ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143429 topics in this forum
-
ஜனாதிபதியின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு 10 ஆண்டுகள் பூர்த்தி : ஆசீர்வாத பூஜை களனி விகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை நேற்று பிற்பகல் களனி விகாரையில் இடம்பெற்றது. களனி விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, முதலாவதாக மத அனுட்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஆசீர்வாத பூஜையில் கலந்துகொண்டார். களனி ரஜமகா விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித்த தேரரின் ஆலோசனைக்கு அமைய வெகுஜன ஊடகத்துறை அமைச்சினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. …
-
- 0 replies
- 190 views
-
-
பெற்றோரை இழந்து தவிப்பதால் அரசு உதவியளிக்கவேண்டும்-பெண்ணொாருவா் கண்ணீர் மல்க கோரிக்கை பெற்றோரை இழந்த தமக்கு அரசாங்கம் நட்ட ஈடு வழங்க வேண்டும் என பெண் ஒருவர் அழுதநிலையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) பூநகரியில் இடம்பெற்ற நல்லிணக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழு முன்பாகவே குறித்த பெண் கண்ணீர் மல்லக இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்போது அங்கு கண்ணீர் மல்க கருத்து தெரிவித்த அவர், பெற்றோரை இழந்த சகோதரர்கள் எனது பொறுப்பின் கீழ் உள்ளனர். அவர்களிற்கு ஒரு தாயாக இருந்து நான் பார்த்து வருகின்றேன். வைத்தியசாலைக்கு எனது கடைசி சகோதரனை அழைத்து சென்றிருந்தேன். அங்கு அவன் அழுதபோது, அழுகின்ற பிள்ளைக்கு பால் கொடுக்குமாறு கூறினார்…
-
- 0 replies
- 194 views
-
-
காணாமற் போனோர் அலுவலகம் இலங்கைக்கு பொருத்தமற்றது. காணாமற் போனோர் அலுவலகம் இலங்கைக்கு பொருத்தமற்றதென கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அதன் படைகள் பயங்கரவாத இயக்குத்துக்கு எதிராக சட்டபூர்வமான யுத்தத்தை நடத்தி, அதில் வெற்றிக்கண்ட நாடு. இரா ணுவ ஆட்சியின் கீழ் இருந்த லத்தீன் அமெரிக்கா நாடுகளிலேயே இந்த காணா மல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில், காணாமல் போனோருக்கான அலுவலகம் தொட ர்பிலான மாதிரியுருவை மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டிருப்பது பொருத்த மான தல்ல என்றும் அவர் கூறினார். ஆசிய…
-
- 0 replies
- 382 views
-
-
கடத்தப்பட்டவர்கள் , மற்றும் காணாமல் போனோர்களை மீட்டு தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பாதிக்கப்பட்டவர் பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கண்டியை சேர்ந்தவரும் தற்போது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வசித்து வந்தவருமான கிருஷ்ணன் (வயது 57) எனும் நபர் கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்டு தருவதாக கூறி , பாதிக்கப்படவர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தி செல்லப்பட்டார். அவர் கடத்தபட்டு ஐந்தாண்டுகளுக்க…
-
- 2 replies
- 969 views
-
-
இனப்படுகொலையின் ஆதாரநிலம் வட்டுவாகல்! - ஒரு பிடி மண்ணையும் இழக்கோம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- நல்லாட்சி அரசின் காலத்தில்தான் தமிழ் மக்களின் வட்டுவாகல் நிலம் சுவீகரிக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (03.08.2016) வட்டுவாகல் பகுதியில் இலங்கை கடற்படை அபகரித்துள்ள நிலப் பகுதியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக நில அளவை செய்யவுள்ள செய்தி அந்த மக்கள் பெரும் கொந்தளிப்புக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாக்கியுள்ளது. ஒரு பிடி மண்ணையும் நாங்கள் இழக்கோம் என்று ஓர்மத்துடன் கூறுகிறார்கள் வட்டுவாகல் மக்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈழ இறுதிப்போர் நடந்த கிராமங்களில் ஒன்று வட்டுவாகல். இன்னமும் போரின் …
-
- 0 replies
- 311 views
-
-
ஆளுனரின் உறுதிமொழியை அடுத்து தொண்டர் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களை எதிர்வரும் நான்கு மாத காலத்திற்குள் பெற்றுத்தருவதாக வட மாகாண ஆளுநர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை விடுத்து, வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேற்று முதல் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, தொண்டர் ஆசிரியர்களை இன்று மாலை சந்தித்த வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மேற்குறித்த வாக்குறுதியை வழங்கியதோடு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீரை வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார். …
