ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
கதிர்காம புனித பூமியில் புதிய இருமாடி அன்னதான மண்டபம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு.! கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட அன்னதான மண்டபம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. திருவிழா காலங்களில் கதிர்காமத்துக்கு வருகைதரும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த 100 ஆண்டுகள் பழமையான மண்டபத்துக்குப் பதிலாக ஒரே தடவையில் 1000 அடியார்களுக்கு உணவளிக்கக்கூடிய வசதிகளுடன் புதிய இருமாடி மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையினதும் கொடைவள்ளல்களினதும் நன்கொடையால் 18 கோடி ரூபா செலவில் இந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு…
-
- 3 replies
- 344 views
-
-
மன்னாரில் மீண்டும் பதட்டம் – இன்று காலை கல்வீச்சுத் தாக்குதல்! மன்னாரில் மீண்டும் பதட்டம் – இன்று காலை கல்வீச்சுத் தாக்குதல்! மன்னார் கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை மீண்டும் முஸ்லிம் இளைஞர்களால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மன்னாரில் பதற்றம் நிலவுகின்றது. கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை அருட்தந்தை இ.செபமாலை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன்போதே இந்தச் சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து உடனடியாக அப்பிரதேசத்தி…
-
- 5 replies
- 459 views
-
-
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வது தமிழ் தலைவர்களேயன்றி சிறிலங்கா அரசாங்கம் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று வைத்தியர் நா.பன்னீர்செல்வம் எழுதிய விதைப்புக்களின் அறுவடையே தொற்றா நோய்கள் மற்றும் தடம் என்ற இரண்டு புத்தகங்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்அவர் உரையாற்றுகையில், 1987ம் ஆண்டு காலப் பகுதியிலேயே எவ்வித அழிவுகளும் இல்லாமல் பாதுகாத்திருக்கலாம். ஏனெனில் அப்போதே 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டது, குறித்த முறைமையை அப்போதிருந்த த…
-
- 3 replies
- 621 views
-
-
அரசமைப்பு உருவாக்க பௌத்த பீடங்கள் 3 நிபந்தனைகள்!! புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அரசுக்கு மூன்று நிபந்தனைகளை விதிக்கின்றன முதன்மைப் பெளத்த பீடங்கள். ஒற்றையாட்சியை நீக்கக்கூடாது, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை கட்டாயம் வழங்கப்படவேண்டும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கக்கூடாது என்ற மூன்று முக்கிய நிபந்தனைகளையே அவை முன்வைத்துள்ளன. இவை தவிர்ந்த வேறு எந்தத் திருத்தங்களையும் அரசமைப்பில் மேற்கொள்ள முடியும் என்று அஸ்கிரிய பீடத்தின் முதன்மைச் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார். புதிய அரசமைப்புத் தொடர்பிலும் பௌத்த பீடங்கள…
-
- 1 reply
- 491 views
-
-
நவாலி படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவு தமிழர் வரலாற்றில் மக்களால் ஜீரணித்துப் பார்க்க முடியாத படுகொலை என்றால் அது நவாலி படுகொலையாகும். இப்படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை ஞாயிற்றுக்கிழமை. ஆலய வீதிகளில் தஞ்சமடைந்த வேளை யில் 13 குண்டுகளுக்கு 147 பேர் கொலை யுண்ட கோரமான தினத்தின் நினைவு நாள் 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற நவாலித் தாக்குதல் சம்ப வத்தை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். முன்னாள் அரசாட்சியாளர்களின் பணிப்பு ரையின் பேரில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட சம்ப வத்தை நாம் ஒரு கணம் மீண்டும் மீட்டுப் பார்க்கின்றோம். இந்த கொடுமையான நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலய உயிரிழப்பு சர்வதேச சமூகத்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
முதவாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி - இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக,வைத்திய பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (7) இடம்பெற்றுள்ளது. இதன்போது, 34 வயதுடைய பெண்ணுக்கு, மூளைச் சாவடைந்த 24 வயதுடைய இளைஞரின் இருதயம் பொருத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அந்த இளைஞரின் 2 சிறுநீரகங்களும்,2 நோயாளர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர்கள் ஆராக்கியமாக இருப்பதாகவும் அவர்களை வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதா…
