ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
ஜப்பானின் இராட்சத நாசகாரி போர்க்கப்பல் சிறிலங்கா வருகிறது ஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, நாசகாரிப் போர்கப்பலான இசுமோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசுமோ என்ற இந்தப் பாரிய போர்க்கப்பல் வரும் மே மாதம் தென் சீனக் கடல் வழியாக மூன்று மாதப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இந்தியப் பெருங்கடலில் வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப் பயிற்சியில் இந்த ஜப்பானிய போர்க்கப்பல் இணைந்து கொள்ளவுள்ளது. இந்தப் பயணத்தின் போது, சிங்கப்பூர் , இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளில் இசுமோ தரித்து நிற்கவுள்ளது. 248 மீற…
-
- 0 replies
- 279 views
-
-
மாற்றத்தை ஏற்படுத்தாத இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கத்தெரிந்திருப்பது மிகவும் முக்கியமானது. வீடு என்ற அடிமட்ட சமூகக் கட்டமைப்பு முதல் நாடு என்ற எல்லை வரையில் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மாற்றங்களை விரும்பாதவர்கள் துன்பத்தில் கிடந்து உழருவரே அன்றி அவர்களால் எந்த வகையிலும் மீளவும் வாழவும் முடியாது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்குப் பல உதாரணங்கள் இருப்பினும் ஒரு சில வருமாறு. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் பிரித்தானியாவில் நடந்த தேர்தலில் வின்சன் சேர்ச்சில் தோல்வி கண்டார். போரில் பிரித்தானியாவி…
-
- 0 replies
- 262 views
-
-
ஜனாதிபதியின் பயணம் குறித்து வெளியிடப்பட்ட செய்திக்கு செயலகம் மறுப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியை ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதி இன்னும் சில தினங்களில் இந்தியா செல்லவிருப்பதாக வெளியான தகவல் தவறானது என்றும், அண்மைக் காலத்தில் இந்தியா செல்லும் திட்டம் எதுவும் தற்போது ஜனாதிபதியிடம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. திபெத்தியத் தலைவர் தலாய் லாமாவின் பங்கேற்புடன், இந்தியாவின் பீஹார் மானிலத்தில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள விழாவொன்றில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவுள்ளதாக குறித்த பத்திரிகை கடந்த வெள்ளிக்க…
-
- 0 replies
- 145 views
-
-
கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் மீட்பு ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையின் போது தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு திங்கட்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கூற்று பரிசோதனை அறிக்கையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக குறி…
-
- 0 replies
- 312 views
-
-
ஆசிரியர் நியமனம் 1029 பேருக்கு வழங்கி வைப்பு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய கலாசாலையில் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வடமாகாண சபையால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த நியமனங்களை வழங்கி வைத்ததுடன் வடமாகாண சபையின் கல்வியமைச்சர் குருகுலராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்காக 1029 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17725
-
- 1 reply
- 322 views
-
-
வீதி அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படும் மருதங்கேணி - கருணாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து களுத்துறைக்கு அல்லது ஹம்பாந்தோட்டைக்கு நீங்கள் இலகுவாகப் போய் விடலாம், அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதிக்கும் கூட நீங்கள் உல்லாசமாகப் பயணிக்கலாம். உங்கள் பயணத்தில் களைப்போ, அலுப்போ இருக்காது. நீங்கள் தூங்கி விழிக்கும்போது, பயணம் நிறைவேறியிருக்கும், அல்லது ஏதாவது ஒரு நகரத்தையோ, கிராமத்தையோ கடந்து கொண்டிருப்பீர்கள். உங்களுடைய பயணம், ஆனந்தமாக அமைந்திருக்கும். ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து கட்டைக்காட்டுக்கு அல்லது வெற்றிலைக்கேணிக்கு, நீங்கள் அப்படிப் போய்விட முடியாது. இவ்வளவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வெற்றிலைக்கேணிக்கும் அல்லது கட்டைக்காட்டுக்குமிடையிலான த…
-
- 0 replies
- 656 views
-
-
