ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 8PM (08/06/2017)
-
- 0 replies
- 238 views
-
-
சிறுமிகள் துஷ்பிரயோகம்: அணிவகுப்பின் போது சந்தேகநபர்களின் அங்க அடையாளங்கள் மாற்றப்பட்டனவா? திருகோணமலை – மூதூர், மல்லிகைத்தீவில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அடையாள அணிவகுப்பின் போது சந்தேகநபர்களின் அங்க அடையாளங்கள் மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீதான அடையாள அணிவகுப்பு கடந்த 5 ஆம் திகதி மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மொட்டையடித்து அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட…
-
- 0 replies
- 380 views
-
-
நிலம் உவர் தன்மையானதால் வாழ்வதற்கு வழியின்றி பல கிராம மக்கள் அவதி கிளிநொச்சி, பூநகரிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் காணி களுக்குள் கடல் நீர் உட்புகுகின்றது. கடந்த 30 ஆண்டுகளாக அவற்றில் எந்தவித பயிர்ச் செய்கையும் செய்யமுடியாதுள்ளது. அங்கிருந்த 50க் கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. “இது தொடர்பாக அரசோ, அதி காரிகளோ கரிசனை கொள்ளவில்லை. பல ஏக்கர் காணிகளை கைவிட்டு விட்டு தற்போது கால் ஏக்கர் காணிகளில் விவசாயம் செய்கின்றோம்.”- என்று பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தியுடன் தெரிவித்தனர். “நாச்சங…
-
- 0 replies
- 335 views
-
-
சைட்டம் விவகாரத்தால் சபையில் பெரும் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மாலபேயில் உள்ளது சைட்டம், தெற்காசிய தொழில்நுட்ப முகாமைத்துவ கல்லூரியா, தெற்காசிய தொழில்நுட்ப மருத்து கல்லூரியா என்பது தொடர்பில் சபையில் ஆளும் தரப்பிற்கும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான சர்ச்சை எழுந்தது. எனினும் தெற்காசிய தொழில்நுட்பட மருத்துவ கல்லூரியே சைட்டம் ஆகும் என விடாப்பிடியாகவிருந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, வைத்திய பட்டம் வழங்குவதற்கு அதிகாரமளிக்கும் வர்த்தமானியை பாராளுமன்றத்தில் தினேஷ குணவர்தன எம்.பியே சமர்ப்பித்தார் என்பதை சபையில் ஆதாரங்களுடன் சமர்ப்பித்…
-
- 0 replies
- 283 views
-
-
நல்லிணக்கத்துக்கு அரசு அர்ப்பணிப்பு நல்லிணக்கத்துக்கு அரசு அர்ப்பணிப்பு (நமது நிருபர்) இலங்கையில் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈட்டைப் பெற்றுக்கொடுத்தல், மீண்டும் மோதல்கள் இடம்பெறாமல் தடுத்தல் ஆகிய நான்கு விடயங்களின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை முன்கொண்டு செல்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸிடம் உறுதியளித்திருக்கின்றார். அத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு சட்டம், தேசிய நல்லிணக்கம், ஆகியவற்றுடன் சம்பந்தப்படும் விடயங்களை முன்னெடுக்கவும் எதிர்பார்ப்பதாகவும் ஐ.நா.செயலாளரிடம் பிரதமர…
-
- 0 replies
- 187 views
-
-
அரசியல் நிலைமை குறித்து கேள்வி எழுப்பிய மோடி (ரொபட் அன்டனி) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை புதுடில்லியில் சந்தித்து பேச்சு நடத்திய இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயங்கள் குறித்து கேட்டறிந்துகொண்டார். அத்துடன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்தல், பொருளாதார வர்த்தக தொடர்புகளை கட்டியெழுப்புதல், முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் வெ ளிவிவகார அமைச்சர் ரவி கருணாந…
-
- 1 reply
- 439 views
-
-
வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு வடக்கு அமைச்சர்கள் இருவர் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பான சிறப்பு அமர்வு பெரும் பரபரப்பான – எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை 11.30 மணிக்கு, கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடை பெறவுள்ளது. கொழும்பிலிருந்து இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த அமர்வில் கலந்து கொண்டு சிறப்புக் கூற்று விடுத்து உரையாற்றவுள்ளார். வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை, ஜூன் 6 ஆம் திகதி சபையில் சமர்ப்…
-
- 20 replies
- 2.1k views
-
-
கிளிநொச்சியில் சர்வதேச மைதானம் அமைக்க கேள்விப்பத்திரம் மீளவும் கோரப்பட்டுள்ளது கிளிநொச்சியில் சர்வதேச தரம் மிக்க மைதானத்தினை நிர்மாணிப்பதற்காக கேள்விப்பத்திரம் மீளவும் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் திட்டவட்டமாக அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரித்தல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், கி…
-
- 0 replies
- 253 views
-
-
காங்கேசன்துறை சீமெந்து ஆலை மோசடி குறித்து கோதபாயவிடம் விசாரணை காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற பல கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணைகளை நடத்த உள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட சில முன்னாள் உயர் படையதிகாரிகளிடம் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் முன்னாள் இர…
-
- 0 replies
- 135 views
-
-
