ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
படகுகளை விடுவிக்க இலங்கை பரிசீலனை... தமிழக மீனவர்கள் மகிழ்ச்சி ராமேஸ்வரம் : இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பது குறித்து பரிசீலனை செய்ய இருப்பதாக இலங்கை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. படகுகளையும், மீனவர்களையும் மீட்டு தர கோரி மீனவர்கள் போராடுவதன் விளைவாக சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களும், படகுகளும் விடுவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 122 படகுகளையும் அதில் இருந்த உபகரணங்களையும் இலங்கை அர…
-
- 0 replies
- 318 views
-
-
வெளிநாட்டு பல்கலைகழக மாணவிகளின் உயிரையும் மானத்தையும் பாதுகாத்த அதிபர்.! கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் வெளிநாட்டு பல்கலைகழக மாணவிகள் இருவரின் உயிரையும் மானத்தையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் பாதுகாத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு குறித்த புகையிரதத்தில் மட்டக்களப்பில் தொண்டர் பணியாற்றுவதற்காக ஒருநாட்டின் பல்கலைகழக மாணவிகள் இருவர் வருகை தந்துள்ளனர். அவர்களை 6 இளைஞர்கள் கத்திமுனையில் சுற்றிவளைத்து சிறைப்பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். சுமார் 3 மணித்தியாலங்களாக இம்மாணவிகள் குறித்த குண்டர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு ஜீவமரணப்போராட்டத்தில் இருந…
-
- 0 replies
- 404 views
-
-
பௌத்த மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இன்றி அரசியல் சாசன சரத்துக்கள் உருவாக்கப்படாது – ஜனாதிபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பௌத்த மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இன்றி அரசியல் சாசன சரத்துக்கள் உருவாக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய அரசியல் சாசனத்தில் நாட்டுக்கு பாதகமான எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய அரசியல் சாசனத்தில் நாட்டை பிளவடையச் செய்யக் கூடிய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை எனவும் உத்த…
-
- 2 replies
- 336 views
-
-
ஒன்றுபட்ட சக்தியாக இலட்சியத்தை வென்றெடுக்க நீண்டகாலமாக பயணிக்கின்றோம் “ஒன்றுபட்ட சக்தியாக இலட்சியத்தை வென்று எடுகின்ற பாதையில் மிக நீண்டகாலமாக நாங்கள் பயணிக்கின்றோம் இன்று எமது மக்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை பெறும் பொருட்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது - என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சிக் கட்சியின் செயலகமான அறிவகத்தில், கிளையின் வருட இறுதி ஒன்று கூடல் நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கூறினார். சனிக்கிழமை (31) நடைபெற்ற இந் நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்…
-
- 0 replies
- 147 views
-
-
ராஜபக்சே எச்சரிக்கையை உதறித்தள்ளினார்: இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த சிறிசேனா சபதம் இலங்கையில் ராஜபக்சேயின் எச்சரிக்கையை உதறித்தள்ளிவிட்டு, நல்லிணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த அதிபர் சிறிசேனா சபதமிட்டுள்ளார். கொழும்பு: இலங்கையில் 1983-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் கால் நூற்றாண்டைக் கடந்து நீடித்தது. கடந்த 2009-ம் ஆண்டு, மே மாதம் 18-ந் தேதி இந்தப் போர் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அங்கு தமிழர்களும், சிங்களர்களும் இணக்கமாக வாழ்கிற நிலை உருவாகவில்லை. சிங்களர்களைப்போன்று தமிழர்களுக்க…
-
- 0 replies
- 375 views
-
-
வடக்கில் உயர் காவல்துறை அதிகாரிகள் இருவர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டு வடக்கில் உயர் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கில் கடமையாற்றி வரும் துணை காவல்துறை அத்தியட்சகர்கள் இருவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதேச வர்த்தகர்கள் மற்றும் காவல் நிலையமொன்றின் பொறுப்பதிகாரி ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் வடக்கிற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் சரத் குமாரவிடமும், காவல்துறை தலைமையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். பணமாகவும், இலத்திரனியல் சாதனங்களாகவும் ஒரு துணை காவல்துறை அத்தியட்சகர் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில…
