ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
இரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார் கனகாம்பிகை அம்மன் இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் ஊடக தனது முதல் பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைந்தார் கனகாம்பிக்கை அம்மன். வருடாந்த திரு ஊர்வலத்திற்காக கடந்த 27-3-2017 அன்று ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கனகாம்பிக்கை அம்மன் கிளிநொச்சியின் கிழக்கு பகுதியின் பல கிராமங்களை தரிசித்தவாறு இரணைமடு நீர்த்தேக்கத்தை ஆசிரிவதித்து மீண்டும் இன்று வியாழக்கிழமை ஆலயத்தை வந்தடைந்துள்ளார் இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று முதல் பயணமாக கனகாம்பிகை அம்மன் பயணத்தை மேற்கொண்டு ஆலயத்…
-
- 3 replies
- 732 views
-
-
குற்றப்புலனாய்வு பிரினரால் விஸ்வமடுவில் ஒருவர் கைது.! விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், நேற்று இரவு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இன்று கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். குறித்த சம்பவத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றமையால், இந்த குற்றச்சாட்டு சம்பந்தமான மேலதிக தகவல் எதனையும் பெற முடியவில்லை என அங்கிரு…
-
- 0 replies
- 193 views
-
-
அதிகாரங்களை தொடர்ந்து பயன்படுத்தாவிடின் ஜனாதிபதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்போம் (ஆர்.யசி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி அதிகாரத்தை அதியுச்சமாக கையாண்டு மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கான அதிகாரங்களை பயன்படுத்தாது மக்களினால் விமர்சிக்கப்படுகின்றார். அவர் உரிய சந்தர்ப்பத்திலேனும் தமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிர எவராலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் அக்கட்சி தெரிவித்தது. …
-
- 0 replies
- 295 views
-
-
பிணையில் விடுதலையானார் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச..! பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18827
-
- 0 replies
- 193 views
-
-
இலங்கை மீனவர்கள் 7 பேருக்கும் இந்தியாவில் விளக்கமறியல் இந்திய கடலோர பாதுகாப்புக் குழுவினரால் கைதுசெய்யப்பட்ட 7 இலங்கை மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்புக் குழுவினரால் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்களும் கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்டு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே குறித்த மீனவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை சென்னை புழல் சிறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/18826
-
- 0 replies
- 182 views
-
-
'குள்ளமாய் இருப்பதாலா புறக்கணிப்பு' -ஜே.ஏ.ஜோர்ஜ் "எனக்கு மட்டும், பெரும் அசாதாரணம் இடம்பெறுகிறது. நான், குள்ளமாக இருப்பதனாலும், பின்வரிசையில் இருப்பதனாலுமா, எனக்கு ஒலிவாங்கியை தருவதில்லை" என, ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான, உதய பிரபத் கம்பன்பில கேள்வியெழுப்பினார். நேரம், ஒதுக்கிக்கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சபையில் நேற்று ஏற்பட்டிருந்த குழப்பகரமான சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "நான், குள்ளமாக இருப்பதும் பின்வரிசையில் இருப்பதும் எனக்குப் பிரச்சினையில்லை. நானும் மக்கள் பிரதிநிதிதான். எனக்கு ஒலிவாங்கி வழங்கப்படவேண்டும். நான், கேட்டால் மட்டும் நீங…
-
- 0 replies
- 312 views
-
-
சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க சிறிலங்கா முடிவு திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி, கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, இந்த எண்ணெய்க் குதங்களை இநதியாவுக்கு வழங்கி கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு முடிவு…
-
- 0 replies
- 171 views
-
-
எட்கா குறித்து முடிவெடுக்க இந்தியா செல்கிறார் ரணில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பான இறுதி முடிவுகளை எடுப்பதற்காகவே சிறிலங்கா பிரதமர் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை அடுத்து, இந்தியாவுக்கான பயணத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ள…
-
- 0 replies
- 494 views
-
-
இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் 42 மில்லியன் யூரோ நிதியுதவி இலங்கைக்கு 42 மில்லியன் யூரோக்களை - இலங்கை மதிப்பில் சுமார் ஏழு பில்லியன் ரூபா - நிதியுதவியாக அளிக்க ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது. இலங்கையின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காகவும், நல்லிணக்கச் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரியவருகிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கை சார்பில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க கையெழுத்திட்டார். ஐரோப்பிய யூனியன் சார்பில், இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய யூனியனின் தூதுவர் எச்.ஈ.துங் லாய் மார்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இத்திட்டத்திற்கு …
-
- 0 replies
- 171 views
-
-
