Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விஸ்வமடு பகுதியில் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் முல்லைத்தீவு பதில் நீதவான் பரஞ்சோதியின் அனுமதியோடு இராணுவ வீரரின் சடலம் என சந்தேகித்து அகழ்வு நடைபெற்று வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படியே அகழ்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது. நிட்டம்புவ அல்கம பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவ சிவில் படைப்பிரிவில் விஸ்வமடுவில் கடமையாற்றி இருந்ததாகவும் குறித்த நபர் கடந்த 2010.02.02 அன்றிலிருந்து காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறித்த சடலம் அவருடையதாக இருக்கலாம் என சந்தேகித்து அவரது அம்மா மற்றும் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு இந்த அகழ்வு நடை பெற்று வருகின்றது. குறித்த அகழ்வில் ஊடகவியல…

  2. பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அடிக்கடி அழைக்கப்படுகின்ற போதும் மோசடி தொடர்பில் இன்னும் தன்னிடம் விசாரணை செய்யப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 'இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. நேற்றும் பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்ட போதும் ரக்ன லங்கா நிதி மோசடி தொடர்பில் எதுவும் கேட்கப்படவில்லை. நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுமாகவிருந்தால் எனது சொத்துக்களை சோதனை செய்யமுடியும். வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் ஆராய முடியும். இதனை விடுத்து தாம் மோசடியில் ஈடுபட்டமையை எவ்வாறு நிரூபிப்பர். நான் சட்டத்துக்கு உட்பட்ட விதத்திலேயே வருவாயை தேடிக் கொண்டேன். …

  3. இராணுவத்தினரை வடிகானை சுத்தம் செய்யக் கூறும் அளவிற்கு வட மாகாண முதலமைச்சருக்கு நல்லாட்சி அரசாங்கம் பலத்தை வழங்கியுள்ளதாக விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு நேற்றுடன் ஒராண்டு பூர்த்தி அடைக்கின்ற நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். நல்லாட்சியினர் பிரிவினைவாதத்திற்கு பலத்தை வழங்கியுள்ளனர். சிவா பசுபதி இலங்கைக்கு வருகை தந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தலையீடு செய்வதற்கான சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். புலிகளின் சின்னம் உள்ளிட்ட சட்டையை அணிந்து வடக்கில் இருக்க கூடியவாறு சூழல் மாறுபட்டுள்ளது. நாட்டை பாதுகாத்த இராணுவத்தி…

  4. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் சரத் பொன்சேகாவை மாத்திரமே தாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கியுள்ளோம் என்று பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் ஒருவருட பூரத்தியை முன்னிட்டு பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.தே.கவுக்கோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ ராஜபக்‌ஷக்களை அரசியலிலிருந்து நீக்க முடியாது. ராஜபக்‌ஷக்களை மக்களால் மாத்திரமே அரசியலிலிருந்து நீக்க முடியும். மஹிந்த ராஜபக்‌ஷ போராட்டத்தின் மூலம் முன்னுக்கு வந்தவர். அவர் சதிசெய்து முன்னுக்குவந்த ஒருவர் அல்ல என்றும் பசில் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ நிர…

  5. புகைப்படக் கட்சியில் வைக்கப்பட்டிருந்த தனது புகைப்படங்களைப் பார்த்து பிரமித்துப் போனேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி அபிமங்கள வருட புகைப்பட நினைவுகள்” கண்காட்சி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக் கண்காட்சியை திறந்து வைத்து விட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை பார்வையிட்டிருந்தார். இங்கு ஜனநாயக ஆட்சியின் ஓராண்டு பூர்த்தி விழாவுடன் இணைந்ததாக ஜனாதிபதிபுகைப்படக் கலைஞர் திரு.சுதத் சில்வா புகைப்படமெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் முதலாம் வருடத்துடன் தொடர்பான விசேட நிகழ்வுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அங்கு காட்…

  6. பொங்கல் விழாவை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் ; அரசியல் கைதிகளின் பெற்றோர் முடிவு! ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும் தேசிய தைப்பொங்கல் விழாவை புறக்கணிக்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர். மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அன்ரனி சகாயம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முதலமைச்சருக்கு கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்காத பட்சத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தமிழ் அரசியல்கைதிக…