-
- 0 replies
- 220 views
-
-
இனப்பிரச்சினை தீர்வுக்காகவே பொறுமையாக இருக்கின்றோம் நேர்மையாக செயற்படின் தீர்வைக் காணலாம் என்கிறார் டிலான் (ரொபட் அன்டனி) மலர்ந்திருக்கும் புதிய வருடமானது நாட்டின் அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் ஒரு தீர்க்கமான காலப்பகுதியாக அமையப்போகிறது. அனைத்து கட்சிகளும் நேர்மையுடன் அணுகினால் நிச்சயம் இந்த வருடத்துக்குள் அதிகாரப் பகிர்வுடன் தீர்வுத்திட்டத்தை அடைய முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். தேசிய அரசாங்கத்துக்குள் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனாலும் அந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் தேர்தல் முறை …
-
- 0 replies
- 241 views
-
-
பிரதான வழிநடத்தல் குழுவிலிருந்து விலகுவதானது சாணக்கியமானதல்ல தீர்வு இலக்கை அடையும்வரை பயணிப்போம் என்கிறது கூட்டமைப்பு (திருகோணமலைநகர்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரை யும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் பெயர் குறிப்பிட்டு அரசியல் வழிப்படுத்துதல் குழுவிலிருந்து இராஜினாமா செய்யவேண்டுமென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில உறுப்பினர்களே கோரிக்கைவிடுவது அவசரப்படும் விடயமாகும். இராஜதந்திர ரீதியாக உள்ள சாதகநிலையை இழந்து இனவாதக் குழுக்களுக்கு சாதகமாக அமையும் சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது. எமது இலக்கை அடையும் வரைவழ…
-
- 0 replies
- 155 views
-
-
‘எனக்கு இல்லமா?’ தெரியாது என்கிறார் சம்பந்தன் வி.நிரோஷினி “மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தங்கியிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தை எனக்கு வழங்குவதாக வெளிவரும் செய்தி தொடர்பில், எனக்கு எதுவும் தெரியாது” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் இல்லம், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பில் வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது, “மறைந்த முன்னா…
-
- 0 replies
- 232 views
-
-
மேலும் இரு இராஜாங்க அமைச்சர்கள் இராஜினாமா? ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிப்போருக்கு இடையிலான தீர்க்கமானதொரு கலந்துரையாடல், இம்மாதம் இரண்டாவது வார காலப்பகுதியில் இடம்பெறவுள்ளதாக, அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே, இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருப்பவரொருவர் தெரிவிக்கின்றார். இந்தக் கலந்துரையாடலின் போதே, அரசாங்கத்தை விட்டு விலகுவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றும், அவர் குறிப்பிடுகின்றார். இந்தக் கலந்துரையாடலின் போது, …
-
- 0 replies
- 227 views
-
-
புதிய அரசியலமைப்பு தொடர்பில் 3 நாட்களுக்கு த.தே.கூ ஆராயும் வி.நிரோஷினி “எதிர்வரும் 9, 10, 11ஆம் திகதிகளில், நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்புத் தொடர்பாக ஆராயவுள்ளோம். இதற்கமைய, 6ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி கலந்தாலோசிக்கவுள்ளோம்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலுக்கு, சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் சுட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், சுட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள…
-
- 0 replies
- 256 views
-
-
அரசிலிருந்து விலகுவது ஆணையை மீறும் செயல் மஹிந்தவின் பகல்கனவைக் கண்டு ஏமாறக்கூடாது என்கிறார் ராஜித (ஆர்.யசி ) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன புரிந்துணர்வு அடிப்படையில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரை எவரும் அரசாங்கத்தை குழப்பக்கூடாது. அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது மக்கள் ஆணையை மீறும் செயற்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளரும் சுகா தார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் பகல்கனவை கண்டு ஏமாந்துவிட வேண்டாம் என வும் அவர் குறிப்பிட்டார். தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் …
