Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  'கூட்டமைப்புக்குள் கழுத்தறுப்புக்கள் இடம்பெறுகின்றன' -எம்.றொசாந்த் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கழுத்தறுப்புக்கள், கருவறுப்புக்கள் மற்றும் வெட்டுக்குத்துக்கள் என்பன தாராளமாக நடக்கின்றன' என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.அன்டனி ஜெயநாதன் பகிரங்கமாக தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்திலேயே ஜெயநாதன் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், 'கூட்டமைப்பு என்று சொல்லி ஒரு கட்சியை வளர்த்து, மற்றைய அங்…

  2. மன்னார் மாவட்டத்தில் ஒருதொகுதி தென்பகுதி மீனவர்களை நிரந்தரமாகக் குடியேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்கள் ஒன்றுகூடி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதுடன் தமது விசனத்தையும் தெரிவித்துள்ளனர். கிராமிய மீனவர் சம்மேளனம் உட்பட மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவர் சங்கங்களும் ஒன்றுகூடி இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவர் சமாசத் தலைவர் நூர் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்திலுள்ள முள்ளிக்குளம் பிரதேசத்திலேயே அரசாங்கம் சிங்கள மீனவர்களை நிரந்தரமாக குடியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் பருவகாலத் தொழிலில் ஈடுபட்டு வந்த இந்த மீனவர்களை நிரந்தரமாகக் குடிய…

    • 0 replies
    • 287 views
  3. சிறீலங்காவின் வடபகுதியை அபிவிருத்தி நோக்கி முன்நகர்த்துவதற்கு கனடா அரசாங்கம் உதவி வழங்கியுள்ளது. வடபகுதியில் பாற்பண்ணை மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கூட்டுறவுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு கனடா அரசாங்கம் இணங்கியுள்ளதுடன் அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. இந்த வேலைத்திட்டங்களை, கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்திற்கான ஸ்ரீலங்கா பிரதிநிதி பீற்றர் பச்சுலர் ஆகியோர் பார்வையிடவுள்ளனர். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டங்கள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. வட பகுதியின் பொருளாதார அபிவிருத்தியை பலப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுக…

    • 0 replies
    • 481 views
  4. சம்பந்தனின் பதவியை பறிக்க மஹிந்த முயற்சி : இடமளிக்கமாட்டோம் என்கிறது ஜே.வி.பி. ஜனா­தி­பதி, பிர­தமர் கன­வுகள் கலைந்­துள்ள நிலையில் சம்பந்­தனின் எதிர்க்­கட்சி ஆச­னத்­தை­யேனும் பறிக்கும் நோக்­கத்­தி­லேயே மஹிந்த அணி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் குழப்­பங்­களை மேற்­கொள்­ளவும், பயங்­க­ர­வாத கதை­களை பரப்­பவும் இதுவே காரணம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரிவித்தார். எம்­மீது பொய்க்­குற்றம் சுமத்தி எதி­ரணி பலத்­தினை குறைக்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நாம் இருக்கும் வரையில் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சி பத­விக்­காக தொடர்ச்­சி­யாக மஹிந்த அணி­யினர் போரா­…

  5. 'என்னுடன் பேச்சு நடத்த ஜனாதிபதி இணக்கம்' முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான இராணுவப் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சேவை சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். நாரஹேன்பிட்டிய, அபயராம விஹாரையில் நேற்றுத் திங்கட்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் குறைக்கப்பட்ட விடயம் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்க…

  6. தொடர் கஞ்சா கடத்தல்களுக்கு பின்னால், ரவுடி அரசியல்வாதிவாதி? வடக்கு, குறிப்பாக, மன்னார் ஊடாக நாட்டினுள் வரும் கேரளாக் கஞ்சா தொடர் கடத்தல்களுக்கு பின்னால் ஒரு ரவுடி அரசியல் வாதி ஒருவர் உள்ளார் என்று dailymirror பத்திரிகை பூடகமாக தெரிவித்து உள்ளது. வில்பத்து பகுதியில் தமது மக்களைக் குடி அமர்த்தவென காடழிப்பு வேலையில் ஈடுபட முனைந்தவரே இவர் என அறிய முடிகிறது. அண்மையில் கல்கமுவ பகுதியில், விலை மதிப்பு மிக்க கார் ஒன்றை திருத்திப் பிடித்த பொலிசார், அதன் பின் ஆசனத்தினுள் மறைந்திருந்த, பல கோடி பெறுமதியான கேரளாக் கஞ்சாவினை மீட்டு, அதில் இருந்த ஆட்கள் சிலரையும் கைது செய்திருந்தனர். இது குறித்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன. எனினும் குறித்த கைதின் பின்னர் …

