Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பூமி பிளந்து அதனுள் செல்வது போன்று கனவு: 28 ஜனவரி 2016 கனவின் பின்னர் தூக்கமே இல்லாமல் இரவுகளை கழித்து வருகின்றது ஒரு குடும்பம்: குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்:- கனவின் பின்னர் தூக்கமே இல்லாமல் இரவுகளை கழித்து வருகின்றது ஒரு குடும்பம். அச்சுவேலி மேற்கு நவக்கிரி பகுதியில் J/ 287 கிராம சேவையாளர் பிரிவில் சுப்பிரமணியம் தர்மசேகரம் அவரது மனைவி லலிதா தர்மசேகரம் ஆகியோர் வாழ்ந்து வந்தனர். திருமணமான நாள் முதல் கணவன் மனைவி இருவரும் தோட்டம் செய்து வருகின்றனர். இருவரும் கடும் உழைப்பாளிகள், கடந்த 30 வருடகாலமாக கடுமையாக உழைத்து , சிறுக சிறுக சேமித்த பணத்தை கொண்டு கடந்த ஐந்…

  2. ஊடகங்களின் செயற்பாடு தொடர்பில் பிரதமர் கவலை (வீடியோ) January 28, 2016 07:52 pm சில செய்திகளை வௌியிடும் போது, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம மற்றும் எம்பிலிபிடிய சம்பவங்கள் தொடர்பில், ஊடகங்கள் செய்தி வௌியிட்ட விதம் தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேட்டைக்குச் சென்று இனவெறியை ஏற்படுத்த வேண்டாம் என இதன்போது சுட்டிக்காட்டிய பிரதமர், சில ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார். இதன்போது தெரண ஊடகம் மற்றும் அதன் ஊழியர்கள் தொடர்பிலும் (சதுர அல்விஸ், மாதவ மடவல) அவர் கருத்து தெரி…

  3. பிணத்துடன் தவிக்கும் கிராமம்! இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களை கிராமங்கள் வரை கொண்டு சென்றதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் கூறிக்கொண்ட போதிலும் அந்த அபிவிருத்திகள் பல கிராமங்களை சென்று சேரவில்லை என்பதே உண்மையானது என தெரியவருகிறது. வட, கிழக்கு பகுதிகளில் மாத்திரமல்ல தென் பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் அடிப்படையான உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேற்கொள்ளப்படாத நிலைமையை காணமுடிகிறது. இதற்கு மாத்தளை மாவட்டத்தில் உள்ள கலேவல பள்ளயாய கிராம் ஒரு உதாரணமாகும். இந்த கிராமத்து மக்கள் ஊரை கடந்து செல்ல ஆற்றை கடக்க பாலம் ஒன்றில்லாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். …

  4. “கொக்கட்டிச்சோலை படுகொலை“ 29ஆவது ஆண்டு நிறைவு இன்று [ Thursday,28 January 2016, 05:22:27 ] கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29ஆவது ஆண்டு நிறைவு இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த 1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிக்கொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீலங்கா படையினரால் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தனர். ஸ்ரீலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 150ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானதோடு, 12 பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை தகவல் இல்லை. மண்முனைத்துறைக்கும் மகிழடித்தீவுக்கும் இடையில் அமைந்திருந்த இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட…

  5. யாழ்.தாயின் கதறலை ஐ. நா. பாதுகாப்பு சபையில் எடுத்துரைத்த சமந்தா பவர் (லியோ நிரோஷ தர்ஷன்) மகளை தொலைத்த யாழ்.தாயின் கதறலை ஐ. நா. பாதுகாப்பு சபையில் எடுத்துரைத்து இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெளிவுப்படுத்தியுள்ளார். காணாமற்போனோர் குறித்த பொறுப்புக்கூறலின் பூகோள சவால்கள் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்பு சபையின் முறைசாரா கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்கவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் இவ்வாறு தெளிவுப்படுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் பாத…

  6. இலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காக்க தவறிவிட்டது' இலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காப்பதற்கு தவறியுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த சிவில் அமைப்பொன்று காமன்வெல்த் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளது. 'இலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காக்க தவறிவிட்டது' சட்டம் மற்றும் நியாயத்தை காக்கும் அமைப்பு என்ற அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு என்பவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம்கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நீதிமன்ற சுதந்திரத்தை காப்பதாக வாக்குறுதிகளை வழங்கியதாக கூறிய கொடித்துவத்து, இன்று அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்யப…

  7. ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை மனுவை நிராகரித்தள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டிய குற்றஞ்சாட்டின் அடிப்படையில் ஞானசார தேரர், கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவிற்கமைய வி…

  8. இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன என சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார். யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இரண்டாவது காணமற்போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அப்பட்டமாக தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்து பண்டிகையொன்றை தெரிவுசெய்திருந்தார். இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன் பழைய காயங்களை…

