Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தற்காலிகமாக கேப்பாபுலவு வீதி திறப்பு, ஏமாற்றத்துடன் 103 வது நாளாக போராடும் மக்கள்.! இராணுவ வசமுள்ள கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கலை முன்னிட்டு தற்காலிகமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை தொடக்கம் இந்த வீதி மக்களின் பாவனைக்காக திறந்து விட பட்டுள்ளதோடு மக்களும் அந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு தமது சொந்த கிராமமான கேப்பாபுலவில் தம்மை வாழ இராணுவம் அனுமதிக்க வேண்டும் என கோரி போராடிவரும் மக்கள் வீதியில் இருமருங்கிலுமுள்ள தமது காணிகளையும் பெரும் ஏம்பலிப்புடனும் ஏமாற்றத்துடனும் பார்த்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையில் இன்று 103வது நாளாகவும்…

  2. பாரதிபுரம் பாடசாலையில் பாலியல் துன்புறுத்தல் மாகாண விசாரணைகுழு அறிக்கை அபாண்டமானது – பதினொரு அமைப்புக்கள் கடும் கண்டனம் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரதிபுரம் பாடசாலையில் மாணவி ஒருவர் அதிபரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என மாகாண அமைச்சர்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது,அபாண்டமானது,அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என பிரதேசத்தைச் சேர்ந்த பதினொரு பொது அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அத்தோடு பாரதிபுரம் பாடசாலையில் அக்காலப்பகுதியில் விசாரணைகுழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் போன்று எவையும் இ…

  3. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மைத்திரி சந்திப்பு திடீர்ப் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு நாளை திங்கட் கிழமை வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு நாளை மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்து மிகப் பெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை மே மாதம் 30 ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர். இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோரின் உறவினர்களை இரு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசுவதாகத் தெரிவித்திருந்த…

  4. கொழும்பில் அமெரிக்காவின் இராணுவகப்பலான லேக் ஈரி..! அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான கப்பலான லேக் ஈரி, இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மேலும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள லேக் ஈரி கப்பலை கடற்படை சம்பிரதாயங்களுக்கு ஏற்ப வரவேற்றுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. லேக் ஈரி கப்பலானது 14 நாட்கள் வரை இலங்கையில் நங்குரமிடவுள்ளதாகவும், எதிர்வரும் 25 ஆம் திகதியே இலங்கையிலிருந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சுமார் 360 கப்பல் பணியாளர்களுடன் இலங்கை வந்துள்ள குறித்த கப்பலின் ஊழியர்கள், இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவ…

  5. வட­மா­காண சபை ஊழல் விவ­காரம் பிச்­சைக்­காரன் மடியில் கைவைத்த நிலை! நட­வ­டிக்கை எடுப்­பது கட்­சியா? மாகாண சபையா? - மக்கள் கேள்வி லியோ நிரோஷ தர்ஷன் பிச்­சைக்­காரன் மடியில் கை வைப்­பது போன்று வட­மா­காண சபையில் ஊழல் விவ­காரம் அரங்­கே­றி­யுள்­ளதா என தமிழ் மக்கள் மிகுந்த விச­னத்­தோடு கேள்வி எழுப்­பு­வ­துடன் இதன் உண்மை நிலைமை கண்­ட­றி­யப்­பட்டு பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் கோரு­கின்­றனர். இதே­வேளை ஊழல் குற்­றச்­சாட்டு சர்ச்­சையில் சிக்­கி­யுள்ள வட­மா­காண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக கட்சி என்ற வகையில் நட­வ­டிக்கை எடுப்­பதா அல்­லது மாகாண சபை என்ற வகையில் நட­வ­டிக்கை எடுப்­பதா என்ற கேள்வி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் மேலோங்­க…

  6. ’ஞானசாரரை கண்டுபிடிக்க இராணுவத்தை அனுப்புவேன்’ பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரரைக் கண்டுபிடிப்பதற்கு, தேவைப்படுமாயின் இராணுவப் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்த உத்தரவிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஞானசாரரை-கண்டுபிடிக்க-இராணுவத்தை-அனுப்புவேன்/150-198387

  7. தனிநாடு கேட்டீர்கள் மாகாண சபையையே நடத்த முடியவில்லை ; மனோ கணேசனிடம் கிண்டலாக கேட்டாராம் தெற்கு ஊடகவியலாளர் தனி­நாடு கேட்­டீர்­கள். மாகாண சபை­யையே நிர்­வ­கிக்க முடி­ய­வில்லை. இவ்­வாறு தென்­னி­லங்கை ஊட­க­வி­ய­லா­ளர், தன்­னி­டம் கேட்­டார் என அமைச்­சர் மனோ கணே­சன் தெரி­வித்­துள்­ளார். அமைச்­சர் மனோ கணே­சன் தனது முக­நூ­லில் நேற்­றுக் காலை வெளி­யிட்­டுள்ள பதிவிலேயே மேற்படி விட யத்தைக் கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, லங்காதீப செய்தியாளர் என்னை இன்று (நேற்று) அதிகாலையில் அழைத்து, தனிநாடு கேட்டீர்கள், ஒரு மாகாண சபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையோ ? என்று கிண்டலாகக் கேட்டார். அவ…