முதுகெலும்பு இல்லாதவர் ஜனாதிபதி சுமந்திரன் சாடல் Published by Priyatharshan on 2017-03-13 10:14:48 எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று கூறுபவனே முதுகெலும்புள்ளவனாவான். விசாரணைக்கு பயந்து ஓடும்போது தனக்கு முதுகெலும்பு உள்ளது என ஜனாதிபதி கூற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் சார்பில் 1960 ஆண்டு இரண்டு முறை போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட செங்கலடியைச் சேர்ந்த பொ.மாணிக்கவாசகம் அவர்களின் 41 ஆவது ஆண்டு நினைவு தினம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது மாவட்ட சபைத் தலைவராக பதவி வகித்த செங்கலடியைச் சேர்ந்த எஸ்.சம்பந்தமூர்த்தி அவர்க…
-
- 2 replies
- 393 views
-
-
14 கிலோ கஞ்சாவுடன் பூநகரியில் ஒருவர் கைது கிளிநொச்சி, பூநகரி வில்லூன்றிப் பகுதியில் 14 கிலோ 400 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. பூநகரி வில்லூன்றிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வாகனம் ஒன்றை வழிமறித்த சிறப்பு அதிரடிப் படையினர் அதனைச் சோதனையிட்டனர். அதன்போதே வாகனத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோ 400 கிராம் எடையுடை கேரளக் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. அந்த வாகனச் சாரதியை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். இது தொடர்பிலான விசாரணைகளை பூ…
-
- 0 replies
- 336 views
-
-
வடக்கு அமைச்சர்கள் மீதான மோசடி விசாரணை நிறைவு - அறிக்கை தயாரிக்கும் பணியில் குழு வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் - மோசடிக் குற்றßச் Äசாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் முழுமையடைந்துவிட்டன. அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன என்று விசார ணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண அமைச்சர்கள் 5 பேர் மீதும் சுமத்தப்பட்ட ஊழல் - மோசடிக் குற்றச்சாட்டுக் கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் மூவர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. முறைப்பாடுகள் பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட…
-
- 0 replies
- 349 views
-
-
ஓமந்தை சோதனைச்சாவடி காணியை உரிமையாளர்கள் அடையாளம் காட்டினர் -க.அகரன் வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணியை, காணி உரிமையாளர்கள் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டனர். கடந்த 20 வருடங்களாக, வடக்கு - தெற்குக்கு செல்லும் பயணிகள் மற்றும் வாகனங்களை சோதனையிடும் பலமான சோதனைச்சவடியாக இது காணப்பட்டது. 18 குடும்பங்களுக்குரிய 41 ஏக்கர் காணியில் இச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆட்சிக்காலத்தில் இக்காணிகளை சுவீகரிப்பதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து காணி உரிமையாளர்கள் வழங்கு தாக்கல் செய்திருந்த நிலையில், அண்மையில் குறித்த காணியில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இராணுவ…
-
- 0 replies
- 323 views
-
-
சுமந்திரனைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆறாவது சந்தேகநபருக்குப் பகிரங்கப் பிடியாணை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொலைமுயற்சி வழக்கில் ஆறாவது சந்தேகநபருக்கு பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் தெரிவித்ததைத் தெடர்ந்து, அவரைக் கைது செய்வதற்கு நீதிமன்றம் பகிரங்கப் பிடியாணை பிறப்பித்துள்ளது. http://www.onlineuthayan.com/news/24811
-
- 1 reply
- 353 views
-
-
பொருளாதார வலயம் மாங்குளத்தில் வருமா?- மதகுவைத்த குளத்தில் மட்டுமே கட்டுமானப் பணிகள் ஆரம்பம் கடந்த ஆண்டு வடக்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பொருளாதார வலயம் அமைக்கும் பணிகள், மதகுவைத்த குளத்தில் மாத்திரம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாங்குளத்தில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்ட பொருளாதார வலயத்துக்கான எந்தவொரு கட்டுமானப் பணிகளும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்று வவுனியா மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு அரசின் வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக வவுனியாவில் பொருளாதார வலயம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தத…
-
- 0 replies
- 185 views
-
-