விடுவிக்கப்பட்ட காணியில் பிலக்குடியிருப்பு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கின்றார்களா? நீண்டகால காத்திருப்பு, தொடர் போராட்டங்களின் பின்னர் தமது நீண்ட நாள் கனவு நிறைவேற, கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி சொந்த நிலத்தில் காற்தடம் பதித்தனர் முல்லைத்தீவு – பிலக்குடியிருப்பு மக்கள். யுத்தத்தால் அனைத்தையும் இழந்து நிர்க்கதியானவர்கள், விடுவிக்கப்பட்ட தமது காணியில் இன்று அவல நிலையில் வாழ்கின்றனர். தற்காலிகக்கூடாரங்கள் கூட அமைத்துத் தரப்படாத நிலையில், சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைச் சக்கரம் தரப்பால் கொட்டகைகளில் சுழல்கின்றது. தமது காணியில் வாழ்வதற்கு ஏதுவாக உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருமாற…
-
- 0 replies
- 193 views
-
-
கிளிநொச்சியில் பிரதேச செயலங்களுக்கு நீர்த்தாங்கி உழவு இயந்திரங்கள் கையளிப்பு வரட்சிக்கால அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி செயலகத்தினால் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட நீர்தாங்கி உழவு இயந்திரங்கள் நான்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த நான்கு உழவு இயந்திரங்களும் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச செயலகங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைத்து மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நான்கு பிரதேச செயலாளர்களிடம் கையளித்துள்ளார்.…
-
- 0 replies
- 291 views
-
-
கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்ய தீர்மானம் கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்வதாக இன்று 06-04-2017 தீர்மானிக்கப்பட்டுள்ளது . கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் செய்யப்படுகின்ற சிறுபோக நெற்செய்கை இவ்வருடம் குளத்து நீர் பத்தடியில் காணப்படுவதனால் குளத்தின் நீரின் அளவை கருத்திற் கொண்டு கிளிநொச்சி மருதநகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் சுமார் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது இன்றையதினம் கிளிநொச்சி கோவிந்தன்கடைச் சந்தியில் அமைந்துள்ள இரணைமடு திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் இரனைமடுத் திட்டப்பணிப்பளரும் பிர…
-
- 0 replies
- 167 views
-
-
கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் தீ! (படங்கள்) கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த பனாமா நாட்டுக்கு சொந்தமானதென கருதப்படும் சரக்கு கப்பலே இவ்வாறு தீ பரவலுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் கடற்படை குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததுள்ளதாக தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/18719
-
- 4 replies
- 1.6k views
-
-
குற்றப்பணம் கைமாறும் நியதி சட்டத்திற்கு வடமாகாண சபை அங்கீகாரம். நீதிமன்ற குற்றப்பணங்களையும், தண்டப்பணங்களையும் கைமாற்றும் நியதிச்சட்டம், வடமாகாண சபையில் இன்று (06) அங்கிகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 90ஆவது அமர்வு, யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டடத்தொகுதியில், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. நீதிமன்றங்களினால் அறவிடப்படும் குற்றப்பணங்கள் மற்றும் தண்டப்பணங்களை, வடமாகாண உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கான ஒரு நிதியச் சட்டத்தினை உருவாக்கும் நோக்கில், முதலமைச்சரினால் குறித்த நியதிச்சட்டம் கொண்டுவரப்பட்டது. வடமாகாண முதலமைச்சரினால் கொ…
-
- 0 replies
- 367 views
-
-
மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியாவிடமிருந்து நல்ல சமிக்ஞை ; அமைச்சர் மஹிந்த அமரவீர (எம்.சி.நஜிமுதீன்) மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா மிகுந்த கரிசனை காட்டி வருகிறது. எனவே அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்நாட்டுப் பிரதிநிதிகள் நாளை இலங்கைக்கு வருகைதருகின்றனர். அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை உட்பட அமைச்சு மட்ட பேச்சுவார்த்தைகளும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. ஆகவே மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். “சீ நோர்” நிறுவனம் மீன்பிடித்துறைக்கு நவீன வசதி கொண்ட படகுச் சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படகினை மீன்பிடித்துறைக்கு உத்தியோகபூர்வமாக…
-
- 0 replies
- 362 views
-
-
இருவருக்கு அவைத்தலமை -எஸ்.நிதர்ஸன் வடமாகாண சபை அவைத தலைவர் மற்றும் பிரதி அவைத் தலைவர் ஆகியோர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர், சபைக்குத் தலைமை தாங்கலாம் என, வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, இன்று (06) இடம்பெற்றது. இதன்போது, வடமாகாண சபை அவைத்தலைவர் மற்றும் பிரதி அவைத்தலைவர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் சபையினை தலைமை தாங்கலாம் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார். இதேவேளை கடந்த சபை அமர்வின் போது, அவைத்தலைவர் சி.…
-
- 0 replies
- 261 views
-
-
இழுத்தடிக்காமல் மிகத் தௌிவாக செயற்படுவதற்கான அவகாசமே இது - ரணிலிடம் அழுத்திக் கூறியது பன்னாட்டு மன்னிப்புச் சபை ஜ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, கால இழுத்தடிப்புக்காகப் பயன்படுத்தக் கூடாது. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வழங்கப்பட்ட காலத்தைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கொழும்பு அரசின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளதாக, பன்னாட்டு மன்னிப்புச் சபையின் செயலர் சயில் செட்டி தெரிவித்தார்.இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சயில் செட்டி தலைமையிலான குழுவி…
-
- 2 replies
- 334 views
-
-
