ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143436 topics in this forum
-
'வீரவசனங்களுக்கு இடமில்லை' பொருளாதார வர்த்தக மையம் வவுனியா மாவட்டத்துக்கு அரசாங்கம் வழங்குகின்ற விடயத்தில் தனிப்பட்ட அரசியலுக்கோ கட்சி பேதத்துக்கோ பிரதேசவாதத்துக்கோ கௌரவப் பிரச்சினைகளுக்கோ அல்லது வீரவசனங்களுக்கோ இடமில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வியக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பாரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கும் இந்த வர்த்தக மையம் விடயத்தின் பின்னணியை புரிந்து கொள்வது அவசியமாகிறது. பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்ற பொழுது எமது பிரதேச மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் அபிவிரு…
-
- 0 replies
- 324 views
-
-
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தென் இலங்கையில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம உரிமை இயக்கதின் தலைவர் ரவீந்திர முதலிகே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த வகையில் யுத்தக்குற்ற சம்பவங்கள் குறித்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை விரைவில் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்…
-
- 1 reply
- 400 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தை மேற்கொள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் பொலிஸ் தலைமையகத்திடம் செய்துள்ள முறைப்பாடுகளுக்கு அமையவே, கூட்டு எதிர்கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முறைகேடான முறையில் சொத்துக்களை சேர்த்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுத்த கோரிக்கையை உதாசீனம் செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு …
-
- 7 replies
- 759 views
-
-
தன் மகன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சற்று முன்னர் அவரது முகப்புத்தகத்தில் செய்தி ஒன்றை பதிவேற்றியுள்ளார். “எனது மகனை கைது செய்து, சிறையில் அடைத்தால் எனது அரசியல் பயணத்தை தடுக்கலாம் என பலர் நினைக்கின்றனர். அவ்வாறு நினைத்தால் அது கானல் நீராகிப் போய்விடும். இந்த நாட்டு மக்கள் இருக்கும் வரை, என்னுடைய குடும்பத்தையே சிறையில் அடைத்தாலும் என்னுடைய அரசியல் வாழ்க்கை தொடரும்” என மகிந்த அவரது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். 70 மில்லியன் மோசடி தொடர்பில் நிதி குற்றபுலனாய்வு பிரிவினரால் நாமல் ராஜபக்ஸ இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Go to Videos நாமல் சற…
-
- 0 replies
- 393 views
-
-
YGC ஜூனியர்: வென்றது வவுனியா த.ம.ம.வி Technical Tigers பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை ஊக்குவிப்பதற்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் நிறுவனத்தால், வட மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge (YGC) ஜூனியர் போட்டியின் வெற்றியாளராக வவுனியா தெற்கு வலயத்தினுள் உள்ளடங்குகின்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த Technical Tigers அணி தெரிவாகியது. தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக நடாத்தப்பட்ட இப்போட்டியின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணம், தீவகம், துணுக்காய், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் தொழிநு…
-
- 0 replies
- 337 views
-
-
கொழும்பு நாலந்தா கல்லூரி அதிபர் கைது (UPDATE) கொழும்பு நாலந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட அக்கல்லூரியின் அதிபர், கைதுசெய்யப்பட்டுள்ளார். 02:32 PM நாலந்தா அதிபருக்கு அழைப்பு கொழும்பு நாலந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அக்கல்லூரியின் அதிபர் ரஞ்சித் ஜயசுந்தர இன்று திங்கட்கிழமை பொரளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த கல்லூரியின் அதிபர், மாணவர்கள் சிலரின் துணையுடன் தம்மை தாக்கியதாகக் கூறி அப்பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் ஆசிரியரான சுசந்த ஹேரத் என்ப…
-
- 0 replies
- 300 views
-
-
கே.கே.எஸ் இல் மீள்குடியேற்றம் வீடுகளுக்கு அடிக்கல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்பட்டனர். இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களில் முதற்கட்டமாக 100 பேருக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக…
