ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை ;மட்டக்களப்பில் ரணில் யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை.பாரிய அபிவிருத்திகளையும் சாவால்களையும் நோக்கியோ சென்றுகொண்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்புக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வழங்கள் உள்ளது.அவற்றில் முழுமையான பிரயோசனங்கள் அடையப்படவில்லை. அந்த வளங்களை பயன்படுத்தி எவ்வாறு பிரயோசனம் அடையளாம் இலங்கையில் மூவின மக்களும் வாழும் பிரதேசமாக காண…
-
- 0 replies
- 268 views
-
-
தாக்குதல்களில் ஐவர் காயம் – தென்மராட்சியில் சம்பவம்!! தென்மராட்சிப் பகுதியில், தாக்குதலுக்கு இலக்கான தாயும் மகளும் உட்பட ஐந்து பேர் நேற்று இரவு சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலுக்கு இலக்கான வரணி வடக்கைச் சேர்ந்த நக்கீரன் கோமதி (வயது-29) இவரது மகளான நக்கீரன் பிரியங்கா (வயது-12), சாவகச்சேரி கண்டுவில் ஒழுங்கையைச் சேர்ந்த கருணாகரன் கரன்யூட் (வயது-34) நுணாவில் மேற்கைச் சேர்ந்த ஜெயபாலன் ஜெயரூபன் (வயது-28), சாவகச்சேரி கச்சாய் வீதியைச் சேர்ந்த ஜெயபாலன் நிரூஜன்(வயது-27) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதால் ஒரு இடத்தில் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் …
-
- 0 replies
- 300 views
-
-
இந்திய மீனவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 77 பேரை விடுதலைசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது. இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு 41 பேர் ஊர்காவற்துறை, 25 பேர் பருத்தித்துறை, 66 மீனவர்கள் யாழ்ப்பாணம், 11 பேர் தலைமன்னார் ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலைசெய்யப்படவுள்ளனர். இதேவேளை, 92 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவ…
-
- 0 replies
- 187 views
-
-
இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் விவசாயிகள் கிளிநொச்சி – இரணைமடு வாய்க்காலை மேலும் ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து செல்வதால் சிறுபோக செய்கை பாதிக்கப்படும் அச்சத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு விவசாய சம்மேளத்தின் கீழ் உள்ள விவசாயிகளே இப் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். http://uthayandaily.com/story/14410.html
-
- 0 replies
- 469 views
-
-
காரைநகர் கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள கடலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு காரைநகர் கடற்படைமுகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில், கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதுங்கிய சடலமானது 30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஆணுடையதெனவும் குறித்த நபர் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்டுள்ள சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articl…
-
- 0 replies
- 271 views
-
-
சட்டவிரோதக் குடியேற்ற விடயத்தில் அசண்டை வடக்கு மாகாண சபை மீது உறுப்பினர் அஸ்மின் குற்றச்சாட்டு வடக்கு மாகாணத்தின் தெற்கு எல்லைப் பகுதியில் உள்ள 3 பிரதேச செயலகப் பிரிவில் காடுகள் அழிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றம் இடம்பெறுகின்றது. மாகாண சபை அதனைத் தடுப்பது தொடர்பில் எந்த அவதானத்தையும் செலுத்தவில்லை. இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.அஸ்மின் குற்றம் சாட்டினார். வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக சேவை செய்திர…
-
- 0 replies
- 221 views
-
-
பசில், நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 23 பேருக்கு எதிராக எப்.சி.ஐ.டி.யினால் 12 வழக்குகள் தாக்கல் 89 விசாரணைக் கோவைகள் சட்ட மா அதிபரிடம் என்கிறார் பேச்சாளர் (எம்.எப்.எம்.பஸீர்) பசில் ராஜபக் ஷ, நாமல் ராஜபக் ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 23 பேருக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் மேல் நீதிமன்றங்களில் 12 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நிதிக் குற்றப் புலனாய் வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற 335 முறைப்பாடுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட விசாரணைகளிலேயே இந்த 12 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 89 சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நிறைவடை…
-
- 0 replies
- 373 views
-
-
மருதடி விநாயகர் ஆலயம் பெறுநர் குழுவால் கையேற்பு நீதிமன்றின் ஆணைக்கு அமைவாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் ஆணைக்கு அமைவாக மானிப் பாய் மருதடி விநாயகர் ஆலயம் பெறுநர் குழுவால் கையேற்கப்பட்டுள்ளதாக, சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் திருமதி யு.யசோதா அறிவித்தார். “மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் ஆணையின் பிரகாரம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெறுநர்களாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் பதிவாளர், இந்துக் குருமார் ஒன்றியத்தின் 2 மூத்த குருக்கள், யாழ்ப்பாண மேலதிக மாவட்டச் செயலர், வலி.தென்மேற்குப் பிரதேச செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கணக்காளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுன…
