ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 20 09 2017 , 8PM
-
- 0 replies
- 481 views
-
-
கிழக்கை யார் ஆள்வது என்பதை மக்களே தீர்மானிப்பர் கிழக்கின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வரவேண்டும் என நான் வலியுறுத்தியதாக அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வடகிழக்கு இணைப்புக்கு எதிராக தான் கருத்துத்தெரிவித்து வருவதால் இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்பி, மக்களை குழப்பி தனக்கெதிராக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை…
-
- 1 reply
- 324 views
-
-
பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவது தமிழ்க் கூட்டமைப்பினது கடமை பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றம் என்று அறிவிக்கும் சட்டவரைவின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் நடைபெற இருந்த நிலையில் அது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைவின் மீதான விவாதம் நிறுத்தப்படுவது இது இரண்டாவது தடவை. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின்படியே விவாதம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரி கிறது. இதற்கு முன்னரும் ஒரு தடவை இவ்வாறே இந்த விவாதம் அரச தலைவரால் ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சட்டவரைவுக்கு எதிராகப் பிக்குகள் போர்க்கொடி தூக்கியதைத் தொட…
-
- 1 reply
- 444 views
-
-
தேர்தல் சட்டமூலம். தமிழரசுக் கட்சி மாத்திரமே ஆதரவு. ஏனையவை புறக்கணிப்பு மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈபிஆர்எல் ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களிக்கவில்லை. இன்று புதன்கிழமை இரவு வாக்கெடுப்பு நடைபெற்றபோது அவர்கள் சபையை விட்டு வெளியேறியதாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். இந்த சட்டமூலத்திற்கு தமிழரசுக் கட்சி மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. இந்த சட்டமூலத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான தேர்தலை 50 வீதம் தொகுதிவரி முறை மூலமும் 50 வீதம் விகிதாசார முறையின் மூலமும் நடத்தப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருத்தச் சட்டத்தில் 60 வீதம் தொகுதிவரி …
-
- 0 replies
- 357 views
-
-
கென்யாவில் 3 பில்லியன் ரூபா திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது கென்ய தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 2 பில்லியன் ஷில்லிங்கை (3 பில்லியன் ரூபா) திருடிய குற்றச்சாட்டில், சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. மோஷீன் ரணதுங்க என்பவர் 2012, ஜூலை மாதம் 90 நாள் விசாவில் கென்யா சென்றிருந்தார். எனினும் சட்டவிரோதமாக 2016ஆம் ஆண்டு வரை அங்கு தங்கியிருந்த அவர், தான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து 2 பில்லியன் ஷில்லிங்கைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கென்யாவை விட்டுத் தப்பியோடியிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் க…
-
- 0 replies
- 274 views
-
-
மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்க வேண்டும் போர்க்குற்றச்சாட்டுக்கு அஞ்சும் இராணுவத்தைப் பார்த்துக் கேள்வி எழுப்புகிறார் பொன்சேகா ‘‘தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லையே?’’ இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: காணாமற்போனோர் அலுவலகம் தனியே வடக்கு – கிழக்கு மக்களுக்காக அமைக்கப்படவில்லை. தெற்கிலுள்ள மக்களுக்காகவும் தான் அமைக்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபட்ட படையினர் மீது நட…
-
- 0 replies
- 321 views
-
-
படகில் நியூஸிலாந்து சென்றோர் இந்தோனேசியாவில் மடக்கப்பட்டனர் படகு மூலம் நியுசிலாந்து நோக்கி பயணித்த 28 பேர் இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கையை வந்தடைந்த இவர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல மினுவாங்கொடை நீதவான் சிலனி சதுரந்தி பெரேரா அனுமதித்தார். இதேவேளை, சந்தேகநபர்களை எதிர்வரும் பெப்ரவரி 06 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிரவிடப்பட்டுள்ளது. http…
-
- 0 replies
- 325 views
-
-
