ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143411 topics in this forum
-
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, கடந்த அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த போது, 63.6 மில்லியன் பணத்தை ஏப்பம் விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள தமிழர் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தை 37 ஒழுங்கையில் ஆடம்பர தொடர் மாடி வீடுகளை நிர்மாணிக்க 2005- 2007 ஆம் ஆண்டுகளில் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் விண்ணப்பப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை ஆராய்ந்த நகர அபிவிருத்தி அதிகார சபை 7 மாடிகளை கொண்டதாக அந்த தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்க அனுமதி வழங்கியுள்ளது. எனினும் இரட்டை குடியுரிமை கொண்டுள்ள தமிழர் அமைச்சர் தினேஷ் குணவ…
-
- 0 replies
- 255 views
-
-
அரசாங்கத்திற்கு விட்டு கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லை – சுரேஷ் பிரேமசந்திரன். தமிழ்மக்கள் எவற்றினை எதிர்பார்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களோ அவைகள் இல்லாமல் நடுத்தெருவிற்கு வந்துவிடுவோமோ என்ற அச்சம் மக்களை ஆட்கொள்ளத்தொடங்கியிருக்கின்றது.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் …
-
- 0 replies
- 271 views
-
-
தீவுப்பகுதி அபிவிருத்தி பின்னடைவிற்கு காரணமானவர்கள் யார்? சரவணபவன் எம்.பி கேள்வி வடக்கில் தீவுப்பகுதிகளில் காணப்படும் அபிவிருத்தி என்பது,மிகவும் பின் தங்கிய நிலையிலேயே காண ப்படுகின்றது.இதற்கு காரணம் இவ்வாறான பகுதிகளை நேரடியாக நிர்வாகம் செய்யும் பிரதேச செயலக ங்கள்,அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனயீனமா என புரியவில்லை என யாழ்ப்பாணம் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஒளி விழாவில் பிரதம விருந்தி னராக கலந்து சிறப்பித்த யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவ ணபவன் தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில் உங்கள் பிரதேசங்களில் உள்ள …
-
- 0 replies
- 207 views
-
-
இயலாமையுடன் கூடிய மக்களுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இயலாமையுடன் கூடிய மக்களுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் இன்று 03-12-2016 கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை ஒன்பது முப்பது மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஆரம்பமாகிய இன் நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா , வடமாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் சார்பாக அவரது பிரதிநிதி ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் . மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இன் நிகழ்வி…
-
- 0 replies
- 343 views
-
-
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய பிரதேசங்களில் முஸ்லீம் மக்களை உடனடியாக குடியேற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். வாகரை பிரதேசத்தில் முஸ்லீம்களை குடியேற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசு உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் திங்கட்கிழமை மாலை வாகரை பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்திருந்தனர். அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ரகுலநாயகி தலைமையிலான அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதற்குத் தேவைய…
-
- 1 reply
- 678 views
-
-
கோப்பாயில் துணிகரம் 25 பவுண் நகை இன்று அதிகாலை கொள்ளை யாழ். கோப்பாயில் இன்று அதிகாலை கத்தி முனையில் இளம் தம்பதிகளை அச்சுறுத்தி ஏழு பவுண் தாலிக் கொடி.சங்கிலி, காப்பு, மோதிரம்உட்பட 2 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடி த்துத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்று அதிகாலை யாழ்.கோப்பாய் மத்தி அண்ணமார் கோவிலடியிலுள்ள வீடொன்றின் முன்னாள் வெளி ச்சம் வருவதைக் கண்ட வீட்டிலிருந்தவர்கள் கள்ளன்.... எனக் கத்தியவாறு வீட்டின் முன்னாலுள்ள மின்கு மிழை எரிய விட்டுள்ளார்கள். வீட்டின் பின்பக்கத்திலிருந்து முன்னரே எடுத்து வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு முன்கதவ…
-
- 0 replies
- 324 views
-
-
ஞானசாரரின் வருகைக்கு தடை உத்தரவு பிறப்பிப்பு வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை (02.12.2016) பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையும் மீறி வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடல் நிகழுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு விஜயம் செய்யும் பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் ஏறாவூர் நகரம், புன்னைக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தை அண்டிய பதுளை வீதியில் அரச மரம் உள்ள தனியார் காணியொன்றுக்குள் செல்வதாகவும் நிகழ்ச்சி நிரல் இடப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண…
-
- 3 replies
- 571 views
-
-
கஞ்சா, ஹெராயின் வரவைத் தடுக்க இலங்கையில் கடலோரக் காவல் நிலையம் தொடக்கம் கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, கடலோரக் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு காவல் நிலையத்திற்கு இரண்டு சுற்றுக்காவல் படகுகளும் கையளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். கடல் வழியாக ஹெராயின், கேரள கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் இலங்கைக்குள் கடத்தி வரப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இந்தக் கடலோர காவல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை, மன்னார் நகர்ப்பகுதியில் 24 மணிநேர கண்காணிப…
-
- 0 replies
- 370 views
-
-
