ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
‘பிரச்சினைகள் தீரவில்லை’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் “யுத்தம் நிறைவடைந்தது. ஆனால், பிரச்சினைகள் தீரவில்லை. பயங்கரவாதம் மட்டுமே முற்றுப்பெற்றுள்ளது. இனவாதம் இன்னும் அதிகரித்துள்ளது” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மேலும், மன்னாரில் நீர் பிரச்சினை காணப்படுவது போல் யாழ்ப்பாணத்திலும் காணப்படுகின்றது. அங்கு நீரை விநியோகிப்பதற்கான புதிய செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் - எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை, நேற்று (07) மாலை திறந்து வைத்து உரையாற்றகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்…
-
- 0 replies
- 236 views
-
-
‘ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை’ “இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை" என, புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இலங்கை உள்ளாகியுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில குழுக்கள் இப்படியான வதந்திகளை தமது நலனுக்காக பரப்பலாம். எவ்வாறிருப்பினும், அப்படியான ஒரு நிலை ஏற்படுமாயின், இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் ஆகியோர் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய தயார் நிலையில் உள்ளனரெனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்த…
-
- 0 replies
- 216 views
-
-
மஹிந்தவுடன் 8 அமைச்சர்கள் சந்திப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் 8 பேர், நேற்று (07) மாலை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பின்போது, எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கிடையேயான திட்டங்கள் பல நிறைவுக்கு வரவுள்ளன. அத்துடன், நல்லாட்சியிலிருந்து வௌியேற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 18 பேர் தயாராக உள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்தன. இ…
-
- 0 replies
- 217 views
-
-
உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் முதலில், எமது மக்களது உணர்வு ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. அவை தீர்க்கப்பட்டால் மாத்திரமே தேசிய நல்லிணக்கமானது உணர்வுப்பூர்வமானதாகவும், வலுவுள்ளதாகவும் அமைவதற்கு சாத்தியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் வாழ்கின்ற த…
-
- 2 replies
- 367 views
-
-
300 பொருத்து வீடுகளுக்கு பயனாளிகளை தாருங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலருக்கு மீள்குடியேற்ற அமைச்சு கடிதம் 300 பொருத்து வீடுகளுக்குப் பயனாளிகள் பட்டியலைத் தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொருத்து வீட்டு அமைக்கவேண்டாம் என்று வடக்கு மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் விவாதம் கூட நடைபெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொருத்து வீடு அம…
-
- 0 replies
- 836 views
-
-
வடக்கு முதல்வரை சந்தித்தார் தமிழிசை! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடுக் கிளைத் தலைவர் தமிழிசைக்கும் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றது. தமிழிசை தனிப்பட்ட பயணமாக நேற்று இலங்கைக்கு வந்திருந்தார். அவர் இன்று யாழ்ப்பாணம் வந்தார். வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்களை அவர் இன்று சந்தித்தார். நேற்று தமிழிசையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் சந்தித்திருந்தனர். http://uthayandaily.com/story/9830.html
-
- 2 replies
- 504 views
-
-
எதிர்கட்சி தலைவருக்கு எதிராக களம் இறங்கிய மட்டு. அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களை இடம்மாற்றினார்! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரைஇடமாற்றம் செய்ய முற்பட்ட எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இரண்டு பிரதேச செயலாளர்களை மட்டு அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது பல்வேறு பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யவேண்டும் என எழுந்துள்ள மக்களின் அழுத்தத்தை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் உள்நாட்டு அலுவல்க…
-
- 1 reply
- 510 views
-
-
மாநாயக்க தேரர்களை மீறி அரசியலமைப்பை கொண்டுவர ஒருபோதும் இடமளியோம் வீதிக்கு இறங்குவோம்; அத்துரலியே ரத்ன தேரர் கூறுகிறார் (ஆர்.யசி) பெளத்த கொள்கை – கோட்பாடுகளை மீறி புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது. மாநாயக்க தேரர்களின் கருத்துக்களை மீறி புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமா யின் வீதியில் இறங்கி போராடவும் தயாராக உள்ளோம் என்று இலங்கை தேசிய மகா சங்க சபையின் தலைவர் அத்துரலியே ரத்ன தேரர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசியலமைப்பு குறித்த ஆலோசனை குழுவிலும்,வழிநடத்தல் குழுவிலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு மாத்திரமே அர…
-
- 0 replies
- 356 views
-
-
சங்கபீட கோரிக்கையை ஏற்று சம்பந்தன் இறங்கி வரவேண்டும் பந்தை எப்படி போடப்போகின்றாரென பார்ப்போம் என்கிறார் டிலான் (ரொபட் அன்டனி) சங்கபீடங்களுக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு செல்வதில் அர்த்தமில்லை. மாறாக சங்க பீடங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக கூட்டமைப்பு அறிவிக்க வேண்டும். தேர்தல் முறை மாற்றத்தினூடாக அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுக்கலாம் என சங்கபீடங்கள் கூறியுள்ளதால் அதனை பயன்படுத்தி அந்த திருத்தத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கி விட வேண்டும். எனவே தற்போது பந்து சம்பந்தன் கையில் உள்ளது. அவர் எப்படி விளையாடப் போகின்றார் என்பதே இங்கு முக்கியமான…
