ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
தேசிய அரசில் சில முரண்பாடுகள் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன அவற்றை பெரிதுபடுத்தக்கூடாது என்கிறார் பிரதமர் ரணில் (ப.பன்னீர்செல்வம்) கௌரவத்தைப் பகிர்ந்துகொள்வதை முதன்மைப்படுத்தாது நாட்டை முன்னோக்கிய பாதை யில் கொண்டு செல்வதில் இரண்டு பிரதான கட்சிகளும் முன்னின்று செயலாற்ற வேண்டுமென வலியுறுத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாடுகளின் முதலீடுகளுடன் நாடு அபிவிருத்தி செய்யப்படுமென்றும் தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் சில முரண் பாடுகள், பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. இப்பிரச்சினைகளையெல்லாம் பெரிதுபடுத்தி பூதாகரமாக்கிவிடக்கூடாது. இரு பிரதான கட்சிகளும…
-
- 0 replies
- 290 views
-
-
ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரை பிரயோகம் (எம்.எம்.மின்ஹாஜ்) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை விற்பனை செய்வதனை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி துறைமுக ஊழியர்கள் நீதிமன்றத் தடையுத்தரவினையும் மீறி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகமும் கண்ணீர்ப் புகைப் பிரயோகமும் மேற்கொண்டனர். இதன்காரணமாக லோட்டஸ் வீதி கலவர பூமியாக மாறியதை காணக்கூடியதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது துறைமுக ஊழியர்களுடன் சீன பிரஜை இருவரும் போராட்டத்தில் இணைந்திருந்தமை அனைவரினதும் அவதானத்திற்கு உள்ளாகியிருந்தது. அத்த…
-
- 0 replies
- 312 views
-
-
நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அதிகாரங்களை பகிர்வோம் மட்டக்களப்பில் ஜனாதிபதி உறுதி; புதிய அரசியலமைப்பு வரும் என்கிறார் (பெரியபோரதீவு, காங்கேயனோடை, பழுகாமம் நிருபர்கள் ) நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக நாங்கள் புதியதொரு அரசியலமைப்பை ஏற்படுத்திக்கொண்டு போகின்றோம். சிலர் இதனை தவறாகவும், பொய்யாகவும் பேசுகின்றார்கள். நாட்டை துண்டாடாத வகையில் நல்லிணக்கத்தைப் பலப் படுத்தி அதிகாரத்தைப் பகிர அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இதற்கான அடிப்படை நடவடிக்கைகள் சில மாதங்களில் நிறைவு செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மட்டக்களப்பில் தெரிவித்தார். அரசாங்கத்தை …
-
- 0 replies
- 352 views
-
-
12 ஆயிரம் முன்னாள் புலிகளை மீண்டும் கைதுசெய்யவேண்டும் சர்வதேச நீதிபதிகளை ஏற்க முடியாது என்கிறார் சம்பிக்க (ஆர்.யசி ) சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க அரசாங்கம் தயாராக இல்லை; சர்வதேச நீதிபதிகளை அனுமதித்து தமிழ் மக்களின் நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என தமிழர் தரப்பு எதிர்பார்க்கின்றது என்றால் அது தமிழீழத்தை தரவேண்டும் என்று கோருவதற்கு சமனாகும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இராணுவம் விதிமுறைகளை மீறி செயற்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராயவேண்டும். அதேபோன்று புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் விசாரிக்கவேண்டும். விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேரை ம…
-
- 1 reply
- 454 views
-
-
பாடசாலை மாணவர்கள் மூவர் மாயம் -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள், காணாமல் போயுள்ளதாக அவர்களது பெற்றோரால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை (30) இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியினை சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது 14), ஹென்றிமோகன் அபிசேக் (வயது 14) மற்றும் டியுக் டியோன் (வயது 14) ஆகிய மூன்று மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். மதியம் வீட்டில் உணவு அருந்திவிட்டு வெளியில் சென்று, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று மாணவர்களும் மாலை ஆகியும் …
-
- 2 replies
- 367 views
-
-
கருணாவுக்கு விசேட விருது-தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்து முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் என தாய்நாட்டுக்கான இரா ணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற, இலங்கை இராணுவத்தினருக்கு கருணா பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டம் வழங்கப்படுள்ள நிலையில், கருணாவுக்கு விருது ஒன்றை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தை மீளப்பெற வேண்டும் என தாய்நாட்டு க்கான இராணுவத்தினரின் அமைப்பின் இணைப…
-
- 3 replies
- 674 views
-
-
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை திறப்பு விழா களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதியின் திறப்பு விழா இன்று (01) நடைபெற்றது.(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்) - See more at: http://www.tamilmirror.lk/190834/த-றப-ப-வ-ழ-#sthash.FE8DHrWE.dpuf
-
- 4 replies
- 440 views
-
-
மைதானத்தை உழுத உழவு இயந்திரத்தை மறித்து மக்கள் எதிர்ப்பு – காவல்துறையினர் சமரசம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவில் பெரியபரந்தன் தாரணிகுடியிருப்பு வானவில் விளையாட்டு மைதானத்தை இன்று காலை உழவு செய்த உழவு இயந்திரத்தை மறித்து பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனா். குறித்த காணி தங்களுடையது என இருவா் உரிமை கோரி வருகின்றனா். இதேவேளை குறித்த காணியை தங்கள் கிராம இளைஞர்களும், முன் பள்ளி சிறாா்களும் 1991 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகின்றனா் என பொது மக்களும் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில் குறித்த காணி தொடா்பில் அடிக்கடி உரிமை கோருகின்றவா்களுக்கும் தாரணி குடியிருப்பு மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவிவந்திருக்…
