Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் வயல் உழுத ஜனாதிபதி கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நடைபெற்ற 'தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி ' திட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வயலில் இறங்கி இயந்திரத்தின் மூலம் நாற்றுக்களை நாட்டி வைத்தார். இன்றைய தினம் பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் என்ற எண்ணக் கருவின் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரணைமடுவிலிருந்து தொடக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இதுவே சிறந்த தருணம். இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்கும், போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பத…

    • 4 replies
    • 3.2k views
  2. பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவத்தினரால் ஆயிரக்கணக்கிலான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல தமிழ் அமைப்புக்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ் அமைப்புகள் குறித்த ஆயுதங்களை பயன்படுத்தி சிவில் உறுப்பினர்கள் பலரை கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் குறித்த அமைப்புகளிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ரவிராஜ் கொலை மற்றும் பிரகித் எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் மூலம் பல தகவல்களை வெளியிடுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு ஆயத்தமாகியுள்ளது. எக்னெலிகொடவை கடத்தி சென்று கொலை செய்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் …

  3. சர்வதேச விசாரணை வேண்டாம் : நாடாளுமன்றில் அமளிதுமளி ஐ.நா விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு சிறப்பு நீதிமன்றம் இலங்கையில் ஏற்படுத்தப்படக் கூடாதென தெரிவித்து, நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டு வருகின்றனர். நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடிய நிலையில், அங்கு பதாதைகளுடன் வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நாடாளுமன்றத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சபை நடவவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அறிவித்துள்ளார். http://onlineuthayan.com/news/931

    • 2 replies
    • 622 views
  4. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சுதந்திரம் வழங்கியது நவ்று அரசு நவ்று தீவில் உள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 600 புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் இந்த வாரத்துக்குள் பரிசீலிக்கப்படும் என்று நவ்று அரசு அறிவித்துள்ளது. இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் இனிமேல் நவ்று தீவு எங்கிலும் சுதந்திரமாகச் சென்றுவரக் கூடிய விதத்தில் அது திறந்த முகாமாகும் என்றும் நவ்று அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஏ.எப்.பி.செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஆஸ்திரேலியாவுக்குப் படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் செல்லும் இலங்கையர்கள் உள்ளிட்ட ஆசியாவைச் சேர்ந்தவர்களை அந்த நாட்டு அரசு தனது பிராந்தியமான நவ்று தீவிலுள்ள அகதி முகாம்களில் தடுத்து வைக்கும். இங்கு பலர் பல ஆண்…

  5. சாரணர்களுக்கான பயிற்சி நிலைய மண்டபம் யாழில் திறந்து வைப்பு உலக ஆசிரியர் தினத்தையும் 70ஆவது ஆண்டு சாரணர் நிறைவு தினத்தையும் முன்னிட்டு இன்று யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியின் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சாரணர்களுக்கான பயிற்சி நிலைய மண்டபம் இன்று யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியின் 2012ஆம் ஆண்டு சாரணராக திறமையாகவும் பயிற்சிகளிலும் ஈடுப்பட்டு வந்த அமரர் ஜெயக்குமார் கீர்த்தீகன் ஞாபகார்த்தமாக பாடசாலை சமூகத்தினர், மற்றும் பெற்றோர்களின் முழுநிதிப்பங்களிப்புடன் குறித்த கட்டடம் ரூ.05 லட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகன்,மற்றும் யாழ். மாவட்ட சாரணர் ஆணையாளர் த…

  6. யாழ்.நீதிமன்ற தாக்குதல் : இருவருக்குப் பிணை ஏனையோர் தொடர்ந்தும் மறியலில் யாழ் நீதிமன்றத் தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய தலா 5 இலட்சம் பெறுமதியான 5ஆள்பிணையில் இருவருக்கும் பிணை வழங்கி யாழ். நீதவான்பொ.சிவகுமார் உத்தரவிட்டார். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச்சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது, கடந்த மே மாதம் 20 ஆம் திகதி யாழ் நீதிமன்றம் தாக்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினமே 130 பேர் கைது செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்…