    • 1 reply
    • 614 views
  7. யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் பலி [ Saturday,7 May 2016, 04:30:02 ] யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதி இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் உறங்கிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் கல்வியங்காட்டை சேர்ந்த மோகனராசா நிசாந்தன் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த பரமநாதன் ரெஜராம் ஆகிய இளைஞர்களே உயிரிழந்…

    • 15 replies
    • 1.3k views
  8. சட்டமுரணான வாள்கள் ஆயுதங்கள் உற்பத்தி செய்ய தடை. மீறினால் கடும் சட்ட நடவடிக்கை - இளஞ்செழியன் சட்ட முரணான வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை கம்மாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ் மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் வாள் வெட்டுச் சம்பங்கள் அதிகரித்திருக்கின்றன. அத்துடன் ஆபத்தான கத்திகளைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதையடுத்தே இந்த உத்தரவை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சட்டத்திற்கு முரணான வகையில் வாள்கள் வைத்திருப்பதும், அப…

  9. ஊடகங்கள் மனைவி பற்றி தவறான செய்திகள் வெளியிடுகின்றன. ஊடகங்கள் சில எனது மனைவிக்கும் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிக்கும் தொடர்பு என செய்திகள் வெளியிட்டு இருந்தன. இதனால் மனைவி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் ஒருவர் நீதவானிடம் முறையிட்டார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதானே போதே குறித்த சந்தேக நபர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் …

  10. 15 கோடி ரூபா அரசசொத்து பாவனை, 160 பொலிஸார் பாதுகாப்பு, அமெரிக்க இல்லத்தில் இராணுவம் : கோத்தாவிடம் 4 மணிநேரம் விசாரணை (ஆர்.யசி) பதினைந்து கோடி ரூபாய் அரச சொத்துகளை நஷ்டப்படுத்தியமை, தனது பாதுகாப்பிற்கு 160க்கும் அதிகமான பொலிஸாரை நியமித்தமை மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தில் இலங்கை இராணுவத்தை பாதுகாப்பிற்கு நியமித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிடம் பாரிய ஊழல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று நான்கு மணிநேர விசாரணைகளை நடத்தியுள்ளது. ரக்னாலங்கா எவன்கார் விவகாரம் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இன்று காலை 9 மணியளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மு…

  11. புங்குடுதீவு மாணவியின் தாயாருக்கு சந்தேக நபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தல் : மன்றில் தெரிவிப்பு புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுவதாக மாணவியின் தாயார் சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மாணவியின் தாயார், சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக சந்தேக நபர்களின் உறவினர்கள் தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக மன்றுக்கு தெரியப்படுத்தினார். இவ்விடயம் தொடர்பில் ஊர்காவற்துறை…

  12. சுவிஸ்குமார் தொடர்பில் பொலிஸாரிடம் கேள்வி -எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சுவிஸ் குமார் என்று அறியப்படும் மகாலிங்கம் சதீஸ்குமார் என்ற சந்தேகநபர், எவ்வாறு பொலிஸாரிடம் பிடிபட்டார். பின்னர், எவ்வாறு அவர் கொழும்புக்குச் சென்றார். தொடர்ந்து, கொழும்பில் வைத்து எவ்வாறு கைது செய்யப்பட்டார். ஆகிய விவரங்களை தனித்தனி கேள்விகளுக்கான பதில்களாக வழங்குமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் 10 சந்தேகநபர்கள் மீதான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது…