  9. பொறுப்புக்கூறலில் விலகி நிற்க முடியாது! : குற்றவாளிகள் என்று சர்வதேசம் முத்திரை குத்திவிடும்! போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச தரப்பிடம் பொறுப்புக்கூற வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. பொறுப்புக்கூறலில் பின்னின்றால் சர்வதேசம் எம்மை ஒதுக்கி வைத்துவிடுவதுடன் குற்றவாளிகள் என்ற முத்திரையை பொறித்துவிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போரில் பாதிக்கப்பட்ட, அங்கவீனமான படைவீரர் கள் மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கும் வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சேமநல மேம்பாட்டிற்காக விசேட சலுகைகள் வழங்கப்படும் ‘விருசர’ சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகைய…

    • 10 replies
    • 791 views
  10. வட்டுவாகல் பாலத்தில் இனி தொழில் மேற்கொள்ளலாம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தில் தற்போது தொழில் மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளதாக சிறுகடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் தொழிலாளர்கள் தொழில்; மேற்;கொள்ளும் பகுதியாக காணப்படும் வட்டுவாகல் ஆற்றில், கடந்த காலங்களில் தொழில்களில் ஈடுபடுவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள், தொழில் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டமை போன்ற சிக்கல்கள் கடந்த காலத்தில் காணப்பட்டது. எனினும், தற்போது சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இறால் பிடிப்பதற்கான அனுமதியும் …

  11. இலங்கை வரும் சுஷ்மா - விக்னேஸ்வரன், சம்பந்தனுடனும் சந்திப்பு January 28, 2016 11:02 am இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெப்ரவரி 5-ம் திகதி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர், கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தில் அவர் பங்கேற்று இரு தரப்பு மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போன்ற விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, "சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க வருவதாகக் கூறி தமிழக மீனவர்கள் பலரை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். இந்தப் பிரச…

  12. வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் வீடு கட்ட முடியாது -எம்.றொசாந்த் அச்சுவேலி, நவக்கிரி பகுதியில் நிலவெடிப்பு ஏற்பட்ட பகுதியில் உடைந்த வீட்டை மீண்டும் கட்டுவது ஆபத்து எனவும் மழை காலங்களில் அந்தப் பகுதியை அவதானத்துடன் பயன்படுத்துமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டாரா தனக்குக் கூறியதாக யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். மேற்படி பகுதியில் சுப்பிரமணியம் தருமசேகரம் என்பவரது, 30 பரப்புத் தோட்டக்காணி மற்றும் அவரது வீடு அமைந்த 10 பரப்புக் காணியில், கடந்த 23ஆம் திகதி அதிகாலை, சுமார் 500 மீற்றர் தூரத்துக்கு நிலவெடிப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் ஆராய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமை…

  13. திலங்கவிடம் 1000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரும் அர்ஜூன [ வியாழக்கிழமை, 28 சனவரி 2016, 05:19.17 AM GMT ] பிரதிசபாநாயகரும் ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவருமான திலங்க சுமதிபாலவிடம் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சட்டக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறியே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது. இந்த மாத முதல்பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான தேர்தலில் திலங்க சுமதிபால வெற்றி பெற்றார். இதனையடுத்து போட்டியில் தோல்வியடைந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கட் வியாபார மாபியாவின் கைகளுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டார். இதனையடுத்து திலங்க சுமதிபால தெரிவி…

  14. தேசிய கீத விவகாரம்: இரண்டானது அமைச்சரவை [ வியாழக்கிழமை, 28 சனவரி 2016, 04:54.25 AM GMT ] இலங்கையின் தேசிய கீதத்தை தமிழிலும் பாடவேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பில் அமைச்சரவையின் உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து செயற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் நல்லிணக்கம் தொடர்பான குழுவின் அறிக்கை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோது சில அமைச்சர்கள் இந்த யோசனைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். எனவே இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுப்பது நிறுத்திவைக்கப்பட்டது. தேசியகீதத்தை தமிழில் பாடுவதன் காரணமாக நல்லிணக்கத்துக்கு உந்துதலை அளிக்கமுடியும் என்று நல்லிணக்கத்துக்கான குழு பரிந்துரை செய்திருந்தது. தற்போது தமிழ் பிரதேசங்களில் …

  15. ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை சரித்திரம் பெறும் கதைகளை மகாகாவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மண்ணை நான்தொட்டு வணங்குகிறேன். இந்த மண்ணைத் தொழுகின்றபோது எனக்கு என்ன உணர்வு வந்ததென்று ஆயிரம் சொற்களால் எழுதிவிடமுடியாது. முதன்முதலில் மண்ணில் விழும் மழைத்துளிக்கு ஒரு சிலிர்ப்பு வரும், மண்ணுக்கு …

  16. போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு தலையீட்டை நிராகரிக்க முடியாது! - பிரதமர் ரணில் தெரிவிப்பு! போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் வெளிநாடுகளின் தலையீடுகளை நிராகரிக்கவே முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரிட்டனின் சனல் - 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமில்லை என்று கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது தொடர்பாக சனல் - 4 எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டுத் தலையீட்டை நிராகரிக்க முடியாது என்று கூறியிருக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் எ…

