ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
ஜே.வி.பி யின் யாழ். பிரதான அலுவலகம் நாளை திறப்பு! மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட பிரதான அலுவலகம், கண்டி வீதியில் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைப்பார். http://onlineuthayan.com/news/8662
-
- 1 reply
- 344 views
-
-
மாவீரர் நினைவுத் தூபிகளையும், பிரபாகரனின் வீட்டையும் அழித்தது ஏன்? - இராணுவ சிப்பாய் கொடுத்த விளக்கம் [Thursday 2016-02-11 07:00] நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார். நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகி…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
நாட்டில் இனவாதம் தலைதூக்க இனி ஒருபோதும் இடமில்லை! யாழில் மங்கள தெரிவிப்பு! வடக்கில் நீதியானது தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு கறைகள் நீக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போதும் இனவாதம் பேசுகின்றனர். நாட்டில் இனிமேல் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான வழிமுறைகளுக்கான இணையத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், 60 வருடங்களின் பின்னர் தமிழில் தேசிய கீதம் இசைத்து நல்லிணக்…
-
- 1 reply
- 368 views
-
-
ரொக்கெட் பரிசோதனை நடத்தும் இலங்கை இளைஞர் விண்வெளிக்கு ரொக்கெட் அனுப்ப வேண்டும் என்ற ஆர்வம் கோடிக்கணக்கானவர்களிடம் உண்டு. ரொக்கெட் தொழில்நுட்பம் குறித்து எண்ணும்போது, ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, இந்தியா போன்றவை தான் பலரின் மனதில் தோன்றும். ஆனால், இலங்கையிலிருந்தே விண்வெளிக்கு ரொக்கெட் அனுப்பும் திட்டத்துடன் உள்ளார் இலங்கையைச் சேர்ந்த ஓர் இளைஞர். குருணாகல் மாவத்தகமையைச் சேர்ந்த திவங்க நெரன்ஜன் திசாநாயக்க (23) எனும் இந்த இளைஞர் வெறும் கனவு மாத்திரம் காணவில்லை. ஏற்கெனவே சிறிய அளவிலான க…
-
- 0 replies
- 550 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மஹிந்த தொடருவாரா? ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றறை எட்டுவதற்கான கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் கொழும்பில் இன்று கூடுகிறது. ஸ்ரீ லங்கா சுந்தந்திரக் கட்சியின் உட்பூசல் முற்றுகிறது? சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடக்கவுள்ள இந்த கூட்டத்தில், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் தொடர்பிலும், மறுசீரமைப்பு பற்றியும் ஆராயப்படவுள்ளதாக தெரிவருகிறது. இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது அரசியல்சார்ந்த நடவடிக்கைகளுக்கான அலுவலகம் ஒன்றை இன்று பத்தரமுல்லையில் திறந்து வைத்தார். ய…
-
- 0 replies
- 332 views
-
-
முதலமைச்சர் அலுவலகம் மாற்றம் -சொர்ணகுமார் சொரூபன் வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் கீழுள்ள அமைச்சுக்கள் என்பன கைதடியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை சம்பிராதாயபூர்வமாக மாற்றப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண அமைச்சர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் கீழுள்ள அமைச்சுக்கள் என்பன இதுவரை காலமும் சோமசுந்தரம் அவுனியூவில் ஒரு வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 497 views
-
-
வடமாகாண ஆளுநர் பதவியை நான் எதிர்ப்பார்த்திருக்கின்றேன்! வடமாகாண ஆளுநர் பதவியை நான் எதிர்ப்பார்த்திருக்கின்றேன். ஆகவேஇவிரைவில் குறித்த பதவி எனக்கு கிடைக்கப்பெறும் என்று நம்புகின்றேன். அந்த பதவி கிடைக்குமிடத்து அதனை பொறுப்பெடுத்து செயற்படுவேன் என்று முன் னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே மேலும் பதிலளிக்கையில், நா…
-
- 0 replies
- 767 views
-
-
