ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்தார் ஃபிரான்ஸிஸ் அடம்ஸன் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் வர்த்தக திணைக்கள செயலாளருமான ஃபிரான்ஸிஸ் அடம்ஸன் இன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்துள்ளார். கடற்படை தலைமையகத்துக்கு விஜயம் செய்த ஃபிரான்ஸிஸ் அடம்ஸனை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக பூரண மரியாதையுடன் வரவேற்றனர். புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அடம்ஸன் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டதன் பின்னர் இரு தரப்பினரும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக சுமுகமான விவாதங்களில் ஈடுப்பட்டனர். இச் சந்திப்பில் அவுஸ்திரேலியவிற்கான இலங்கை…
-
- 0 replies
- 283 views
-
-
தடை செய்யப்பட்ட இரசாயனத்துடன் மூவர் கைது தடை செய்யப்பட்டுள்ள இரசாயனத்துடன் இந்திய குடியினர் மூவர் மன்னார் கடற்பகுதியில் வைத்துக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸில் ஒப்படைத்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து ஆயிரத்து 125 கிலோ கிராம் அம்மோனியம் சல்பேட் கிளைஸ்போட் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். http://newuthayan.com/story/24867.html
-
- 1 reply
- 196 views
-
-
தென்னாபிரிக்க ஜனாதிபதி பயனித்த விஷேட விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் சூமா சீனாவில் இடம்பெறவுள்ள “பிரிக்ஸ்” மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். தென்னாபிரிக்க ஜனாதிபதி உட்பட தூதுக்குழு பயணித்த விஷேட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் எரிபொருள் நிரப்பும் வரையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள பிரமுகர்கள் தங்கும் விஷேடப் பகுதியில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலைய உயர்அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டுள்ளனர். குறித்…
-
- 0 replies
- 265 views
-
-
கடந்த அரசின் முக்கியஸ்தர்கள் கைதாகலாம் எனத் தகவல் தேர்தலுக்கு முன்னர் கடந்த காலத்தில் நடந்த ஊழல் மோசடிகள், கடத்தல்கள் தொடர்பான வழங்குகளின் குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதி அமைச்சர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. கடத்தல்கள், ஊழல்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளது. அதன்மூலம் கடந்த அரசின் முக்கியஸ்தர்கள் சிலர் கைது செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. கடந்த அரசின் முக்கியஸ…
-
- 0 replies
- 266 views
-
-
கீதா குமாரசிங்க தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி பாராளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கீதா குமாரசிங்க தனியார் வைத்தியசாலையின் அவர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் திடீரேன ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் எரிவாயு சிலிண்டரின் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தீ விபத்தில் கீதா குமாரசிங்கவின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/23915
-
- 0 replies
- 377 views
-
-
மனக் குமுறலை வெளிப்படுத்த வேறென்ன செய்யட்டும்? எல்லாமே சகஜம் என கடந்து போக முடியவில்லை எம்மால். என்ன நடக்கின்றது எனப் புரிந்து கொள்வதற்கிடையில் அடுத்தது நடந்து விடுகிறது. என்ன நடந்து கொண்டிருக்கிறது எமது சமூகத்துக்கு? சமூகம் குறித்தும் கருத்துக்கூற நான் யோக்கியமானவனா? என்பதற்கப்பால், சமூகத்தின் மீது விருப்புக் கொண்டவனாகவும் வெறுப்புக் கொண்டவனாகவும் எதையோ உதிர்த்துவிட முனைகிறது மனது. யாழ்ப்பாணத்தில் பிறந்த நாள் கொண்டாடக் கடலில் இறங்கிப் பிறந்த நாளை இறந்த நாளாக மாற்றிக் கொண்ட வனையும், மற்றைய தம்பிமாரையும் நினைக்க மனம் அமுக்கம் தாங்காது வெடிக்க விளைகிறது. …
-
- 0 replies
- 404 views
-
-
"புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்கு இந்தியா பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும்" புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்காக இந்தியா தனது பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனிடத்தில் உறுதியளித்துள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரான சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பிரமுகர்களுக்க…
-
- 3 replies
- 329 views
-
-
எவ்வளவு காலத்துக்கு பொறுத்துப் போவது? நடந்து முடிந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், நீதி மறுப்புக்கள் போன்ற விடயங்களில் இலங்கை அரசு தனது பொறுப்பிலிருந்து அதாவது பொறுப்புக்கூறவேண்டிய தனது கடப்பாட்டில் இருந்து பின்வாங்கிவிடப்போவதில்லை என்று கூறியிருக்கும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஆனால் அவையெல்லாம் இலங்கைக்கே உரிய பாணியில் மிக மெதுவாகவே நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார். புதிய அரசமைப்புக்கான முயற்சிகள் மந்தமாகியிருக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் சொல்லப்பட்ட பல விடயங்கள் நிறைவேற்றப்படாமலேயே இருக்கும் நிலையில்…
