Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அப்பன் குதிருக்குள் இல்லை மப்றூக் இலங்கையில், கணிசமானோரின் அரசியல் இருப்பு ஆட்டம் கண்டிருக்கிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் குட்டி ராசாக்கள் போல் வலம் வந்தவர்கள், இப்போது நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால், எதையாவது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, இந்த முன்னாள் குட்டி ராசாக்களுக்கு எழுந்துள்ளது. இவர்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஆர்வக் கோளாறில் செய்யும் பல விடயங்கள், இவர்களினதும் இவர்கள் சார்ந்தோரினதும் தலைகளில் இவர்களே மண்ணை வாரி இறைக்கும் நிலையினை ஏற்படுத்தி விடும் அபாயமுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இ…

  2. புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்பட உள்ளது? - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 09 பெப்ரவரி 2016 புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்பட உள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து புதிய கட்சியொன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பிலான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகள் நேற்றைய தினம் இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றுள்ளது. மிரிஹானவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். புதிய …

  3. ஆதங்கங்கள் அனைத்திற்கும் இன்று பதில் கிடைக்கும்! உங்களின் ஆதங்கங்கள் அனைத்திற்கும் இன்றைய தினம் பதிலளிப்பேன். அதுவரை பொறுமையாக இருங்கள். நீங்கள் மிக முக்கியமான விடயங்களுக்கு என்னிடம் விடைகளை எதிர்பார்க்கின்றீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் இன்று உங்களின் ஆதங்கங்களுக்கு பதிலளிப்பேன் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்தார். கண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன் அஸ்கிரிய, மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளை சந்தித்த பின் வெளியே வந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். சந்திப்பை முடித்து விட்டு வெளியே வந்த மனித உரிமைகள் ஆணையாளர் அல்…

  4. ஊழல் தடுப்பு அட்டவணையில் இலங்கை முன்னேற்றம் [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 01:09.33 AM GMT ] ஊழல் தடுப்பு தொடர்பான சர்வதேச அட்டவணையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறித்து புதிய அட்டவணை மூலம் தெரிய வந்துள்ளது. ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் எனப்படும் சர்வதேச அமைப்பு வருடாந்தம் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. இதன் பிரகாரம் பூச்சியம் புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழலற்ற நாடுகளாகவும், 100 புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழல் தலைவிரித்தாடும் நாடுகளாகவும் பட்டியலிடப்படுகின்றன. இந்த ஆண்டின் பட்டியலில்' இலங்கை 37 புள்ளிகளைப் பெற்று 83வது .இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 85ம்இடத்தில் இருந்த இலங்கை ஊழல…

  5. கட்சி ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜனாதிபதி [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 12:14.10 AM GMT ] ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தராதரம் பாராது ஒழுக்க விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமென அமைச்சாகள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். சில தரப்ப…

  6. சிறைக்குள் யோஷித்தவின் தொலைபேசி பயன்பாடு! அறிக்கை கோருகின்றார் அமைச்சர் சுவாமிநாதன் [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 12:42.34 AM GMT ] சிறைச்சாலைக்குள் யோஷித்த ராஜபக்ச மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். பணச்சலவை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித்த ராஜபக்ச, சில தினங்களுக்கு முன்னர் தனது உறவினர்களை சந்தித்து விட்டு சிறைக்கூண்டுக்கு திரும்பும் வேளையில் அவரது பாக்கெட்டிலிருந்து மொபைல் ஒன்று கீழே விழுந்துள்ளது. சிறை விதிகளின் பிரகாரம் எந்தவொரு கைதியும் மொபைல் போன் பயன்படுத்த முடியாது. எனினும் யோஷித்த நவீன வகை மொபைல்…

  7. சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்பு [ Tuesday,9 February 2016, 04:15:28 ] ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்ற சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் காணி அமைச்சருமான எம்.கே.டி.எஸ் குணவர்தன தீடீரென இயற்கை எய்தியதை அடுத்து நாடாளுமன்ற ஆசன வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. குறித்த வெற்றிடத்திற்கு பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்றைய தினம் ஏக…

  8. இன்று முக்கிய சந்திப்புகளில் ஈடுபடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்! - மைத்திரி, ரணில், சம்பந்தனுடன் பேச்சு [Tuesday 2016-02-09 07:00] நான்கு நாள் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆகி­யோரை இன்­றைய தினம் சந்­திக்­க­வுள்ளார். ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசை­னு­டைய இலங்­கை விஜ­யத்தின் இறுதி நாள் நாள் இன்­றாகும். இந்­நி­லையில் ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் இன்று காலை 8 மணிக்கு எதிர்க்­கட்­சி­யான தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பை கொழும்­பி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் சந்­திக்­க­வுள்ளார். நான்கு நாள் உத்­தி…