-
- 0 replies
- 267 views
-
-
2017ஆம் ஆண்டு முகிழ்ந்து வருகிறது. புதிய ஆண்டில் எல்லா வளமும் எல்லா நலமும் எல்லோருக்கும் கிடைக்க இறைவனின் பேரருளை வேண்டி நிற்கின்றோம். இந்த உலகப்பிரபஞ்சம் முழுமையையும் படைத்து காத்து அருளும் இறைவனின் பேரருள் இன்றி அணுவும் அசையாதென்ற உண்மை களுக்கு மத்தியில் இறைநம்பிக்கையை நம் இளம் சந்ததியிடம் ஏற்படுத்துவதே மனிதம் வாழ்வதற்கான ஒரே வழியாகும். ஆன்மிகம் என்பது மனிதனை தெய்வமாக்குவது. ஆன்மிகம் இல்லாத வாழ்வு ஒளியில்லாத வீடு போன்றது. எனவே ஆன்மிகப் பேரொளி நம் இதயங்களில் என்றும் ஒளிர வேண்டும். ஆன்மிகம் என்பதை பலரும் பலவாறாக பொருள் படுத்துகின்றனர். சைவ சித்தாந்தம் கூறும் தத்துவமே ஆன் மிகம் என்பர் ஒரு சாரார். துவைதம், அத்வை தம் என்ற தத்துவப் பாகங்களே ஆன்மிகம் என்பது இ…
-
- 1 reply
- 359 views
-
-
நாடளாவிய ரீதியில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புதுவருடத்தை வரவேற்றனர் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 2017ஆம் ஆண்டை மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். 2017ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில், திருகோணமலை காளி கோயிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதேவேளை,திருகோணமலை புனித மரியாள் தேவாலயத்தில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. புத்தாண்டு பிறப்பை மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் அளித்து மக்கள் வரவேற்றனர். நீர்கொழும்பு – தளுபத்தை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதன…
-
- 1 reply
- 345 views
-
-
வடக்கு கடற்பரப்பினூடான போதைப்பொருள் கடத்தலுடன் இந்திய மீனவர்களுக்கு தொடர்பு இலங்கையின் வடக்கு கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் இந்திய மீனவர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடல் மார்க்கமாக இடம்பெறுகின்ற போதைப் பொருள் கடத்தலுக்கு முற்றுபுள்ளி வைக்க இதுவரை முடியாமற்போனமைக்கு காரணம் என்ன? மாதகல், வடமராட்சி கிழக்கு, மன்னார், தலைமன்னார் உள்ளிட்ட கடற்பரப்புக்களில் அதிகளவிலான கஞ்சா அண்மைக்காலமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 1600 கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் இரண்டு கிலோகிராம் கொக்கேய்ன் ஆகியன வடக்குகடற்பரப்பில் க…
-
- 0 replies
- 332 views
-
-
அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் காலத்தை இழுத்தடிக்க முடியாது – வியாழேந்திரன் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அரசியல் தீர்வு தொடர்பில் கருத்து வெளியிட்டார். http://newsfirst.lk/tamil/2017/01/அரசியல்-தீர்வு-விடயத்தில/
-
- 0 replies
- 293 views
-
-
யாழ், கற்பிட்டி மக்களுக்கு கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டம் இவ்வருடம் யாழ்ப்பாணம் மற்றும் கற்பிட்டி குடாக்களில் வசிக்கும் மக்களுக்கு கடல் நீரைத் தூய்மைப்படுத்தி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கு தூய குடிநீரை வழங்கும் செயற்றிட்டம் இந்த வருடம் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் மழை நீரை தூய்மைப்படுத்தி மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். http://www.onlineuthayan.com/news/22110
-
- 0 replies
- 235 views
-
-
யாழ். பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக 26 முறைப்பாடுகள் -செல்வநாயகம் கபிலன் வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறைப்பாடுகள், யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி கந்தையா தியாகராஜா, சனிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ககையில், நெல்லியடி, அச்சுவேலி, யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, மானிப்பாய், வவுனியா, தெல்லிப்பழை, மல்லாவி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, கிளிநொச்சி, கொடிகாமம், மாங்குள…
-
- 0 replies
- 279 views
-
-
