை உறுதிப்படுத்தியது.கடந்த இரண்டு வாரத்திலிருந்து இன்றுவரையில் இந்தோனேஷியா, தென்கொரியா, பங்களாதேஷ், அமெரிக்கா , இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் போர்க்கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டன. இதனைத் தொ…
-
- 2 replies
- 528 views
-
-
8 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த 8 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்கள் சிலவும் , மற்றும் அவர்கள் பயணித்த படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 8 மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/26685
-
- 0 replies
- 237 views
-
-
இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் தோமஸ் செனொன் இலங்கை வருகின்றார். நாளை திங்கட் கிழமை இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் விஷேட கலந்துரையாடல்களிலும் ஈடுப்படவுள்ளார். அதே போன்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் திங்கட்கிழமை மாலை 7.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சில் கூட…
-
- 0 replies
- 386 views
-
-
மாத்தளையில் சோகம் : ஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேர் மாயம் மாத்தளை, லக்கல தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்றவர்களில் குறைந்தது 10 பேரையாவது காணவில்லையென முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆற்றில் கூட்டமாக குளிக்கச் சென்றவர்களில் 10 பேரையே காணவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/26663
-
- 1 reply
- 326 views
-
-
குண்டுச் சட்டிக்குள் ஓடும் குதிரைகள்! FacebookTwitterPinterestEmailGmailViber புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கையின் மீது அரசமைப்புச் சபையாக மாறிய நாடாளுமன்றத்தில் நான்கு நாள்கள் விவாதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் ஒரு நாள் மீதமிருக்கின்றது. திட்ட மிட்டதற்கும் மேலதிகமாக இரு நாள்களை எடுத்துக்கொண்டு இந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது. விவாதத்தில் பேசிய தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, அடிக்கடி கூட்டு எதிரணி சொல்லும் எல்லாத் திருத்தங்களை யும் ஏற்கிறோம் ஏற்கிறோம் என்றார். இடைக்கால அறிக்கையில் கூட்டு எதிரணி சார்பில் முன்வைக்கப்…
-
- 2 replies
- 629 views
-
-
இலங்கை: காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ் பெறும் காலம் நீடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPEDRO UGARTE இலங்கையில் உள்நாட்டு யுத்தம் உட்பட பல்வேறு சம்பவங்களின் போது காணாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்து மரண சான்றிதழை பெறுவதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் மேலும் இரு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் 201…
-
- 0 replies
- 376 views
-
-
கொழும்பில் சிக்கிய ரஷ்யப் பிரஜையால் சர்ச்சை! [Sunday 2017-11-05 08:00] அமெரிக்காவுக்கு தேவையான ரஷ்ய பிரஜை ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மெனோகின் பெர்டோவ் என்ற ரஷ்யப் பிரஜையே நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். மெனோகினுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு வழக்கிற்கு எதிராக கைது செய்யப்படுவதனை தவிர்ப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிவப்பு அறிக்கையின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கான தடைகள் இல்லை என்பதனால் குற்ற விசாரணை திணைக்களம் அவரைக் கைது செய்துள்ளது.ரஷ்யப் பிரஜையை கைது செய்வதற்கு சென்ற குற்ற விசாரணை தி…
-
- 0 replies
- 389 views
-
-
அனைத்து மாவட்டங்களிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டி! [Sunday 2017-11-05 08:00] எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி எல்லா மாவட்டங்களிலும் போட்டியிடும் என கட்சியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார். எனவே எங்கெங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றார்களோ அவர்களில் தம்முடன் இணைந்து செயற்பட விரும்பும் ஒவ்வொருவரையும், தனிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அமைப்புக்களாக இருந்தாலும் சரி பொது கொள்கையின் அடிபடையில் முன்…
-
- 0 replies
- 415 views
-
-
வீடு சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளுக்குள் இணக்கம்! - ஈபிஆர்எல்எவ் மறுப்பு [Sunday 2017-11-05 08:00] எதிர்வரும் ஜனவரி மாதம் நடக்க இருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட மூன்று பங்காளிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றுக் கூடி ஆராய்ந்தன. சுமார் இரண்டரை மணிநேரம் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்…
-
- 0 replies
- 449 views
-
-