போர்க் குற்றம் இல்லை எனில் அவகாசம் கோரியது ஏன்? எஸ்.நிதர்ஸன் இலங்கையில் இடம்பெற்ற போரின்போது, போர்க் குற்றம் இடம்பெறவில்லை என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தைக் கோரியது ஏன் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தத்தின் போது யார் குற்றமிழைத்தாலும், அது மனித குலத்துக்கு எதிரான குற்றமே. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும், முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்க அமைச்சர்களுள் ராஜித சேனாரத்ன, தமிழ் மக்களுக்கு வேண்டியவர். அவர், யுத்தக் குற்றம் தொடர்பில் எதைக் கூறினார் என்று எனக்குத் தெரியாது. எங்களுடைய பத்திரிகைகள்…
-
- 0 replies
- 414 views
-
-
‘தமிழ் அமைச்சர்கள் ஒத்து ஊதுகின்றனர்’ தமிழர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில், ஜனாதிபதி, பிரமருடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காமல், அரசாங்கத்துக்கு ஒத்து ஊதுகின்ற செயற்பாடுகளையே தமிழ் அமைச்சர்கள் மேற்கொள்கின்றனர் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இன்றைய நல்லாட்சியில் எந்தவிதமான நல்ல விடயங்களும் தமிழ் மக்களுக்கு நடப்பதாக தெரியவில்லை என்றும் அந்த காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளரான என்.ரவிகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோ…
-
- 0 replies
- 331 views
-
-
கால அவகாசத்தில் உள்ளக விசாரணை ஊடாகவே உண்மைகளை கண்டறிவோம் சர்வதேச விசாரணைக்கோ கலப்பு நீதிமன்றத்துக்கோ இடமில்லை என்கிறது அரசாங்கம் (ஆர்.யசி ) உண்மைகளை கண்டறியும் நகர்வில் உள்ளக பொறிமுறையின் மூலமாகவே தீர்வு ஒன்று பெறப்படும்.எமக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தில் இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் சுமத்தப்பட்டுவரும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உள்ளக ரீதியில் விசாரணையை முன்னெடுத்து உண்மைகளை கண்டறிந்து அறிக்கையை சமர்ப்பிப்போம் என்று அரசாங்கம் தெரிவித்தது. கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க எந்த விதத்திலும் அரசாங்கம் தயாராக இல்லை. இலங்கையின் நீதி…
-
- 0 replies
- 381 views
-
-
வாழ்வாதார அபிவிருத்தி உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும்: ஆஸி. அமைச்சரிடம் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் கோரிக்கை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய அமைச்சர் கொன்சீட்டா ப்யரவான்ரி, வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது. அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் கொன்சீட்டா ப்யரவான்ரியின் முதல் இலங்கை விஜயம் இதுவாகும். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கின் நிலைமைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்ற…
-
- 0 replies
- 112 views
-
-
இந்திய அமைதிப்படையின் மீறல்களை இந்தியாவிடம் கொண்டு செல்வோம் – அனைத்துலக மன்னிப்புச்சபை சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்திய அமைதிப்படையினர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால், அதுகுறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அனைத்துலக மன்னிப்புச்சபையின் பொதுச்செயலர் சலில் ஷெட்டி கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். சிறிலங்காவில் தங்கியிருந்த 1987இற்கும் 1990இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு இந்திய அமைதிப்படையினர் பொறுப்பாக இர…
-
- 0 replies
- 361 views
-
-
சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்களை அகற்ற முடியாது – சிறிலங்கா பிரதமர் தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்பதால், சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்கள் அகற்றப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிலாவத்துறையில் உள்ள கடற்படை முகாமை அகற்றி அங்கு மக்களை மீளக்குடியேற்ற வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சல்மானும், முள்ளிக்குளத்தில் உள்ள கடற்படைத் தளத்தை அகற்றி அங்கு மக்களைக் குடியமர்த்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாள்ஸ் நிர்மலந…
-
- 0 replies
- 292 views
-
-
இந்தியப் படகுகளை விடுவிக்கவே கூடாது - மன்னார் மாவட்ட மீனவர் சங்கம் போர்க்கொடி அரசுக்காக மட்டுமே கருத்துரைக் கும் சில மீனவர் அமைப்புகளின் தலைவர்கள் கொழும்பு சென்று மீனவர்களின் விருப்புக்கு மாறாக இந்திய இழுவைப் படகுகளை விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கியமை கண்டனத்துக்குரியது. இவ்வாறு மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் தலைவர் யஸ்ரின் சொய்சா தெரிவித்தார். வடக்குக் கடலில் இடம்பெறும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மற்றும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய படகுகளை விடுவிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேச்சு இடம்பெறவுள்ளது. அது தொடர்பிலான…
-
- 0 replies
- 166 views
-
-
5 வருடங்களில் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 6,176 பேர் கைது இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 6 ஆயிரத்து 176 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன் கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி - பதில் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக் குப் பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, குற்றப் பரிசோதனைத் திணைக்களத்தால் நிறுவப்பட்டுள்ள கடல் வழியாகச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வதைத…
-
- 0 replies
- 199 views
-