Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தற்போதைய காலநிலையை கருதி பாடசாலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கோரிக்கை நாடளாவிய ரீதியில் நிலவும் அசாதாரண காலநிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்ற த்தைக் கொண்டுவருவது குறித்து கல்வி அமைச்சு சாதகமாகப் பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கையொன்று முன்வைக்கப்ப ட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கையை இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விடுத்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாடளாவிய ரீதியில் தற்போது மிகவும் குளிரான காலநிலை நிலவுகிறது. குளிர்காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படு கின்றன. பாடசாலை மாணவர்கள் …

  2. கிளிநொச்சியில் வேகமாக பரவுகிறது டெங்கு .கிளிநொச்சியில் கடந்த முதலாம் திகதி முதல் நேற்று வரை 23 பேருக்கு டெங்கு தொற்றியுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஏழு பேருக்கு காணப்பட்ட டெங்கு நேற்றுமுன்தினம் பத்தாம் திகதி 14 பேருக்கு காணப்பட்டது. ஆனால் நேற்று 11 ஆம் திகதி 23 உயா்ந்திருக்கிறது. நாளுக்குநாள் வேகமாக பரவுகிறது டெங்கு எனவே பொது மக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கடந்த பத்து நாட்களில் ஆயிரம் பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. http://o…

  3.  ‘விமலின் வாயை மூடவே முடியாது’ “கைதுசெய்து, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவை, ஏழு சிறைகளுக்கு அனுப்பினாலும் அவருடைய வாயை மூடவே முடியாது” என்று, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வாடகை அடிப்படையில் அமர்த்தப்பட்ட 40 வாகனங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், செவ்வாய்க்கிழமை (10) கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். …

  4. இராணுவத்திற்கு புனர்வாழ்வா? கொதிக்கிறார் சரத்வீரசேகர இராணுவம் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தின் நல்லிணக்க செயலணி முன்வைத்துள்ள யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையினால் இராணுவத்துக்கு பாரிய அவமானம் ஏற்படும் என முன்னாள் சிரேஷ்ட கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார். உலகில் எந்தவொரு நாட்டிலும் அந்நாட்டின் இராணுவம் புனர்வாழ்வளிக்கப்பட்டதில்லை. இராணுவம் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதாயின், இராணுவத்திலுள்ளவர்கள் மனநோயாளர்களா? எனவும் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். இராணுவத்துக்கு எதிரான மிகப் பயங்கரமான யோசனைகள…

  5. ஊழல் குற்றச்சாட்டு: வட மாகாண அமைச்சர்களுக்கு எதிராக 23 பேர் சாட்சியம்! வட மாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கென வடக்கு முதல்வரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் முன்னிலையில் 21 பேர் சாட்சியமளித்துள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக பல ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக வடக்கு முதல்வரால் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் இருவரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவானது கடந்த இரு தினங்களாக மேற்கொண்ட விசாரணையில், நேற்று 9 பேரும் நேற்று முன்தினம் 14 பேரும் சாட்சியமளித்துள்ளனர். நான்கு அ…

  6. வவுனியாவில் வறட்சி காரணமாக குடிநீர் இன்றி மக்கள் அவதி வவுனியாவில் பல இடங்களில் கடும் வறட்சி காரணமாக கிணற்றுக்குள் தண்ணீர் இன்றி மக்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர். செட்டிகுளம் பாவற்குளம் 6ஆம் யூனிட்டில் அதனை அண்டிய பகுதியிலுள்ள பொதுமக்கள் அப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றில் வறட்சியின் காரணமாக குடிநீர் வற்றியுள்ளது இதன் காரணமாக குடி நீரினைப் பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாக நேற்றைய தினம் பாவற்குளம் பகுதியில் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்னி மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். அப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றிலே பல காலங்கள…

  7. இந்தியர்கள் இருவர் கைது.! இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு 53 கிலோ கிராம் கஞ்சா கொண்டு வந்த இரு இந்திய பிரஜைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/15361

  8. கண்டியில் 3 நோயாளர்கள் திடீர் மரணம் : 69 ஆவது சிகிச்சை பிரிவு மூடல் : நோயாளர்கள் அதிரடியாக வெளியேற்றம்: காரணம் வெளியாகியது.! கண்டி போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் 69 ஆவது சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் 3 பேர் திடீரென உயிரிழந்ததையடுத்து, குறித்த சிகிச்சைப் பிரிவில் இருந்த ஏனைய நோயாளர்கள் வெளியேற்றப்பட்டு குறித்த சிகிச்சைப் பிரிவு நேற்று மாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக் கிழமை திடீரென உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மேற்கொண்ட மருத்துவ சோதனையில் குறித்த நபர்கள் இன்ஃபுலுவென்சா ஏ எச்1என்1 என்ற…

