ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143392 topics in this forum
-
களுவாஞ்சிக்குடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு யுவதிகள் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை - மட்டக்களப்பு வீதியின் கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த இரு யுவதிகளையும் பொதுமக்களின் உதவியுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் தனியார் வகுப்புக்கு கல்முனைக்குச் சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர்.வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட காரானது வலப்பக்க சமிக்ஞை போடாமலும், கார் சாரதி கண்ணாடியை அவதானிக்காமலும் வலது பக்கம் காரை திருப்பியுள்ளார். இந்த நிலையிலேயே மோட்…
-
- 0 replies
- 342 views
-
-
களுத்துறை சிறைச்சாலை பஸ் தாக்குதல் சம்பவம் : சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேன் கண்டுபிடிப்பு களுத்துறை - சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றாதாக கூறப்படும் வெள்ளை நிற வேன் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வேன் ஹொரணை - மொரகஹாஹென பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17158
-
- 0 replies
- 255 views
-
-
தோட்டத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் கண்டி - உன்னஸ்கிரிய ஹெயார் பார்க் தோட்டத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டனர். உன்னஸ்கிரிய - லூல்வத்தை பாதையை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்படி தோட்டத்தில் தமக்கு இரண்டு ஏக்கர் நிலம் வீதம் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் தமக்கு இதுவரை காலமும், மாதத்துக்கு 3 அல்லது 4 நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும், குறைந்தது 21 நாட்களுக்காவது எமக…
-
- 0 replies
- 186 views
-
-
யாழ் மடத்தடியில் இடம்பெற்ற குழு மோதல் தொடர்பில் மேலும் 6 பேர் யாழ் பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது பற்றி மேலும் தெரியவந்ததாவது, யாழ் பிரதான வீதி மடத்தடி சந்தியில் இரு குழுக்களுக்கிடையே நேற்றுமுன்தினம் மாலை மோதல் இடம்பெற்றது. இதில் அருகிலுள்ள வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் அடித்து நொருக்கப்பட்டது. மோதலில் ஈடுபட்டவ ர்கள் வாள்கள், சைலன்சர்கள், பொல்லுகள் கற்கள் என்பன கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பில் யாழ் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர் இந்நிலையில் நேற்று மேலும் 6 பேர் கைது …
-
- 0 replies
- 417 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணயிளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது, சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக நீடித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் காணிகளை கையளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. காணிகளை மீள் வழங்க கோரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி பல்கலைக்கழக மாணவர்களால் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. http://tamil.…
-
- 1 reply
- 346 views
-
-
அபிவிருத்தி அலுவலர்கள் சங்கம் மற்றும் சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினர் இணைந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் பதவியுயர்வு பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் தமது தொழிற் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. அது தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்காக தற்போதைய அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள அபிவிருத்தி செயற் திட்டங்களுக்கு தமது அறிவு மற்றும் ஆற்றல் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவதற்கு தாம் விருப்பத்துடன் இருப்பதாக சங்கங்களின் பிரதிநிதிக…
-
- 0 replies
- 233 views
-
-
விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து முடிவுக்கு வந்து ள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலினையடுத்து குறித்த ஆர்ப்பா ட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையின் போது ஒரு மாதத்துக்குள் விசேட தேவையுடைய இராணுவ வீரர்களது கோரிக்கைகள் தொடர்பில் நட வடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்து ள்ளனர். சில கோரிக்கைகளை முன்வைத்து விசேட தேவையுடைய இராணுவவீரர்கள் புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது http://onl…
-
- 0 replies
- 281 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், புனர்வாழ்வு அதிகார சபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ், கடன் பெற்ற சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், மலிவு விற்பனையும் நேற்று முன்தினம் (26) மண்முனை வடக்கு பிர தேச செயலகத்திற்கு அருகாமையிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பி த்து வைக்கப்பட்டது. இக் கண்காட்சியில் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட 8 மாவட்டங்களையும் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்க ளின் உற்ப த்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 205 views
-
-