-
- 0 replies
- 436 views
-
-
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் உடைத்தால் கூட பணம் போதாது : பிரதமர் நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தையும் உடைத்தால் கூட அபிவிருத்திகளுக்கு பணம் போதாது எனவும் சர்வதேசத்துடன் இணைந்தே நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடவத்தை முதல் தம்புள்ள வரையிலான மத்திய அதிவேக பாதையின், 2ஆம் கட்ட நிர்மாணப்பணிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிரியுல்ல கொடகமன பகுதியில் இன்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், நாட்டில் தற்போது பல வலயங்களாக அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இரு பிரதான கட்சிகள் ஒன்றினைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிச…
-
- 0 replies
- 330 views
-
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை சிலர் மறந்து செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது (ப.பன்னீர்செல்வம், எம்.எம். மின்ஹாஜ்) யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை இன்று பலர் மறந்து செயற்படுகின்றனர். இது பெரும் கவலையை ஏற் படுத்துகிறது என சபையில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இவ்வாறானதோர் நிலையிலும் மறைந்த எம்.எச்.மொஹமட் இலங்கையராக வாழ்ந்ததோடு பிரிவினையை எதிர்த்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மறைந்த முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமாக பதவி வகித்த எம்.எச். மொஹமட் தொடர்பான அனுதாபப் பிரேரணை நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்த…
-
- 27 replies
- 1.2k views
-
-
யாழில் வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எண்மருக்கு பிணை யாழில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு யாழ் மேல் நீதிமன்றம் இன்று கடும் எச்சரிக்கையின் பின் பிணை வழங்கியது யாழில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட “றோக் ரீம்” என்ற குழுவை யாழ் பொலிஸார் தீவிர தேடுதலில் பின் கைது செய்தனர். இக்குழுவின் தலைவராக பிரபல பாடசாலையின் மாணவத்தலைவனும் , அவுஸ்ரேலிய மினி ஒலிம்பிக் தடகள போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற செந்தூரன் என்பவர் இனம் காணப்பட்டார். குறித்த நபர்களிடம் இருந்து வாள்கள் , கைக்கோடரிகள், மற்றம் கைக்குண்டு போன்றன மீட்…
-
- 2 replies
- 424 views
-
-
கருணாவுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. அரசாங்க வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாக கருணா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நிதிமன்றில் தெரிவித்துள்ளனர். கருணாவின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனால் பிரதி ஞாயிறு தோறும் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு …
-
- 1 reply
- 491 views
-
-
பத்திரிகை கண்ணோட்டம் (காணொளி) 01 -02 -2017
-
- 0 replies
- 487 views
-
-
யாழ்ப்பாண வாள்வெட்டு கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைது யாழ்ப்பாண வாள் வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் அரசடி வீதியில் வாள்களைக் கொண்டு நபர்களைத்தாக்கியதுடன் வர்த்தக நிலையமொன்றை சேதப்படுத்திய வாள் வெட்டுக் கும்பலின் உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இவர்களுடன் நான்கு வாள்கள், ஒரு கைக்கோடாரி, கூரிய ஆயுதமொன்று, ஒரு மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். http://globaltamilnew…
-
- 1 reply
- 2k views
-
-
வெள்ளோட்டத்துடன் நிற்கும் நெடுந்தாரகை நெடுந்தீவு மக்களின் கடல் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட ´´நெடுந்தாரகை´´ படகு வெள்ளோட்டம் விட ப்பட்டதன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடவே இல்லை என, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டி யுள்ளார். இந்தநிலையில், உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும், என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வட மாகாண சபையின் 83ம் அமர்வு நேற்றையதினம் நடைபெற்றது.இதன்போதே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நெடுந்தீவுக்கா…
-
- 1 reply
- 416 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் ; கருத்து வெளியிட்ட ஜோதிடர் கைது ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் ஜோதிட கணிப்புக்களை வெளியிட்ட பிரபல ஜோதிடரான விஜித் ரோஹன விஜயமுனி குற்றபுலனாய்வு திணைக்களத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 26 இல் மரணிப்பார், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவார் மற்றும் கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாவார் என்று ஆருடம் கூறிய காணொளி ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/16062
-
- 2 replies
- 492 views
-
-
மைத்திரியுடன் உள்ளவர்கள் மஹிந்தவை ஒதுக்கியதற்கு மஹிந்தவே காரணம் சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடவே முன்கூட்டியே தேர்தலை நடத்தினார் என்கிறார் எஸ்.பி. (ப.பன்னீர்செல்வம்) நாட்டில் 46பேர் மீது யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டதாலும் சர்வதேசம் இலங்கையை தனிமைப்படுத்தியதாலும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே அவசர அவசரமாக மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தலை நடத்தினார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகவும் சமல் ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராகவும் அன்று அறிவித்திருந்தால் மஹிந்தவுக்கு இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது என்று…