  7. வடக்கில் இன்று 576 ஏக்கர் காணிகள் விடுவிப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த 576 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்களின் காணிகள் இன்று திங்கள்கிழமை ஜனாதிபதியினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018 இன் ஆரம்ப நிகழ்வின் போதே, மக்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 437 ஏக்கர் நிலமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 ஏக்கர் நிலமும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=73226

    • 1 reply
    • 1.3k views
  8. பூதாகாரமாகுமா ரணில் - மங்கள முரண்பாடு? ஆங்கில ஊடகம் சந்தேகத்தை வெளியிட்டுள்ளது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை பூதாகாரமாக வெடிக்கக்கூடிய அபாய நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ஜி.ரி.என்)பிரதமரின் நடவடிக்கைகளுக்கு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை எனவும், எதிர்ப்பு வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமை சில காலங்களாக நீடித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுமை இழந்துள்ளார். பெரும்பாலும் ஜப்பான் விஜயத்தின் பின்னர் இருவருக்கும் இடையிலான முரண்பாடு பூதாகாரமாக வெடிக்கக்கூடிய அப…

  9. ஐ.நாவிலிருந்து இலங்கைக்கு 6 பிரதிநிதிகள் விஜயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆறு பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன. ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் இந்தக் குழுக்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் இடைக்கிடை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன. அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கும் நோக்கில் இந்தக் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன. இந்தக்குழுக்கள் தீர்மானத்தில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்த துறைகள் குறித்தும் கண்காணிக்க உள்ளனர். ஜெனீவா தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றம் குறித்தும் எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை…

  10. சிறைக்காவலர்கள் பணம் கேட்டு தாக்குகின்றனர்: நீதிமன்றில் கைதிகள் கூக்குரல் சிறைக்காவலர்கள் தம்மிடம் பணம்கேட்டு தாக்குவதாக, நீதிமன்றில் கைதிகள் கூக்குரலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று சில கைதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே கைதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். தம்மை பார்க்க வருபவர்களிடம் 5ஆயிரம் ரூபா பணம் கோருவதாகவும், அவ்வாறு வழங்காவிட்டால் தாக்கி கொடுமைப்படுத்துவதாகவும் கைதிகள் ஒரே தொனியில் நீதவானிடம் குறிப்பிட்டுள்ளனர். நேற்றைய தினமும் இவ்வாறு தாக்குலுக்கு உள்ளானதாக தெரிவித்த கைதிகள், அவ்வாறு தாக்கும் அதிகாரியின் பெயரையும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். பணப்பரிமாற்றத்திற்காக ஈ-இஸட் எனப்படும் முறையை சிறைக்காவலர்கள் பயன்படுத்தி வரு…

  11. இலங்கையை அவதானிக்க சர்வதேசச் சட்டவாளர் குழு ஐ. நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டவை நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது குறித்துக் கண்காணிக்கப்பட உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வீ.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகளை உள்ளடக்கிய சர்வதேசக் குழுவை நியமித்து இந்தக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உலக நீதி இரண்டு தரிசனங்கள் கண்டது. ஒன்று, மில்லியன் கை யயாப்பமிடல் போராட்டத்தின் ஊடாக 1.4 மில்லிய…

  12. நல்லாட்சியில் ஜப்பானுக்கு பாரிய பொறுப்புள்ளது: ஜப்பான் நாடாளுமன்றில் ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் ஜப்பானுக்கு விசேட பொறுப்புள்ளதென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று ஜப்பான் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடு தற்போது மாற்றத்தை நோக்கி முன்னேறிச் செல்வதாக குறிப்பிட்ட அவர், ஜப்பான் நாட்டு முதலீடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இச்சந்தர்ப்பத்தில் இரு நாடுகளின் உறவுகளையும் மென்மேலும் வலுப்படுத்திக்கொள்ள இலங்கை தயாராக உள்ளதெனவும் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்வரும் காலத்தில் ஜப்பானின் உதவியுடன்…

  13. வாள் வெட்டில் ஒருவர் படுகாயம் மானிப்பாய் - சுதுமலை பகுதியில் இடம்பெற்ற பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சையிக்கிள்களில் வந்த நான்கு பேர் இந்த வாள் வெட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞரே காயமடைந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/10/05/வாள்-வெட்டில்-ஒருவர்-படுகாயம்