-
- 0 replies
- 247 views
-
-
கடற்படையினரின் காணி அளக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. மன்னார் – வங்காலை கிராமத்தின் கடற்கரையை அண்மித்த தனியாருக்கு சொந்தமான காணியை கையகப்படுத்தும் வகையில், கடற்படையினரால் இன்றும் காணி அளவீடு செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் இந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். குறித்த காணிக்கு 22 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அந்தக் காணியை தமக்கு நிரந்தரமாக வழங…
-
- 0 replies
- 285 views
-
-
இலங்கையில் 2020ம் ஆண்டளவில் நடைபெறவுள்ள தேர்தலை இருளில் நடத்தக் வேண்டிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சம்பூர் அனல் மின்நிலைய நிர்மாணப் பணிகள் தாமதமடைந்துள்ளமையால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் 2020ஆம் ஆண்டு தேர்தலை இருளிலிலே நடத்த நேரிடும். நாட்டில் பாரிய மின்சார நெருக்கடி ஏற்படும் எனவும் மின் உற்பத்தித் துறையில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை சம்பூர் அனல் மின் நிலையம் இன்றி திரவ இயற்கை வாயு ஊடாக செயற்படுவதற்கு மீண்டும் திட்டமிடுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் சம்பூர் அனல் மின் நிலைய கட்டுமான நடவடிக்கைகள் இடை நிறுத்த…
-
- 0 replies
- 475 views
-
-
பொருளாதார மத்திய நிலைய இழுபறி தீர்ந்தது: வாக்கெடுப்பில் ஓமந்தை தெரிவு -குணசேகரன் சுரேன் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 21 பேரின் ஆதரவுடன் ஓமந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2,000 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கவுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் அமைக்குமாறு மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வவுனியாவில் எந்த இடத்தில் அமைப்பது என்பது தொடர்பில் குழப்பங்கள் தோன்றின. பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதற்கான அதிகாரம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கீழ் இருந்தமையால், …
-
- 2 replies
- 226 views
-
-
புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையில் எவ்வித மாற்றமும் கிடையாது என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆனந்த கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், அரசியல் அமைப்பு திருத்தங்களின் போது எந்த வகையிலும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைகளில் மாற்றங்கள் செய்யப்படாது. ஏனைய மத வழிபாடுகளுக்கும் உரிய சுதந்திரம் வழங்கப்படும். அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு அரசியல்வாதிகளும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எவ்வாறாயினும், அரசியல் இலாபமீட்டும் நோக்கில் வெளியிடப்படும் இந்த கருத்துக்களை கண்டுகொள்ள வேண்டியதில்லை என அவர் மேலும் தெரிவித்த…
-
- 0 replies
- 165 views
-
-
பிரதமர் உள்ளிட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகனங்கள்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. இன்னும் மூன்று நான்கு மாதங்களில் இந்த வாகனங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் நிமால் லன்சா மற்றும் அமைச்சர் தலதா அதுகோரல ஆகியோர் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக சமூக வலையமைப்பு ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. தாம் வாகனமொன்றை கொள்வனவு செய்துள்ளதாகவும் சிலர் வாகன விலை ஏறியதன் பின்னர் …
-
- 0 replies
- 199 views
-
-
2.4 மில்லியன் ரூபா பெறுமதியான 5000 ரூபா நாணயத் தாள்கள் மத்திய வங்கியிலிருந்து களவாடப்பட்டுள்ளது: 11 ஜூலை 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான 5000 ரூபா நாணயத் தாள்கள் மத்திய வங்கியிலிருந்து களவாடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மத்திய வங்கியின் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த 5000 ரூபா நாணயத் தாள்கள் புழக்கத்தில…
-
- 0 replies
- 678 views
-
-