‘வடக்கின் மீன்பிடி முறை 20 வருட பழமையானது’ ஜே.ஏ.ஜோர்ஜ் “வடக்கில், 15, 20 வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மீன்பிடி முறைகளே, தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்துடன் வடக்கின் மீன்பிடித் துறையை முன்னேற்றவே, இலங்கையின் பாரிய மீன்பிடித்துறைமுகத்தை, பருத்தித்துறையில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என, மீன்பிடி மற்றும் நீரகவள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா, பருத்தித்துறை அபிவிருத்தி தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘1980ஆம் ஆண்டுக்கு முன்னர்…
-
- 0 replies
- 125 views
-
-
கருணாவுக்கு எதிரான வழக்குக்கு : முறைப்பாடு தாக்கல் செய்யவும் முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்றழைக்கப்படும், விநாயகமூர்த்தி முரளிதரளிதரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு, முறைப்பாட்டை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு, நேற்று (07) கட்டளையிட்டார். நாடாளுமன்ற உறுப்பினருக்கான வரப்பிரசாதத்தை பயன்படுத்தி, 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான, பதிவு செய்யப்படாத அதுவும் துப்பாக்கி ரவைகள் துளைக்கமுடியாத, ஜீப்பை மீண்டும் கையளிக்காமல், தவறான முறையில் பயன்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வி…
-
- 0 replies
- 160 views
-
-
பொருத்து வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் : டக்ளஸ் எம்.பி கோரிக்கை Published by RasmilaD on 2017-06-08 11:09:50 பொருத்து வீட்டுத்திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் சுவாமிநாதனிடத்தில் சபையில் வைத்துக் கோரிக்கை விடுத்த டக்ளஸ் தேவானந்தா எம்.பி. அத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கிளிநொச்சி புன்னைநீராவி நீராம் கிராமத் தின் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு நிலைமைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, …
-
- 0 replies
- 250 views
-
-
வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் பதற்றம் Published by RasmilaD on 2017-06-08 13:06:20 வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10.15 மணியளவில் தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா முதலாம் குறுக்கு வீதியில் தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இ.போ.ச பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் இரு தரப்பினருக்கும் இடையில் மத்திய பஸ் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இ.போ.ச ஊழியரும், தனியார் பஸ்ஸின் ஊழியரும் காயமடைந்த நிலையில் வவுனி…
-
- 0 replies
- 267 views
-
-
நந்திக்கடலில் நேற்று மட்டும் 2,000 கிலோ மீன்கள் வலையில் தொழிலாளர்கள் மகிழ்ச்சி முல்லைத்தீவு நந்திக்கடலில் நேற்று 2 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் தொழிலாளர்களால் பிடிக்கப்பட்டன என்று மீனவர்கள் தெரிவித்தனர். காலநிலை மாற்றத்தால் நீரில் உப்புத்தன்மை அதிகாரித்தமையால் நந்திக்கடல் பகுதியில் கடந்த வாரம் பல இலட்சக் கணக்கான மீன்கள் உயிரிழந்து கரையொதிங்கின. தொடர்ந்து வெப்பநிலை அதிகரிப்பதால் நந்திக்கடலில் மீன்கள் உயிரிழக்கக் கூடும் என்ற அச்சத்தில் மீனவர்கள் இருந்தனர். “நந்திக்கடலில் நேற்று மட்டும் 2 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான மீன் தொழிலாளர்க…
-
- 0 replies
- 278 views
-
-
யாழ்ப்பாண வான்பரப்பில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாற்றம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பாரிய அளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று மாலை இவ்வாறு யாழ் வானில் தோன்றியுள்ளதாகவும், இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து கடும் காற்றுடனான மழை பெய்துள்ளது. நேற்று பரவிய சுனாமி வந்தியை தொடர்ந்து இது தொடர்புப்பட்டவை என பலர் அச்சமடைந்துள்ளனர். எப்படியிருப்பினும் இது அச்சமடைய வேண்டிய விடயம் அல்ல எனவும் இதனை தட்டு மேகங்கள் (குடஞுடூஞூ ஞிடூணிதஞீண்) என அடையாளப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.thinakkural.lk/article.php?local/ferorwbzzp2817182e6c…
-
- 0 replies
- 298 views
-
-
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான இடைக்காலத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது. இந்நிலையில் மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண டெல்லி அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதற்கமைய முதன்முறையாக இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து இவ்விரு அமைச்சர்கள், கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து பிரத்தியேகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்…
-
- 0 replies
- 215 views
-
-
வடமாகாணசபை விவகாரம் தொடர்பில் முதல்வரின் நகர்வு சரியானது எனத் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், வடமாகாணசபை தொடர்பில் பேச எனக்கு தார்மீக உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் மிகவும் பிரபல மாகாண சபைகளானவை, வட மாகாணசபையும் கிழக்கு மாகாணசபையுமே ஆகும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்நாட்டில் அதிகாரப் பகிர்வு கோரி போராடியது, தமிழர்களாகும். அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் இரண்டையும் முன்னெடுத்துப் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்தவர்கள், தமிழர்கள் ஆகும். ஆகவே, அதிகாரப்பகிர்வின் ஒரு கட்ட…
-
- 0 replies
- 343 views
-
-
