ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143374 topics in this forum
-
நுவரெலியாவில் அடை மழை : நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு : குடியிருப்புகளுக்கு பாதிப்பு! (படங்கள்) நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்கதவுகளும் திறந்துவிடப்ட்டுள்ளது. நேற்று மாலை முதல் பெய்துவரும் கடும் மழையில் போக்குரவத்து தடைப்பட்டுள்ளதுடன் குடியிருப்புகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஹட்டன் ஸ்டெதண் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் குடியிருப்பின் ஒருபகுதி சேதமாகியுள்ள நிலையில் குடியிருப்பிலுள்ள 5 பேர் உறவினகளின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் …
-
- 0 replies
- 321 views
-
-
தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மாணவி முதலிடம்: [Tuesday 2015-05-26 07:00] இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார். தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு ஏழ்மையும் வறுமையுமாய் விரியும் எமது கிராமங்களில் ஒன்றான இரத்தினபுரம் கிராமத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவச்செல்வம் தேவதாஸ் டென்சிகா இலங்கையின் மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலிடம் பெற்றிர…
-
- 0 replies
- 411 views
-
-
இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் வரப்போவதில்லை; இந்திய ஆசிரிய பயிற்சியாளர்கள் பற்றியே கலந்துரையாடுகிறோம் அமைச்சர் மனோ இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள், மலை யக பாடசாலைகளுக்கு தருவிக்கப்பட போவ தில்லை. மலையக பாடசாலைகளில் விஞ்ஞான,கணித பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, நமது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதை, தமிழ் முற்போக்கு கூட்டணி கவனத்தில் எடுத்து உள்ளது. எனவே, கணித, விஞ்ஞான பாட ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க, சிறப்பு தமிழ் மொழி மூல ஆசிரியர் பயிற்சி கலாசாலை அமைத்து அங்கே, இந்திய பயிற்சியாளர்களையே, பிரதமர் நரேந்திர மோடியிடம் நாம் வழங்கிய கோரி…
-
- 0 replies
- 183 views
-
-
சட்டவிரோத ஆட்கடத்தலை தடுப்பது குறித்து ஜனாதிபதி – ஆஸி.பிரதமர் கலந்துரையாடல் இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்து சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர் பில் அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரத மர் மெல்கம் டேர்ன்புல்லுடன் நடத்திய கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது கல்வி, பாதுகாப்பு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் மருத்துவ ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டுறவை விரிவுபடுத்த ஜனாதிபதி மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர். கென்பராவ…
-
- 0 replies
- 148 views
-
-
வெள்ளத்தில் மூழ்கிய மொரகாகந்த! (படங்கள் இணைப்பு) மொரகாகந்த பகுதியில் பெய்ந்துவரும் கடும் மழை காரணமாக குறித்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறித்த பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுமார் 2 மீற்றர் உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/20378
-
- 0 replies
- 275 views
-
-
வடக்கு, கிழக்கில் மூவாயிரம் ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் சபையில் அமைச்சர் கிரியெல்ல உறுதி (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் இதுவரை ஐந்தாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெகு விரைவில் 3000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிலையியற்கட்டளை 23 இன் கீழ் இரண்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக்க பதிலளிக்க…
-
- 0 replies
- 233 views
-
-
ரயிலில் மோதுண்டு மூன்று பிள்ளைகளின் தந்தை பலி : முறிகண்டியில் சம்பவம் முறிகண்டி பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டதில் குறித்த குடும்பத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, பொன்னகரை சேர்ந்த தவமன்றன் பாலசூரியர் என்ற 43 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து குறித்த நபரின் சடலம் ரயிலில் ஏற்றிச் செல்லப்பட்டு மாங்குளம் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர். http://www.virakesari…
-
- 0 replies
- 360 views
-
-
வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் கையில் வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சா ட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழுவின் இறுதி அறிக்கை தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாணசபையின் 93ம் அமர்வு இன்றைய தினம் மாகணசபையின் பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. இதன் போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா , வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சா ட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழு ஒன்றை முதலமைச்சர் உருவாக்கினார் எனவும் அந்த குழுவின் இறுதி அறிக்கை வந்துவிட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார். …
-
- 1 reply
- 581 views
-
-
சட்டவிரோத விகாரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் – வடக்கு முதல்வர் திட்டவட்டம். வடமாகாணத்தில் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவற்றால் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் வளரும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா நாவற்குழி பகுதியில் அமைக்கப்படும் விகாரை உரிய அனுமதிகள் பெறப்படாமல் கட்டப்படுவதாக அறிந்துள்ளேன். இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை உள்ளூராட்சி அமைச்சர் எனும் வகையில் முதலமைச்சர் எடுக்க வேண்டும் என…
-
- 0 replies
- 423 views
-
-
சக்தி டிவி செய்திகள் 25th May 2017, 8PM
-
- 0 replies
- 295 views
-
-
ஞானசேர தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Tags http://www.virakesari.lk/article/20368
-
- 1 reply
- 294 views
-
-
இலங்கை அவுஸ்திரேலியாவிடையே மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து..! அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மூன்றுவிதமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் பகிர்ந்துள்ளது. மேலும் கான்பெரா நகரில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்ற கட்டடத்…
-
- 0 replies
- 203 views
-
-
ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் ? பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு, பொதுபல சேனா இயக்கம் கோரியுள்ளது. காவல்துறை மா அதிபருக்கு இது குறித்து கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இனவாத மதவாத முறுகல்களை ஏற்படுத்தி இதன் ஊடாக ஞானசார தேரருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை பயன்படுத்தி ஞானசார தேரருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 264 views