இராணுவச் சிப்பாய் சாவு : 22 வருடங்களின் பின் இரு சந்தேகநபர்கள் விடுதலை யாழ்ப்பாணம் மயிலிட்டி முன்னணி இராணுவ காவலரனில் இடம்பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் கடந்த 22 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1994 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி விடுதலைப்புலிகளுடனான முன்னணி காவலரண் பகுதியில் இருந்த இராணுவ காலவரண் ஒன்றில் குசும்சிறி என்ற இராணுவ சிப்பாய் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த மரணம் தொடர்பில் அவருடைய நேரடி உயரதிகாரிகளான சுமதிபால மற்றும் ஜயசுந்தர ஆகிய இரண்டு இராணுவ கனிஸ்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு…
-
- 0 replies
- 298 views
-
-
சாரதிகளின் அசமந்த போக்கை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்! இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ்களால் வீதிகளில் ஏற்படும் விபத்துக்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களை கண்டித்தும் இனிமேல் அவை நடைபெறக்கூடாது என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து இந்தப் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம், தொடர்ந்து ஊர்வலமாக யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் வரையில் சென்று, அங்கு தொடர்ந்து நடைபெற்றது. விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கும் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும், நியத…
-
- 0 replies
- 288 views
-
-
நாம் செய்தது போதாது: மங்கள -சொர்ணகுமார் சொரூபன் 60 வருடங்களில் பின்னர் தமிழில் தேசிய கீதம் இசைத்து நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான பாதையை தொடங்கியுள்ளோம். மேலும், 3,300 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விடுவித்துள்ளோம். நல்லாட்சி அரசாங்கம் உருவாகி குறுகிய காலத்தில் நாங்கள் செய்த நடவடிக்கைகள் போதாது. இன்னும் பலவற்றைச் செய்ய வேண்யுள்ளது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான வழிமுறைகளுக்கான இணையத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (12) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது, …
-
- 0 replies
- 556 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் திறப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. பத்தரமுல்லை, ஜயந்திபுர, நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/3104
-
- 3 replies
- 494 views
-
-
ஓட்டைக் கப்பல் ஓடுமே? யாழ்ப்பாணத்தம்பி- 12 பெப்ரவரி 2016 எப்பிடியாவது ஆட்சியைப் பிடிக்க வேணும். அதிகாரத்தை கைப்பற்ற வேணும் எண்டுற வெறியிலை மகிந்தர் என்னவோ எல்லாம் புலம்புறார். ஆர் என்ன செய்தாலும் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எண்டுறார். போர்க்குற்றச் செயல்களைப் பற்றி விசாரிப்பினம் எண்டுறார். ஆர் என்ன செய்தாலும் இராணுவத்துக்கு தண்டனை எண்டுறார். இவரும் நிறைய நாளாய் புலம்புறார். கடாபிக்கு நடந்ததுதான் எனக்கு எண்டார். என்னை மின்சார கதிரையிலை இருத்தப் போறினம் எண்டுறார். தான் என்ன செய்தவர் எண்டும் தன்னை எதிலை இருத்துவாங்கள் எண்டும் மகிந்தவுக்குத் தெரியும்தானே. மகிந்தவை எங்க இருத்த வேணும் எண்…
-
- 0 replies
- 458 views
-
-
யாழ். ஐந்து சந்திப் பகுதியில் விற்பனையாகின்றது மாவா! யாழ். ஐந்து சந்திப் பகுதியில் கஞ்சா மற்றும் மாவா என்ற போதை கலந்த பாக்கு என்பன பாடசாலை மாணவர்கள் உட்படப் பலருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 25 கிராம், 225 மில்லி கிராம் நிறையுடைய கஞ்சா கலந்த மாவா பாக்கைத் தனது உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சட்ட விரோத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மணிக்கூட்டு வீதிப்பகுதிக்கும், வின்சர்ன் தியே…
-
- 0 replies
- 442 views
-
-
பிரதமர் நாளை ஊடகங்களுக்கு விஷேட உரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாளை ஊடகங்களுக்கு விஷேட உரையொன்று நிகழ்த்தப்படவுள்ளது. நாளை பகல் 1.00 மணிக்கு பதுளையிலிருந்து இந்த விஷேட உரையை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது. நாளை மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மல்வத்து அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களையும் சந்திக்கவுள்ளார். இதுதவிர மறைந்த முன்னாள் ஜனாதிபதி டீ.பி. விஜேதுங்கவின் நூறாவது பிறந்த தின நிகழ்வுகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை கண்டியில் இடம்பெறவுள்ளது. http://onlineuthayan.com/news/8646