    • 19 replies
    • 889 views
  8. முஸ்லிம் மக்களுக்கு எதிராக தீவிரமடையும் கெடுபிடிகள் அர­சாங்­கத்­தின்­மீது நம்­பிக்கை இழக்கும் சிறு­பான்­மை­யினர் எம்.சி.நஜி­முதீன் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்ந்து இடம்­பெற்று வரும் நிலையில் அத­னைக்­கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்ளத் தவ­றி­யுள்­ள­தாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. எனவே, நல்­லாட்­சியின் மீது முஸ்­லிம்கள் கொண்­டுள்ள நம்­பிக்கை குறைந்து வரு­வ­தா­கவும் அவ்­வ­மைப்­புகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் அண்­மைக்­கா­ல­மாக குறி­வைக்­கப்­பட்டு தீக்­கி­ரை­யாக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் அது தொடர்பில் அர­சாங்…

  9. ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை குறித்து விவாதம் ஜெனி­வா­வில் நடந்து வரும் ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக் கூட்­டத்­தில், இலங்கை குறித்த அறிக்கை ஒன்று தொடர்­பாக நாளை மறு­தி­னம் திங்­கட்கி­ழமை விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. நீதி­ப­தி­கள், மற்­றும் சட்­ட­வா­ளர்­க­ளின் சுதந்­தி­ரம் தொடர்­பான ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளர், இலங்­கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணம் தொடர்­பாக அங்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள அறிக்கை குறித்தே விவா­திக்­கப்­ப­ட­வுள்ளது. இலங்கை அர­சின் அழைப்­பின் பேரில், நீதி­ப­தி­கள், மற்­றும் சட்­ட­வா­ளர்­க­ளின் சுதந்­தி­ரம் தொடர்­பான ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ள­ராக இருந்த மோனிகா பின்ரோ கடந்த 2016 ஏப்­ரல் 29ஆம் திகதி முதல் மே 7ஆம…

  10. பல கோணங்­களில் ஆராய்ந்து இறுதியான நட­வ­டிக்கை - முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் லியோ நிரோஷ தர்ஷன் பாதிக்­கப்­பட்ட வட மாகாண அமைச்­சர்கள் தம்­பக்க நியா­யங்­களைக் கூறும் வகையில் பல­வி­த­மான கருத்­துக்­களை முன் வைத்­துள்­ளனர். எனவே பல கோணங்­களில் ஆராய்ந்து இறுதி நட­வ­டிக்கை நிச்­சயம் எடுக்­கப்­படும் என முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­டுள்ள வட மாகாண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணைக்­குழு தனது அறிக்­கையை முன்­வைத்­துள்ள நிலையில் , நட­வ­டிக்கை எடுப்­பதில் ஏற்­பட்­டுள்ள தாமத நிலை குறித்து தெளி­வு­ப­டுத்தும் போதே வட மாகாண முத­ல­மைச்சர் சிவி விக்­கி­னேஸ்­வரன் மேற்­கண்­ட…

  11. மீண்டும் இணைவதா..? இல்லையா..? தேசிய அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தக் காலம் முடிவுக்கு வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான முக்கிய பேச்சுவாரத்தை மாத இறுதிக்குள் இடம்பெறவுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கமாக செயற்பட இரண்டு கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கும் என அரசியல் எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு செய்…

  12. கொழும்பை மட்டும் மையப்படுத்திய நிர்வாக முறைகள் அனர்த்த சேவைகளை துரிதப்படுத்தாது மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களின்போதான துரித செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். நாட்டில் தற்பொழுது பின்பற்றப்படும் அரசாங்க முறைமையானது ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால் இம்முறையை மாற்றுவதற்கான காலம் தோன்றியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். …

  13. குருகுலராசா கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவிப்பு ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா தன்னிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எனினும், இந்தக் கடிதம் தொடர்பில் எவ்விதத் தகவல்களையும் வெளியிட முடியாது என மாவை சேனாதிராஜா நியூஸ்பெஸ்ட்டுக்குக் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. மாகாணக் கல்வி அமைச்சரால் அவருடைய கட்சிக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய தகவல்கள் தமக்கு தெரியாது எனவும் வட மாகாண முதலமைச்சர் குறிப…

    • 1 reply
    • 496 views
  14. படம்.| சி.வெங்கடாசலபதி. மனித உரிமைகளின் மகத்துவத்தை போற்றிக் காப்பாற்றவும், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையாளர் கேட் கில்மோருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இக்கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக முன்னால் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள்…

    • 1 reply
    • 474 views
  15. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிரமதானப் பணிகளில் இராணுவத்தினர் முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆலய பரிபாலன சபையினரால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை இராணுவத்தினரால் குறித்த ஆலயத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இனமத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்டுச் செல்வது வழமையாக காணப்படுவதோடு குறித்த பொங்கல் விழாவிற்கு வருடாந்தம் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/…