‘தொல்லைகள் அதிகரித்துவிட்டன’ வடக்கு மாகாணத்தில், காட்டு யானைகளின் தொல்லைகளும், குரங்குகளின் தொல்லைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. இதன் காரணமாக, தங்களது வாழ்வாதாரமான பயிர்ச் செய்கைகளையும், தங்களது இருப்பிடங்களையும், உயிர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அன்றாடம் போராடி வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்களையும், அவர்களது இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களையும் காட்டு யானைகள் மற்றும் குரங்குகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடியாக மேற்கொள்ளப் படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அறியத் தர முடியுமா? என்று, நாடாள…
-
- 0 replies
- 392 views
-
-
தொண்டமான் தொழிற் பயிற்சி நிலைய மேம்பாட்டிற்கு இந்தியா உதவி ஹட்டன், நுவரெலிய மாவட்டத்தில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் டாரஞ்சித் சிங் சந்து மற்றும் கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.நடரசாலிங்கமும் கைச்சாத்திட்டனர். தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு 199 மில்லியன் ரூபாவை மானியமாக வழங்குகிறது. குறித்த மேம்படுத்தல் திட்டத்தில் புதிய உ…
-
- 0 replies
- 454 views
-
-
ஜனாதிபதி மைத்திரி - ட்ரம்ப் முதன்முறை சந்திப்பு நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் எழுபத்து இரண்டாவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை முதன்முதலாகச் சந்தித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அளித்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பாரியார் ஜயந்தி புஷ்பா குமாரியும் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப்பும் உடனிருந்தனர். http://www.virakesari.lk/article/24707
-
- 0 replies
- 365 views
-
-
வடக்கு – தெற்கு இனவாதிகளிடையே உத்தியோகப்பற்றற்ற ஒப்பந்தங்கள்....அமைச்சர் மனோகணேசன் வடக்கு – தெற்கு இனவாதிகளிடையே உத்தியோகப்பற்றற்ற ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் அனைவரும் உறவினர்களாவர். இப்படியான உறவினர்கள் சிறிதளவே இருக்கின்றனர். இவர்களை ஓரம்கட்டி இலங்கையர்கள் என்பதன் கீழ் பயணிப்போம். இவ்வாறு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்குக்குச் சென்று ஐ.நா. பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். அவர் உரையாற்றும்போது அங்குள்ள இனவாதக் குழுக்கள் அவருக்கெதிராகப் போராட்டங்களைச் செய்யவுள்…
-
- 0 replies
- 332 views
-
-
-
மன்னார் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு எதிராக, மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர், வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், புதன்கிழமை (20) காலை முறைப்பாடு செய்துள்ளார். மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த கடலுணவு பொருட்களைக் கொள்வனவு செய்து வியாபாராத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகரான வெற்றிவேல் தயானந்தன் (வயது-40) என்பவரே, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “…
-
- 0 replies
- 220 views
-
-
சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இன்றைய தினம் காலை இடம்பெற்றது. சமத்துவத்திற்கான பிரஜைகளின் நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன், புரவெசி பலய அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் காமினி வியங்…
-
- 0 replies
- 403 views
-
-
ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார். இலங்கையிலுள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி மஹய்லோவஸ்கி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் நேற்று சந்தித்துள்ளார். கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பு மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டார். இச் சந்திப்பில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. கலந்துரையாடலின் இறுதியில் இச் சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன http://www.virak…
-
- 0 replies
- 324 views
-
-
யாழில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிக்கு ஏற்பட்ட அவமானம்..! யாழ் மண்டைத் தீவு பகுதியில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவிக்கு, நபர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை நேற்றைய தினம் யாழ் பொலிசார் கைது செய்துள்ளனர். மண்டைத் தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவருக்கே இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டரங்கு ஒன்றில் உள்ள அறை ஒன்றில் வைத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த மாணவி தனது பெற்றோரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொலிஸில் முற…