-
- 0 replies
- 495 views
-
-
புலம்பெயர் அமைப்புக்களினாலேயே தயாரிக்கப்படுகின்றது இறுதி வரைவு வழி நடத்தல் குழுவிலிருந்து விரைவில் விலகுவோம் என்கிறது கூட்டு எதிரணி (ரொபட் அன்டனி) எங்களுடைய எதிர்ப்புக்களுக்கு மத்தி யிலும் அரசாங்கமானது கூட்டமைப்புடன் இணைந்து நாட்டின் ஒற்றையாட்சிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் ஏற்படும் வகை யில் புதிய அரசியலமைப்பை தயாரித்து வருகின்றமையின் காரணமாக மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். அதனை நாங்கள் வரவேற்பது டன் தேரர்களுக்கு எமது ஆதரவையும் தெரிவிக்கின்றோம் என்று கூட்டு எதிரணியின் தலை வரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 292 views
-
-
கொக்குவில் இந்துவில் கற்றல் புறக்கணிப்பு கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முறையற்ற வகையில் அதிபர் நியமனம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைமறுதினம் திங்கட் கிழமை கற்றல் புறக்கணிப்புக்கு பழைய மாணவர் சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாடசாலைக்கு அதிபர் சேவை தரம் 1இல் உள்ள ப.கணேசனை நியமிக்க ஆவன செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சரிடம் பழைய மாணவர் சங்கம் கோரியுள்ளது. கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு நேற்றைய தினம் புதிய அதிபர் நியமிக்கப்பட்டதனை பாடசாலையின் பழைய மாணவர்கள் எதிர்ப்பதோடு இதனை ஆட்…
-
- 0 replies
- 560 views
-
-
10 ஆண்டுகளாகத் தடுப்பிலிருந்த அரசியல் கைதி நேற்று விடுவிப்பு 10 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் நேற்று விடுவிக்கப்பட் டார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயராம் இராமநாதன் 2007ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கொழும்புலிருந்து கட்டுநாயக்கா செல்லும் தொடருந்துப் பாதையை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம் தீட்டியமை இராணுவத்தின் உயர் அதிகாரியின் நடவடிக்கைகளை வேவு பார…
-
- 0 replies
- 382 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவிற்கு, பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் இராணுவத் ஜெனரல் தளபதி தயா ரட்நாயக்கவை பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமேந்து உற்பத்திசாலையில் 600 தொன் எடையுடைய இயந்திர சாதனங்களை அறுத்து பழைய இரும்பிற்காக விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ராட்நாயக்கவை தவிர மேலும் மூன்று முன்னாள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்…
-
- 1 reply
- 301 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டம் சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதென சுற்றுலாத் துறை அமைச்சை மேற்கோள்காட்டி சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது. பிரபலமான மடுத் தேவலாயம் மற்றும் வில்பத்து சரணாலயம் போன்ற மக்களைக் கவரும் பல இடங்களை மன்னார்மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாவட்டமாக, மன்னாரை மாற்றும வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கடற்கரையுடன் இணைந்த 300 ஏக்கர் பகுதி அடையாளம் காணப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன எனவும் அச்செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thuliyam.com/?p=72949
-
- 0 replies
- 649 views
-
-
மயிலிட்டித் துறைமுகம் விடுவிப்பு என்பது ஒரு அரசியல் நாடகம் எனவும், அடுத்த தேர்தலின்போது மயிலிட்டி மக்கள் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் மயிலிட்டி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மயிலிட்டித்துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துறைமுகம் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது, மக்களின் குடியிருப்புப் பகுதி விடுவிக்கப்படவில்லை. அப்படியாயின் நாம் எப்படித் தொழில் செய்வது எனவும் அம்மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்? அத்துடன், விடுவிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் இராணுவம் கம்பிக்கட்டை போட்டி வேலி அடைப்பதாகவும், மயிலிட்டிச் சந்தியையும், துறைமுகத்தையும் உள்ளடக்கிய பிரதேசத்தில் எந்தவொரு மக்களின் வீடுகளும் உள்ளடக்கப்படவில்லையெனவும் அவர்கள் கவ…
-
- 0 replies
- 250 views
-
-
''தமிழ், சிங்கள பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மொழி மூல வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்" தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியும் சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி மூல வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் போதே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வினை காண முடியும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்தை சகவாழ்வினதும் நல்லிணக்கத்தினதும் மாவட்டமாக பெயரிட வேண்டும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த கொண்டு வந்த தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/2…
-
- 0 replies
- 277 views
-
-