  9. கொலைக்குற்ற சந்தேகநபர்கள் ஐவருக்கு 27 வருடங்களின் பின்னர் மரண தண்டனை [ Tuesday,9 February 2016, 04:30:09 ] ஸ்ரீலங்காவில் கொலைக் குற்றமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஐவருக்கு 27 வருடங்களுக்கு பின்னர் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு எல்.எம் அந்திரிஸ் என்ற நபரை கொலை செய்தமை தொடர்பில் குறித்த ஐவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா அலகப்பெரும குறித்த ஐவருக்கும் மரணதண்டனை விதித்துள்ளார். 45 வயதிற்கும் 65 வயதிற்கும் இடைப்பட்ட, தங்கல்ல சீனிமோதர மற்றும் உனாகுருவ பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பி…

  10. போலி விசாவில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட வடபகுதி இளைஞர் இருவர் கைது [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 02:18.24 AM GMT ] போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். நேற்று அதிகாலை வேளையில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 28 வயதுகளையுடைய இருவர் ஓமான் விமான சேவைக்கு சொந்தமான டப்ளியூ. வை.372 என்ற விமானத்தில் இத்தாலி ஊடாக பிரான்ஸுக்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்று…

  11. சர்வதேச விசாரணை அவசியமற்றது என்கிறார் மல்வத்தை பீடாதிபதி இலங்கையில் இறுதிப்போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமற்றது என மல்வத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் ஆணையர் செயித் ராத் அல் ஹுசைன் மல்வத்து மஹநாயக்க தேரருடன் கலந்துரையாடும்போது ஐ நா மனித உரிமைகள் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹுசைன் அவரைக் கண்டியில் சந்தித்தபோதே திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் திங்கட்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின…

  12. எம்.பியாகிறார் பொன்சேகா! வெற்றிடமாக இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சியின தேசியப்பட்டியல் எம்.பி பதவியை ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகரித்துள்ளது. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். http://onlineuthayan.com/news/8418

  13. இலங்கையில் 'தமிழ் மாநில அரசு' உருவாக்கப்பட கோரிக்கை இலங்கையில் ஒற்றையாட்சி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஆகியவை மாற்றப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறை அமைக்கப்பட வேண்டும் என ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் கூட்டம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறியும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. அவ்வகையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கருத்தறியும் கூட்டம் ஒன்றிலேயே இந்தியாவில் உள்ளது போன்ற சமஷ்டி முறை இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் பொதுமக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்…

  14. மஹிந்த கையொப்பமிட்டார் சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/165545/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B0-#sthash.4CL9ilda.dpuf

  15. சுனாமியில் காணாமல்போன குழந்தையை இரு குடும்பங்கள் உரிமை கோருகின்றன இலங்கையில் சுனாமியின்போது காணாமல் போன குழந்தை ஒன்றின் உரிமையை இப்போது இரு குடும்பங்கள் கோருகின்றன. சுனாமி தாக்குதலில் இலங்கையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் நாட்டின் கிழக்கே கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் நடமாடிய வேளை பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமியை சுனாமியின்போது காணாமல் போன தங்களது குழந்தை என இரு குடும்பங்கள் சட்ட ரீதியாக உரிமை கோருகின்றன. கல்முனையை சேர்ந்த தமிழ் குடும்பமொன்றும் அம்பாந்தோட்டையை சேர்ந்த முஸ்லிம் குடும்பமொன்றும் தனித்தனியாக உரிமை கோரும் மனுக்களை வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இழந்த உறவுகளுக்கு அஞ்சலிகள…

  16. ஐ.நா ஆணையாளரை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு இலங்கை வந்துள்ள ஐ. நா ஆணையாளரை நாளைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பானது நாளை காலை கொழும்பில் நடைபெறும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு, ஜெனீவா பிரேரணையின் முழுமையான அமுலாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஐ.நா ஆணையாளரோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/news/8415

  17. ஐ.நா மனிதவுரிமை ஆணையாளருக்கு தெற்கில் பெரிதாக எதிர்ப்புக்கள் இல்லை! ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக ஒரு சிலரின் எதிர்ப்பைத் தவிர வேறு பெரிதான எதிர்ப்புக்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான தலைமைச் செயலகம் இன்று உத்தியோகபூர்வமாக திருகோணமலை சுங்க வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்…

  18. நாட்டுக்காக சேiவாயற்றிய என்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை – கோதபாய ராஜபக்ஸ: 08 பெப்ரவரி 2016 நாட்டுக்காக கடின உழைப்பினை வழங்கிய தம்மை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டுக்காகவும் படைவீரர்களுக்காகவும் பாரிய அர்ப்பணிப்புடன் கடமையாற்றியிருந்தார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். பாரிய அர்ப்பணிப்புடன் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் தற்போது படைவீரர்களை சிறையில் அடைத்து, சிறையில் உள்ளவர்கள் விடுதலையாவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் நில…