  9. மஹா வம்சத்தின் புதிய பதிப்பு ஒன்று நாளை வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜோர்ஜ் டெர்னரினால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட மஹாவம்ச பிரதியே இவ்வாறு நாளை வெளியிடப்படவுள்ளது. மத்திய கலாச்சார நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். காலி கோட்டை துறைமுக அதிகாரசபையின் சுற்றுலா பங்களாவில் நாளை மாலை 5.00 மணிக்கு நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. பிரதமரின் ஆலோசனைக்கு அமைய மஹாவம்ச நூல் வெளியீடு நடைபெறவுள்ளது. இலங்கையின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வதற்கான ஆய்வு நூலாக மஹாவம்சம் கூறப்படுகின்றது. மஹானாம…

  10. இலங்கையில் வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இன்று புதன்கிழமை தமிழர்கள் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாட்டில் திருகோணமலை நகரில் சட்ட உதவி மையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு , வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் உருவாக்கல், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுல், சகல அரசியல் கைதிகளும் வி்டுதலை செய்தல், உள் நாட்டில் நடந்தேறிய சித்திரவதைகள் , படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட…

  11. கனடாவுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர். அந்நாட்டு ஊடகங்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். புலம் பெயர் தமிழர்கள் தொடர்பாகவும், விசா கோரிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களையும் இதன்போது ஊடகங்களுடன் பகிர்ந்துக் கொண்டார். வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு கனடாவின் ஒத்துழைப்பின் அவசியம், கனடாவுடன் மேற்கொள்ளவுள்ள இரட்டைநகர் ஒப்பந்தம் தொடர்பாகவும் இதன்போது விவாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.tamilwin.com/politics/01/131008?ref=home

  12. நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த பரிந்துரையின் ஊடாக படையினருக்கு பாரிய அவமரியாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட கடற்படை அதிகாரியான ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உலகின் எந்தவொரு நாட்டிலும் படையினருக்கு புனர்வழ்வு அளிக்கப்பட்டதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையின் ஊடாக படைவீரர்கள் விசரர்கள் என்றே கருதுகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இராண…

  13. கனடா பிரம்ரன் மாநகரசபைக்கும் வவுனியாவுக்குமான உறவுப் பாலத்தின் முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார். பிரம்ரன் மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனுடன் நூற்றுக்கணக்கான பிரம்ரன் வாழ் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மாநகர வளாகத்தில் சிறப்புரையை ஆற்றியதோடு, அங்கு கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களோடும் வடமாகாணத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறியிருந்தார். இதன்போது வடக்கில் முள்ளதண்டு பாதிப்புற்றவர்களுக்காக பிரம்ரன் மாநகர மக்களால் 45000 டொலர் நிதியுதவி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது…

  14. இந்த வருடத்துக்கான பாடசாலை பரீட்சைகளின் நேர அட்டவணையை இன்றைய தினம் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. க.பொ.த உயர் தரப் பரீட்சை க.பொ.த உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. க.பொ. த சாதாரண தர பரீட்சை க.பொ. த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/s…

  15. நல்லிணக்க ஆலோசனை செயலணியின் அறிக்கையை இலங்கை அரசு அலட்சியப்படுத்துகிறது: அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு இலங்கையில் பல தசாப்தங்களாக நடந்த உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச சட்டத்தின்படிவிசாரித்து வரும் நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழுவின் அறிக்கையை இலங்கை அரசு புறக்கணித்து வரும் வரை, அந்நாட்டில் உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உரிய நியாயம், உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவை கிடைப்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கும் என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. …

  16. மங்கள சமரவீர போரிஸ் ஜோன்சனை சந்தித்துள்ளார். பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமாக சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளர் போரிஸ் ஜோன்சனை சந்தித்துள்ளார். இச்சநதிப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளருக்கு விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.…

  17. கிழக்கின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அவுஸ்திரேலியா கிழக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வவு இன்றையதினம் நடைபெற்றது. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் , அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரயிஸ் ஹட்செசன் மற்றும் திறன் அபிவிருத்தி,தொழிற் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் பங்கேற்றனர். கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்த…

  18. கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோல் விழா 2017 இல் தரம் ஒன்றில் சோ்த்துக்கொள்ளும் மாணவா்களுக்கான கால்கோல் விழா கிளிநொச்சியில் பல பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்றது. அந்த வகையில் கிளிநொச்சி கரைச்சிக் கோட்டத்தில் அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கால்கோல் விழாவில் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள 65 மாணவா்கள் பெற்றோர்கள் சகிதம் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனா். சா்வமத தலைவா்கள் மற்றும் பாடசாலையின் அதிபா் ஆசிரியா்கள் உட்பட பலரின் ஆசிகளுடன் மாணவா்களின் தங்களது பாடசாலை வாழ்க்கையின் முதல்நாளை ஆரம்பித்துள்ளனா். அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் 2017 ஆம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் தரம் ஒன்றுக்கு …