  17. நான் இல்லாவிட்டால் இன்னும் போர் நடந்து கொண்டிருக்கும்! - என்கிறார் கோத்தபாய [Thursday 2016-01-28 07:00] நான் இல்லை எனில் யுத்தம் இன்னும் நடந்து கொண்டிருக்கும். எனக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயராம விஹாரையில் இடம்பெற்ற முறுத்தெட்டுவே ஆனந்த தேரரின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான் இல்லை எனில் யுத்தம் இன்னும் நடந்து கொண்டிருக்கும். எனக்கு ஜனாதிபதி ஆணைக…

  18. காலிமுகத்திடலில் 68வது சுதந்திர தின வைபவம்! [ வியாழக்கிழமை, 28 சனவரி 2016, 12:13.46 AM GMT ] இலங்கை சுதந்திர தினத்தின் 68வது தேசிய நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. வழமைக்கு மாறாக இம்முறை இரண்டு கட்டங்களாக தேசிய தின நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. காலையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு நிகழ்வுகளும், மாலை கலாசார நிகழ்வுகளும் நடைபெறவிருப்பதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். சுதந்திரதின நிகழ்வுகள் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடான கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இதில் ஊடகத்துறை அ…

  19. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்ற சொற்பதத்தை நீக்க இலங்கை அரசு நடவடிக்கை! [ வியாழக்கிழமை, 28 சனவரி 2016, 02:47.28 AM GMT ] இலங்கை வரலாற்றில் குறுகிய காலத்தில் 'உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்' என்ற சொற்பதத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பியான கவீந்திரன் கோடீஸ்வரன் எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முள்ளிக்குளம் சமூகம் தொடர்பில் கோடீஸ்வரன் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்குப…

  20. கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ஈழத்தமிழ் அகதிகளுக்கு அனுமதி மறுப்பு [ Thursday,28 January 2016, 04:53:28 ] கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் பங்கேற்பதற்கு ஈழத்தமிழ் அகதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் வட்டாராச்சியாளர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கச்சத்தீவு செல்வதற்கு தமிழக விசைப்படகுகள் மறுப்பு தெரிவித்துள்ளமை குறித்து அரசுடன் பேச்சுவா…

  21. போர்க்குற்ற விசாரணை விடயத்தில் அரசாங்கத்துக்குள் முரண்பாடு! [Thursday 2016-01-28 07:00] விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை அரசுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அப்படியான விசாரணைகள் எதிலும் வெளிநாட்டவர் யாரும் இடம்பெறமாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் பிபிசியிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை அரசுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அப்படியான விசாரணைகள் எதிலும் வெளிநாட்டவர் யாரும் இடம்பெறமாட்டார்கள் என ஜனாதிப…

  22. யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்: 28 ஜனவரி 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படைச் சட்டத்தை மீறியதாகவும், அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யோசித ராஜபக்ஸ தொடர்பில் முழு அளவில் கடற்படையினர் விசாரணைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை அறிக்கை ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய அடுத்த க…

  23. மீள்குடியேற்றத்தினை அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது; வலி. வடக்கு மக்கள் குற்றச்சாட்டு [ Thursday,28 January 2016, 03:55:55 ] புதிய தரவுகள் சேகரிப்பு என்பது தமது மீள்குடியேற்றத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான நடவடிக்கை என வலி.வடக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வலி.வடக்கின் மீள்குடியேற்றம் புதிய தரவுகள் சேகரிக்கும் ஆரம்ப கட்டத்துடன் நிற்பது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தினை தந்துள்ளதாக அந்தமக்கள் தெரிவிக்கின்றனர். வலி. வடக்கில் மக்களை மீளக்குடியேற்றும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சின…

  24. [ புதன்கிழமை, 27 சனவரி 2016, 09:31.27 PM GMT ] நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து நல்லாட்சியை செலுத்துவதால் அரசியலமைப்பு மாற்றத்துக்கு பொன்னான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென அரசியலமைப்பு சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து வெளிவரும் இந்து பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1978ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் கலந்துரையாடி வருவதால் இம்முயற்சியை மேலும் இழுத்தடிக்காமல் ஆறு மாதங்களில் பூர்த்திசெய்ய வேண்டும் என்றார். 13ஆவது அரசியலமைப்பின் கீழ் தேசிய கொள்கை அமைப்பது என்ற போர்வையில் வழங்கப்பட்ட அத…

    • 0 replies
    • 486 views
  25. ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதி உச்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய சமஷ்டி முறை மூலமே, தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கு சிங்கள அரசியல் தலைமைகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும் வெளியிட்டுள்ள கருத்துக்களின் தொகுப்பு. வாசுதேவ நாணயக்கார - சிறிலங்காவில் சமஷ்டி முறைமையில் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்குள் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை அரச திட்டமிடல், பாதுக…

    • 9 replies
    • 727 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.