ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சட்ட தொகுதி நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு முதற்தடவையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது சட்ட தொகுதி நூல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் குறித்த சட்டத் தொகுதி நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதிய இலங்கைக்கான நிலையான வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்கோலி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/16387
-
- 0 replies
- 185 views
-
-
கேப்பாபுலவு மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்கவேண்டும்-சுமந்திரன் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீள வழங்குவதற்கு அரசாங்கம் முன்னர் வழங்கியிருந்த வாக்குறு தியை சரியாக நிறைவேற்றவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் சபை ஒத்திவைப்புவேளை குறித்த பிரச்சினை தொடர்பாக பிரேரணை சமர்ப்பித்து உரையா ற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அங்கு உரையாற்றிய அவர், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகளை 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுற்றதன்…
-
- 1 reply
- 279 views
-
-
தென்னிந்திய சினிமா பாணியிலான வாள்வெட்டுக் குழு மோதல் கலாசாரம் யாழ்ப்பாணத்தில் உருவெடுப்பு : நீதிமன்ற தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ளது - யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 2017-02-08 08:56:39 (ரி.விரூஷன்) யாழ்ப்பாணத்தில் தற்போது உருவெடுத்துள்ள புதிய வாள்வெட்டு கலாசாரமானது நீதிமன்றங்களுக்கும் நீதிமன்றங்களின் தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ள நிலையில் இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக தண்டனைகளை வழங்குவதன் மூலமே இவற்றைக் கட்டுபடுத்த முடியும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றங்களால் வழங்…
-
- 0 replies
- 231 views
-
-
தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதான பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் பணியாளர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்கின்றது. தம்புள்ளை மைதானத்தின் 11 பணியாளர்கள் மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் கூரையின் மீது ஏறி நின்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை இவர்கள் நேற்று (07) ஆரம்பித்திருந்தனர். சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குறித்த மைதானத்தில் பணிபுரியும் தம்மை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை காலமும் ஒப்பந்தம் அடிப்படையிலேயே தாங்கள் பணிபுரிந்து வருவதாக இவர்கள் சுட…
-
- 0 replies
- 361 views
-
-
அரசியலில் இலங்கை ‘புலி’ அடுத்த அரசியல் புலியாக வரும் வல்லமை இலங்கைக்கு உள்ளதென, ஐக்கிய அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தில் பொது இராஜதந்திரம் மற்றும் பொது விவகாரங்களுக்கான உப செயலாளர் புறூஸ் வாட்டன், இலங்கையின் இந்த வல்லமை பற்றி ஒருபோதும் சந்தேகம் இருக்கவில்லை எனக் கூறினார். “ இப்போதைய நிலைமையில், அடுத்த ஆசியப்புலி இலங்கையாகும். அதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளது. என அமெரிக்காவில் நடந்த இலங்கையின் சுதந்திர தின கொண்டாத்தின் போது அவர் கூறினார். “வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் வணிகத்தை முன்னேற்றவும் உதவுவதன் மூலம் இலங்கையின் சிறிய நடுத்தர முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவுகின்றது என அவர் …
-
- 0 replies
- 325 views
-
-
‘தேர்தலில் குதித்தால் கோட்டா தோற்பார்’ இக்பால் அலி “2020ஆம் ஆண்டு நடைபெற்றவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்டால் சந்தேகத்துக்கு இடமின்றித் தோல்வி அடைவார்” என, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். புஹதஹேவாஹெட்டவில், அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைவார். எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா …
-
- 0 replies
- 264 views
-
-
‘அகதிகளை அகதியாக்காதீர்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “1995ஆம் ஆண்டு அகதிகளாகி, வவுனியா பூந்தோட்டம் முகாமில், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்ற மக்களை அங்கிருந்து 30 கிலோமீற்றருக்கு அப்பால், குடியமர்த்தி அவர்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் நேற்று, இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள வவுனியா பூந்தோட்டம் முகாம் தொடர்பில், கேள்வியெழுப்பியிருந்த சுனில் ஹந்துநெந்தி எம்.பி , குறுக்கு கேள்வியை எழுப்பியே மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாகக் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.…
-
- 0 replies
- 466 views
-
-
‘ஜெனீவா அழுத்தங்களை சமாளிப்பதற்கே புலி நாடகம்’ ஜே.ஏ.ஜோர்ஜ் ‘தமிழ் மக்களை, அரசாங்கம் தொடர்ந்தும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறதா” என்று கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “ஜெனீவாவில் ஏற்படும் அழுத்தங்களை சமாளிப்பதற்கு புலிகள் மீண்டும் மீளெழுகின்றனர் என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா” என்றும் வினவியது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கிகரிப்பது தொடர்பில், நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, கூட்டமைப்பு எம்.பியான சிறிதரன் மேற்கண்டவாறு வினவினார். அங்கு அவர் தொடர்ந்த…
-