-
- 0 replies
- 215 views
-
-
கீரிமலையில் மீன்பிடித்துறைமுகம் முதலமைச்சர் கடும் எதிர்ப்பு இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆடி அமாவாசை தினத்தையொட்டி, கீரிமலையில் நடைபெற்ற பிதுர் கடன் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்த வைபவத்தில் கல்வி ராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணனும் கலந்து கொண்டிருந்தார். மயிலிட்டி துறைமுகத்தையும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களையும் மீளக் கையளிப்பதாகக் கூறிக்கொண்டு, அதன் அருகில் உள்ள இந்துக்கள் புனிதமாகக் கருதும் தலமாகிய கீரி…
-
- 0 replies
- 291 views
-
-
கடந்த 7ஆம் மாதம் 29ஆம் திகதியன்று இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நோபேட் பெனடிட் புஸ்பராசா தேவகி என்பவருடைய வீட்டிற்கு வந்த இராணுவத்தினர், வீட்டினுள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருப்பதாகவும் மீண்டும் புலிகள் இயக்கத்தினை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறி இவருடைய வீட்டினுள்ளும், தோட்டத்தினுள்ளும் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். அங்கு எதுவுமே கண்டுபிடிக்கப்படாத நிலையில் மறுநாள் காலையில் மீண்டும் இவருடைய வீட்டுக்கு வந்த இராணுவத்தினர் அவருடைய மகன்களான அனோத்கிரதீஸ், புவிறீகன் ஆகிய இவருடைய புகைப்படங்களையும் காண்பித்து இவர்கள் பிரித்தானியாவில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினை உருவாக்கும் சில அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுகின்றனர் எனவும் சிறீலங்கா அரசாங்கத்…
-
- 0 replies
- 417 views
-
-
யாழ்ப்பாணத்தில், இந்துக்களின் புனித இடமாகக் கருதப்படும் கீரிமலையில் சிறீலங்கா அரசாங்கம் மீன்பிடித்துறைமுகத்தை அமைக்க எடுத்த தீர்மானம் சினத்தை ஏற்படுத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடி அமாவாசைத் தினத்தையொட்டி கீரிமலையில் நடைபெற்ற பிதிர் கடன்களைத் தீர்க்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்துக்களின் புனித இடமாகக் கருதப்படும் பிதிர் கடன் நிறைவேற்றும் பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள பல்லாயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாணத்தின் பிரபல்யம் மிக்கதும், மீன்வளம் மிகுந்ததுமான மயிலிட்டி துறைமு…
-
- 0 replies
- 249 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளுக்கான விசேட மருத்துவ பரிசோதனை ஆரம்பிக்கப்படவுள்ளது:- சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அண்மைக்காலமாக புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் இனங்காணப்படாத மர்மமான நோய்த்தாக்கங்களினால் சாவடைவதாக செய்திகள் வருகின்றன. இதுதொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சின் உயர்அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றை அண்மையில் நடாத்தியுள்ளார். இதில் அண்மைக்காலமாக சாவடையும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 426 views
-
-
மாணவர் கல்வி தடைப்படாமல் செயற்பட சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்:- 16.07.2016இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உண்மையான நிகழ்வினையும், நிலைப்பாட்டினையும் தொடர்புசாதனங்கள் மூலம் மக்களுக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் நிலையிலிருந்து தகவல்களை பத்திரிகைகளிலும் சமூக வலைத் தளங்களிலும் தெரிவித்து வருகின்றனர். சிலர் தங்கள் சுய இலாபம் கருதி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது. பல்கலைக்கழகங்களில் முரண்பாடுகள் அ…
-
- 0 replies
- 269 views
-
-
வடக்கு கிழக்கில் சேதமடைந்த விகாரைகள் சமயதலங்களை புனரமைக்க நடவடிக்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான விகாரைகள் மற்றும் சமயஸ்தலங்களை மறுசீரமைப்பு செய்யும் பொறுப்பை விகாரைகள் மற்றும் சமயஸ்தலங்களின் முகாமைத்துவ பரிபாலன சபைகளுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இந்த தகவலை வெ ளியிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான விகாரைகள் மற்று…
-
- 0 replies
- 517 views
-
-