புதுவருடத்தில் நல்லாட்சி அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கில் பொது எதிரணியில் இருந்து 15 பேர் விரைவில் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இவ்வாறு இணைய கூடியவர்கள் ஊழல் மோசடி பட்டியலில் உள்ளடங்காதவர்கள் என்றும் அவர் கேசரிக்கு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/14968
-
- 1 reply
- 379 views
-
-
மூன்று இலட்சத்துக்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கையின் போது, இதுவரை 3 இலட்சத்து 401 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக கண்ணிவெடிசெயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளும் பொருட்டு அடையாளம் காணப்பட்ட பகுதிகளில்,காணப்பட்ட வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியமர அனுமதி வழங்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் மிக ஆபத்தான பகுதியாகவும் வெடிபொருட்கள் விதைக்கப்பட்ட பூமியாகவும் முகமாலைப்பகுதி காணப்படுகின்றது. தற்போது பதினொரு சதுர கிலோமீற்றர் வரையான பகு…
-
- 0 replies
- 310 views
-
-
புதிய அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாட்டின் பிரதான இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனவே தனிப்பட்ட சிலரின் தேவைக்கான மாத்திரம் அரசியலமைப்பினை உருவாக்க நாம் தயாராக இல்லை அவ்வாறான அரசிலமைப்பு உருவாகினாலும் அதனை நிறைவேற்றப்போவதும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/14972
-
- 0 replies
- 386 views
-
-
யாசகர்களுக்கிடையில் கத்திக்குத்து: ஒருவர் வைத்தியசாலையில் -ரஸீன் ரஸ்மின் “புத்தளம் மீன் சந்தைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இரண்டு யாசகர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், கத்திக்குத்துக்கு இலக்காகி அதிலொருவர் படுகாயமடைந்துள்ளார்” என புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன, தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இரண்டு யாசகர்களும் ஒரே இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியதுடன், அதில் ஒரு யாசகர், மற்றைய யாசகரின் கழ…
-
- 0 replies
- 309 views
-
-
வடக்கு மாகாணத்தின் செயற்பாடுகளுக்கு சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூறவேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையை தோற்கடிப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ இணங்காமையினாலேயே வடக்கு மாகாணசபையினால் பல தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2013ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையை அமைப்பதற்கு முன்னர், மாகாண சபை முறையை மாற்றியமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ அதனைத் தான்தோன்றித் தனமாகப் புறக்கணித்தார். …
-
- 0 replies
- 382 views
-
-
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3 ஆவது விசேட மருத்துவ முகாம் யாழில்… யாழ் போதனா வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3 ஆவது விசேட மருத்துவ முகாம் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அனுசரணையுடன் போதனா வைத்தியசாலை கிளினிக் பகுதியில் 01.01.2017அன்று நடைபெற்றது. இம் மருத்துவ முகாமில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டதால் இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதிக்குக் கீழ் செயலிழந்தவர்கள் பயன்பெற்றனர். யுத்தத்தினாலும் விபத்துக்களினாலும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது அன்றாட தேவைகளுக்குரிய டெற்ரோல் > ஓடிக்கலோன்> லைபோய்சோப் > செவ்எக்சல் முதலான பொருள்க…
-
- 0 replies
- 262 views
-
-
நாங்கள் கொண்டுவந்த அரசாங்கம் என்று கூறுகின்றனர்,நாங்கள் கொண்டுவந்த மாகாணசபை என்கின்றனர்.எங்களால்தான் முதலமைச்சர் வந்தார் என்கின்றார்கள். வேலைநடக்கவில்லையென்று மாவட்ட அபிவிருத்திக்குழுவில் வந்து ஒப்பாரி வைக்கின்றார்கள்.இதனைவிட கேவலம் என்ன உள்ளது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். நேற்று புதன்கிழமை பிற்பகல் மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீன்பிடியாளர்கள் மற்று பனம்பொருள் உற்பத்தியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமத…
-
- 1 reply
- 515 views
-