-
- 1 reply
- 858 views
-
-
கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடுவோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான இளைஞர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கேள்வி, பதில் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டபோது, அவ்விளைஞர்களால், நீங்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்மையில் கூறியிருந்தீர்கள், கிழக்குமாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுவீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், வடக்கு மகாணசபைத் தேர்தல் நடைபெற …
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கைக்கு 179ஆவது இடம் அரசியலில், பெண்களின் பங்களிப்பு தொடர்பான சர்வதேசப் பட்டியலில், இலங்கை 179ஆவது இடத்தில் உள்ளதாக, பெண்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் ஸ்தாபனத்தின், 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி வரையான தரவுகளை அடிப்படையாக் கொண்டே, இந்தப் பட்டியல் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியில், 190 நாடுகளின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை, 179ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 13 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே அங்கம் வகிக்கின்றனர். இது, மொத்த சதவீதத்தில், 5.8 சதவீதமாகப் பத…
-
- 0 replies
- 280 views
-
-
சிறுநீரக நோயாளர்கள்: முல்லைத்தீவுக்கு முதலிடம் - நடராசா கிருஸ்ணகுமார் வட மாகாணத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகமான நோயாளர்கள் உள்ளனர். அதிலும், துணுக்காய், மாந்தைக் கிழக்கு, வெலிஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலேயே அதிகளவான சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. இது குறித்து பணிமனை வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த 2016ஆம் ஆண்டு துணுக்காய், மாந்தைக் கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 3,680 பேருக்கு மேற்கொண்ட சிறுநீரக நோய் பரிசோதனை நடவடிக்கையில் 342 பேருக்கு நோய் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட…
-
- 0 replies
- 266 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனை Published on 2017-07-09 16:28:21 யுத்தத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னருமான காலகட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சியில் பொங்கல் வழிபாடு இடம்பெற்றுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கிளிநொச்சி பிரிவினரால் இந்த நிகழ்வு இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 140வது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/21686
-
- 0 replies
- 240 views
-
-
முல்லைத்தீவை வாட்டி எடுக்கும் வரட்சி, வற்றி போகும் நந்திக்கடல்.! Published by RasmilaD on 2017-07-09 16:17:28 முல்லைத்தீவு வரட்சி நிலை அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கடும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையால் கடும் வறட்சி நிலை தோன்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து நந்திக் கடல் பிரதேசம் வற்றி தரையில் வெடிப்புக்கள் தோன்றியுள்ளது. நந்திக்கடலில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தற்போது வாழ்வாதரத்திற்காக அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். வருடந்தோறும் பங்குனி சித்திரை மாதங்களில் கிடைக்கபெறும் மழை இவ்வருடம் பொய்த்துபோனதன் காரணமாக தொடர்…
-
- 0 replies
- 631 views
-
-
மஹிந்த, கோத்தாவின் தவறுகள் மன்னிக்கப்பட வேண்டியவையாகும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகிறார் க.கமலநாதன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ ஆகியோர் குற்றம் இழைத்திருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவன் நான். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறும் அளவிலான மட்டமான ஓர் அரசியல்வாதி, நான் அல்ல என நீரியல் வளத்துறை மற் றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பெ…