  7. முள்ளிவாய்க்காலில் குண்டு வெடிப்பு! குடும்பஸ்தர் படுகாயம்! முள்ளிவாய்க்கால் கிழக்கில் சற்று முன் குண்டு ஒன்று வெடித்துள்ளது. வீட்டு முற்றம் பெருக்கி குப்பைக்கு தீவைத்த போது நிலத்தினுள் புதையுண்டிருந்த குண்டு வெடித்ததில் குறித்த இடத்தை சேர்ந்த தம்பையா சிறிகாந்தா (சிறி) (வயது 52) என்பவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த நபர் பொதுமக்களின் உதவியுடன் முல்லைத்தீவு மாஞ்சோலை அரசினர் வைத்தியசாலை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://onlineuthayan.com/news/6514

  8. மன்னார் ஆயரை சந்தித்தார் வடமாகாண முதல்வர் வடமாகாண முதலமைச்சர் மன்னார் மறைமாவட்ட ஆயரை இன்று மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்து ஆயரது உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்தார். இன்று வடமாகாண முதல்வர் மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப பீடத்தை திறந்து வைத்த பின்னர் ஆயர் இல்லம் சென்ற வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆயரை சந்தித்து நலம் விசாரித்தார். இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், ஆயர் மிக விரைவில் குணமடைவார். அதன் பின் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன்வருவார்,இதற்கு இறைவன் அருள் புரிவார் என்கின்ற நம்பிக்கை எனக்குண்டு என்றார். …

  9. ஜனாதிபதி,பிரதமரின் யாழ். விஜயத்தை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம் தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புகொடி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. ஆனால் இந்த ஆட்சி காலமும் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது.குறிப்பாக அரசியல் கைதிகளுடைய விடுதலையை சரியாக நிறைவேற்றவில்லை. காணாமல் போனோர் விவகாரத்தில் த…

  10. கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ முகாம்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகின்றது. நல்லாட்சி அரசிலும் தங்களது காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றமை தங்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளதாகவும், எங்களின் காணிகள் எங்களுக்கு என்ற நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனா். கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிாிவிலுள்ள ஊா்வணிகன்பற்று கிராமத்தில் அமைந்துள்ள பொது மக்களுக்கு சொந்தமான ஏழு உறுதி காணிகளில் அமைந்துள்ள இரானுவ முகாம் சுற்று மதில் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பிலேயே அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். ஏ9 வீதி…

  11. எட்டாக்கனியாகிய சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உபகுழுவில், சட்டநிபுணர் சிவா பசுபதியும் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த போதும், அவரை அதற்குள் இணைத்துக் கொள்ளும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் முயற்சிகள், தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் உபகுழு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் என்ற வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில், இதற்கான 15 பேர் கொண்ட உபகுழுவும், தமிழ் மக்கள் பேரவையினால் அமைக்கப்பட்டது. அதில் இடம்பெறும் 11 பேரின் விவ…

  12. மதிக்காத முஸ்லிம் எம்.பி.க்கள் மொஹமட் பாதுஷா முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருக்குப் பதவியும் பட்டமும் கிடைத்துவிட்டால், தமக்கு 'கொம்பு' முளைத்து விட்டது என்று நினைக்கின்றார்கள். இப்படியானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார்கள் என்றால், தலைக்கனம் ஒரு போதைபோல தலைக்கேறி விடும். தாமாகத் தேடிச்சென்றுச் மக்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டி இவர்கள், தம்மை சந்திக்க வரும் மக்களுக்கு பாரிய கெடுபிடிகளை விதிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஓரிரு அரசியல்வாதிகள் இது விடயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்கின்றார்கள் என்றாலும், பெரும்பாலான எம்.பி.க்களை சாதாரண மக்களால் சந்திக்கவே முடிவதில்லை. அப்படிச் சந்தித்தாலும் முகத்தில் அறைந்தாற்போல் எகத்தாளம…

  13. ஹிருணிகா எம்.பிக்கு பிணை இளைஞனை கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப்பிரிவினாரால் இன்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/163398/%E0%AE%B9-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%A3-#sthash.QkXtgSyv.dpuf