  19. தமிழ்தாய்மாரின் கண்ணீரை மகிந்த இப்போதாவது புரிந்துகொள்வாரா? ஏரிக்கரைப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் ஆதங்கம்! தமிழ் தாய்மார் சிந்தும் கண்ணீரை தனது புத்திரனின் கைதால் கண்ணீர் சிந்திய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இனியாவது புரிந்துகொள்வரா என்று இலங்கை ஏரிக்கரைப் பத்திரிகை தினகரன் தன்னுடைய ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. குறித்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யோசிதவுக்காக கண்ணீர் தனது மகன் கைதாவதை அறிந்து நீதிமன்றத்திற்கு ஓடோடி வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவர் கைது செய்யப்பட்டு கைகளில் கை விலங்கிடப்பட்டு சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற…

  20. கைது செய்யப்பட்டாலும் கலக்கமடையேன் என்கிறார் நாமல் எதிர்வரும் நாட்களில் தம்மை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டம் தீட்டி வரும் நிலையில் அதற்காகத் தாம் கலக்கமடைய போவதில்லையென்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை லுனுகம்வேஹர பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதால், அதனை மறைப்பதற்காகவே அரசியல் வேட்டைகளும் அரசியல் பழிவாங்கலும் இடம்பெறுகின்றன. மேலும், அரசியலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத தமது சகோதரன் யோசித மீது பொய்யான குற்…

  21. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ்.முஸ்லிம்களை சந்தித்தார் ஐ.நா. ஆணையாளர்! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் நேற்று யாழ். முஸ்லிம்களை சந்தித்துள்ளார். நல்லூர் ஆலயத்திற்கு சென்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம், ஆலய முன்றலில் சுலோகங்களை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். முஸ்லிம் மக்கள் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். இதன்போது தாம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பாகவும் போர்க்காலத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களது விபரங்களை ஆணையாளரிடம் கையளித்துள்ளனர். இதேவேளை, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்தும் ஆணைய…

  22. பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அமாரி விஜேவர்தன? பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்கு தொழிலதிபர் அமாரி விஜேவர்தனவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த கிறிஸ் நோனீஸ் பதவியை ராஜினாமா செய்திருந்ததைத் தொடர்ந்து குறித்த பதவி 2014ஆம் ஆண்டு முதல் வெற்றிடமாக காணப்படுகின்றது.பலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் திடமான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி நேரடியாக அழைத்திருந்த போதிலும், அந்த அழைப்பை சங்கக்கார மறைமுகமா…

  23. திருட்டு தேங்காயினைக் கொண்டு இறைவனை நாடுவதில் பயனில்லை : பிரதமர் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக தேங்காய் உடைப்­ப­தாயின் நாடு­பூ­ரா­கவும் உள்ள அரச தோட்­டங்­களில் விலைக்கு வாங்கி பத்து இலட்சம் தேங்­காய்­க­ளா­வது உடை­யுங்கள். அதன் ஊடாக தென்னை பயிர்­ச்செய்­கை­யா­ளர்­களின் வரு­மானம் அதி­க­ரிக்கும். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு நாம் பூரண ஆத­ர­வினை நல்­குவோம். அதற்கு மாறாக அரச தோட்­டங்­களில் தேங்காய் திருட வேண்டாம். திருட்டு தேங்­கா­யினை கொண்டு இறை­வனை நாடு­வதில் பய­னில்லை. தேசிய அர­சாங்­கத்தினூடாக நாம் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டத்­தினை முடக்­கு­வ­தற்கு நாம் எவ­ருக்கும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். தேசிய அர­…

  24. யோஷித்த கைது செய்யப்பட்டதும் ரணிலுடன் தொலைபேசியில் உரையாடிய மஹிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யோஷித்த ராஜபக்ஷவின் கைது விவகாரம் நிதிக்குற்றப்புலனாய்வு விடயம் போன்றவை தொடர்பில் காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதை விட அந்த கைது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் ஐ.தே. க. அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தியுள்ளனர். அரசாங்கத…

  25. யோஷித்த குறித்த விசாரணையில் ஜனாதிபதியோ பிரதமரோ ஒருபோதும் தலையிடமாட்டார்கள் கால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணையை நிதி குற்றப்புலனாய்வு பிரிவே முன்னெடுத்து வருகின்றது. இது குறித்தான விசாரணைகளின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அமைச்சர்ளோ தலையிடவோ அழுத்தம் பிரயோகிக்கவோ மாட்டார்கள் என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த மோசடிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்காமல் விசாரணை முன்னெடுக்க முடியாமையை கருத்திற் கொண்டே சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய வேண்டிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.