-
- 0 replies
- 207 views
-
-
அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறிமுறைக்குள் இலங்கை உள்ளதா? கண்காணிக்க நாளை வருகின்றார் ஐ. நா. சிறப்பு அறிக்கையாளர் லியோ நிரோஷ தர்ஷன், எஸ்.கே. இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டம் சர்வதேச மனித சட்டத்துடன் பொருந்துகின்றதா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தை பாதுகாக் கும் பொறிமுறைக்குள் இலங்கை உள் ளதா என்பதை கண்டறிய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மற்றும் பயங்கர…
-
- 0 replies
- 175 views
-
-
உள்ளூராட்சித் தேர்தல்கள் எதிர்வரும் நவம்பரில் ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையின்கீழ் இந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுமெனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லை நிர்ணய அறிக்கையின்படி 5092 தேர்தல் தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவதுடன், மேலும் 30 சதவீதமான பிரதிநிதிகள் விகிதாசார அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவர். உள்ளூராட்சி சபைகளில் தற்போது நான்காய…
-
- 0 replies
- 211 views
-
-
மகாநாயக்கர்களைச் சந்திக்கிறது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு! மகாநாயக்கர்களைச் சந்திக்கிறது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு! சிறிலங்காவின் முன்னணி பௌத்த மதபீடங்களின் மகாநாயக்க தேரர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சந்திக்கவுள்ளது. புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நாட்டுக்குத் தேவையில்லை என்று பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களின் கூட்டுக் கூட்டத்தில் தீர…
-
- 0 replies
- 276 views
-
-
ஊழல் மோசடி மற்றும் மனிதகொலையுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். எனவே முன் னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலா ளர் கோத்தாபய ராஜபக் ஷவைக் கைது செய்வதில் தவறில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அது தவறான விடயமல்ல. காரணம் பண மோசடியில் ஈடுபட்டவர்களையும், திருட்டுப் பணத்தில் தாய் தந்தையருக்கு சமாதி அமைத்தவர்களையும், பணத்தை மே…
-
- 0 replies
- 242 views
-
-
தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு கூடிய அதிகார பகிர்வே நிரந்தரதீர்வாக அமையும் என்ற கொள்கையிலேயே பாரதிய ஜனதா கட்சி உள்ளது. எனவே தான் இந்தியாவின் அதிகார பகிர்வினை முன்னுதாரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது விஜயத்தின் போது எடுத்துரைத்தார் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கான மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கான மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வீரகேசரி வார வௌியீட்டுக்கு நேற்று வழங்கிய செவ்வியில் மேலும் கூறுகையில் , இலங்கையின் அரசியலமைப்பில் காணப்படும் 13 ஆவது திருத்தச்சட…
-
- 0 replies
- 341 views
-
-
மயிலிட்டித்துறை விடுவிப்புக்கு நிகழ்விற்கு என்னை ஏன் அழைக்கவில்லை? 27 வருடங்களின் பின்னர் மயிலிட்டித் துறைமுகம் மக்களிடம் கடந்த 3 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குத் தன்னை ஏன் அழைக்கவில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் விளக்கம் கோரிக் கடிதம் அனுப்பியுள்ளார். காணி விவகாரம் தனக்குரியது எனவும், இதனால் மயிலிட்டிக் காணி விடுவிப்பு நிகழ்வுக்குத் தன்னை ஏன் அழைக்கவில்லை என்றும், இதற்குரிய விளக்கத்தை வழங்குமாறும் தனது கடிதத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். இதேவேளை, இந்…
-
- 6 replies
- 491 views
-
-
கவனம் வீடு, வர்த்தக உதவிகளை செய்து தருவதாக கூறி அப்பாவிகளை ஏமாற்றும் மோசடி நடவடிக்கை மோசடி இடம்பெறுவதற்காக வங்கிக் கணக்கினை நீங்களே ஆரம்பித்துக் கொடுப்பது உங்களுக்கு தெரியுமா? முகப்புத்தகம் ஊடாகவோ, நேரடியாகவோ நீங்களும் ஏமாற்றப்பட்டிருந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தை நாடுங்கள் அழகான வீடொன்றினை அமைத்துக் கொள்ளவும் தனது தொழில், வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் யாருக்குத் தான் ஆசையில்லை. அந்த ஆசைகளை நிறைவேற்றி வைப்பதாக ஒருவர் கூறும் போது அந் நபர் யாராக இருந்தாலும் அவரை மிக நல்லவர் என்றே நம்பும் அப்பாவித் தனத்தை கொண்டுள்ள நாம் ஏமாற்றப் படுகின்…