  14. இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு ஆதரவளிக்கப்படும் - ஜப்பான் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறைமைக்கு ஆதரவளிக்கப்படும் என ஜப்பான் அரசாங்கம் அறித்துள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் புமியோ கிஸிடாவை இன்றைய தினம் சந்தித்திருந்தார். ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைப் பிரதமர் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளார். சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி வரவேற்கப்பட வேண்டியது என ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/arti…

  15. ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற நீதித்துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் -AHRC ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த தீர்மானங்கங்களை நிறைவேற்ற நீதித்துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் திட்டப் பணிப்பாளர் டெஸ்மன் டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் ஒட்டுமொத்த நீதித்துறையிலும் குறைபாடுகள் பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களை விசாரணை செய்யும் விசாரணைப் பிரிவு, சட்ட மா அதிபர்திணைக்களம், நீதிமன்றக்கட்டமைப்பு ஆகியனவற்றில் பிரச்சினைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். விசாரணை நடத்தி குற்றவாளி தண்டிக்கப்பட்டால்…

  16. மகிந்தவும் ஜே.வி.பியும் ஒண்டா?: யாழ்ப்பாணத் தம்பி மனித உரிமை விவகாரம் அரசியல் கருவியாக கையாளப்படுது இப்பிடி சொன்னது மகிந்தரா? ஜே.வி.பியா? எண்டு குழப்பமாய் இருக்குதே? முந்தி ஒருக்கா மகிந்த சொன்னதை இப்ப ஜே.வி.பி செயலாளர் ரிவின் சில்வா சொல்லி இருக்கிறார்... அப்பமகிந்தவும் ஜே.வி.பியும் ஒண்டா? எண்டு கேக்கப்படாது. தாங்கள் ஒண்டுக்குள்ளை ஒண்டு இதைவிட வேற எப்பிடி காட்டுறது? ஜே.வி.பிக்காரரின்டை இனவாத முகம் அப்பப்ப சாயம் வெளுக்குது. இடைக்கிடை நீமான்கள் மாதிரி கதைப்பினம். பிறகு அநீதிமான்களை காப்பாற்றத் துடிப்பினம். அப்பப்ப தங்களை பேரினவாத சகதி எண்டுறதை நல்லா வெளிக்காட்டுறினம்... இப்பவும் பாருங்கோவன். ஜெனீவா தீர்மானத்தை மகிந்தவோடு சேர்ந்து எதிர்க்கப்போகினமாம் ஜே.வ…

  17. பெரும்பான்மையினர் மரமாகவும் சிறுபான்மையினர் கொடியாகவும் வாழ வேண்டும் என்றே சிலர் விரும்புகின்றனர் ஜனாதிபதி செழிப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவார் என நம்புவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். உணவுப் பாதுகாப்போடு மக்கள் மதிப்புடன் வாழவும் வழிவகுக்க வேண்டும் என, வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போது உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். பெரும்பான்மையினர் மரமாகவும் சிறுபான்மையினர் கொடியாகவும் வாழ வேண்டும் என்றே சிலர் விரும்புகி…

  18. கட்டுவான் மக்கள் மீள்குடியேற விடுவிக்கப்படவுள்ள பகுதியில் வெடி பொருள் அகற்றப்படுகின்றது உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள கட்டுவான் பகுதியில் மக்கள் மீள்குடியேற விடுவிக்கப்படவுள்ள பகுதிகளில் வெடி பொருள் அகற்றும் நடவடிக்கையில் ஹாலோ ரெஸ்ட் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. கடந்த 25 வருடகாலமாக மக்கள் மீள் குடியேற அனுமதிக்காது உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள கட்டுவான் பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட உள்ளது. மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட உள்ள பகுதிகளில் மிதிவெடி மற்றும் வெடி பொருள்கள் அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றது. அத்துடன் உயர் பாதுகாப்பு வேலிகளை பின்னகர்த்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். …

  19. ஜனாதிபதியை வரவேற்பதற்கு 10 மில்லியன் ரூபா செலவு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70ம் அமர்வுகளில் பங்கேற்று நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்பதற்கு பத்து மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.எஸ்.பி. திஸாநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா, நிமால் லன்சா ஆகியோர் இவ்வாறு ஆடம்பர செலவுகளை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான செலவுகளை ஜனாதிபதி விரும்ப மாட்டார் என விமான நிலைய தலைவர் ஆனந்த விமலசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாடு திரும்பும் போது மிகவும் எளிமையான வரவேற்பு நிகழ்வே முன்னதாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்…