12ஆம் திகதி பொங்கல் , 13 இராசி இல்லை. 14ஆம் திகதி நடாத்த முடிவு. ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய தடை வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து பரிமாற்றத்திற்காக வடமாகாண சபையில் எதிர்வரும் 14ஆம் திகதி விசேட அமர்வு நடைபெறவுள்ளது. நேரடி ஒளிபரப்புக்கு தடை. குறித்த அமர்வில் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தடை விதித்துள்ளார். அத்துடன் அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை வைத்துக்கொண்டு அவர்களை குற்றவாளிகள் எனும் விதமாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன என சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கு தடை விதிப்…
-
- 0 replies
- 264 views
-
-
சிறிலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித்துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாறுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் மீன் பிடியை அதிகரிக்கும் நோக்கில் பருத்தித்துறையிலும், பேசாலையிலும் இரண்டு துறைமுகங்கள் அமைக்கவுள்ளோம். இதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க முன்வந்துள்ளது. 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கின் மீன் உற்பத்தி 40 வீதமாக இருந்தது. அதன் பின்னர் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் 4 வீதமாக வீழ்ச்சி கண்டது. தற்போது 12 வீதமாக உள்ளபோதிலும் அது திருப்திகரமானதாக அமையவில்லை. அத்துடன் வடக்கு மீனவர்கள் இன்றும் 30 வருடங்களுக்கு முந்திய பாரம்…
-
- 0 replies
- 220 views
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிரான வேலைகளையே செய்துவருவதால் அதற்கான மாற்றுத்தலைமையை ஏற்படுத்தும் முயற்சியை முதல்வர் விக்கியும் தமிழ் மக்கள் பேரவையும் அதன் கோரிக்கைகளை முழுமையாக ஏற்கும் ஈபிஆர்எல்எப் உம் அதற்கான முடிவுகளை எடுக்கவேண்டும் என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தற்போது தமிழரசு கட்சியும் ரெலோவும் ஒன்றாக இணைந்துவிட்டன. புளொட் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் காட்டிக்கொள்கின்றது. எனவேதான் உறுதியானவர்களை உண்மைக்காக செயற்படவேண்டும் என்பவர்களை, உறுதியான முடிவை எடுக்கவேண்டும் எனக்கேட்கின்றோம். …
-
- 0 replies
- 215 views
-
-
முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைக்க வேண்டாம் ; பொறுமையை சோதிக்காதீர்கள்! முஸ்லிம்களின் பொறுமையை இனியும் சோதிக்காதீர்கள், முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள். நாங்கள் இவ்வளவு நாளும் பொறுத்தது போதாதா? எங்களைத் தொடர்ந்தும் சீண்டிக்கொண்டு இருப்பவர்களுக்கெதிராக உடன் நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறீர்கள்?. இவ்வாறு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெகுண்டெழுந்தார். ஜெனீவா மனித உரிமைப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதமொன்றில் பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது, அல்லாஹ்வையும், முஸ்லிம்களின் இறைத்தூதரையும், முஸ்லிம்களின் வாழ்க்கை முறையையும் தொடர்ந்தும் கேவலப்படுத்தி பழி சொல்லி வரும் …
-
- 8 replies
- 998 views
-
-
தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு! ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகம் இலங்கை அரசின் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. பிரதியில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா இல்லை தொடர்ந்து தடுத்து வைப்பதா என்பதை தீர்மானிக்கப்படும் என்று யாழ் சுங்கப் பிரிவு அதிகாரி கூறியுள்ளார். நில ஆக்கிரமிப்பின் அரசியல் குறித்தும், வரலாற்றில் அபகரிக்கப்பட்டு அடையாள அழிப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடும் இந்த நூல், 2009இற்குப் பின்னர் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச, இராணுவ நில ஆக்கிரமிப்பு…
-
- 11 replies
- 966 views
- 1 follower
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (07/06/2017)
-
- 0 replies
- 333 views
-
-
ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அழைப்பு ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாணயாகே தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கடந்த மாதம் இலவச வீடுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை வழங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு லைகா நிறுவனத்தின் தலைவரும், ரஜினியின் `2.0' படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்தவருமான சுபாஷ்கரன் அழைப்பு விடுத்திருந…
-
- 0 replies
- 325 views
-
-
இலங்கையும் சீனாவின் இராணுவத்தளமாக மாறக்கூடும்: அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் எச்சரிக்கை உலகம் முழுவதும் சீனா இராணுவத் தளங்களை ஸ்தாபித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சீனாவின் இராணுவத் தளத்திற்கு சாத்தியமான இடமாக பாகிஸ்தான் அமையக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் இராணுவத் தளமொன்றை அமைத்த பின்னர், உலகம் முழுவதும் இராணுவத் தளங்களை சீனா விரிவுபடுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, பங்களாதேஷ், மியன்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் சீனாவின் இராணுவத்…
-
- 0 replies
- 327 views
-