'விடுதலை போராட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் புரிந்துகொள்ளும்' நடராசா கிருஸ்ணகுமார் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையில் போரில் உயிரிழந்தவர்களை உறவினர்கள் நினைவு கூருவதற்குத் தடை விதிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நல்லாட்சி அரசு சார்பில் அயல் உறவு அமைச்சர் மங்களசமரவீர ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், நேற்று வெள்ளிக்கிழமை (02) தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் விடுதலைக்காக இறுதி வரைப் போராடி வீரச்சாவை தழுவிக்கொண்டு மாவீரர்களை நினைவுகூரும் தகுதி ஒவ்வொரு தமிழர்களுக்கு…
-
- 0 replies
- 346 views
-
-
இடிந்து வீழ்ந்த பாலம் திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரபா நகர் பாலத்தின் ஒரு பகுதி நேற்று வெள்ளிக்கிழமை (02) மாலை 4.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். (படப்பிடிப்பு : தீஷான் அஹமட்) - See more at: http://www.tamilmirror.lk/187401/இட-ந-த-வ-ழ-ந-த-ப-லம-#sthash.FUA7nJD3.dpuf
-
- 0 replies
- 348 views
-
-
கூட்டு எதிர்கட்சி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்புகை பிரயோகம் பாராளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் கூட்டு எதிர்கட்சியின் ஆதரவாளர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி கூட்டு எதிர்கட்சியின் ஆதரவாளர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பாராளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற சுற்றுப்புற வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14118
-
- 0 replies
- 273 views
-
-
குருநகர் கடற்கரையில் கரையொதுங்கிய மீனவரின் சடலம் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் சடலம் குருநகர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநகர் இறால் வளர்ப்புத் திட்டப் பகுதியை சேர்ந்த ஆர்.ஜெகன் (வயது 31) என்ற நபரே சடலமாக கரையொதுங்கியுள்ளார்.நேற்று முன்தினம் குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற போது, ஏற்பட்ட சூறாவளியின் போது சுழியில் சிக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கடலிற்கு சென்ற மீனவர்கள் சடலத்தினைக் கண்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கி யதன் பிரகாரம் உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோ தனை க்காக ஒப்படைக்க…
-
- 0 replies
- 238 views
-
-
முகமாலை காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு.! எஸ் .என்.நிபோஜன் கிளிநொச்சி பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கடந்த 2000ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இன்றைய தினம் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் கையளிக்கப்பட்டுள்ளன. இந்திராபுரம் பிரதேசத்தில் 14 குடும்பங்களின் 25 ஏக்கர் காணியும், முகமாலையில் 55 குடும்பங்களுக்கான ஆயிரத்து 800 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்றைய …
-
- 5 replies
- 401 views
- 1 follower
-
-
கோத்தாபாய சுதந்திரக் கட்சியின் ஜானதிபதி வேட்பாளராக விடமாட்டோம் ரொபட் அன்டனி மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படாது பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கி ஒத்திசைவு பட்டியலை நீக்கவேண்டும் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவதில் தவறில்லை மாகாண சபைகளை கலைக்கின்ற அதிகாரத்தை புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்க மாட்டோம். மேலும் ஒத்திசைவு பட்டியலை நீக்குவதுடன் கலைக்கும் அதிகாரத்தையும் திருத்துவோம். இந்தியாவைப் போன்று நினைத்தவுடன் ஜனாதிபதி மாநிலத்தை கலைக்கும் அதிகாரம் இருக்காது. அதனை நாங்கள் வழங்க மாட்டோம். அவற்றை மூன்றிலிரண்டு பெரும…
-
- 0 replies
- 268 views
-
-
கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் மீது தாக்குதல் : வாழைச்சேனையில் சம்பவம் காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் மீது நேற்று இரவு 10 மணியளவில் இனந்தெரியாதோர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் வாழைச்சேனை, களுவன்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் பயணி ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன. தாக்குதலுக்குள்ளான பஸ் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இது தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டதுடன் கொழும்பு பயணத்தை கைவிட்ட நிலையில் மீண்டும் பஸ் காத்தான்குடிக்கு சென்றது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள…
-
- 0 replies
- 267 views
-
-
சிறையில் கருணா,திஸ்ஸவை சந்திக்க சென்ற கூட்டு எதிர்க்கட்சி முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி (கருணா அம்மான்) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரை சந்திப்பதற்காக கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சீ.பி. ரத்நாயக்க ஆகிய மூவருமே நேற்றைய தினம் நண்பகல் மகஸின் சிறைச்சாலைக்கு சென்றனர். சுமார் ஒன்றரை மணிநேரம் அவர்கள் கருணா அம்மான் மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது இதேவேளை, இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு…
-
- 0 replies
- 231 views
-
-
அம்பாந்தோட்டை காணி விவகாரம்- சீனாவை எச்சரித்த மகிந்த அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவின் முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்கும் போது, பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று, சீனாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனா திபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார். ஒருவார காலப் பயணமாக சீனா சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமை ச்சரும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வெளிவிகார செயற்பாடுகள் தொடர்பான முதன்மை அதிகாரியும், அர சவை உறுப்பினருமான யாங் ஜிச்சியை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர், இலங்கை மக்களுக்கு ந…