-
- 0 replies
- 263 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 02.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 272 views
-
-
சினிமா பாணியில் பரீட்சை எழுதிய மாணவனுக்கு வாழ்நாள் தடை உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கே குறித்த வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை உயர் தரப் பரீட்சையின் இரசாயனவியல் பாடத்துக்கான பரீட்சைகள் இடம்பெற்றன. பகுதி 2 இற…
-
- 0 replies
- 277 views
-
-
வவுனியா முகாமிலில் வைத்து கைது செய்யப்பட்ட இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும் தற்போதைய அமைச்சருமான ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராஜகிரியவிலுள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் ஜகத்ஜயசூரிய இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காணாம…
-
- 0 replies
- 479 views
-
-
மியன்மார் இனப் படுகொலை ; கண்டித்து யாழில் கண்டன ஆர்ப்பாட்டம் மியன்மாரில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையை உடனே நிறுத்தக்கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றது. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து யாழ் மையப் பேருந்து நிலையத்தில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் , இளைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். http://newuthayan.com/story/24906.html
-
- 1 reply
- 492 views
-
-
கள்ளத்தோணி பறத்தமிழ் பெட்டை நாய்களே, முடிந்தால் போய் பறத்தமிழ் அமைச்சரிடம் போய்ச் சொல்லுங்கள் என 10 தமிழ் குடும்பங்களின் காணிகளை அபகரித்து அந்த இடத்தில் குடியேறிய பெரும்பான்மைச் சிங்களவர் ஒருவர் கல்லெறிந்து கலைத்த சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, கொழும்பு புறநகர் ஜயவர்தனபுர கோட்டே பகுதி. ஒரு பின்தங்கிய தோட்டம். பத்து ஏழை தமிழ் குடும்பங்கள். பெரும்பாலும் பெண்கள். அங்கே அவர்களுக்கு தண்ணீர் பெற ஒரு கிணறும், அதற்கு முன் ஒரு சிறு முற்றமும் உள்ளது. ஒரு பெரும்பான்மை இனத்து மனிதன், அடாத்தாக தோட்டத்துக்குள் நுழைகிறான். முதல்நாள், முற்றத்தை ஆக்கிரமித்து, கூடாரம் கட்டி குடியேறுகிறான். இரண்டாம் நாள், கிணற்றையும், கொன்கிரீட்டா…
-
- 7 replies
- 736 views
-
-
இந்து சமுத்திர கடலோரப் பாதுகாப்புப் படையினரின் மனோபலத்தினைக கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதி ; அலிஸ் வெல்ஸ் இந்து சமுத்திர பிராந்தியத்தில் முன் ஒருபோதும் இல்லாத வாய்ப்புக் கிடைத்தாலும், பயங்கரவாதம், நாடு கடந்த குற்றங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோதமான மருந்துகள் உட்பட பல எண்ணற்ற பாதுகாப்புத் தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றது என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்தார். எனவே இந்து சமுத்திரத்தி;ல் உள்ள பங்குதாரர்களின் கடலோரப் பாதுகாப்புப் படையினரின் மனோபலத்தினைக கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதியளிக்கின்றது. இலங்கை கடற்படையினருக்கும் அமெரிக்க கடற்படையினருக்கும் இடையிலான உறவினை மே…
-
- 2 replies
- 240 views
-
-
மஹிந்த மற்றும் இந்தியா குறித்து அமெரிக்கா அதிக கரிசனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அண்டை நாடான இந்தியாவுடனான உறவுகள் குறித்து அமெரிக்கா அதிகளவு கரிசனை கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ்க்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்பின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இச்சந்திப்பின் ஒரு கட்டத்தில் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், "முன்னாள் …
-
- 0 replies
- 413 views
-
-
''நல்லிணக்கத்தின் மேன்மையை பறைசாற்றும் ஹஜ் பெருநாள் '' ஹஜ் யாத்திரையின் ஊடாக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் உலகிற்கு பறைசாற்றுகின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தொன்மைக் காலங்களில் இருந்தே மனிதன் சமய நிகழ்வுகளில் ஒன்று சேர்ந்து ஈடுபடுவதை மனித வரலாறுகள் குறிப்பிடுகின்றன. பல யுகங்கள் கடந்து இன்று கூட தாம் பின்பற்றும் சமயத்துடன் பிணைந்துள்ள மனிதர்கள் தமது சமயத்துடன் தனி…
-
- 0 replies
- 421 views
-
-
தீர்வு தளவாய் பாடசாலை மைதானக்காணி கையளிப்பு
-
- 0 replies
- 214 views
-
-
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன் ஆலய தேர்த்திருவிழா தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் ஆரம்பமான பூசைகளைத் தொடர்ந்து, வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணியளவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. http://newuthayan.com/story/24946.html
-
- 0 replies
- 260 views
-
-