-
-
கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம் -ரொமேஸ் மதுசங்க யாழ்ப்பாணம், கோப்பாய், திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர். மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச் சென்றுள்ளார் என்று தெரியவந்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர். இதனையடுத்து, யாழ்ப்பாணம் புலனாய்வுப் பொலிஸாரால் அழைத்துவ…
-
- 4 replies
- 689 views
-
-
முத்தமிட்டு மகிழ்ந்த மங்கள அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று (25), தனது புதிய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் தற்போதைய நிதியமைச்சருமான மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிக்கு, மங்களவின் வாழ்த்துக்கள் முத்தமாகப் போய்ச் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/முத்தமிட்டு-மகிழ்ந்த-மங்கள/175-197311
-
- 0 replies
- 269 views
-
-
ஞானசாரதேரருக்கு அரசு கடிவாளமிடுவது கடினம் இப்படிக் கூறுகிறார் மகிந்த அன்று ஞானசார தேரரைக் கைது செய்தால் அரசை விட்டு வெளியேறுவதாகக் கூறிய சம்பிக்க போன்றவர்கள் இந்த அரசில் இருக்கும்வரை ஞானசார தேரருக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவது கடினமான ஒன்று என்றே தோன்றுகின்றது. இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். நாட்டில் சகல மக்களினதும் அதிருப்தியைப் பெற்றுள்ள இந்த அரசு செப்ரெம்பரில் காலாவதியாகும் மாகாண சபைகளுக்கான தேர்தலைப் பிற்போடுவதற்கு அவசர காலச் சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.…
-
- 0 replies
- 245 views
-
-
அரச வேலைகளில் வடக்கு- கிழக்குக்கு அரசு முன்னுரிமை நேற்றுச் சபையில் அறிவிப்பு அரச வேலைக்கான ஆள்சேர்ப்பின்போது வடக்கு-கிழக்கு பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 35 வயதைத் தாண்டியுள்ள பட்டதாரிகள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அரச நிர்வாகத்துறை அமைச்சர் மத்தும பண்டாரா நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் சபை ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டு வந்திருந்தார். ‘வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 429 வேலையற்ற பட்…
-
- 0 replies
- 288 views
-
-
அ’புரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் வழக்கு கொழும்புக்கு அரசு பரிசீலிப்பு என்கிறார் நீதி அமைச்சர் அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றில் நடைபெற்றுவரும் அரசியல் கைதிகளின் வழக்குகளைக் கொழும்புக்கு மாற்றுவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுக் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச்சட்ட மூலத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 125 views
-
-
‘இந்தப் பூமி இன்னுமின்னும் இரத்தத்தில் தோய வேண்டுமா?’ இந்த நாட்டு மக்கள், 30 வருடங்களாக போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மனித இரத்தத்தாலும் இந்தப் பூமி தோய்ந்து விட்டது. அவ்வாறானதொரு நிலைமை, மீண்டும் ஏற்படவேண்டுமா? அதற்கு இடமளிக்க முடியாது” என்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. நாட்டின் சில பாகங்களில், கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இனவாத நடவடிக்கை காரணமாக, முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தங்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண பொதுமக்களே முயலும் நிலை ஏற்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. …
-
- 1 reply
- 314 views
-
-
பழிவாங்கும் நடவடிக்கை வனவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு
-
- 0 replies
- 281 views
-
-
முஸ்லிம் எம்.பி.க்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..! முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக நடந்தேறும் அசாதாரண நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. எனவே நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதில் மிகுந்த பங்காற்றிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரி வித்தார். அவ…
-
- 0 replies
- 305 views
-
-
ஞானசார தேரருக்கு கடும் சுகயீனமாம்..! நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று அவருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அவமதிப்பு வழக்கில் ஆஜராகவில்லை. இந் நிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் நேற்று நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி அனூஷா பேருசிங்க தேரர் சுகயீனமுற்றுள்ளதாகவும் அதனால் அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் அறிவித்தார். இதனையடுத்து ஞானசார தேரரை எதிர்வரும் 31 ஆம் திகதி மருத்துவ அறிக்கையுடன் மேன் முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான ப…
-
- 0 replies
- 293 views
-
-
ஜனாதிபதி மைத்திரி - ஆஸி. பிரதமரை சந்தித்து பேச்சு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லை சந்தித்தார். அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கென்பராவிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் இன்று காலை வரவேற்றார். அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்திரேலியப் பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுக்குமிடையில் கென்பராவிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்ற…
-
- 0 replies
- 190 views
-
-
இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் போன்ற நேரடியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களைக் கூட அரசாங்கம் முனைப்புடன் மேற்கொள்ளத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Tung-Laï Margue இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முனைப்புக்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீயை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 190 views
-
-
நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர் குழப்பங்களை ஏற்படுத்துகிறார் : தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர் மதவாதத்தை நாட்டில் ஏற்படுத்திக் குழப்பங்களை ஏற்படுத்துகிறார் எனக் குற்றஞ்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரச சார்பற்ற நிறுவனங்களும் இதற்கு துணைபோகின்றன என்றும் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்; நாட்டில் அரசியல் ஸ்திரமில்லா நிலைமையை ஏற்படுத்தி சிங்கள – முஸ்லிம் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் தேவை நோர்வே உட்பட பல மேலைத்தேய நாடுகளுக்கு தேவையாக…
-
- 0 replies
- 177 views
-