கோட்டாபய விரைவில் கைது? மகாநாயக்கர்களிடம் சரணடைந்த ராஜபக்ச ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே இன்று தெரிவித்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க யுத்தத்தை வழிநடத்திய ஒரே காரணத்திற்காக தன்னை கைது செய்ய தற்போதைய அரசாங்கம் சர்வதேசம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் காலை அவசரமாக சிங்கள …
-
- 2 replies
- 588 views
-
-
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த குற்றத்துக்காக என்னை கைதுசெய்வதற்கென அரசாங்கத்தினால் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இன்னும் ஒருமாத காலத்தில் நான் கைது செய்யப்படுவேன் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நான் அரசியல் பயணத்தை ஆரம்பிப்பேன் என மக்கள் எதிர்பார்க்கும் காரணத்தினால் தான் இவர்கள் என்னை சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று வெ ள்ளிக்கிழமை அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்ட கோத்தாபய ராஜபக் ஷ பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்…
-
- 0 replies
- 244 views
-
-
நோர்வேயுடன்ப யாழ். பல்கலைக்கழகத்துடன் தூயசக்தி தொழில்நுட்ப உதவி உடன்படிக்கை மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகத்துடன் தூயசக்தி தொழில்நுட்ப உதவி சம்பந்தமான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. உடன்படிக்கையின் அடிப்படையில், தூயசக்தி தொழில்நுட்பம் சம்பந்ததாக மாணவர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் அறிவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுமே இதன் நோக்கம் நோர்வே மற்றும் ஸ்ரீலங்காவின் தனியார் நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் கொண்ட ஒரு ஆய்வுக் குழுவை உருவாக்கும் நோக்கில் நோர்வே தூதுவாராலயத்தினால் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படவுள்ள உதவியின் உத்தேச மதிப்பீடு 112 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்…
-
- 0 replies
- 259 views
-
-
மாவீரர்களின் பெற்றோர் புதுக்குடியிருப்பில் கௌரவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் பொதுவாக விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலேயே பல்வேறு அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டன. தற்போது ஜனனாயகப் போராளிகள் கட்சியால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கௌரவிப்பு நிகழ்வுகள் இனிவரும் காலத்திலும் படிப்படியாக முன்னெடுக்கப்படும் என அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான துளசி தெரிவித்தார். http://uthayandaily.com/sto…
-
- 2 replies
- 328 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (07-07-2017)
-
- 0 replies
- 312 views
-
-
வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் வீதியில் சென்ற பொலிசார் மீது அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பொலிசார் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்று விட்டனர்.நேற்று இரவு 11 மணியளவில் வீதியால் சென்ற பொலிசார் உக்கிளாங்குளம் பிள்ளையார் கோவிலடிப்பகுதியில் மதுபோதையில் நின்ற இளைஞர்கள் சிலர் பொலிசார் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவர்களைத் தாக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஒரு மணித்தியாலயங்கள் வரை இடம்பெற்றுள்ளது. பின்னர் பொலிசார் அப்பகுதியிலிருந்து சென்றுவிட்டனர். இது குறித்து பொலிசார் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முறைப்பாடுகளும் மேற்கொள்ளவில்லை. எனினும் …
-
- 0 replies
- 441 views
-
-
கோத்தபாயவை சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மைத்திரி, ரணில் தலைமையிலான கூட்டாட்சி அரசு நீதியை பெற்றுத்தரவில்லையென குற்றம் சுமத்தப்பட்டு இவ் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு…
-
- 0 replies
- 189 views
-
-
திறக்கப்பட்ட தினத்திலிருந்து மூடப்பட்டுள்ள சாவகச்சேரி தும்புத் தொழிற்சாலை வடக்கு மாகாண கைத்தொழிற்றுறைத் திணைக்களத்தினால் சாவகச்சேரி கோயிற்குடியிருப்புப் பகதியில் நிர்மாணிக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலை திறக்கப்பட்ட நாளிலிருந்து இயங்காத நிலையில் காணப்படுகிறது. கடந்த மார்ச் 29 ஆம் திகதி (29.03.2017) வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்ட தும்பு உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. குறித்த தொழிற்சாலை திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் செயற்படாமல் மூடியுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். http://uthayandaily.com/…
-
- 10 replies
- 571 views
-
-
நாவற்குழியில் தாது கோபுரம் அமைக்க தற்காலிக தடை எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணம், நாவற்குழி சிங்களக் குடியேற்றப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாதுகோபுர கட்டுமான பணிகளுக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், இன்று (07) தடையுத்தர பிறப்பித்தார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வழக்கு எடுத்துகொள்ளப்படும் வரை எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது என, அவர் தனது உத்தரவில் தெரிவித்தார். நாவற்குழி பகுதியில் அனுமதி பெறாது அமைக்கப்பட்டுவரும் விகாரை தொடர்பாக பலராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்ததுடன், அனுமதியற்ற கட்டடம் அமைக்கப்படுவது தொடர்பாகவும் சாவகச்சேரி பிரதேச சபையா…
-
- 0 replies
- 186 views
-