தவறான சிகிச்சை தொடர்பில் நீதிமன்றை நாடி நீதியை பெறுங்கள் – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தவறான சிகிச்சை முறை தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து நீதிமன்றை நாடி நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்தார். அதன் போது அண்மையில் நொதேர்ன் வைத்திய சாலையில் கற்ராக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது ஏற்பட்ட கிருமி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 9 replies
- 2k views
-
-
முடிவைக் கேட்போம் ; விலகும் சுயாதீனம் உள்ளது எம்.நியுட்டன் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் முடிவு என்ன, அவர்களுடைய நிலைப்பாடு என்ன? என்பதை வினவ இருக்கின்றோம் என கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது . இக் கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி கலந…
-
- 0 replies
- 521 views
-
-
அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பம் : இலங்கை குறித்து 15 ஆம் திகதி ஆராயப்படும் லியோ நிரோஷ தர்ஷன் ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட் கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ளது. இலங்கை தொடர்பான மீளாய்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. மேலும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கை வெளியிடப்படவுள்ளது. போரின் பின்னரான நிலைமைகளில் மனித உரிமைகள் பேரவை பல்வேறு பரிந்துரைகளை இலங்கை தொடர்பில் முன் வைத்துள்ளது. இவற்றுள் பல தீர்மானங்களும் உள்ளடங்குகின்றன. மனித உரிமைகளை ப…
-
- 0 replies
- 409 views
-
-
மானிப்பாயில் தொடரும் ரவுடிக் கும்பல்களின் அடாவடி- அச்சத்தில் மக்கள்! யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வாள்வெட்டு கும்பல்களின் அடாவடி தொடருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம்(04) மாலை வேளை இரண்டு இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன. நேற்றுமுன்தினம்(04) மாலை 06.15 மணியளவில் வெள்ளை நிறமான 'அப்பாச்சி' மோட்டார் சைக்கிளொன்றில் வாள் மற்றும் கைகோடாரிகளுடன் வந்த மூன்று ரவுடிகளால் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள சங்கரப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள மூன்று கடைகள் தாக்கப்பட்டதுடன் கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டது. இந்த …
-
- 0 replies
- 439 views
-
-
வலி. வடக்கு மக்கள் இராணுவத்துடன் சந்திப்பு FacebookTwitterPinterestEmailGmailViber வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று காலை அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இராணுவ பொறுப்பதிகாரி சந்தித்துக் கலந்துரையாடினர். http://newuthayan.com/story/43897.html
-
- 0 replies
- 644 views
-
-
கேப்பாபிலவு காணிகளிலிருந்து மெல்ல நகர்கிறது இராணுவம் FacebookTwitterPinterestEmailGmailViber கேப்பாப்பிலவில் பொது மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவம் மெல்ல மெல்ல அங்கிருந்து தமது பொருள்களை அகற்றுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படும் என அறிவித்த இராணுவத்தினர், முதற் கட்டமாக 243 ஏக்கர் காணிகளை விடுவித்தனர். இரண்டாம் கட்டமாக 189 ஏக்கர் காணிகளை விடுவித்தனர். மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணிகள் டிசம்பர் மாதத்துக்குள் பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். இராணுவ முகாம…
-
- 0 replies
- 339 views
-
-
வலி. வடக்கில் அமைதிப் பேரணி FacebookTwitterPinterestEmailGmailViber வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சற்றுமுன்னர் அமைதிப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வசாவிளான் கிராம முன்னேற்றச் சங்க முன்றிலிலிருந்து ஆரம்பித்த அமைதிப் பேரணி வயாவிளான் இராணுவக் குடியிருப்பு நுழைவாயிலை சென்றடைந்தது. http://newuthayan.com/story/43851.html
-
- 0 replies
- 865 views
-
-
ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் : வவுனியாவில் சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளம் ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விசேட அபிஷேகங்களுடன் பூஜை இடம்பெற்றமையினால் மூலஸ்தான விக்கிரகத்தில் அணியப்பட்டிருந்த 2 பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதுடன் வேறு பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். காலை பூஜைகளுக்காக ஆலய பூசகர் கதவை திறந்தபோதே பூட்டு உடைக்கப்பட்டதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 373 views
-
-
அரியாலையில் வாள்களுடன் வந்தோர் அட்டகாசம்! – வீட்டுக்கும் தீ வைப்பு!! FacebookTwitterPinterestEmailGmailViber அரியாலை, முள்ளிப் பகுதியில் வாள்களுடன் வந்த குழு ஒன்று வீடொன்றைச் சேதமாக்கித் தீ வைத்துள்ளது என்று தெரியவருகின்றது. சற்றுமுன்னர் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்றும், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விவரங்கள் விரைவில் http://newuthayan.com/story/43797.html
-
- 3 replies
- 1k views
-
-