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு உயர்வாக அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய இவ்வாறான களஞ்சியசாலைகள் தொடர்பில் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளுக்கு குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அரிசிக்கான உயர்ந்த பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அது வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளமை குறி ப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/24431
-
- 0 replies
- 203 views
-
-
கடும் நிபந்தனையின் அடிப்படையில் கால அவகாசம் அமையவேண்டும் ஆர்.பி ஐ.நா. பேரவையின் கூட்டத்தொடர் குறித்து கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை அரசாங்கம் தனக்கு காலஅவகாசம் வழங்க வேண்டுமெனக் கோரினால் அது கடும் நிபந்தனையின் பேரில் குறுகிய கால அவகாசத்தில் அமைய வேண்டும். எவ்வாறெனினும் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஐ.நா. நடந்து கொள்வது முக்கியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையி…
-
- 1 reply
- 331 views
-
-
வெள்ளை யானைகள் என குறைகூறுகின்றனர் : அரசின் அழைப்பை முதலமைச்சர்கள் நிராகரிப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்காமல் எமக்குரிய நிதியினையும் முடக்கி வைத்துக் கொண்டு எம்மை செயற்படவிடாமல் கைகளை கட்டிவிட்டு எம்மை வெள்ளை யானைகள் என குறைகூறுவதை மாத்திரம் இன்று சில அரசியல்வாதிகள் செய்துவருவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஊடாக விடுக்கப்பட்ட சந்திப்பிற்கான அழைப்பை அனைத்து மாகாண ம…
-
- 0 replies
- 344 views
-
-
கொழும்பில் இடம்பெறும் த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தனின் விசேட செய்தியாளர் மாநாடு
-
- 0 replies
- 401 views
-
-
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மீது தாக்குதல்..! கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் மீது மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றை அடுத்து, ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அப் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து, வாகரை பிரதேசத்திற்கு வேண் ஒன்றின் ஊடாக பயணித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர், நாவலடி பிரதேசத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த நிகழ்வை தொடர்ந்து அப் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரால் வேனை செலுத்தி வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தாக்கப்பட்ட…
-
- 0 replies
- 417 views
-
-
“படைவீரர்களுக்கான சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” : ஜனாதிபதி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் படைவீரர்களின் நலன்கள் மற்றும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் நின்றுவிடாமல் அவர்களது நலன்களுக்காக செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் மன்னார், முள்ளிக்குளம் இலங்கை கடற்படையின் வயம்ப தலைமையகத்தில் நடைபெற்ற மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எமது படையினருக்கான கௌரவத…
-
- 0 replies
- 271 views
-
-
துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் என்று கூறப்படும் சமயங் என்றழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திரமீது, துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், அவரும் அந்த பஸ்ஸில் ஏற்றிச்செல்லப்பட்ட கைதிகளில் ஐவரும் பலியாகியுள்ளனர். சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு, சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிச்சென்றபோதே, அவர்கள் மீது களுத்துறை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இன்னும் சிலர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைகள் பேச்சாளர் உபுல் தெனிய தெரிவ…
-
- 3 replies
- 920 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகின்றார் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லெகார்ட் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதி சந்தையின் ஸ்தீரதன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்தல் மற்றும் அடுத்த கடன் தொகைக்கான சூழலை ஆராய்தல் என்பன இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சர்வதேச முதலீட்டு அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரைச் சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விஜயத்தின்போது கலந்துரையாட உள்ளார். http://www.vira…
-
- 0 replies
- 181 views
-
-
இலங்கை நீதித்துறை வரலாற்றில் 2 ஆவது தமிழ் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் நாளை ஓய்வு பெறுகிறார்.! (எம்.எப்.எம்.பஸீர்) பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நாளை 28 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் கடமையாற்றிய நிலையிலேயே கே.ஸ்ரீபவன் நாளை ஓய்வுபெறவுள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அறிவித்துள்ளார். இந் நிலையில் இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசரை தெரிவு செய்யும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்படும் நபர்களில் ஒருவரை அரசிய…
-
- 1 reply
- 608 views
-
-