கடந்த காலப் பிரச்சினைகளின் விளைவுகளையே தற்போது அனுபவிக்கிறோம் மேடைகளில் கற்பனைக் கதைகளைக் கூறிக்கொண்டு வீதிவலம் வருகின்றபோதும் கடந்த அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தியிருந்த பொருளாதாரப் பிரச்சினைகளின் விளைவுகளை தற்போது மக்கள் அனுபவிக்கவேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இன்று (02) முற்பகல் நடைபெற்ற இலங்கை பொருளாதார மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்; இதனைத் தெரிவித்தார். 'கவனம், செயற்படல், நிறைவேற்றல்' என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை வர்த்தக சங்கத்தினால் 17ஆவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் பொருளாதார மாநாடு, நாளையும் கொழும்பில்…
-
- 0 replies
- 328 views
-
-
அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வெலிக்கடை சிறைக்குமுன் கவனயீர்ப்பு போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் படுகொலைக்கு நீதி கோரியும், எதிர்வரும் 8ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி கணேசன் நிமலரூபனின், 4ஆவது வருட நிறைவை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் குறிப்பிட்டுள்ளார…
-
- 0 replies
- 173 views
-
-
தமிழரின் கொலைக்கு காரணமான மகிந்தவிற்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்-பூநகரி மக்கள் தெரிவிப்பு நாட்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பொது மக்கள் அநியாயமாக கொல்ல ப்படுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தகுதி, தராதரம் பாராது உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மக்களது கொல்லப்பட்டமைக்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும் பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறி முறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்தில் யாழ். மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் கண்காணிப்பில் இடம்பெற்றுவருகின்றது. …
-
- 0 replies
- 285 views
-
-
அநுராதபுரத்தில் ஆயுதகளஞ்சியசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம் முப்படையினருக்கு உரித்தான வெடிப்பொருட்கள் மற்றும் வர்த்தக வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்காக மக்கள் நடமாட்டம் குறைந்த பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியசாலை தொகுதியொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதனடிப்படையில் அநுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த ஓயாமடுவ பிரதேசத்தில் சர்வதேச தரத்திலான குறித்த களஞ்சியசாலை தொகுதியினை அமைப்பதற்கு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள…
-
- 1 reply
- 304 views
-
-
சிறப்பு பொருளாதாதர வலயத்தை உருவாக்குவதற்கு, சீனாவுக்கு 55 சதுர கி.மீ நிலப்பகுதியை சிறிலங்கா வழங்கவுள்ளதாக பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளதாக, சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் சிறப்புப் பொருளாதார வலயத்தை உருவாக்குவற்கு சீனர்கள் 55 சதுர கி.மீ காணிகளை கோரியுள்ளனர். அதற்கான நிலங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயல்முறைகளை ஆரம்பித்திருப்பதாக, சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளதையும், சிறிலங்கா தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை, சிறப்புப் பொருளாதார வலயம் எங்கு அமையவுள்ளது என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பது தொடர…
-
- 0 replies
- 338 views
-
-
சிறிலங்கா பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர் என்று அஸ்கிரிய பீடாதிபதி வண.வரகாகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கடந்தவாரம், கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், அஸ்கிரிய பீடாதிபதியைச் சந்தித்த போதே, ஒரே சீனா என்ற கொள்கையில் உறுதிப்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டதாக, சீனத் தூதரக பேச்சாளர் ஷாங் நய்கி கூறினார். மதம் என்ற போர்வையில் சீனாவைப் பிளவுபடுத்த எந்த சக்திகளையும் மகாசங்கம் அனுமதிக்காது என்றும் அஸ்கிரிய பீடாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார். அதேவேளை, பொருத்தமான தருணம் ஒன்றில், சீனாவுக்குப் பயணம் செய்யுமாறு, அஸ்கிரிய பீடாதிபதிக்கு சீனத் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார். http://www.puthinappalakai.net/2016/08/02/news/17768
-
- 0 replies
- 254 views
-
-