-
- 0 replies
- 234 views
-
-
‘மிருசுவில் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கவும்’ மிருசுவிலில், பொது மக்கள் பலரைக் கொன்றதாகக் குற்றம் காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, தாய் நாட்டுக்கான போர்வீரர்கள் நிறுவனம், ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. தாய் நாட்டுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்த பதவிநிலை அதிகாரியான சார்ஜன்ட் ரத்னாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர், மேஜர் அஜித் பிரசன்ன கோரியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ஆவனஞ்செய்ய வேண்டுமென, அக்கடிதத்தில் அவர் கேட்டுள்ளார். …
-
- 0 replies
- 372 views
-
-
கிழக்கு முதலமைச்சரின் பதில் இல்லை வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியபோதிலும் அவரிடமிருந்து இன்னமும் பதில் கிடைக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணசபை அமர்வில் நேற்குக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில், 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் இரு மாகாணசபையும் இணக்கம் தெரிவித்தால் பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டது. அதற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடமிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை…
-
- 0 replies
- 160 views
-
-
மாலபே மருத்துவக் கல்லூரி பட்டதாரிகள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்துகொள்ள முடியும் : நீதிமன்றம் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரிகள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்துகொள்ள முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. மலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். அதற்கான விண்ணப்பம் மருத்துவர்கள் சபையால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மாணவி இது தொடர்பில் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மேன்முறையீட்டு மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போதே மேற்கண்டவாற…
-
- 1 reply
- 457 views
-
-
வட மாகாண தொண்டராசிரியர்களுக்கு மாத இறுதிக்குள் நியமனம் ஆளுநா் றெஜினோல்ட்குரே:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பெப்ரவரி நிறைவுக்குள் வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உறுதி அளித்துள்ளார். 31.01.2017 பிற்பகல் 3.00 மணியளவில் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண தொண்டர் ஆசிரியர் பிரதிநிதிகளைச் சந்தித்த வடமாகாண ஆளுநர் மேற்படி உறுதிமொழியினை வழங்கியதுடன் அமைச்சரவை அனுமதிப் பத்திரம், நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதற்கு என நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் என்பனவற்றையும் வடமாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளி…
-
- 0 replies
- 222 views
-
-
விக்னேஸ்வரனைப் போன்றே பிரதமரும் ஓர் கடுமையான தமிழ் இனவாதியாவார் – ஞானசார தேரர் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனைப் போன்றே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் இனத்திற்கு சார்பான ஓர் தலைவராகவே ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் விக்னேஸ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது என தெரிவித்துள்ள அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் முக்கிய நிறுவனங்களுக்கான உயர் பதவிகளில் சிங்களவர் …
-
- 0 replies
- 365 views
-
-
கொட்டும் பனியிலும் இரவோடுஇரவாக 2 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது பிரதான வாயில் முன்னால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனி இரவையும் தாண்டி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ளது. விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை நேற்று விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது நேற்றைய தினம் விடுவிக்கப்படவில்லை. இதன்காரணமாக நேற்று மாலை முதல் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடியிருப்பு மக்கள் போராட்டத்…
-
- 0 replies
- 252 views
-
-
யாழில் வெளிவிவகார கொன்சியூர் அலுவலகம்-கூட்டு எதிர்க்கட்சி போர்க்கொடி வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் காரியாலயம் யாழ்ப்பாணத்தில் திறந்தது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி அதன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறித்த காரி யாலயம் எந்த அடிப்படையில் திறக்கப்பட்டது என அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புவதாக அவர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சுடன் நேரடியாக தொடர்புகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருக்கும் வேளையில், வெளிவிவகார அமைச்சர் சம்பிரதாயத்தை மீறி இவ்வாறான ஒரு விடயத்தை ஏன் செய்தார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என தினேஷ் குணவர்தன இதன்…
-
- 0 replies
- 322 views
-
-
யாழில் வீதிகளில் குப்பை கொட்டுவதில் அரச அதிகாரிகளே முன்னிலையில் யாழ்.குடாநாட்டில் வீதிகளில் குப்பைகளை கொட்டுவதில் அரச அதிகாரிகளே முன்னிற்கிறார்கள். அதிலும் குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரிகளே முன்னணியில் உள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் டெங்கு பரவல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பிர தேச செயலாளர் பிரிவிலும் உள்ள பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் தங்கள் பிரதேசங்களில் உள்ள குறை நிறைகளை தெரிவித்தனர் இதில் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் …
-
- 0 replies
- 297 views
-