ரீட்டா ஐசாக் நாடியாவின் அறிக்கை குறித்த விவாதம் நாளை மறுதினம் (ரொபட் அன்டனி) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சிறு பான்மை மக்கள் தொடர்பாக ஆராயும் ஐ.நா.வின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா முன்வைத்த இலங்கை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அறிக்கைகள் தொடர்பாக நாளை மறுதினம் 15ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் விவாதம் நடைபெறவுள்ளது. கடந்த 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரின் 15 ஆவது திகதி அமர்வின் போதே உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் இந்த விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் இலங்கையின் சார்பில் ஜெனிவாவிற்கான வதிவிடப் பிரத…
-
- 0 replies
- 315 views
-
-
காதல், சாதி விவகாரம் : வீடு தீக்கிரை, வாள் வெட்டுத்தாக்குதல் - வவுனியாவில் சம்பவம் வவுனியாவில் சாதி விவகாரத்தினால் வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் இனந்தெரியாத நபர்களினால் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஒருவருடகாலமாக இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரியாமலேயே இருந்துள்ளது. இவர்களது காதல் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததுடன் பெண் வீட்டார் குறித்த பெண்ணை வெளிநாடு ஒன்றிக்கு அனுப்புவதற்குரிய ஏற்ப்பாடுகளை மேற்கொண்டனர். இதனையறிந்த பெண் தனது காதலுக்கு இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 302 views
-
-
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் மெளன பேரணியில்... Published by Pradhap on 2017-03-13 11:15:19 மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் 21 ஆவது நாளாக இன்று தங்களது சத்தியாகிரக போரட்டத்தை மௌன போராட்டமாக தற்போது முன்னெடுத்து வருகின்றனர். அண்மையில் பட்டதாரிகள் நால்வருக்கு எதிராக வழக்கு தாக்கள் செய்ததை அடுத்து இன்றைய தினம் மெளனமான முறையில் இந்த கவனயீர்ப்பு பேரணியை நடத்தி வருகின்றனர். வேலையற்ற பட்டதாரிகளின் மெளன கவனயீர்ப்பு பேரணியானது இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பித்து, மட்டக்களப்பு பஸ் நிலையம் வரைக்கும் சென்று அங்கிருந்து வெள்ளை பாலத்தால் உப்புக் கராச்சி வழியாக, யங்சன் சென்று பிரதான வீதி வழியாக மீண்டும் க…
-
- 0 replies
- 291 views
-
-
‘சர்வதேசத்துடன் பேசுவது மரக்கறி வியாபாரமா?’ - கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஷ்ணா ‘சர்வதேசத்துடன் பேசுவதென்பது, சந்தையில் மரக்கறி வியாபாரம் போன்று விலையைக் கூட்டிச் சொல்லிக் குறைப்பதல்ல. சர்வதேச அமைப்புகளுடன் பேசுகின்றபோது சரியானதைப் பேசவேண்டும், எதைக்கேட்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும். துப்பாக்கியென்றால்தான் சுடலாம், கத்தியால் சுடமுடியாது. கத்தியைக்காட்டி உன்னைச் சுடப்போகிறேன் என்றால் சிரிப்பார்கள்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேசத் தொடர்பாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, மட்டக்களப்பில் தெரிவித்தார். மட்டக்களப்பு, செங்கலடி சீனிப்போடியார் மண்டபத்தில் நடைபெற்ற மாணிக்க வாசகர் மற்றும் சம்பந்தமூர்த்தி ஆகியோரி…
-
- 1 reply
- 303 views
-
-
மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது -எம்.றொசாந்த் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக, கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுக்கவிதிகள…
-
- 0 replies
- 444 views
-
-
‘அனுமதி கிடைத்தால் வீடும் கிடைக்கும்’ “கீரிமலையில் அமைக்கப்பட்ட நல்லிணக்கபுர வீடமைப்புகளைப் போன்று, அதன் தெற்குப் பக்கத்தில் 225 வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். ‘நல்லிணக்கபுரத்தில் 33 மேலதிக வீடுகளைக் கட்டிக்கொடு த்திருக்கிறோம். 'அதனை, கடந்த 9ஆம் திகதி பயனாளர்களிடம் கையளித்தோம். அதேபோன்று, மாவன்கல்லடியில் 225 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு, இராணுவம் தயாராக இருக்கிறது. ஆனால், இதற்கான அனுமதியை, மீள்குடியேற்ற அமைச்சு இன்னமும் வழங்கவில்லை. ஆகையினால், அந்த அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார். - See more a…
-
- 0 replies
- 305 views
-
-
ஆள் சேர்த்தவர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டவர் கேரளாவிலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு ஆட்களைச் சேர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்துல் றஷீத் அப்துல்லா, அவரது தீவிரக் கருத்துகள் காரணமாக, இலங்கையிலுள்ள இஸ்லாமியப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டவர் என, இந்திய தேசிய புலனாய்வு முகவராண்மையின் குற்றச்சாட்டுப் பத்திரம் குறிப்பிட்டுள்ளது என்று, இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குறித்த நபர், கேரளாவைச் சேர்ந்த 22 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் சேர்வதற்குத் தூண்டுகோலாக இருந்தார் என, இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அப்துல்லாவுக்கும் சாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் விருந்தினர் உறவு …