தீர்வுக்கு ஆணை வரும் என்றால் இங்கு ஆனைதான் வந்துள்ளது நல்லாட்சியில் நடந்தது என்ன? என்றொரு ஆய்வியல் நடத்தப்படும் போது, நல்லாட்சி நடந்ததா? என்ற கேள்வி எழவே செய்யும். அந்தளவுக்கு நல்லாட்சி என்று கூறி அரியணை ஏறியவர்கள் செயலாக்கத்தில் எதனையும் காட்டவில்லை எனலாம். காணாமல்போனவர்களின் விடயம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, போர்க்குற்ற விசாரணை, இனப்பிரச்சினைக்கான தீர்வு என எதுவும் உருப்படியாக நடந்தாகவில்லை. இந்நிலையில் 2020ஆம் ஆண்டுவரை நல்லாட்சியை இழுத்துச் செல்வதில் கூட்டுச்சேர்ந்தவர்கள் முயற்சி செய்கின்றனர். எதுஎவ்வாறாயினும் நல்லாட்சியில் இனப் பிரச்சினைக்குத் தீர்…
-
- 0 replies
- 263 views
-
-
இலத்தீன் அமெரிக்காவில் தன் மீதும் கோத்தா மீதும் விசாரணை நடத்தப்படும் என்கிறார் மகிந்த தன் மீதும், தனது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச மீதும் கூட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரேசில் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளில், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் விசாரணை செய்யப்படும் போது, நானும் எனது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், கூட குற்றம்சாட்டப்படுவோம். …
-
- 0 replies
- 281 views
-
-
இலங்கை கடற்படையுடனான உறவை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றோம் : அலிஸ் வெல்ஸ் இந்து சமுத்திர பிராந்தியத்தில் முன் ஒருபோதும் இல்லாத வாய்ப்பு கிடைத்தாலும் பயங்கரவாதம், நாடு கடந்த குற்றங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோதமான மருந்துகள் உட்பட பல எண்ணற்ற பாதுகாப்புத் தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றது என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்தார். எனவே, இந்து சமுத்திரத்தில் உள்ள பங்குதாரர்களின் கடலோரப் பாதுகாப்புப் படையினரின் மனோபலத்தினை கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதியளிக்கின்றது. இலங்கைக் கடற்படையினருக்கு…
-
- 0 replies
- 285 views
-
-
பல இளைஞர்களிடம் பெரும் பண மோசடியில் ஈடுபட்டவர் வவுனியாவில் கைது வவுனியாவில் பல இளைஞர்களிடம் கப்பல் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டுவந்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பூவரசங்குளத்தை சேர்ந்த சங்கரப்பிள்ளை விஸ்வதீபன் என்பரிடம் கொழும்பிலுள்ள கப்பல் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து ரூபா.15,86000 பெற்று மோசடியில் ஈடுபட்ட முல்லைத்தீவை சேர்ந்த சிவனேஸ்ராஜா வினோத்குமார் ( 29வயது) என்பரை வவுனியா பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வ…
-
- 0 replies
- 269 views
-
-
மதுபான சாலையில் பெரும் தீ! – பருத்தித்துறையில் அதிகாலை சம்பவம்!! பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் தீ பரவ ஆரம்பித்தது என்று கூறப்படுகின்றது. தீ அணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.விற்பனை நிலையம் முற்றாக நாசமாகியுள்ளது என்று கூறப்படுகின்றது. அதேவேளை, அந்தப் பகுதியில் மண்ணெண்னை கான் ஒன்று காணப்பட்டது என்று கூறப்படுகிறது. பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/24846.html
-
- 0 replies
- 463 views
-
-
புதிய அரசமைப்புக்கு எதிரான போரை வழிநடத்துவார் கோத்தா புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் கூட்டு அரசு ஈடுபட்டுள்ள நிலையில், அதனைத் தோற்கடிப்பதற்கான பரப்புரைப் போரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே நேரடியாகக் களமிறங்கி வழிநடத்துவார். இதற்காக ‘எலிய’ (வெளிச்சம்) எனும் சிவில் அமைப்பொன்றை உருவாக்கியுள்ள அவர், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அதன் செயற்பாட்டை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார். அமைப்பின் அறிமுக நிகழ்வு மிகப் பெரியளவில் பொரலஸ்கமுவையில் நடைபெறவுள்ளது. அதற்குத் தலைமை தாங்குமாறு தனது சகோதரரான முன்னாள் அரச தலைவர் மகிந்த ர…
-
- 0 replies
- 266 views
-
-
இந்தியாவின் கடல்சார் பார்வை பிராந்திய நலன்சார் கொள்கையாகும் : ஜெயங்கர் இந்து சமுத்திர வலய நாடுகள் பொது இணக்கப்பாட்டை நோக்கி நகர வேண்டியதுள்ளது. இந்திய இந்த விடயத்தில் கடல்சார் பார்வை என்ற கொள்கையின் அடிப்படையில் இந்து சமுத்திர பாதுகாப்பு , பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் தொடர்பாடல் உள்ளிட்ட பல்துறைசார் ஒற்றுமையை நோக்காக கொண்டு பரந்தளவில் செயற்படுவதாக இந்திய வெளிவுறவு செயலர் எஸ். ஜெயங்கர் தெரிவித்தார். இந்து சமுத்திர மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வுகள் வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே இந்திய வெளிவுறவு செயலர் எஸ். ஜெயங்கர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்து சமுத்திரத்தில் பல முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வர…
-
- 0 replies
- 153 views
-