-
- 0 replies
- 474 views
-
-
ஒற்றுமையின்றேல் எதிர்காலம் சின்னாபின்னமாகும் அபாயம் இலங்கை தமிழரசுக் கட்சியை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நேசிக்கிறார். நாம் ஒருபோதும் சிதைக்க மாட்டோம் என்றார் கிட்டு ஐ.தி. சம்பந்தன் கேசரிக்கு செவ்வி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். அவ்வாறு ஒற்றுமையின்றி செயற்படுபவர்களாக இருப்பார்களாயின் தமிழர்களின் எதிர்காலம் சின்னாபின்னமாகிவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளையின் ஒருங்கிணைப்பாளர் ஐ.தி.சம்பந்தன் கேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அச்செவ்வியி…
-
- 0 replies
- 445 views
-
-
சீன வங்கி இலங்கையில் கிளையொன்றை நிறுவ உள்ளது சீன வங்கி இலங்கையில் கிளையொன்றை நிறுவ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப் பிரமாண்டமான நிதி நிறுவனமாக சீன வங்கி கருதப்படுகின்றது. தென் ஆசியாவில் சீன வங்கியின் கிளையொன்று நிறுவப்படும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும் என தெரிவிக்கப்படுகிறது. 90 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் சீன வங்கி இலங்கையில் கிளையை நிறுவ உள்ளது. கொழும்பில் இந்தக் கிளை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் இந்த வங்கி ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது. http://globaltamilnews.net/archives/32237
-
- 0 replies
- 342 views
-
-
தடைகள் கண்டு அஞ்சாது பயணிக்குமா அரசு? இலங்கையின் ஆட்சியாளர்கள் பயணிக்கத் தொடங்கியிருக்கும் பாதை குறித்த அச்சங்கள், தீவிரமடையத் தொடங்கியுள்ளன. அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்போம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் எனத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று அரியணை ஏறியவர்கள் அளித்த வாக்குறுதிகள், குறித்த அர்ப்பணிப்புடன் இல்லை என்ற சந்தேகங்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. இலங்கையின் சிறுபான்மை சமூகத்தவர்கள் தாங்களும் இந்தத் தேசத்தின் ஒரு பகுதி என பெருமித…
-
- 0 replies
- 325 views
-
-
தென்மராட்சியில் காற்றுடன் கூடிய பெருமழை தென்மராட்சி – சாவகச்சேரி பகுதியில் இன்று கடும் காற்றுடன் கூடிய பெருமழை பெய்தது. நீண்ட காலத்துக்குப் பின்னர் தென்மராட்சி பகுதியில் திடீரென கடும் காற்றுடன் கூடிய பெருமழை இன்று பெய்துள்ளது தொடர்ந்து சுமார் 45 நிமிட நேரம் மழை கொட்டித் தீர்த்த மழையால் பயன்தரு மரங்கள் பல இடங்களில் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், இன்னும் சில இடங்களில் வீட்டுக் கூரைகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன http://uthayandaily.com/story/10160.html
-
- 1 reply
- 626 views
-
-
முஸ்லிம் எம்.பி.கள் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை (எம்.சி.நஜிமுதீன்) தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பி.களில் சிலர் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு மும்முரம் காட்டிவருவதாக தெரிவருகிறது. அவ்வுறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சில தினங்களில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இது தொடர்பிரலான இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகிறது. அண்மைக்காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் உரிய தீர்வு முன்வைக்க முடியாது போயுள்ளது. அதனால் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இ…
-
- 0 replies
- 263 views
-
-
நூற்று முப்பது பேருக்கு எச்.ஐ.வி. தொற்று (எம்.சி.நஜிமுதீன்) எச்.ஐ.வி தொற்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பிரிவில் 130 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் ஈடிஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இவ்வருடத்தில் பதினொரு இலட்சம் பேர்களிடத்தில் எச்.ஐ.வி. தொற்று தொடர்பில் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் ஈடிஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். மேலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளும் வேல…
-
- 0 replies
- 318 views
-