Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 14 Nov, 2025 | 04:59 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் கொண்டுள்ள பொறுப்புகள் ,சேவைகளை ஒரு கட்சியின் அரசியல் பிரிவினருக்கு மாற்றுவதற்கான நுட்பமான நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன் ,இதுவரை பரவலாக்கப்பட்ட முறையில் செயல்பட்ட மாகாண சபைகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரஜா அபிவிருத்தி சபையின் செயற்பாட்டுக்கு அடிபணியச் செய்யும் ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளதுடன் இதனை உடனடியாக வாபஸ் பெறுமா…

  2. 14 Nov, 2025 | 03:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) எவ்வித பரிசோனயின்றி விடுவிக்கப்பட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன் .அது தொடர்பான முக்கிய ஆவணங்கள் எனக்கு கிடைத்துள்ளன.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கோ அல்லது இன்டபோலுக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்று விசாரியுங்கள் நான் பதிலளிக்கின்றேன் என யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்க…

  3. இன்றைய வானிலை 15 Nov, 2025 | 06:32 AM இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் க…

  4. Published By: Vishnu 14 Nov, 2025 | 08:00 PM தற்கொலை செய்யப்பதாவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (14) அதிகாலை உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஜெ.சுரேந்தன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த எட்டாம் திகதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் கதிரையில் அமர்ந்திருந்து கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்பதற்காக மனைவியுடன் தொலைபேசியில் உரையாடினார். கைபேசியில் உரையாடியவ…

  5. Published By: Digital Desk 1 14 Nov, 2025 | 04:00 PM நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையை 500 ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுவசெரிய இலவச சேவையில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன்களை வளர்ப்பதற்கான விசேட பயிற்சி திட்டத்தில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்குத் தேவையான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தை இணைத்து ஆம்புலன்ஸ் சேவையை புதுப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது, தெரிவித்துள்ளார். மேலும் 100 ஆம்புலன்ஸ்களை வாங்குவதற்கு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நட…

  6. 14 Nov, 2025 | 01:09 PM வடமாகாணத்தில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 5 ஆயிரம் பெண் நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ் வசீகரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (13) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் விவசாய நிலங்களுக்குள் செல்லும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அநேகமான பிரதேச சபைகள் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்காக பெண் நாய்களுக்கான கருத்தடைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் …

  7. நாடாளுமன்றத்திற்குப் புறம்பான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிரக்கவும் – சபாநயாகர்! சக உறுப்பினர்களை குறிவைத்து தகாத கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் உறுப்பினர்களுக்கு அறிவிப்புகளை வழங்கும் போது சபாநாயகர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அண்மைக் காலமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது இதுபோன்ற நடத்தை அடிக்கடி காணப்படுகின்றன. இது சபைக்கு அவமரியாதையை ஏற்படுத்துக்கின்றது. எனவே, நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது சபைக்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இந்த விடயத்தில் எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறும் அவர் கேட…

  8. நல்லூரில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணி ஆரம்பம் வெள்ளி, 14 நவம்பர் 2025 03:56 AM தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளன. மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் குறித்த காணியில் ஆரம்ப கட்டப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போது யாழ். மாநகர மேயர், பிரதி மேயர், சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர். நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் கடந்த சில வருடங்களாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல…

  9. நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு 14 Nov, 2025 | 12:51 PM யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (13) இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தா…

  10. ”வடக்கு கிழக்கின் இன பரம்பலை மாற்றும் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டிக்கின்றோம்” - கஜேந்திரகுமார் வடக்கு கிழக்கின் இன பரம்பலை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசினால் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களை எதிர்க்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில், வடக்கின் குறிப்பாக மன்னாரின் விவசாயம் நீர்ப்பாசனம் போன்றவற்றை அபிவிருத்தி செய்கிறோம் என்கின்ற பெயரில் நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டம் இந்தத் திட்டத்தை முதலில் முன்மொழிந்தது கோத்தாபாய ராஜபக்சே அரசாங்க…

  11. யாழ். நகரில் இன்று நீரிழிவு நடைபவனி! adminNovember 14, 2025 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக காலை 6.30 மணியளவில் இந்த நடைபயணம் ஆரம்பமானது. குறித்த நடை பயணத்தில் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , மாவட்ட செயலர் ம. பிரதீபன் உட்பட பலரும் கலந்து கொண்டனர் இந்த நடைபவனி கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/222643/

  12. Nov 13, 2025 - 10:18 PM சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபானக் கடத்தல்களில் ஈடுபட்டு அதன் மூலம் சொத்துக்களை ஈட்டிய எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி, சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினால் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது, மாஹிங்கொட, எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரின் மனைவி, சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி, 3 கோடி ரூபா பெறுமதியான மூன்று காணிகளையும், எஹெலியகொட இரத்தினபுரி வீதிக்கு அருகில் உள்ள 6 பேர்ச் காணியில் கடையுடன் கூடிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றையும் கட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகந…