-
- 0 replies
- 343 views
-
-
உயிரிழப்பு ஏற்படுத்தும் சாரதிகள் மீது இனிமேல் கொலைக்குற்ற வழக்குகள்! : நீதிபதி இளஞ்செழியன் யோசனை! விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ் செழியன். அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது, பஸ் நடத்துநர்கள் மிதி பலகையில் நின்று, வீதியில் செல்லும் ஏனைய வாகனங்களை முந்தி செல்ல முயற்சி எடுக்கும் நடத்துநர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்படுவார்கள் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 242 views
-
-
பொன்சேகாவை விசாரிக்கவும் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவத்தின் முன்னாள் தளபதியை இலங்கை அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை, யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்காக கொடுத்த வாக்குறுதிக்கு முரணாக உள்ளதென, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்களை அரசாங்கம் பாதுகாக்க உள்ளதை பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை, குறிப்பாக உணர்த்துகின்றது என ஆசியப் பணிப்பளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார். வெறும் அரிதாரம் பூசுவதாக அன்றி, பொறுப்புக் கூறுதல் தொடர்பாக உண்மையான கவனம் செலுத்துகின்றது என இலங்கை அரச…
-
- 1 reply
- 439 views
-
-
தேசிய கொடியை ஏற்ற மறுக்கவில்லை ;விஜயகலா மஹேஷ்வரன் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே விமல் வீரவன்ச இந்த விடயத்தை தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் கருத்து தெரிவிக்கும் போது,யாழில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது யாரும் எனக்கு தேசிய கொடியை ஏற்றுமாறு கூறவோ அல்லது தான் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுக்கவோ இல்லை எனக் கூறினார். இது வெறும் உண்மைக்கு புறம்பான இனவாதத…
-
- 0 replies
- 340 views
-
-
கருணா அணிக்கு அஞ்சியே மாறி மாறிச் சாட்சியமளித்தேன் ரி.பாருக்தாஜுதீன் கருணா அணியின் அழுத்தம் காரணமாகவே, பொலிஸாரிடம் தான், மாற்றி மாற்றி வாக்குமூலம் கொடுத்ததாக, யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்சியான டப்ளியு.எம்.எம்.சஞ்சய பிரித் விராஜ் தெரிவித்தார். இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேயின் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதிகள் இருவரின் சட்டத்தரணிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சாட்சியான டப்ளியூ. டப்ளியூ.எம். சஞ்சய பிரித் விராஜ் மேற்கண்டவாறு கூறினார். அரச சாட்சிய…
-
- 0 replies
- 318 views
-
-
ஹுசைனிடம் ஜனாதிபதி, பிரதமர் வழங்கிய உறுதிமொழிகள் எனக்கு தெரியும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனிடம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களின் தூதுக்குழுக்கள் எவ்வாறான உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர் என்று எனக்குத் தெரியும் என்று, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர், நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுப்பதற்கு, அரசாங்கம் தயாராகின்றது. அதனை எதிர்ப்பதற்கு, சகலரும் ஒன்றிணையவேண்டும். நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தத்துக்கு, ஜனாதிபதியும் பிரதம…
-
- 0 replies
- 271 views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை 2017இலேயே ஐ.நாவுக்கு! இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த வருடம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் இரு அமர்வுகளிலும் இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட மாட்டாது. இந்தத் தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனவே 2017 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவைகள் அமர்வின் போ…
-
- 0 replies
- 294 views
-
-