  20. உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேசத்தின் பங்களிப்பையும், சர்வதேசத்தின் ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்வோம் என்று அமைச்சரவையின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இலங்கையில் 30 வருடகாலமாக யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பவில்லை. மாறாக யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள், சமாதானத்திற்காக முன்னின்ற போது கொல்லப்பட்ட மக்கள் போன்ற தரப்புக்கள் தொடர்பாகவே பொதுமக்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் எமது அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதான உள்ளக விசாரணை பொறிமுறையில் இந…

  21. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள அதிகமானோர் திருடர்களும் மோசடிகார்களுமே என ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். திருகோணமலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், “இம்முறை நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளவர்களில் அதிகமானோர் திருடர்கள் மற்றும் மோசடிகாரர்கள். இவ்வாறான நபர்கள் அதிகமான வாக்குகளுடன் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளமைக்கு மக்களே பொறுப்பினை ஏற்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள அதிகமானோர் திருடர்களும் மோசடிகார்களுமே என ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். திருகோணமலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட…

  22. திருமணத்திற்கு முன்னர் காதலித்த நபருடன் எடுத்த புகைப்படத்தை அந்த நபர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதால், இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பிங்கிரிய திசோகம பிரதேசத்தில் நடந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதற்கு 6 மாதங்களுக்கு முன்னர், முன்னாள் காதலுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அந்த நபர் பேஸ்புக் வலைத்தளத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் பதிவேற்றியுள்ளார். இந்த விடயத்தை அறிந்து கொண்டதால் மிகவும் மனவருத்தத்திற்கும் வெட்கத்திற்கும் ஆளான 25 வயதான இளம் பெண் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திசோகம, வெலங்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த ஆர்.எம். அனுஷா மதுவந்தி என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் நட…

  23. தென்னிந்தியாவிலிருந்து வரும் திரைப்படங்கள் மூலம் இலங்கையில் தமிழ் சிறார்கள் மத்தியில் புகைத்தல் பழக்கம் தூண்டப்படுவதாக அடிக் என்ற மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தன்னார்வ தொண்டுநிறுவனம் அண்மையில் கூறியிருந்தது. தமிழ்த் திரைப்பட கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும் காட்சிகளால் தூண்டப்பட்டு பல சிறார்கள் முதலில் புகைக்கத் துவங்கியதாக கூறியிருந்ததை மேற்கோள்காட்டியே அந்த நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது. போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தங்களின் போதைப் பழக்கத்தை சிகரெட்டிலிருந்தே ஆரம்பிப்பதாகவும் அடிக் நிறுவனம் தெரிவித்திருந்தது. பெரும்பாலானவர்கள் தங்களின் சிகரெட் பழக்கத்தை அவர்களின் பதின்ம பருவத்திலேயே துவங்குவதாக அடிக் நிறுவனத்தின் பணிகளி…

  24. மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை போன்ற தேசிய அரசாங்கத்திலும் குடும்ப ஆட்சிக்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தமது சொந்தக்காரரான கிஹான் மலலசேரக என்பவரை, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் பிரித்தானியாவுக்கான விற்பனை முகாமையாளராக நியமிக்க முயற்சித்து வருகிறார். இந்த பதவிக்கு தகுதியுள்ள பலர் விண்ணப்பித்துள்ள போதும் ரவி கருணாநாயக்க தமது செல்வாக்கை இந்த விடயத்தில் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி கிடைத்தால் எவ்வித ஆவணங்களும் இன்றி பிரித்தானியாவில் வசிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், டெலிக்கொம்மின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் மகள், சத்துரிக்கா…

  25. 2014/15ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் http://www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு சென்று மாணவர்கள் தமது பாடநெறிக்கான வெட்டுப்புள்ளியை அறிந்து கொள்ளலாம். http://www.tamilmirror.lk/155743/பல-கல-க-கழக-அன-மத-க-க-ன-வ-ட-ட-ப-ப-ள-ள-வ-ள-ய-ட-#sthash.GZBFyR3E.dpu

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.