முள்ளிவாய்க்காலில் அழிந்த வாகனங்களிற்கு இழப்பீடு? வன்னி இறுதி யுத்தத்தினில் அழிந்து போயுள்ள வாகனங்களிற்கான இழப்பீட்டை வழங்க காப்புறுதிநிறுவனங்கள் மறுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது. முழுமையாக காப்புறுதி செய்யப்பட்ட வாகனங்கள் பலவும் கூட முள்ளிவாய்க்கால் வரை சென்றிருந்த நிலையில் உரிமையாளர்களால் இறுதியினில் அவை கைவிடப்பட்டிருந்ததுடன் அவர்களும் முற்றாக வெளியேறியிருந்தனர்.பின்னர் அவை அனைத்துமே காணாமலும் எரியுண்டு அழிந்தும் போயிருந்தன. இந்நிலையில் தமது வாகனங்களிற்கு காப்புறுதி நிறுவனங்கள் கொடுப்பனவுகளை செய்யவேண்டுமென வாகன உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராடிவருகின்ற நிலையினில் அதனை காப்புறுதி நிறுவனங்கள் மறுதலித்தே வருகின்றன. இதையடுத்து அரசுடன…
-
- 0 replies
- 212 views
-
-
கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வான் படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வான்படை அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மத்தியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மேலோங்கியுள்ளது. குறிப்பாக தீவிரவாதிகளின் தாக்குதல் அண்மையில் அதிகரித்துள்ளது. அத்துடன், அண்மைய நாட்களில் தீவிரவாதிகள் ஆசிய நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டு வருக்கின்றனர். எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தலை நீக்கிகொள்வதற்காக இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.…
-
- 0 replies
- 251 views
-
-
உள்நாட்டிலே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பல நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. அந்நாடுகளிலே முக்கியமாக மூன்று நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அந்த மூன்று நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவதாக இருக்கின்றது என்று ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த காலங்களை விட தற்போது நாட்டில் சமாதனத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் பல விதமாக சேவைகளை முன்னெடுத்துள்ளோம். இதன் காரணமாகவே, 18ஆவது நிலைமையில் இருந்த இலங்கை சமாதனத்திற்காக இன்றைய காலகட்டத்தில் முன்னிலை பெற்றுள்ளது. சர்வதேச நிறுவனங்களின் அறிக்கையின் படி, 18 நாடுகளைக் கடந்து இலங்கை இன்று முன்…
-
- 0 replies
- 259 views
-
-
மட்டக்களப்பைப் பற்றி ஏற்கெனவே எனக்குத் தெரியும் ஒன்றரை வருடங்களை மட்டு. சிறையில் கழித்திருக்கின்றேன்: மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு மட்டக்களப்பைப் பற்றி ஏற்கெனவே எனக்குத் தெரியும் ஏனெனில் 1971 காலப்பகுதியில் நான் ஒன்றரை வருடங்கள் மட்டக்களப்பு சிறையில் கழித்திருக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் மைதானத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், 'இனி வரும் சந்ததிகள் இன மத பேதமின்றி இந்த வாழ்வதற்கு வழிசமைத்துக் கொடுக்க அனைவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெர…
-
- 0 replies
- 210 views
-
-
சைவ மகா சபை மற்றும் சிவஞான சித்தர்பீடம் என்பவற்றின் ஆதரவுடன் சைவநெறிக்கூடம் இணுவில் தெற்கில் புதிதாக அமைத்த ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை செந்தமிழில் திருக் குடழுக்கு நடத்தப்பட்டது. வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஒலி வானைப் பிளக்க ஞானலிங்கேஸ்வரருக்கு தமிழ் அருட்சுனைஞர்கள் திருக்குடமுழுக்கை நடத்திவைத்தனர். ஆலயங்களில் மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியான தமிழில் பூசைகள் ,டம்பெறவேண்டும் என்று சைவநெறிக்கூடமும் சைவ மகா சபையும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதோடு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பெருமுயற்சியின் பயனாக சைவநெறிக்கூடம் மேற்படி ஆலயத்தை கட்டியெழுப்பி நேற்று…
-
- 2 replies
- 686 views
-
-
மட்டக்களப்பு, பாசிக்குடா இராணுவ முகாமுக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் 06 பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறையிலிருந்து பாசிக்குடாவுக்கு வான் ஒன்றில் பயணித்தவர்களே விபத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் பயணித்த வான் பாதையினை விட்டு விலகி குறித்த இராணுவ முகாமுக்குள் நுழைந்து எதிரே இருந்த கட்டடத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த வான் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் அவரை நாளை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வான் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் கூறினர். http://www.seithy.com/breifNew…