மட்டு. காணி ஆணையாளர் மீதான துப்பாக்கிப் பிரயோகம்: சி.ஐ.டி.சிறப்புக் குழுவின் விசாரணைகளில் பல தகவல்கள்; 30 பேரிடம் வாக்குமூலம் (எம்.எப்.எம்.பஸீர்) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணைகளுக்காக பொலிஸ் தலைமையகத்தினால் அனுப்பப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) சிறப்பு பொலிஸ் குழுவானது கொலை முயற்சி தொடர்பில் பல தகவல்களை சேகரித்துள்ளது. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆரச்சியின…
-
- 0 replies
- 244 views
-
-
எழுத்துமூல உத்தரவாதம் வரும்வரை போராட்டத்தினை கைவிடமாட்டோம் (காங்கேயனோடை நிருபர்) எழுத்து மூலமான உத்தரவாதம் அரசாங்கத்திடமிருந்து வரும் வரை சத்தியாக்கிரகப் போராட்டத்தினை கைவிடப் போவதில்லையென சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற் கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் ஆறாவது நாளாக நேற்றும் தொடர்ந்து இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் மட்டக்களப்பில் காந்திப்பூங்காவுக்கு முன்னால் காலவரையறையற்ற சத்தியக்கி…
-
- 0 replies
- 435 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் - லியோ நிரோஷ தர்ஷன் - சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் பல முனைகளில் வியூகம் * சர்வதேச அமைப்புகள் போர்க்கொடி *ஆதாரத்துடன் மீண்டும் போர்க்குற்றங்கள் *பொறுப்புக்கூறலுக்கு கால அட்டவணை பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தொடர்ந்தும் கால அவகாசத்தைக் கோர உள்ளது. இதற்கு கடுமையாக எதிர்ப்புகளை வெளியிட்டுள்ள அரச சார்பற்ற சர்வதேச அமைப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கும் சந்தர்ப்பத்தை ஐ.நா. ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளன.…
-
- 1 reply
- 876 views
-
-
அரசாங்கம் பதிலளிக்காவிடின் போராட்ட வடிவம் மாறும் ஐ.நா.உடனடியாக தலையிடவேண்டும்; கிளி.யில் போராடும் மக்கள் தெரிவிப்பு எமது கண் முன்னே இராணுவம் பிடித் துச் சென்ற எமது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படைக்க நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று காணா மல் ஆக்கப்பட்டோரது உறவுகள் மிகுந்த ஏக்கத்துடன் தெரிவித்துள்ளனர். தமது உறவுகளைப் பிடித்துச் சென்று விட்டு தற்போது காணவில்லை எனக்கை விரி க்கும் அரச படைகளும் அவற்றிற்குத் துணை நின்று செயற்படும் இலங்கை அரசும் எமது உறவுகள் எங்கே உள்ளார்கள்? என்ற விபரத்தை வெளியிட வேண்டும் என்றும் அம்மக்கள் கோரியுள்ளன…
-
- 0 replies
- 231 views
-
-
தற்போதைய அரசாங்கத்தைவிட்டு வேறு மார்க்கத்தில் எதனையும் செய்ய முடியாது அதனாலேயே அரச தூதுக்குழுவாக ஜெனிவா செல்கின்றேன் என்கிறார் ஜெஹான் (ரொபட் அன்டனி) அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஜெனிவா சென்றாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்க ளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் காணி கள் மீளளிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்துவேன். அத்துடன் காணாமல் போனோர் விடயத்தில் உண்மை கண்டறியப்படவேண்டும் என்பதற்கான அழுத்தங்களை ஜெனிவாவில் பிரயோகிப்பேன் என்று ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழு சார்பில் பங்கேற்கும் தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்…
-
- 0 replies
- 230 views
-
-
காணிவிடுவிப்பு தொடர்பில் முல்லை படைத்தளபதியுடன் பேசினாரா பிரிட்டன் தூதுவர்? இலங்கைக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்து ரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை, முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்துக்குச் சென்ற பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ்,முல்லைத்தீவு படைத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கலந்துரையாடலில், பிரித்தானியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஸ்ருவார்ட் அன்ட்ரூ போர்லன்டும் பங்கேற்றார். இதன்போது, பரஸ்பரம் ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்து கல…
-
- 0 replies
- 389 views
-
-
பிரதான வீதியில் இரு குழுக்களுக்கிடையே மோதல் அடித்து நொருக்கப்பட்டது முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியில் நேற்று மாலை இரண்டு கும்பலுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சுமார் 20 பேர் வரை கத்திகள்.சைலன்சர் கொண்டு அடிதடியில் ஈடுபட்டதனால் அந்த இடத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் அடித்து நொருக்கப்பட்டு புரட்டியபடி வீதியோரம் இரவிரவாக காணப்பட்டது. இரு கும்பல்கள் அவ்விடத்தில் அடாவடியில் ஈடுபட்டதோடு, அவர்களால் வீசப்பட்ட கற்கள் அயலில் உள்ள வீடுகளுக்கு மேல் வீழ்ந்த தாகவும் தெரிவிக்கப்பட்டது. இக் கோஷ்டி மோதல்கள் குறித்து பொலிஸாருக்கு அப்பிரதேச மக்கள் அறிவித்ததை அடுத்து பொலிஸ்,அதிரடிப்ப…
-
- 0 replies
- 258 views
-
-
கேப்பாப்புலவு மக்களை சந்தித்தார் நடிகர் தலைவாசல் விஜய் கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்பு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் சந்தித்துள்ளார். பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப் படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி, கடந்த 28 நாட்களாக இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களின் போராட்டக்களத்துக்கு 28 ஆவது நாளான நேற்றைய தினம் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் இயக்குநரும் ஈழ உணர்வாளருமான புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்…
-
- 0 replies
- 385 views
-