- 0 replies
- 321 views
-
-
யாழில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் உருவ பொம்மை எரிப்பு மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்துக்கு (சைட்டம்) எதிராக, அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் கையெழுத்துப் போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதன் போது ‘நாட்டில் தற்போது இலவசக் கல்வி, சுகாதாரம் உள்ளதா?’, ‘எமது உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவோம்’ எனக் குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் இதன்போது விநியோகிகக்கப்பட்டன. அதேவேளை மாலை போராட்டக்காரர்களால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. h…
-
- 1 reply
- 321 views
-
-
கேப்பாப்புலவு மக்களுக்கான நீர்கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம் இராணுவம் கையகப்படுத்தியுள்ள கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த எட்டுநாட்களாக தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நாளை நீர்கொழும்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒன்றிணைந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்க்கான நடவடிக்கைகளை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/16349
-
- 0 replies
- 373 views
-
-
கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆதரவு முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள் , முதியவர்கள் ,பெண்கள், என கடந்த மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எட்டாவது நாளாக இன்றுவரை தொடர்கின்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலும் இந்த போராட்டத்துக்கு இன்னும் பல இளைஞர்களை திரட்டி ஆதரவு வழங்கும் நோக்கிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், ஆசிரியர் சங்கமும் இன்றைய தினம் கேப்பாபுலவு மற்றும் …
-
- 0 replies
- 246 views
-
-
கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவு கேப்பாபுலவுக்கு வருகைத்தந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பர்னாந்து ஆகியோர் கேப்பாபுலவு மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அத்தோடு இனிவரும் நாட்களில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தென்னிலங்கை மக்கள் வருகைத்தர இருப்பதாகவும் தெரிவித்தனர். அதுமாத்திரமின்றி இந்த மக்களின் போராட்டம் நியாயமானது எனவும் விரைவில் இவர்களின் நிலங்களை இராணுவம் விடுவிக்கவேண்டுமெனவும் தெரிவித்தனர். இதில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளர் அண்டனி ஜேச…
-
- 0 replies
- 301 views
-
-
அதிபர் தூக்கிட்டு தற்கொலை யாழ். காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் நேற்று தற்கொலை செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 58 வயதான பொ.அமிர்தலிங்கம் அவரது தாயார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாயில் வசிக்கும் அவர் அளவெட்டியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீடுகளை உள் பக்கமாக பூட்டிய பின்பு மின்சார வயரின் உதவியுடன் வீட்டிற்குள்ளேயே தூக்கில் தொங்கியுள்ளார். காலையில் வீட்டில் இருந்து சென்ற குறித்த அதிபரைக் காணாது வீட்டார் பல இடத்திலும் தேடியுள்ளனர். இவ்வாறு தேடுதல் மேற்கொண்ட போது அளவெட…
-
- 14 replies
- 1.1k views
-
-
அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை காலத்தில் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற தந்தையிடம் தொடர்ந்தும் தனக்கு புதிதாக புத்தக பை, கொப்பிகள், புதிய சீரூடை வேண்டும் என வற்புறுத்தி அவற்றையெல்லாம் ஆவலுடன் பெற்று தரம் ஆறுக்…
-
- 28 replies
- 1.8k views
-
-
சற்றுமுன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரை பார்த்து கழுதை என்றதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு) வில்பத்து விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களை பார்த்து அதிகாரி ஒருவர் கழுதை என்று தெரிவித்தமையால் ஊடகவியலாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வில்பத்து விவகாரம்“ தொடர்பில் தெளிவூட்டுவதற்காக தேசிய தொழில் சங்கம் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் ஊடகவியலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. மேலும்,குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு மருதானை சனச சமூக நிலையத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 477 views
-
-
அரசாங்கத்துக்கு காலக்கெடு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், நாளை (08) காலை 8 மணிவரை, அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பைச் சேர்ந்த 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி, விமானப்படை முகாமுக்கு முன்னால் மேற்கொண்டு வருகின்ற போராட்டம், 8ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, இன்றைய தினம், அம்மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது அம்மக்கள், “8ஆவது நாளாக தொடரும் போராட்டத்துக்கு, அரசாங்கம் எவ்விதப்…
-
- 0 replies
- 488 views
-
-
புலனாய்வுப்பிரிவினர் என அடையாளப்படுத்தி கொள்ளை : மூவர் கைது வவுனியாவில் கடந்த சில மாதங்களாக தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கடந்த செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில் தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி வீட்டை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து அதன் பின்னர் கத்தியினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம், பூவரசங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொல…