    • 1 reply
    • 348 views
  16. நாட்டில் உள்ள சில அரசாங்க அதிபர்களின் இடமாற்றம் நடைபெறவுள்ள நிலையில். அதில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மாவட்டமான மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றமும் இடம்பெறவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 2015 ஆண்டு நடைபெற்ற வெள்ளநிவாரண ஊழல் சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை முறையான விசாரணை நடத்த கோரவேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊழல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு அரசாங்க…

    • 1 reply
    • 484 views
  17. இராணுவ நடவடிக்கை காரணமாக 1991 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தீவகத்திலிருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, நயினா தீவு, எழுவைதீவு, அனலைதீவு தவிர்ந்த தீவகத்தின் ஏனைய இடங்களில் இருந்து ஒட்டு மொத்தமாக மக்கள் வெளியேறியதன் பின்னர், 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிற்பாடு தீவகத்துக்குச் சென்று மக்கள் தங்கள் இடங்களைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். தீவகத்தில் மக்கள் மீளக் குடியிருப்பதற்கு தடை இருக்கவில்லையாயினும் ஏற்கெனவே அங்கிருந்த மக்கள் மீளவும் தீவக மண்ணில் குடியிருப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதற்குக் காரணம் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் தீவகம் இயல்பாகவே ஒரு பயங்கரமான சூழல் கொண்ட பிரதேசமாக மாறியிருந்தது. இடம்பெய…

    • 0 replies
    • 333 views
  18. மஹிந்த, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் ஜப்பானில் இரகசிய பேச்சுவார்த்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் சில சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் இவ்வாறு மஹிந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட முன்னதாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களது ஆதரவினை மஹிந்த பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியை பல…

  19. நாடு திரும்பிய ரணிலுக்கு வரவேற்பு அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று இன்று மாலை நாடு திரும்பிய தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, கட்டுநாயக்கா பன்னாட்டு வானூர்த்தித் தளத்தில் வைத்து சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். http://uthayandaily.com/story/6023.html

    • 1 reply
    • 319 views
  20. மகசின் படுகொலை, ரத்துபஸ்வல சம்பவங்களுக்கு கோத்தாவே காரணம்!! குற்றஞ்சாட்டுகின்றது இடதுசாரி நிலையம் மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஆகிய இரு சம்பவங்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவுக்கு அமையவே இடம்பெற்றது என்று இடதுசாரி நிலையம் குற்றம்சாட்டியுள்ளது. மக்கள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட இடதுசாரி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் தெரிவித்ததாவது- வசிம் தாஜுடீன் படுகொலை செய்யப்பட்டமை இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே …

  21. கிளிநொச்சியில் அதிகாலை 74 பவுண் கொள்ளை கிளிநொச்சிக் கல்லாறில் கணவன், மனைவி, பிள்ளைகளை கட்டி வைத்து விட்டு 74 பவுண் நகைகள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபா பணம் என்பன இன்று அதிகாலை 3மணிக்கு கொள்ளையிடப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட கொள்ளையர் குழுவே சுமார் அரைமணித்தியாலத்துக்கு மேலாக நின்று இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். http://uthayandaily.com/story/6033.html

  22. சிறுவர்கள் பிச்சை எடுத்தால் கைது சிறுவர்கள் பிச்சை எடுக்கும் நிலைமை அதிகரித்து வரும் நிலைமையை கருத்தில்கொண்டு, இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக, கைதுசெய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு தலைமையகம் மூலம் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை சிறுவர், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு அமர்த்தும் நபர்களையும் சிறுவர்களையும் கைதுசெய்ய 14 செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. இதில் 11 ஆண் சிறுவர்களும் 07 பெண் சிறுவர்களும் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதிமன…

  23. விபத்தில் நோயாளர் காவு வண்டி சாரதி பலி -எம்.இஸட்.ஷாஜஹான், எஸ்.என்.நிபோஜன் நீர்கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இச்சம்பவம், இன்று (10) அதிகாலை 1.30 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் வீதியில் பால்தி சந்தியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி, கணேசபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய யோகரத்னம் ராஜேந்திரன் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி மீது எதிர் திசையி…

  24. நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம்: மனோ கணேசன் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு செம்மொழி மாநாட்டை நடத்துவதால் மட்டும் தமிழ் மொழி வாழ்ந்து விடாது என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோ கணேசன், தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டுமானால் தமிழர்கள் வாழ வேண்டும் என குறிப்பிட்டார். சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் சற்று அசந்துவிட்டால், அவர்களை ஆட்கொண்டு விடுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தாய் மொழி, கலாசாரம், இனம், பண்பாட…

  25. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதிக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரிக்கை யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதற்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், நினைவு கூர்வதற்கும் வடக்கு மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென எழுத்து மூலம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த அருட்தந்தை எழில் ராஜேந்திரன் பல தடவைகள் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.