  19. யாழில் மாமர செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை யாழில் மாமரச் செய்கையை ஊக்குவிக்க மாகாண நிதி முலம் 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளததாக. யாழ். மாவட்ட விவசா யத் திணைக்களத்தின் மேற்பார்வையாளர் இளங்கோபன் தெரிவித்தார். இது பற்றி அவர்மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாமரச்செய்கையை இவ் வருடம் ஊக்குவிக்கும் முகமாக மாகாண நிதி முலம் 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 440 மாமரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டுள்ளது.மாமரமானது 25க்கு 25 அடி என்ற இடைவெளியில் நடுகை செய்யப்பட்டு பெரும் விருட்சங்களாக வளர அனுமதிக்கப்படுகின்றது. இதனால் மாம ரத்தில் சகல கிளைகளுக்கும் போதிய அளவு சூரிய ஒளி கிடை…

  20. யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் பொது மக்களுக்கான விசேட அறிவுறுத்தல் சுகாதார நிறுவனங்களில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்தல் எதிர்வரும் 16.01.2017 திங்கள் முதல் யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் பிளாஸ்ஸ்ரிக் மற்றும் பொலித்தீன் மற்றும் உணவு பொதி செய்வதற்கான ‘லன்ச் சீட்’ கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதிமேதகு சனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச நிறுவனங்களில் பிளாஸ்டீக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று சமூகத்தில் பிளாஸ்டீக் மற்றும் பொலித்தீன் பாவனை பொதுவான விடயமாக மாறியுள்ளதுடன், …

  21. வவுனியாவில் கோரச் சம்பவம் : இளைஞனை அடித்து கொலை செய்த நபர்கள்..! வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் ஒருசில நபர்களால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த 25 வயதுடைய பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்ற குடும்பஸ்தர் இன்று பிற்பகல் பிரதேசவாசிகள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. சடலம் வீட்டிலேயே உள்ளது. சம்பவ இடத்தில் விரைந்த வவுனியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறித்த குடும்பஸ்தரின் தாய், தந்தையினர் சுவிஸ் நாட்டில் வசித்து வருவத…

  22. கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக புனர்வாழ்வுபெற்ற போராளிகளுக்கு உதவித் திட்டங்கள் இன்று(11) வழங்கி வைக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் 16 குடும்பங்களுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது. யுத்தத்தில் இறந்த போராளிகளது குடும்பங்கள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் மற்றும் ஏனைய போராட்ட குழுக்களில் இருந்து இறந்தவர்களது குடும்பங்கள் ஆகியோரை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு குறித்த செயற் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஒவ்வொரு க…

  23. யாழில் பொலிஸார் இலஞ்சம் பெறுவதாக எவரும் முறையிடுவதில்லை-பொலிஸ் அத்தியட்சகர் கணேசராஜா பொலிஸார் இலஞ்சம் பெறுகின்றார்கள் என அனேகர் கூறுகின்ற போதிலும் அது தொடர்பிலான முறைப்பாடுகள் யாழில் கிடை க்கப்பெறுவதில்லை என யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசராஜா தெரிவித்தார். யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்று யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போது வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கை யில் யாழில் கடமையிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெறுவதாக மக்கள் கூறி வருகின்ற போதிலும் யாழில் இவை தொடர்பில் ஒரு முறைப…

  24. நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் பரிந்துரைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்துங்கள் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 3 ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கையின் பரிந்துரைகளில் நீதியும் உண்மையும் நிலைநாட்ட வேண்டும் என்பதே மக்களின் அபிலாசைகளாக காணப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டிலும் இந்த பரிந்துரைகளே போன்றே தீர்மானம் நிறைவேற்றப…

  25. யாழ்.சின்னக்கடை பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் யாழ் குருநகர் சின்னக்கடை மீன் சந்தை தொகுதியில் உள்ள மாட்டிறைச்சி கடைகளின் மாமிச கழிவுகளை சந்தை தொகுதிக்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் கொட்டுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சந்தை தொகுதிக்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் சந்தைக்கு வருபவர்கள்ர் நாற்றத்தை சகித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் நாய் பூனை போன்ற விலங்குகள் இறைச்சிகழிவுகளை வீதிகளில் வைத்து உண்கின்றன. பின்னர் அவை அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக நாய்கள் வெறித்தனமாக ஒன்றை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.