-
- 0 replies
- 420 views
-
-
கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய இராணுவம் இராணுவத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்களை இராணுவம் வழங்கியுள்ளது. இலங்கை இராணுவத்தினருடனான யுத்தத்தின் போது தங்களது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் மற்றும் யுத்த காலத்தில் கால்களை இழந்த பொது மக்களுக்கும் செயற்கை கால்களை இராணுவம் வழங்கியுள்ளது. கிளிநொச்சியில் ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட முப்பது பேருக்கு இந்த செயற்கை கால்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. அமெரிக்க நிதியுதவியில் மாற்று கண்டி குண்டகசாலை வலுவுள்ளோருக்கான நிலையத்தினரால் நடைமுறைப்படுத்தப்படும் இவ் உ…
-
- 0 replies
- 495 views
-
-
மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சை முற்றுகையிடுவோம் கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு; மாத இறுதிக்குள் தேர்தல் அறிவிப்பு வேண்டும் என்கிறது (எம்.சி.நஜிமுதீன்) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இம்மாதம் முடிவடைவதற்கு முன்னர் விடுக்க வேண்டும். இல்லாவிடின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என அகில இலங்கை உள்ளூராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைவர் உதயனி அத்துகோரல தெரிவித்தார். மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பே…
-
- 0 replies
- 257 views
-
-
சர்வதேச விசாரணையினை மழுங்கடிக்க இடமளியோம் மார்ச்சில் ஜெனிவா சென்று மீண்டும் வலியுறுத்துவோம் என்கிறது கூட்டமைப்பு (ஆர்.யசி ) இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர் பில் ஆராயும் கலப்பு நீதிமன்ற முறைமையில் இருந்து விடுபட்டு தமக்கு சாதகமான நகர்வை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிகின்றது. சர்வதேச விசாரணைகளை மழுங்கடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதை மீண்டும் வலியுறுத்த நாம் மார்ச் கூட்டத்தொடரின் போது ஜெனிவா பயணிக்க தயாராக உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 337 views
-
-
காரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள்- கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி வருகின்றனர். யாழ்.காரைநகர் பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். நீர்கொழும்பு , புத்தளம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மீனவர்கள் கடற்படையின் உதவியுடன் இழுவை படகுகளில் காரைநகர் பகுதிக்கு வந்து மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். காரைநகர் கடற்பிரதேசம் சிறுகடல் பகுதியாக இருக்கின்ற நிலையில் அப்பகுதிக்குள் இழுவை படகுகளில் மீன்பிடியில் ஈடுபடுவதனால் அப்பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கபட்டு உ…
-
- 0 replies
- 213 views
-
-
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 இலங்கை மீனவர்கள் கைது Published by Priyatharshan on 2017-02-07 11:50:40 மன்னார், சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் உரிய உரிமப் பத்திரமில்லாது மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற காரணங்களாலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது 7 டிங்கி படகுகள், 7 சட்டவிரோத மீன்பிடி வலைகள் (சுருக்கு வலை ), 3 சோடி துடுப்பு மட்டைகள் மற்றும் 12 கடல் பாதுகாப்பு தலைக்கவசங்கள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யத மீனவர்களை மேலதிக விசா…
-
- 0 replies
- 331 views
-
-
உயிரை மாய்த்தேனும் காணிகளைப் பெறுவோம் இன்று பதில் கிடைக்காவிடின் போராட்ட வடிவம் மாறும்; கேப்பாபுலவு மக்கள் அதிரடி (கே.குமணன்) முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை மீள வழங்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்குள் உரிய பதில் கிடைக்காவிட்டால் தமது போராட்ட வடிவம் மாறும் என எச்சரித்துள்ளனர். அத்துடன் தங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பா புலவு பிலக்குடிய…
-
- 0 replies
- 355 views
-
-
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக் கூடாது மஹிந்தவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள் என்கிறார் கம்மன்பில (க.கமலநாதன்) தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கைக்குள் மீண்டும் தலைதூக்குகின்றனர். இவர்களால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு உயிராபத்து ஏற்படும். எனவே அவருக்கு உரிய பாதுகாப்பை வழங் குமாறு நல்லாட்சி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக தூய்மையான ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தூய்மையான ஹெல உறுமய அமைப் பின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்க…
-
- 0 replies
- 354 views
-
-
நெடியவனை இன்டர்போலிடம் ஒப்படைக்க முடியாது – நோர்வே! விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரனை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நெடியவன் தலைமையிலான குழுவினரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவரை ஒப்படைக்குமாறு எழுந்த கோரிக்கைகளை நோர்வே மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் விடுதலைப் புலிகளின் தலைவராக நெடியவன் செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுவதோடு, புலிகள் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் குற்…
-
- 0 replies
- 415 views
-