-
- 0 replies
- 381 views
-
-
ஐங்கரநேசன் இன்னும் சுற்றாடல் அமைச்சரா? மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே நேற்றுப் பலத்த சந்தேகம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுற்றாடல் அமைச்சரும், மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கர நேசன், மாகாணசபையின் உறுப்பினர்களுக்கு நேற்றுத் துணியினாலான பைகளை வழங்கினார். அந்தப் பைகளில் வடக்கு மாகாணச் சுற்றாடல் அமைச்சு என்று பொறிக்கப்பட்டிருந்தது. இதனால் மாகாண சபை உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. மாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் திடீரென இதனை உறுப்பினர்களுக்கு நேற்றைய தினம் விநியோகித்தார். அதில் வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சு என்று பொறிக்கப்பட்…
-
- 0 replies
- 278 views
-
-
பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள பிணைமுறி மோசடியிலிருந்து அரசாங்கம் தப்பித்துக்கொள்வதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும் பதவியிலிருந்து விலக்க முற்படலாம். எனினும் அதற்கு மாத்திரம் நாம் இடமளிக்கப்போவதில்லை. எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி…
-
- 0 replies
- 303 views
-
-
புளொட் மையக் குழு அவசரமாகக் கூடுகிறது வடக்கு மாகாண சபையில்சுழற்சிமுறை நியமன ஆசனத்தை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புளொட்டின் மையச் செயற்குழுக் கூட்டம் அவசர அவசரமாக நாளை சனிக்கிழமை வவுனியாவில் கூட்டப்பட்டுள்ள தாகத் தெரியவருகின்றது. தமது கட்சியின் கோரிக்கை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வும், தமக்குத் தெரியாமல் தமிழ் அரசுக் கட்சி, வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறை நியமன ஆசனத்தை வழங்கி விட்டதாகவும் புளொட் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பிலும், எதிர்காலத்தில் எவ்வாறு செயற்…
-
- 0 replies
- 396 views
-
-
அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் - பாதுகாப்பு செயலர் சந்திப்பு இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவை சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருவருக்குமிடையில் இருதரப்பு விடயங்கள் தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டி ஏஆர் ரணவக்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/22409
-
- 1 reply
- 261 views
-
-
மோ.சைக்கிள், அலைபேசி வாங்கிக் கொடுத்து பெற்றோரே பிள்ளைகளைக் கெடுக்கின்றனர் வாள்வெட்டு வழக்கில் யாழ்.நீதிவான் காரசாரம் “பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. கல்வி கற்கின்ற காலப்பகுதியில் பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்கள், அலைபேசிகளை வாங்கிக் கொடுத்துப் பெற்றோர்களே பிள்ளைக ளைப் பாழாக்குகின்றனர். இவ்வாறு யாழ்ப்பாண நீதிவான் மன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் தெரிவித்தார். நல்லூர் அரசடிப் பகுதியில் கடந்த ஜனவரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 7 பேர் மறியலில் உள்ளனர். அவர்களது வழக்கு நேற்றுமுன்தினம் …
-
- 0 replies
- 279 views
-
-
துன்னாலையில் திடீர் சுற்றிவளைப்பு வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் சிறப்புச் சுற்றிவளைப்பு நடவடிக்ககையில் இன்று காலைமுதல் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபர் தலைமையில், பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர். துன்னாலைப் பகுதியில் அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையிலையே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு நேற்று, நெல்லியடி- விராலிப் பகுதியில் பொலிஸ் அதிகாரிமீது தாக்குதல் இடம்பெற்ற இடத்தினையும் பொலிஸ்மா அதிபர் பார்வையிட்டார். http://uthayandaily.com/story/14274.html
-
- 2 replies
- 1k views
-
-
பெற்றோல் விநியோகத்தில் இராணுவம் : அரசாங்கம் அதிரடி நடவடிக்கை கொலன்னாவை, முத்துராஜவல ஆகிய இடங்களிலுள்ள எரிபொருள் களஞ்சிய சாலைகளின் விநியோக நடவடிக்கைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். முப்படையினரின் ஒத்துழைப்புடன் முப்படையின் சாரதிகள் ஊடாக பௌசர் மூலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறுகளை சீனாவுக்கும் சீன துறைமுகத்தின் எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவுக்கும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்…
-
- 7 replies
- 826 views
-
-
சரணடைந்த சந்தேகநபர் தனிக் கூண்டில் அடைப்பு நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சரணடைந்த சந்தேகநபர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தனிக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார். நல்லூரில் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் முதன்மைச் சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை சரணடைந்திருந்தார். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் நீதிவான் வீட்டில் முற்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவி…
-
- 1 reply