  14. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி! யாழ்ப்பாணத் தம்பி:- எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. கூட்டு எதிர்கட்சிக்குள்ள குழப்பமாம். அதுவும் உவர் உதயகம்பன்பிலவாலைதானாம். பிறகென்ன? நாட்டிலை ஓரளவு அமைதி திரும்பி சனங்கள் மூச்சு விடுகிற ஒரு சூழல் இப்ப இருக்குதுதானே. அது இவைக்குப் பிடிக்காதே? ஏனெண்டால் அறுப்புக் காலத்திலைதானே எலி ஐஞ்து பெண்சாதியை வைச்சிருக்கலாம். ஆட்டையப் போடலாம். இதாலை பெரிய பாடு படுறினம். அரசாங்கத்தை உவையள் விமர்சிக்கட்டும். ஜனநாயக ரீதியாய் செய்யிற வேலைகளை செய்யட்டும். ஆனால் மகிந்த அரசாட்சி எண்டுற கொடிய சர்வாதிகார, இன ஒடுக்கல், இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த நாள் நல்ல திருநாள். ஆனால் இவையள் அந்த நா…

  15. உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தினம் நாளை யாழில் அனுஸ்டிப்பு! யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 42 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த நினைவாலயம் துப்புரவாக்கப்பட்டு வருகின்றது. யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள குறித்த நினைவாலயம் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் துப்புரவாக்கப்பட்டு வர்ணப்பூச்சுக்கள் பூசப்பட்டு வருகின்றது. …

  16. கிளிநொச்சியில் முகாம்களை பலப்படுத்தும் இராணுவம்; அச்சத்தில் மக்கள் [ Saturday,9 January 2016, 07:21:44 ] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 1 வருடம் நிறைவடைந்த நிலையில் பொது மக்களின் காணிகளில் உள்ள இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இயக்கச்சி பகுதியில் 7 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறித்த முகாம்களை பலப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட…

  17. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் ! இணையங்களில் வந்த செய்தியை உறுதிப்படுத்தியது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. முன்நாள் சட்டமா அதிபர் திரு சிவா பசுபதி அவர்களிடம், வட மாகாண சபை முதல்வர் திரு விக்னேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அவர் மறுத்ததாகவும், அதனால் முதல்வர் விசனமுற்றதாகவும் வந்த செய்தி பற்றி திரு விக்னேஸ்வரனிடம் வினவியபோது, இது தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரானவரின் விசமத்தனமான செயல் என்றும், தான் அது பற்றி கருத்து கூறத்தேவையில்லை என கூறியுள்ளார். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் அரசியல்வாதிகள் பலதுபட்டால் செய்தியாளர் காட்டில் மழை. உண்மையில்லாமல் தானாக கை கால் முளைத்து அந்த செய்தி உலாவரவில்…

    • 4 replies
    • 554 views
  18. பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் யோசனையை சற்று முன்னர் பிரதமர் முன்வைத்தார் 09 ஜனவரி 2016 இலங்கைப் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்துள்ள இந்தப் பிரேரணை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றை வழங்குவது உள்ளிட்ட அடிப்படைகளுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முகமாக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்ற யோசனை …

  19. உயிர்தியாகம் செய்த செந்தூரனின் இல்லத்திற்கு விஜயம் செய்தார் ஜெனீபன் [ Saturday,9 January 2016, 07:09:49 ] ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை பெற்ற சிவராஜா ஜெனீபன், யாழ்ப்பாணம் – அச்சுவேலியிலுள்ள தனது இல்லத்திற்கு இன்று திரும்புகின்றார். கொழும்பு - வெலிக்கடை சிறையிலிருந்து 10 வருடங்களுக்குப் பின்னர் இன்று சனிக்கிழமை வெளியே வந்த ஜெனீபன், தனது இல்லத்திற்கு செல்லாமல், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு புகையிரதம் முன் பாய்ந்து தனதுயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் செந்தூரனின் இல்லத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்விபயின்ற செந்தூரன், கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி புகையிரதம்…