-
- 0 replies
- 180 views
-
-
உலக நாடுகளின் போர்க் கப்பல்கள் இலங்கையில் சங்கமம் - லியோ நிரோஷ தர்ஷன் - உலக நாடுகளின் அதிநவீன போர்க் கப்பல்கள், இலங்கைத் துறைமுகங்களில் நங்கூரமிட ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே அமெரிக்காவின் அதிவேக போக்குவரத்து கப்பல் பல்வேறு கூட்டு நடவடிக்களில் அம்பாந்தோட்டை பகுதியில் ஆரம்பித்துள்ள நிலையில் , மேலும் ,இரண்டு பாகிஸ்தான் கப்பல்கள் ,இன்று ,இலங்கை வருகின்றன. ,இந்நிலையில் ,இந்தியாவின் ஆய்வுக்கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக்தனது வியஜத்தை திடீரென ஒத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் கடற்படையின் ,இரண்டு போர்க்கப்பல்கள் ,இன்று ஞாயிற்றுக்கிழமை ,இலங்கை வருகின்றன. நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துற…
-
- 1 reply
- 614 views
-
-
மீனவர் விவகாரம்: நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி இந்திய மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் மீனவரின் உடலை பெற்று அடக்கம் செய்ய போராட்டக் குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கடந்த 6-ம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கழுத்துப்பகுதியில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இலங்கை கடற்படையினரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டிய மீனவர்கள், தமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், இலங்கையில் உள்ள அனைத்து படகுகளையும…
-
- 0 replies
- 222 views
-
-
சிறிலங்கா படைகள் தொடர்ந்தும் விலக்களிப்புடன் செயற்படுகின்றன – யஸ்மின் சூகா சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்ட போதிலும், சிறிலங்கா படையினர் விலக்களிப்புடன் தொடர்ந்து செயற்படுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘போர் நடந்த பகுதிகளில் தமிழ்ப் பொதுமக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட, கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்குட்பட்ட சூழலிலேயே நாளாந்த வாழ்க்கையை கழிக்கின்றனர். கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் போன்ற வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் தொடர்ந்து இடம்பெற…
-
- 0 replies
- 289 views
-
-
புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகும் தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் ரணில், சம்பந்தன் உரை புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர். என்ஐஏ எனப்படும், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரமைப்பு, இந்தியா பவுண்டேசன், ஹரியானா சுவர்ண உற்சவ் ஆகியன இணைந்து தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு-2017 என்ற கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தீவிரவாதம் என்ற தொனிப்பொருளில், இந்தக் கருத்தரங்கு நாளை ஆரம்பமாகி, எதிர்வரும் 16ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. நாளை பிற்பகல் தொடங்கும் இந்தக் கருத்தரங்கில், சி…
-
- 0 replies
- 273 views
-
-
சிறிலங்காவை வடகொரியாவுடன் ஒப்பிட முடியுமா? – அனைத்துலக ஊடகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், சிறிலங்கா மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்த மாத இறுதியில் சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் பிறிதொரு தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலை காணப்படுவதுடன், இத்தீர்மானத்திற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமானது இணைஅனுசரணை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறானதொரு தீர்மானத்தின் மூலம் சிறிலங்கா மீதான, பேரவையின் அண்மைய தலையீடுகள் தொடர்பாக கேள்வி எழுப்புவது இலகுவானதாக இருக்கும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த தடவை சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எதிர்பார்த்தளவு செயற்படுத்தப…
-
- 0 replies
- 251 views
-
-
கால அவகாசம் மகிந்த,கோத்தாவை காப்பாற்றவே என மூத்த படைப்பாளியும் நீந்திகடந்த நெருப்பாற்று ஆசிரியருமான திரு யோகேந்திரநாதன்
-
- 0 replies
- 182 views
-