  13. சித்திரவதைகளுக்குள்ளான 110 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் : இருவர் ஊனமாகிய பரிதாபம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்ற 110 இலங்கையர்கள் மீண்டும் இன்று காலை 5.30 மணியளவில் நாடு திரும்பியுள்ளனர். மாத்தளை, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், காலி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் இருவர் சித்திரவதைகளுக்கு உள்ளாகி ஊனமுற்ற நிலையில் உள்ளனர். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகள் மூலம் சவுதி மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு ஒரு வருடம், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருடம் ஒப்பந்த அடிப்படையில் பணி பெண்களாக சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்கள் சம்பளமின்றி பல்வேறு சித்திரவத…

  14. மஹிந்தவுக்கு ஆதரவாக பிக்குகள் : சத்தியாக்கிரக போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீக்கப்பட்ட இராணுவ பாதுகாப்பை மீளவும் பெற்றுக் கொடுக்குமாறு கோரி பிக்குகளை ஒன்று திரட்டி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார். இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி காலி தர்மபால பூங்காவில் முன்னெடுக்கவுள்ளதாக சமித தேரர் மேலும் தெரிவித்துள்ளார். காலி கச்சிவத்த விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.# http://www.virakesari.lk/article/6119

  15. என் சனமே நீ சொல்லுவாய்! ஆனால் எதிர்கட்சி தலைவர் கதிரை உனக்கு கிடைத்தால்தான் தெரியும் அந்த சொகுசு இருக்கையில் இருந்துகொண்டு எதையும் எதிர்கிறது எவ்வளவு கஷ்டம் என்று. “முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மணலாறு பிரதேசத்தில், சிங்களக் குடியேற்றங்களை சிறிலங்காவின் புதிய அரசாங்கம், தீவிரப்படுத்தியிருக்கிறது. கம்உதாவ என்ற பெயரில் புதிய வீட்டுத் திட்டங்களை அமைத்து வரும் சிறிலங்கா அரசாங்கம், முதலாவதாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு (வெலிஓயா) பிரதேசத்தில் 24 வீடுகளை அமைத்திருக்கிறது. வீதிகள், குடிநீர், மின்சார வசதிகளுடன் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பத்நுவர இசுறுபுர மாதிரிக் கிராமம் என்ற பெயரில் இந்த சிங்களக் குடியிருப்புத் தொகுதி அழைக்கப்படுகிறது. சம்பத்நுவ…

  16. $ மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமித்து அதில் இராணுவ முகாம் அமைத்து, புதைக்கப்பட்ட எமது பிள்ளைகளின் முகம்களிலே அவர்கள் சப்பாத்து கால்களுடன் காலூன்றி நிற்கின்றார்கள். எமது குழந்தைகளின் முகம்களில் இராணுவம் சப்பாத்து கால்கலோடு நிற்கும் நிலையில் நாங்கள் எவ்வாறு நல்லிணக்கம் பற்றி யோசிக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமைகோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய காணிகளை இராணுவம் அளக்க நினைக்கும் போது, அடாத்தாக பறிக்க நினைக்கும் போது நீங்கள் சமாதானம் பற்றி எமக்கு சொல்கின்றீர்கள். இராணுவம் எங்கள…

    • 0 replies
    • 471 views
  17. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணம் காரணமாக என்றுமில்லாதவாறு இம்முறை பல கிணறுகளும், நீர் நிலைகளும் வற்றியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது . அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொத்தியாபுலை, குருந்தயடி முன்மாரி, காஞ்சிரங்குடா என பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான எவ்விதமான உதவிகளும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் ஊடகங்களினூடாக இரண்டு வார காலங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு தமது குட…

    • 0 replies
    • 371 views
  18. கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் உயிரிழந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பரந்தன் முல்லைத்தீவு வீதியின் அருகில் ஆற்று பகுதியில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் குறித்த சிசுவின் சடலம் கிளிநொச்சி பாலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி சிசுவை பொலித்தீன் பையில் சுற்றி வீசியுள்ள சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலி?ர் முன்னெடுத்து வருகின்றனர். அன்னையர் தினத்தினை உலகம் எங்கும் நேற்று கொண்டாடிய நிலையில், அன்னையின் அரவணைப்பில்லாமல் வீசப்பட்டுள்ள குறித்த சிசுவின் நிலை தொடர்பில் பலரும் கவலை தெரிவிக்கின்றனர். http://www.valampurii.lk/valampurii/content.php?id=10053&ctype=news

