ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
வித்தியா வழக்கு: கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பம் புங்குடுதீவில் தொடங்கியது புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், மீளவும் யாழ் மேல் நீதிமன்றத்திற்கே பாரப்படுத்தக்கோரியும் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டம் சற்று முன்னர் புங்குடுதீவு கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. http://uthayandaily.com/story/2425.html
-
- 1 reply
- 493 views
-
-
மஹிந்தவைச் சந்திக்கவுள்ள பிரதமர் மோடி; பொருளாதாரம் குறித்து மைத்திரி, ரணிலுடன் கலந்துரையாடல் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் இணைச்செயலாளர் சஞ்ஷே பாண்டா தெரிவிப்பு (பா.ருத்ரகுமார்) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்திக்கவுள்ளதாக வும் அச்சந்திப்பில், இந்தியா இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள்மீது அக்கறை கொண்டுள்ளமைக்கு மஹிந்த ராஜபக் ஷ பாராட்டு தெரிவித்ததாகவும் இந்தியப் பிரதமரின் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் இணைச்செயலாளர் சஞ்ஷே பாண்டா தெரிவித்தார். மேலும் நேற்ற…
-
- 0 replies
- 255 views
-
-
இலங்கைக்கு வந்ததில் மகிழ்ச்சி இந்திய பிரதமர் மோடி தெரிவிப்பு (ரொபட் அன்டனி) இலங்கைக்கு விஜயம் செய்ய கிடைத்தமை மகிழ் ச்சி தரும் விடயமாகும். நான் தற்போது கொழும்பில் இருக்கின்றேன். இலங்கைக்கு வந்ததும் வெசாக் தின மாநாட்டை ஆரம்பித்து வைப்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திறங்கியவுடன் மேற்கண்டவாறு சமூக வலைத் தளத்தில் பதிவிட்டிருந்தார். நேற்று மாலை 6.05 மணியளவில் கட்டுநாயக்க சர் வதேச விமான நிலையத்தை வந…
-
- 0 replies
- 284 views
-
-
‘ட்ரயல் அட் பார்’ திங்களன்று உயர்மட்டப் பேச்சு புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை ‘ட்ரயல் அட் பார்’ முறையில் முன்னெடுப்பது தொடர்பில் உயர்மட்டப் பேச்சு கொழும்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என்று அறிய முடிகின்றது. சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் நீதித்துறை சார்ந்த உயர்மட்டத்துக்கும் இடையே இந்தப் பேச்சு இடம்பெறவுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்…
-
- 0 replies
- 264 views
-
-
கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் பாதிப்பு..! (ந.ஜெகதீஸ்) நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களில் வாழும் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566 பேர் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள பருவ மழை வீழ்ச்சியினால் நாடளாவிய ரீதியில் தொடரும் வரட்சியான சூழல் குறித்து கேள்வி எழுப்பிய போதே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரதிப் கொடிப்புலி மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19914
-
- 0 replies
- 174 views
-
-
நேபாளத்தின் ஜனாதிபதி இன்று இலங்கை வருகின்றார்..! (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக நேபாளத்தின் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரியும் இன்று மாலை இலங்கை வருகின்றார். ஐக்கிய நாடுகள் வெசக் தினம் இதற்கு முன்னர் 13 தடவைகள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தில் 11 தடவைகளும் வியட்னாமில் 2 தடவைகளுமாக இடம்பெற்றுள்ளது. ஆனால் இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். 1999 ஆம் ஆண்டில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரான லக்ஷமன் கதிர்காமர் பௌத்த மதத்தில் இலங்கைக்குள்ள சிறப்புகளை எடுத்துரைத்து ஐநாவில் வலியுறுத்தினார். இதற்கமைவாக 2001 ஆம் ஆண்டு பொதுச் சபையில் ஐக்கிய நாடுகள் வெசக் தினத்தை …
-
- 0 replies
- 184 views
-
-
இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு தீவிரம் காட்டும் சீனா (பா.ருத்ரகுமார்) இலங்கையுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாக சீனாவின் வர்த்தகத்துக்கான துணை அமைச்சர் கியான் கெமீங் தெரிவித்துள்ளார். மேலும் சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக 20க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பாக பட்டுப்பாதை மற்றும் வர்த்தக மார்க்கங்களின் மத்தியில் காணப்படும் நாடுகளுடனேயே குறித்த ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர்…
-
- 0 replies
- 211 views
-
-
பிள்ளையானை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையில்லை ; மேல் நீதிமன்றம் உத்தரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் உட்பட நால்வரையும் எதிர்வரும் காலத்தில் நீதிவான் நிதிமன்றுக்கு அழைத்துவர தேவையில்லையென மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதனால் மேல் நீதிமன்ற வழக்கின் போதே அவர்களை அழைத்துவரும் படி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டு…