பதுளை - பிட்மாதுரை, ரோபரி தோட்டத்தில் இரு யுவதிகள் தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். தற்கொலை செய்துகொண்டுள்ள இரு யுவதிகளும் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் நல்ல தோழிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் ஒரு யுவதியின் காதல் விவகாரம் தொடர்பாக தந்தை கடுமையாக கண்டித்துள்ளதாகவும், இதை தாங்க முடியாமல் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் செல்வகுமார் காஞ்சனா மற்றும் பரமேஸ்வரன் அருட்செல்வி என்ற யுவதிகளே பலியாகியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரண…
-
- 0 replies
- 395 views
-
-
வட்டுவாகல் பகுதியில் கடற் படையினருக்காக காணிச் சுவீகரிப்பு முயற்சி – மக்கள் அதிர்ச்சி: முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவை பிரிவில் உள்ள வட்டுவாகல் பகுதியில் கடற்படையினருக்காக 617 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் கடற்படையினருடைய தேவைக்காக சுவீகரிக்கப்படுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினால் முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்;கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக 3 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளும், மீனவ தொழிலாளர்களும் அழைப்பு விடுத்திருக்கின்றனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134580…
-
- 1 reply
- 305 views
-
-
க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை உயர்தர பரீட்சை 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகள் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=162720&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 357 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு ஊசி மருந்து ஏற்றப்பட்டதா ? அரசாங்கம் விளக்கம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் உடலியல் ரீதியில் ஏதாவது கெடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பில் எமக்கு முறைபாடுகள் முன்வைக்கப்பட்டால் நாம் அவர்களுக்கு உடற்பரிசோதனை நடத்துவதற்கு தயாராகவிருக்கின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளார் மாநட்டில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதாவது வடக்கில் இடம்பெறும் நல்லிணக்க…
-
- 0 replies
- 348 views
-
-
ஜனாதிபதி மைத்திரியின் இல்லத்தில் மகிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வசிக்க உள்ளார். ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு இலங்கை அரசியல் அமைப்பின் அடிப்படையில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்க ப்பட வேண்டிய உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது. விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இந்த இல்லம், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தங்கியிருந்த இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 352 views
-
-
திருட்டு சம்பங்களுடன் தொடர்புடைய கடற்படை வீரர் எண்மர் கைது தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்வங்களுடன் தொடர்புடைய கடற்படை வீரர் எண்மரை தங்காலை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து, ரீ-56 ரக துப்பாக்கி கைப்பற்றியுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுபவர்கள் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும், சந்தேக நபர்களில் எண்மரில், இருவர் கடற்படையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணையை குற்றப்…
-
- 1 reply
- 221 views
-
-
வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருக்கும் பொதுமக்களின் காணியிலுள்ள இராணுவம் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டுமாக இருந்தால் தமக்கு மாற்று இடம் தரப்பட வேண்டுமென கேட்டுள்ளது. தற்போது குறித்த சாவடியில் இராணுவத்தினர் தங்கியுள்ள இடம் தனியாருக்கு சொந்தமானதாகும் அவர்கள் தமது காணியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தாம் அங்கிருந்து வெளியேறினால் நொச்சிமோட்டை அல்லது இறம்பைக்குளம் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலத்தினைத் தருமாறு வவுனியா அரச அதிபரிடம் இராணுவம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஓமந்தையில் இருந்து வெளியேறவுள்ள இராணுவத்தினருக்கு மாற்று இடமொன்றினை வழங்குவதற்கு வவுனியா அரச அதிபர் ஆலோசித்து வருவதாக த…
-
- 0 replies
- 294 views
-