-
- 0 replies
- 543 views
-
-
யாழில் போதைப் பொருளுடன் 10ம் தரத்தில் கற்கும் மாணவர் கைது யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=95596
-
- 0 replies
- 269 views
-
-
புலிகளை அழித்தொழித்ததால் என்னைப் பழிவாங்குகின்றனர் நான் நினைத்திருந்தால் புலிகளுடன் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு சத்தமில்லாமல் இருந்திருக்க முடியும். நாட்டுக்காக நான் புலிகளிடம் போர் செய்து அவர்களை அழித்ததால் இன்று இந்த ஆட்சியாளர்கள் எங்களை அரசியல் ரீதியாகப் பழிவாங்குகின்றனர். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: நாங்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த நாட்டைப் புலிகளிடம் இருந்து மீட்டெடுத்தோம். தாய் நாட்டின்மீது நாம் வைத்த அன்பு காரணமாக இந்த நாட்டைப் புலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்குப் பல தியாகங்களைச் செய்தோம். எ…
-
- 1 reply
- 245 views
-
-
கழிவுகளை கொட்டுவதற்கான தடையுத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்றால் நீக்கம் மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையினால் மேல் நீதிமன்றில் குறித்த தடையினை நீக்குமாறு கோரும் மனு தாக்கல்செய்யப்பட்டது. இதனை விசாரணைசெய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடின் குறித்த தடையுத்தரவினை நீக்கியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணை எதிர்வரும் 04 ஆம்திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை மட்டக்களப்பு மாநகர …
-
- 0 replies
- 222 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடாது – சம்பந்தன்! எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலேயே போட்டியிடும் எனவும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்…
-
- 1 reply
- 462 views
-
-
யாழ். அம்மாச்சி உணவகம் சத்தம் சந்தடியின்றித் திறப்பு கொழும்பின் அழுத்தம் காரணமா? வடக்கு மாகாண விவசாய அமைச்சால் நடத்தப்படும் அம்மாச்சி உணவகம் யாழ்ப்பாணத்தில் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு அரசின் அழுத்தத்தால் திறப்பு விழா நிகழ்வு ஏதுமின்றி அது இயங்கியது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் விவசாயக் கண்காட்சி நேற்றையதினம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாயப் பயிற்சி கல்லூரியில் ஆரம்பமானது. அதில் பயிற்சிக் கல்லூரிக்கு முன்பாக அம்மாச்சி உணவகம் ஊடாக கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண விவசாய அமைச்சால் அம்மாச்சி உண…
-
- 0 replies
- 567 views
-
-
பாத யாத்திரையில் குழப்பம் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள நஷ்டஈடு மற்றும் தண்டப்பணம் என்பவற்றைச் செலுத்துவதற்காக பெளத்த தேரர்கள் நேற்று கிரிபத்கொடையில் நிதி திரட்டும்போது அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. “சில் துணி சிறைக் கைதிகளைப் பாதுகாக்கும் நிதியம்” எனும் அமைப்பு லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள நஷ்டஈடு மற்றும் தண்டப்பணம் என்பவற்றைச் செலுத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் ந…
-
- 0 replies
- 325 views
-
-
லலித்துக்கும் அனுஷவுக்கும் பிணை முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (20) பிணை வழங்கினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/லலித்துக்கும்-அனுஷவுக்கும்-பிணை/175-204161
-
- 0 replies
- 180 views
-
-
‘புதிய அரசியல் சீர்திருத்தத்தின் ஊடாக நல்லதொரு தீர்வை வழங்குவோம்’ “இந்த நாட்டில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முடியும். எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். “தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார். அம்பாறை, திருக்கோவில…
-
- 0 replies
- 222 views
-
-
கொன்று குவிப்பைக் கண்டு கதறியோருக்கு ‘ஆறுதலையாவது வழங்க முடியும்’ “இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று, எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்குச் சற்று ஆறுதலையாவது வழங்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த அகமானது அமைக்கப்பட்டமை வரவேற்புக்குரியது” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு, வட்டுவாகலில் நிர்மாணிக்கப்பட்ட, பிரம்ம குமாரிகள் இராஜ யோகா நிலையம் திறப்பு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில், சிறப்பு…
-
- 1 reply
- 294 views
-