-
- 0 replies
- 257 views
-
-
யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாண நகரில், வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் பாதுகாப்புத் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண பொதுநூலகச் சுற்றாடலில் வெசாக் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை புதன் கிழமை இவை திறந்து வைக்கப்படவுள்ளன. http://uthayandaily.com/story/1860.html
-
- 31 replies
- 3k views
-
-
சிவில் வானூர்தி நிலையமாக பலாலியை மாற்றவேண்டும் - கூட்டமைப்பிடம் கோருகின்றது யாழ்ப்பாண வணிகர் கழகம் பலாலி வானூர்தி நிலையத்தை யும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் மிக விரைவில் சீரமைத்துப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமையுங்கள். இதற்கான நடவடிக்கைகளை உடன் எடுங்கள்.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரியுள்ளது. இது தொடர்பாகக் கடிதம் ஒன்றை வணிகர் கழகம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது. கடந்த காலங்களில் உதாசீனம் செய்யப்பட…
-
- 1 reply
- 357 views
-
-
இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சற்றுமுன் இலங்கைக்கு வருகை வந்தடைந்தார். http://www.virakesari.lk/article/19910 நாட்டை வந்தடைந்தார் மோடி சர்வதேச பௌத்த மாநாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்கும், ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாட்டை வந்தடைந்துள்ளார். மோடி பயணித்த விசேட விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார். தற்போது கொழும்பு, கங்காராமை வி…
-
- 2 replies
- 569 views
-
-
மோடிக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) விசேட இராப்போசன விருந்து ஒன்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமர் அவர்களை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் ச…
-
- 2 replies
- 350 views
-
-
சக்தி டிவி செய்திகள் 11th May 2017, 8PM
-
- 0 replies
- 255 views
-
-
ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் தொடர் விபத்து கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் சமையல் எரிவாயு பாரவூர்தி ஒன்றும் சுற்றுலா பஸ் மற்றும் வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏ9 பிரதான வீதியில் பாதசாரி கடவையில் நபர் ஒருவர் திடீரென கடக்க முற்பட்ட போது முன்னால் சென்ற வேன் மற்றும் பஸ் என்பன சடுதியாக நிறுத்தி போது அதே திசையில் பயணித்த சமையல் எரிவாயு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியது. இதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதோடு, வாகனங்கள் மாத்திரமே சேதமடைந்துள்ளன.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Tags htt…
-
- 0 replies
- 414 views
-
-
கங்காராமையில் மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கங்காராமை சீமா மாகலய விகாரைக்கு விஜயம் செய்துள்ளார். மங்கள விளக்கேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர், வழிபாடுகளிலும் ஈடுபட்டார். - See more at: http://www.tamilmirror.lk/196467/கங-க-ர-ம-ய-ல-ம-ட-#sthash.xaYhyRz0.dpuf
-
- 0 replies
- 300 views
-
-
அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பொன்சேகாவின் கருத்துக்களால் இரு கட்சிகளிடையே முரண்பாடு கொழும்பு காலிமுகத்திடலில் பிரதான எதிர்க்கட்சியான கூட்டு எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்துக்கு இந்த அளவுக்கும் மக்கள் திரள்வார்கள் என்று ஆளும் கட்சித்தலைவர்களும் நினைக்கவில்லை; எதிர்க்கட்சியினரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நாட்டின் சமீபகால அரசியல் வரலாற்றில் இது ஒரு பிர மிப்பைத் தரும் சாதனையாகும். இத்தகைய விதத்தில் பெரும் அளவில் மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்காததால், அந்த மிக விசாலமான மைதா னத்தைக் கூட்டு எதிரணியினர்களுக்கு வழங்குவ தற்குத் தலைமை அமைச்சர் ரணில் விக்கி ரமசிங்க ஏற்பாடு செய்திரு…
-
- 0 replies
- 306 views
-
-
சாவகச்சேரியில் அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதியதில் மூன்று இராணுவத்தினர் காயம் சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத நிலையத்து அண்மையில் இன்று அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவிரைவு புகையிரதத்துடனேயே இராணுவ வாகனம் மோதியுள்ளது. காயமடைந்த இராணுவத்தினர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/archives/26520
-
- 0 replies
- 255 views
-
-