-
- 6 replies
- 1.1k views
-
-
குடாநாட்டில் இராணுவத்தின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை! யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில், இராணுவ முகாம்களின் எண்ணிக்கையோ, இராணுவத்தினரின் எண்ணிக்கையோ குறைக்கப்படவில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக்குத் தேவையான இடங்களில் மாத்திரம் இராணுவ முகாம்கள் தற்போது பேணப்பட்டு வருகின்றன. அண்மையில் படையினர் வசமிருந்த காணிகள் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டதால், இராணுவ முகாம்கள் கைவிடப்பட்டதாக அர்த்தமில்லை. இராணுவ முகாம்கள் அங்க…
-
- 0 replies
- 179 views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்த இனவாதத்தை கைவிடுங்கள்-தமிழரிடம் கேட்கிறார் அமைச்சர் சம்பிக்க உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் பயணத்தின் போது இனவாதத்தை கைவிட்டு ஒருமைப்பாட்டுக்காக ஒன்றிணைந்து கொள்ளுமாறு நான் தமிழ் கடும்போக்காளர்களிடம் கோருகின்றேன். நல்லிணக்கம் வேண்டுமாயின் ஐக்கிய இலங்கையை தமி்ழர்கள்“ ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கம்பஹா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடும்போக்குடைய தமிழ் அரசியல்வாதிகள் புதிய அரசியல் அமைப்பில் சமஸ்டி முறை வேண்டுமெனக் கோரி நாட்டை பின்நோக்கி நகர்த்த முய…
-
- 0 replies
- 183 views
-
-
வித்தியா கொலைவழக்கு விசாரிக்க யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்த கூட்டு வன்புணர்வுக் கொலை நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை முடித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஆவணங்களை சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளனர். யாழ். மேல் ந…
-
- 0 replies
- 148 views
-
-
இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளானதாக கூறப்பட்ட பிரித்தானியர் நாடு திரும்பினார்: இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட பிரித்தானியர் நாடு திரும்பியுள்ளார். இலங்கை அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்த பிரித்தானியர் குற்றம் சுமத்தியிருந்தார். திருமணம் செய்த கொள்வதற்காக இலங்கை சென்றிருந்த போது துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆர்.ரேணுகரூபன் என்ற 36 வயதான நபரே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிவித்து தம்மை தாக்கி சிறையில் தடுத்து வைத்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தாய் வீட்டில் வைத்து கடத்தப்பட்டதா…
-
- 1 reply
- 258 views
-
-
யாழ், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை விசாரணைகளுக்கு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவிப்பதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைக்கு அமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குறித்த பொலிஸ் அதிகாரி பல தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதுடன்,அதன் அறிக்கைகளானது தற்போது சட்ட ஆலாசனைகளைப் பெறுவதற்காக சட்டமா திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கை விசாரிப்பதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தி…
-
- 0 replies
- 223 views
-
-
ஜனாதிபதியின் மீது பிக்குக்கு கடுங்கோபம் வசந்த சந்திரபால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம்செய்து, பல்வேறு வைபவங்களிலும் பங்கேற்றிருந்தார். அந்த வைபவங்களில் பங்கேற்றிருந்த வடக்கு-கிழக்குப் பிரதான தேரர், மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி வண. அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விஹாரைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துவிட்டார். இதனால், கோபங்கொண்ட தேரர், தன்னுடைய விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் கொண்டிருக்கின்ற நினைவுபடிகக்கல்லை, சிலசால் அடித்து நொறுக்கினார். - See more a…
-
- 8 replies
- 969 views
-