எமக்கான தீர்வை நாமே கேட்க வேண்டும்! கருத்தறியும் அமர்வே அதற்கு சிறந்த வழி! சரவணபவன் எம்.பி [ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 05:01.00 AM GMT ] எங்களுக்கான தீர்வை நாம்தான் கேட்க வேண்டும். தற்போது அரசு நடத்துகின்ற புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது எங்களுக்கான தீர்வு இதுதான் என்று சொல்லாமல் விட்டுப் பின்னர் வருந்துவதில் பலனில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். தனிநாடு வேண்டுமா? சமஷ்டிவேண்டுமா? இல்லை சமஷ்டியிலும் கூடிய அதிகாரப் பரவலாக்கம் வேண்டுமா? எதுவாக இருப்பினும், புதிய அரசமைப்புக்கான மக்கள் கருத்தறியும் அமர்வில் சகலரும் பங்கெடுத்து தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புனித ஜோண் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலையின் இல்…
-
- 1 reply
- 444 views
-
-
வட மாகாண பாடசாலைகளுக்கு ஐந்து தொழில்நுட்ப பீடங்கள்; முல்லைத்தீவு புறக்கணிப்பு [ Friday,12 February 2016, 04:38:07 ] வட மாகாண பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடத்திறனை விருத்தி செய்யும் வகையில் தொழில்நுட்ப பீடங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மாகாண சபையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். வட மாகாண சபையின் 45 ஆவது அமர்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்றபோது குறித்த தீர்மானம் சபையில் முன்மொழியப்பட்டது. இந்த விடயம் தொடர்பான பிரேரணையை வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முன்மொழிந்தார். வட மாகாணத்திலுள்ள 19 பாடசாலைகளில் தொழில்நுட்ப பீடங்கள் ஏற்கனவே காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், மத்திய கல்வி அமைச்சினா…
-
- 0 replies
- 330 views
-
-
பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்பது அவசியம் [ Friday,12 February 2016, 03:17:24 ] பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்கும் தேசிய மட்டத்திலான கலந்துரையாடலை முன்னெடுப்பது அவசியமானது என ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உண்மை, நீதி, இழப்பீடு, மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கான உத்தரவாதம் ஆகியவற்றை மேம்படுத்தும் விவகாரத்திற்கு பொறுப்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கிறீவ், சர்வதேச சமூகம் இதனை வலியுறுத்திய…
-
- 0 replies
- 296 views
-
-
வட மாகாணத்தில் வீதிகள் புனரமைக்கப்படவில்லை: வைப்புக்கணக்கில் கோடிக்கணக்கான பணம் [ Friday,12 February 2016, 05:19:43 ] வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ளூராட்சிமன்றத்திற்கு சொந்தமான பெருமளவு வீதிகள் புனரமைக்கப்படாது காணப்படுவதாகவும், நிலையான வைப்புக்கணக்கில் உள்ள பணங்களை பயன்படுத்தி வீதிகளை புனரமைக்குமாறு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். வட மாகாணசபையின் 45ஆவது அமர்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்றபோது மேற்படி தீர்மானம் சபையில் முன்மொழியப்பட்டது. இந்தவிடயம் தொடர்பான பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் முன்மொழிந்தார்.மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கையில் புலனாய்வு ஊடகவியலை மேம்படுத்த அமெரிக்கா உதவி- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 12 பெப்ரவரி 2016 இலங்கையில் புலனாய்வு ஊடகவியலை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கவுள்ளது. இந்த திட்டத்திற்காக அமெரிக்கா 500,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. புலனாய்வு செய்திகளை அறிக்கையிடுதல் அது தொடர்பிலான ஊடகவியலாளர்களின் அறிவாற்றல் ஆளுமை விருத்தி குறித்து இந்த திட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது. நேரடியாக ஊடகவியலாளர்களுக்கு இந்த நிதி வழங்கப்படாது எனவும், நிறுவனங்களின் ஊடாக பயிற்சிகள் மற்றும் ஏனைய உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர்களின் புலனாய்வு செய்தி அறிக்கையிடும் ஆற்றலை விருத்தி செய்வதற்கான திட்ட முன்ம…
-
- 0 replies
- 330 views
-