    • 0 replies
    • 307 views
  19. நாம் ஒற்றுமையாக செயற்பட்டால் தான் விடிவுகிடைக்கும் வெறுமனே உதட்டளவில் பேசிசெயற்பட்டால் எமது இனத்தை அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டு சென்று அழிந்து விடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தின் (ரெலோ) தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 30ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை அரசு எமது இனத்தை நசுக்க நினைத்த காரணத்தால் அகிம்சை போராட்டம் குழிதோண்டி புதைக்கப்பட்டு ஆயுதப் போராட்டத்தின் மூலம் விடிவை எட்ட முடி யும் என்ற நம்பிக்கையுடன் ஆயுதப் போராட்ட த்தை தொடங்கினோம். எனினும் ஆயுதப்போராட்டத்தால் ஈழத்தை அடைய…

    • 0 replies
    • 346 views
  20. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மஹிந்த வேண்டுகோள்..! புதிய அரசியலமைப்பின் முன்மொழிவு தொடர்பான விடயங்களை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அமையவே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. எனவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார். http://www.virakesari.lk/article/6157

  21. வடக்குக்கு வெளியே பொருளாதார மையத்தை நகர்த்த இடமளியோம்! வடமாகாணத்திற்கு வெளியே பொருளாதார மையத்தை நகர்த்த நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்று வடக்கு முதலமைச்சர் அமைச்சர் மனோகணேசனிடம் வலியுறுத்தினார். யாழ்.குடாநாட்டுக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த முதலமைச்சர், மனோகணேசன் என்னுடைய மிக நெருங்கிய நண்பர், அவருடைய தந்தையாரையும் எனக்கு நன்றா…

  22. 'சமஸ்டிக் கோரிக்கையை முன்வைக்க வட மாகாண சபைக்கு உரிமை உண்டு' -சொர்ணகுமார் சொரூபன் 'சமஸ்டி கோரிக்கையை முன்வைத்து பிரேரணை நிறைவேற்றுவதற்கு வடக்கு மாகாண சபைக்கு முழுமையான உரிமை உள்ளது. இதனை தவறு என்று கூற தெற்கில் யாருக்கும் உரிமை இல்லை' என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நல்லூரில் அமைந்துள்ள இளங் கலைஞர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு மாகாண சபை நி…

  23. கைபேசியில் உரையாடியவர் ரயில் மோதி ஸ்தலத்திலே சாவு! கைபேசியில் உரையாடிக்கொண்டு தண்டவாளம் அருகாக நடந்த சென்ற இளைஞர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - பரந்தனில் நேற்று மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் வட்டக்கச்சியை சேர்ந்தவரும் பரந்தனில் வசித்து வருபவருமான ரிக்ஷன் (வயது -24) என்பவரே மேற்படி சம்பவத்திலேயே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞர் இரு நண்பர்களுடன் நின்றிருந்தார் என்றும் அச்சமயம் வெளிநாட்டில் இருக்கும் அவரின் பெற்றோர் அழைப்பு எடுக்கவே கைபேசியில் பேசியவாறு தண்டவாளம் அருகாக நடந்து சென்ற…

  24. தமிழ் மக்களின் தீர்வுத்திட்டத்தை குழப்பும் இனவாத நாடகமே கைதுகள்! தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் போது தற்கொலை அங்கி மீட்பு, முன்னாள் போராளிகளின் கைது போன்ற புதுப் புதுப்பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். இவை தமிழ் மக்களின் தீர்வுத்திட்டத்தை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் இனவாத நாடகங்களாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு பிளவுபடக்கூடாது என்ற அரசியல்வாதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தீர்வுத்திட்டமானது சமஷ்டி அடிப்படையில் இருக…

  25. காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது -எஸ்.என். நிபோஜன் கிளிநொச்சி, பூநகிரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் ஒரு பகுதியை இராணுவம் அபகரித்து, அவர்களது இராணுவத் தேவைக்குகாகப் பல வருடங்கள் உபயோகித்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (09) காலை, குறித்த பகுதியை இராணுவம் பதிவுசெய்யும் முயற்சியில் இறங்கியபோது, அது அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 22 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சியே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/171754/%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%AA%…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.