சில்லறை விடயங்களுக்காக பிளவடைந்துவிட முடியாது : இரா.சம்பந்தன் சில்லறை விடயங்களுக்காக பிளவடைந்து விட முடியாது. சுரேஷுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு தயாராகவே உள்ளேன். இவ்விடயம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான வகிபாகத்தினைக் கொண்டிருக் கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியானது ஏதேச்சதிகாரமாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையில் அக்கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என கூட்டமைப்பின் ஸ்தாபக பங்காளிக்கட்ச…
-
- 4 replies
- 426 views
-
-
இலங்கையில் நானே அதிகளவில் அவமானப் படுத்தப்படுகின்றேன் – ஜனாதிபதி ”மலரும் பொலன்னறுவை” திட்டத்தின் கீழ் பகமுண – மஹசென் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. 168 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில், இரண்டு தொழில்நுட்ப பிரிவுகளும், 8 வகுப்பறைகளும் காணப்படுகின்றன. இதன்போது பாடசாலை வளாகத்தில் மரக்கன்றொன்றை ஜனாதிபதி நாட்டியதுடன், அழகியற்கலை பாடத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் பின்னர் ஹெலஹார பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டடத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.…
-
- 2 replies
- 936 views
-
-
புதிய அரசமைப்பு சாத்தியப்படாததே FacebookTwitterPinterestEmailGmailViber புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் நடாளுமன்றத்தை விடவும் மாகாணங்களுக்கு அதிகளவான அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள் ளன. தற்போது மேற்கொள்ளப்படும் புதிய அரசமைப்பு முயற்சி வெற்றியளித்தால், அதாவது புதியதொரு அரசமைப்பு உருவாக்கப்பட்டால் நாடாளுமன்றத்துக்கு வேலை இருக்காது என்று தெற்குப் பகுதி மக்களிடையே அழுத்தம் திருத்தமாக நிறுவப்பட்டா யிற்று. இவ்வாறானதொரு மிகப்பெரும் தடையை தகர்த்து அரசமைப்பு உதயமாகுமா என்றால் ஏகப்பட்ட சந்தேகங்கள், ஏக்கங்கள் மனதில் தொக்கு நிற்கின்றன. …
-
- 0 replies
- 273 views
-
-
7,000 மில்லியன் ரூபா செலவில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் FacebookTwitterPinterestEmailGmailViber ஆசிய அபிவிருத்தி வங்கியின் 7 ஆயிரம் மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில், அமையவுள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் கொட்டடி கலாலயத்தின் மேற்குத் திசையில் இருந்து ரவர் அமைந்துள்ள பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படவுள்ளது. குறித்த மீன்பிடித் துறைமுகத்தின் இட அமைவு பற்றிய இறுதிக்கட்டக் கலந்துரை யாடல், மீன்பிடி அமைச்சின் செயலர் அதிகாரி (குறித்த நபரின் பெயரே அதிகாரி) மற்றும் மாவட்டச் செயலர் ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம…
-
- 0 replies
- 542 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேசம் மீதும் நம்பிக்கையிழப்பு! [Saturday 2017-11-04 18:00] இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்ததைப் போன்று சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம் என கிளி நொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நிலைமாறு கால நீதி செயற்பாட்டில் இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக வந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையில் பணியாற்றிய பிரித்தானியாவைச் சேர்ந்த யோலன்டா போஸ்டர், கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை இன்று சந்தித்தார். அவரிடமே காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். “ எங்களுடைய போர…
-
- 0 replies
- 677 views
-
-
கையும்மெய்யுமாக பிடிபட்ட இரு திருடர்கள் ; பொதுமக்களால் நையப்புடைப்பு வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் அருகே இன்று முற்பகல் 11.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அபகரித்துச் செல்ல முயன்ற போது அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து நையப்புடைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாது, இன்று முற்பகல் 11.30 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் பகுதி வீதியில் நடந்து வந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரிக்க முயன்ற வேளையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்களாலும், பொதுமக்களாலும் கையு…
-
- 1 reply
- 360 views
-
-
இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்படவில்லை : அனந்தி சசிதரன் இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்படவில்லை என மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார் . புலம் பெயர் நாடுகளில் அகதி தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடர்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கிய இலங்கையின் எப்பகுதியிலும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்படவில்லை. இந்நிலையில் மேற்குலக நாடுகளில் அகதி தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்படும் ஈழத்தமிழர்களை திருப்…
-
- 0 replies
- 454 views
-