மோடி புறப்பட்டார் சர்வதேச பௌத்த மாநாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்கும், ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், இன்று(11) மாலை 6 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, விசேட விமானத்தின் மூலமாக, புதுடெல்லியிலிருந்து சற்றுமுன்னர் புறப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/196430/ம-ட-ப-றப-பட-ட-ர-#sthash.mCdnrs0Q.dpuf
-
- 0 replies
- 214 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார உறவுகள் முழுமையடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் துறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என சீனா தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த திட்டம் முழுமையடையும். துறைமுக நகர்த் திட்டத்தின் ஊடாக 80,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். சுற்றுலாப் பயணிகள், நிதி நிறுவனங்கள், அனைத்துலக நிறுவனங்களை நாட்டுக்குள் உள்ளீர்ப்பதற்கு இந்த துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டம் வழியமைக்கும் என சீனா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக நகராக இந்த துறைமுக அபிவிருத்தி நகர்…
-
- 0 replies
- 247 views
-
-
முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எம். சதீஸ்குமார் எனபவரே காச்சால் காரணமாக கிளி நொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனிற்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்படுவதாகவும், மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கீழ்குறிப்பிடப்படும் அறிகுறிகள் காணப்படும் போதும் உடனடியாகவைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி சுhகதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர் உடம்பு உளைச்சல், …
-
- 0 replies
- 323 views
-
-
யாழ். சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி காயம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சுற்றுச் சுவர் ஏறிப் பாய்ந்து தப்பியோட முற்பட்ட கைதி சுவரிலிருந்து தவறி விழுந்து இடுப்பில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றுமுற்பகல் இடம்பெற்றது. மகிந்தன் என்றழைக்கப்படும் குறித்த கைதிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றங்களில் திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சிறைச்சாலைத் தரப்புத் தெரிவித்தது. “சிறைச்சாலையின் சுற்றுச் சுவர் மிக உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு வழியில் அவர் சுவரின் குறிப்பிட்ட உயரத்துக்கு ஏறிய நிலையில் தவறி விழுந்தார். அதன…
-
- 0 replies
- 177 views
-
-
கிளி.மத்திய கல்லூரி மைதானத்தில் வெசாக் தின நிகழ்வுகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கிளிநொச்சி வெசாக் வலயத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து மத வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனர். வெசாக் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி படைகளின் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் 2561 வது வெசாக் நிகழ்வினை முன்னின்டு கிளிநொச்சி…
-
- 0 replies
- 701 views
-
-
சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது நீதி அமைச்சர் விஜேதாஸ திட்டவட்டம் (ஆர்.யசி) இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைக்கும் காரணிகள் நியாயமானவையேயாகும். எனினும் ஒரு தரப்பினர் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமென கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும் இவர்களின் கோரிக்கையை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சிக்கின்றன. எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களின் நியாயமான கோரி…
-
- 0 replies
- 310 views
-
-
மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தினத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இன்று மாலை இலங்கைக்கு வருகைதரும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு விருந்துபசாரமொன்றை அளிக்கவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த இரவுவிருந்துபசாரமானது இரவு 8.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 317 views
-
-
கடுங்காற்றால் வீடுகள் சேதம் -ரொமேஸ் மதுசங்க கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேசத்தில் நேற்று மாலை நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழை காலநிலையால் அப்பகுதியில் உள்ள வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் தெரிவித்துள்ளது. மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வசித்து வந்த தற்காலிக மற்றும் நிரந்தர வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/196411/கட-ங-க-ற-ற-ல-வ-ட-கள-ச-தம-#sthash.RsztCfUx.dpuf
-
- 1 reply
- 395 views
-