  20. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி! யாழ்ப்பாணத் தம்பி:- 09 ஜனவரி 2016 எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. கூட்டு எதிர்கட்சிக்குள்ள குழப்பமாம். அதுவும் உவர் உதயகம்பன்பிலவாலைதானாம். பிறகென்ன? நாட்டிலை ஓரளவு அமைதி திரும்பி சனங்கள் மூச்சு விடுகிற ஒரு சூழல் இப்ப இருக்குதுதானே. அது இவைக்குப் பிடிக்காதே? ஏனெண்டால் அறுப்புக் காலத்திலைதானே எலி ஐஞ்து பெண்சாதியை வைச்சிருக்கலாம். ஆட்டையப் போடலாம். இதாலை பெரிய பாடு படுறினம். அரசாங்கத்தை உவையள் விமர்சிக்கட்டும். ஜனநாயக ரீதியாய் செய்யிற வேலைகளை செய்யட்டும். ஆனால் மகிந்த அரசாட்சி எண்டுற கொடிய சர்வாதிகார, இன ஒடுக்கல், இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த நாள் நல்ல திருநாள். ஆனால் இவையள் அந்த நாளிலை கறுப்புக் கொடி ப…

  21. 09-01-2016 10:40 AM நாடாளுமன்றத்தை முழு அரசியலமைப்பு சபையாக மாற்றும் யோசனைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பித்துகொண்டிருக்கின்றனார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்ரம, டி.எம்.சுவாமிநாதன், விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகிய அமைச்சர்கள் குழுமத்தின் யோசனையாகவே இந்த யோசனைகளை முன்வைக்கப்பட்டன. - See more at: http://www.tamilmirror.lk/163388/%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0…

    • 0 replies
    • 369 views
  22. முள்ளிவாய்க்காலில் கடற்படை காணி அபகரிப்பு: விக்னேஸ்வரன் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? [ சனிக்கிழமை, 09 சனவரி 2016, 04:51.39 AM GMT ] முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் கடும் எதிர்ப்புக்களையும் மீறி பொதுமக்களுக்குச் சொந்தமான 626 ஏக்கர் நிலத்தை அபகரிக்க கடற்படை முயற்சிக்கின்றது. இதனைத் தடுத்து நிறுத்த மாகாண காணி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? இவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர் அந்த நிலங்களுக்குச் சொந்தமான மக்கள். முள்ளிவாய்க்கால் கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான 626 ஏக்கர் நிலத்தை போருக்குப் பின்னர் ஆக்கிரமித்த கடற்படையினர், அதில் பாரிய முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். எங்கள் நிலத்தை …

  23. நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா கைது [ சனிக்கிழமை, 09 சனவரி 2016, 05:03.00 AM GMT ] தெமட்டகொடை கடத்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை பிரதேசத்தில் நபரொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிருணிகாவை கைதுசெய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை அவரது வீட்டுக்குச் சென்றிருந்தனர். அதன்போது, அவர் பொலிஸாருடன் செல்வதற்கு தயாராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கைது செய்யப்பட்ட ஹிருணிக்க பிரேமச…

  24. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதிலீடாக புதிய கட்சி உருவாக்கப்பட வேண்டும் - கோதபாய ராஜபக்ஸ:- 09 ஜனவரி 2016 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதிலீடாக புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மக்களின் கட்சியொன்று உருவாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு நன்மையை செய்யவில்லை எனவும், காவல்துறை ராச்சியமொன்றையே உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றிக் கொண்டுள்ளதாகவும், புதிய அரசியல் கட்சியொன்று அவசியப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல் தேவைகளுக்காக சில ஸ்ரீலங்க…

  25. உயிரை அர்ப்பணிக்கவும் தயார்: மைத்திரிபால [ சனிக்கிழமை, 09 சனவரி 2016, 12:21.53 AM GMT ] தாய்நாட்டுக்காகவும், இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலனுக்காகவும் தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கவும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருக்கமாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஓராண்டு நிறைவு விழா நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபாலவின் உரை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, சமூக மாற்றத்தை உருவாக்க முனைந்த தலைவர்களுக்கு அதே சமூகத்தின் மத்தியில் இருந்து மரணமே பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.