  13. புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்! நாட்டின் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று காலை அவரது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ரசிக பீரிஸ் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். அரச துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியிருந்த சமன் ஸ்ரீ ரத்நாயக்க பதவி விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். 2019 ஒக்டோபர் 16 ஆம் திகதி அவர் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் தனது பதவிக் காலத்தில் தேசிய மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவ…

  14. போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர் மீது 25 வழக்குகள் நிலுவையில் - பொலிஸார் Published By: Vishnu 14 Nov, 2025 | 03:19 AM போதைப்பொருளை மீட்க சென்ற பொலிசாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் புதன்கிழமை (12) இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது , இளைஞனிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டிருந்தனர். குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு இளைஞன் கூறியுள்ளார். அதனை அடுத்து குறித்த இளைஞனை கைது செய்யும் நோக்குடன் , நாவற…

  15. சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் – டீ.வி. சானக Published By: Vishnu 14 Nov, 2025 | 03:12 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பமொன்றுக்கு உணவுக்காக மாத்திரம் மாதந்தம் 65,500 ரூபா செலவாகும் என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அந்த தொகை ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டீ.வி.சானக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுக…

  16. சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம் – சுனில் செனவி Published By: Vishnu 14 Nov, 2025 | 03:06 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேற்கொள்ளும் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்துள்ளோம். கடந்த காலங்களில் எத்தனை அரசாங்கங்கள் இருந்தன. எவரும் இதனை கருத்திற் கொள்ளவில்லை. மத விவகாரங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான…

  17. 13 Nov, 2025 | 03:50 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்குள்ள மக்களிடம் கையளித்து, அந்த இடங்களை அங்கீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவை மக்களிடம் கையளிக்கப்படும் பட்சத்தில் அவற்றை பராமரிக்கும் செலவை தமிழர்களாகிய நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இன்று கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த…

  18. Published By: Vishnu 13 Nov, 2025 | 08:29 PM யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் கயிறு கட்டி குளித்துக்கொண்டிருந்த இளைஞன் கயிறு அறுந்த நிலையில் , நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை , கொம்மாந்துறை பகுதியை சேர்ந்த நிரெக்சன் (வயது 18) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கொமாந்துறையில் உள்ள தோட்ட கிணற்றினுள் ஆளுக்கு ஒவ்வொரு கயிறு கட்டி இறங்கி ஐந்து பேர் நீராடியுள்ளனர். சில மணி நேரத்தில் நான்கு பேர் நீராடியது போது வீடு செல்வோம் என புறப்பட்ட போது , ஒருவர் மாத்திரம் நீங்கள் செல்லுங்கள் நான் இன்னும் சற்று நேரம் நீராடி விட்டு வருவதாக கூறி தொடர்ந்த…

  19. 13 Nov, 2025 | 03:41 PM நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கண் நோய்களாலும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அதனை தெரிவித்துள்ளார். அண்மைய தரவுகளின்படி, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் 73 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் ஒன்பது …

  20. 3 Nov, 2025 | 05:58 PM மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து, அவர்களை கௌரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பைக்குளம், முள்ளிக்குளம் பண்டிவிரிச்சான் பிரதேசத்தைச் சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர்கள் இன்று (13) கெளரவிக்கப்பட்டனர். மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் 150 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு பின் அகவணக்கம்…

  21. 13 Nov, 2025 | 07:06 PM முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வியாழக்கிழமை (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர் வருகையின்போது அவரை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்று, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து, கவிஞர் யோ. புரட்சி அவர்கள் தன்னுடைய “ஆயிரம் கவிதைகள்” நூலை தொல். திருமாவளவன் அவர்களிடம் கையளித்தார். பின்னர் திருமாவளவன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சென்றடைந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கான பொதுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். முள்ளி…

  22. 13 Nov, 2025 | 03:21 PM தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். 34 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தனது கடமையின் போது உதவிய முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்கள், அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நன்றியை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230252

  23. 2025 உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசிய நிகழ்வு நாளை ஆரம்பம் Published By: Digital Desk 1 13 Nov, 2025 | 01:29 PM 2025ஆம் ஆண்டுக்கான உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசியநிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. "நமது நிகழ்காலத்தைப் பாதுகாக்கவும், நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்" என்ற தலைப்பில் தேசிய நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பு மையத்தால் இந்த தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் போக்கைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டளவில் நுண்ணுயிர் எதி…

  24. 13 Nov, 2025 | 12:47 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பதிலளித்ததாவது, மின்சார கட்டணத்திற்கான பட்டியல்கள் இலங்கை மின்சார சபையினூடாக விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த உள்ளூராட்சி நிறுவனங்கள் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. வீதி விளக்குக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.