-
- 0 replies
- 236 views
-
-
விடைபெற முன்னர் சின்ஹா-மகிந்த சந்திப்பு சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஒரு வாரகாலப் பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்றுக் காலை நாடு திரும்பியிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள மகிந்தவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெ ற்றது. இந்தியத் தூதுவருடன், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல்நிலைச் செயலர், கௌரவ் அலுவாலியாவும் பங்கேற்றார். மகிந்த ராஜபக்சவுடன், முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலை வருமான பேராசிரியர் ஜி.எல்பீரிசும், உடனிருந்தார்…
-
- 0 replies
- 209 views
-
-
பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டது யார்? ; சபையில் தெரிவித்தார் பிரதமர் இரத்தினப்புரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கதான் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தின் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14114
-
- 0 replies
- 305 views
-
-
அரசாங்கம் பொதுமக்கள் பற்றி கவனம் செலுத்துவதில்லை – ஆனந்தசங்கரி அரசாங்கம் பொது மக்கள் பற்றி கவனம் செலுத்துவதில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ள அவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் நலன்களை உறுதி செய்வதில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகவும், பொதுமக்களை உதாசீனம் செய்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு வீணாக செலவிட்டு அப்பாவி பொதுமக்களை உதாசீனம் செய்வதானது அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு முடிவு கட்டிவிடும் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கில் மக்…
-
- 0 replies
- 158 views
-
-
மேஜர் ஜெனரல் உபய மெடவெல ஓய்வு இலங்கை இராணுவத்தில் இராணுவத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெட வெல நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ளார். இராணுவத்தின் கவசப்படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான மேஜர் ஜெனரல் உபய மெடவெலவுக்கு, கொழும்பு றொக்ஹவுசில் உள்ள கவசப்படைப்பிரிவுத் தலைமையகத்தில் நேற்று பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது கட்ட ஈழப்போர்களின் போது, வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில், இராணுவத்தின் கவசப்படைப்பிரிவின் அணிகளுக்கு இவர் தலைமை தாங்கியவர். இராணுவப் பேச்சாளராகவும் முன்னர் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெடவெல, ஆட்சி மா…
-
- 0 replies
- 162 views
-
-
கச்சதீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை புதிதாக அமைக்கப்பட்டுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் திறப்பு விழாவில் பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று, மீனவர்களுக்குஇலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதாக, இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய- இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள கச்சதீவில் உள்ள அந்தோ னியார் ஆலயம் மிகச் சிறியதாக இருப்பதால், அதன் அருகே புதியதொரு ஆலயம் கட்டப்ப ட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் ஆளணி உதவியுடன் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் திறப்பு விழா வரும் 7ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த புதிய ஆ…
-
- 0 replies
- 234 views
-
-
கட்டுநாயக்கவிலும் கால் பதித்த சீனா கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில், சீனாவின் உதவியுடன் விமானங்களை புதுப்பிக்கும் அலகு ஒன்றை இலங்கை விமானப்படை புதிதாக உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அலகில், பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட இரண்டு பி.ரி-6 ரக பயிற்சி விமானங்களை சீன நிறுவன அதிகாரிகள்,இலங்கை விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதியிடம் நேற்று கையளித்தனர் இலங்கை விமானப்படையிடம் உள்ள சீனத் தயாரிப்பு போர் விமானங்கள், மற்றும் போக்குவரத்து விமான ங்களை பழுதுபார்க்கும், மற்றும் மீளப்புதுப்பிக்கும் நோக்கிலேயே,சீனாவின் விமான தொழில்நுட்ப ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் துணையுடன் இ…
-
- 0 replies
- 171 views
-
-
சுன்னாகத்தில் காற்றாலை மின் திட்டங்கள் அனுமதி அளித்தது அமைச்சரவை சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு, அமைச்சரவை அனுமதி அளித்து ள்ளது. தலா 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த காற்றாலை மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளன. சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் இந்த திட்டங்களை சமர்ப்பித்திருந்தார். அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்ட ங்களை அமைப்பதற்கான கேள்விப்பத்திரங்களை அரசாங்கம் கோரவுள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்சக்தி …
-
- 0 replies
- 234 views
-
-
சிறிலங்கன் எயார்லைன்ஸ் மூலமே பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன : சபையில் எம்.பி. தகவல் யுத்தத்தின் போது பாகிஸ்தானில் இருந்து ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மூலமே ஆயுதம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறான விமான சேவையை தனியார் மயப்படுத்த வேண்டாம். விமான சேவையின் நடவடிக்கை எவருக்கும் தெரியாது. பஸ்ஸி – ரத்தி என்பவர்களே தீர்மானம் எடுக்கின்றனர். இது குறித்து அமைச்சர்கள் அமைச்சரவைக்கு கொண்டுவர வேண்டும் என ஐ.ம.சு.மு ஒன்றிணைந்த எதிரணி எம்.பி. மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு– செலவு திட்டத்தின் வணிக கைத்தொழில், ஆரம்ப கைத்தொழில், அரச தொழில் முயற்சி அமைச்சுகளின் செலவினம் குழு நிலை விவாதத்த…
-
- 0 replies
- 311 views
-