- 317 views
-
-
‘பொலிஸா என்று கேட்டு அடித்தனர்’ -செல்வநாயகம் கபிலன் “நீ பொலிஸா” என்று கேட்டு, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, வரணியில் வைத்துத் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோத்தரான எஸ். சிந்துராஜ் தெரிவித்தார். கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகரான இவர் மீது, இனந்தெரியாத மர்மக்கும்பல் ஒன்று, நேற்று இரவு (26), வரணி வீதி யாக்கரு பகுதியில் வைத்துத் தாக்குதலை மேற்கொண்டது. இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான அவர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “நான், வீட்டிலிருந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். இதன்போது ம…
-
- 2 replies
- 427 views
-
-
பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே வழமைபோல் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது ஒரு புதிய குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். அதாவது ச.தொ.ச. வுக்கு சீனி இறக்கப்பட்ட கொள்கலனிலிருந்து 320 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயம். இக்கடத்தலின் பின்னணியில் அரசியல் இருப்பதால் இந்நிறுவனத்தின் பொறுப்பாளரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஜனாதிபதி பதவி விலக்கி விட்டு நியாயமான விசாரணை நடாத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இவ்விடயமாக இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள ச.தொ.ச. களஞ்சியசாலைக்கு சீனி கொண்டுவரப்பட்டது பற்றி கைத்தொழில் மற்றும் வர்த்…
-
- 3 replies
- 581 views
-
-
வவுனியாவில் பொருத்து வீட்டால் பதற்றம் வவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்று மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20 பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பொருத்துவீடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பெயர் விபரங்கள் நேற்று வெளியாகியுள்ளன. இதையடுத்து அப்பகுதி மக்களிடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின…
-
- 0 replies
- 263 views
-
-
கொக்குவிலில் வாள்வெட்டு; விரல் துண்டானது கொக்குவில் கலட்டிச் சந்திப் பகுதியில் இன்று மதியமளவில், இளைஞன் மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வாள்வெட்டில் இளைஞனது விரல் துண்டாகியுள்ளது. உடனடியாகவே அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். http://uthayandaily.com/story/14286.html
-
- 1 reply
- 687 views
-
-
(விடிவெள்ளி பத்திரிகை இன்று 27 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கிச் செல்வதாகவும் அதிலிருந்து கிழக்கை மீட்பதற்கு தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் அண்மைக் காலமாக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் கருணா அம்மானின் இந்தக் கருத்து இந்த முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்துவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரணி…
-
- 2 replies
- 561 views
-
-
நினைவேந்தல்... வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் கறுப்பு ஜுலையை நினைவு கூறும் நிகழ்வு, தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு ஊறணியிலுள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இன்று (27) மாலை நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், எம்.நடராஜா மற்றும் ரெலோ இயக்கத்தின் பிரசார செயலாளரும் சிவன் பௌண்டேசன் நிறுவனத்;தின் தலைவருமான கணேஸ் வேலாயுதம் உட்பட ரெலோ இயக்கத்தின் முக்கியஸ்தர்கள…
-
- 0 replies
- 303 views
-
-
நீதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம்: முரண்பாடான கருத்துக்களும் வதந்திகளும் வருவதாக நாமல் தெரிவிப்பு யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில், நீதிபதி ஒரு கருத்தையும் பொலிஸார் ஒரு கருத்தையும் சரணடைந்த சந்தேகநபர் வேறொரு கருத்தையும் கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். சவாலுக்காக தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சரணடைந்த நபர் கூறுவதால், சவாலை நிறைவேற்ற எவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வார்களோ தெரியாது என நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். உண்மையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டாரென யாழ்ப்…
-
- 0 replies
- 321 views
-
-
ரவிராஜ் கொலை: லெப்டினன்ட் கமான்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்யுமாறு உத்தரவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட இரண்டாவது பிரதிவாதியான லெப்டினன்ட் கமான்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை உடனடியாகக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பிரதிவாதி தங்கியுள்ளதாகக் கூறப்படும் கடற்படைத் தலைமையகம் மற்றும் அவரது தனிப்பட்ட முகவரிக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்ததுடன், அதற்கு இதுவரை அவர் பதில் வழங்கவில்லை என்றும் தெரிவித்தது. அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபத…
-
- 0 replies
- 248 views
-
-
சக்தி டிவி செய்திகள் 27th July 2017, 8PM
-
- 0 replies
- 295 views
-