ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
தமிழக மீனவர்களின் எச்சரிக்கை வெறும் புருடா என்கிறார் கடற்படைப் பேச்சாளர்! [Thursday 2014-07-31 09:00] தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்துவோர் இலங்கைக்குள் ஊடுருவ முற்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். இந்திய மீனவர்கள் இலங்கைக்கெதிராக போராட்டம் நடத்தியவாறு இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறப் போவதாக எச்சரிக்கை விடுத்திருப்பது இது மூன்றாவது தடவை எனச் சுட்டிக் காட்டிய அவர், இவை வெறும் வாய்வார்த்தை மாத்திரமே. அதனை அவர்களால் செயற்படுத்த முடியாதெனவும் கூறினார். தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதை எதிர்த்து இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் மீன…
-
- 0 replies
- 421 views
-
-
வரும் ஒக்ரோபர் மாத இறுதி வரைக்கும், சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களிலும், தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியான, பபோதனி கருணபால தகவல் வெளியிடுகையில், சிறிலங்கா எல் நினோவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை கண்டறியப்படவில்லை. சிறிலங்கா எல் நினோவின் பாதிப்பை சந்திக்க நேரிட்டால் நிலைமை மோசமடையும். வடக்கு. கிழக்கு மாகாணங்களில் ஏப்ரல் தொடக்கம் ஒக்ரோபர் வரை வரட்சி நிலவுவது வழக்கம் தான். விவசாயிகள் இந்த நிலைமை குறித்து நன்கு அறிவார்கள். வளிமண்டலவியல் திணைக்களம் இந்த வரட்சி குறித்து முன்னரே எச்சரித்திருந்தது என்றும் தெரிவித…
-
- 0 replies
- 201 views
-
-
இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக் இன்று பதவியேற்கவுள்ளார். கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக், 1987இல், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில், கொம்பனி ஒன்றின் கட்டளை அதிகாரியாக போரிட்டவர். 1.3 மில்லியன் படையினரைக் கொண்ட இந்திய இராணுவத்தின் 26 வது தளபதியாக, இவர் இன்று பதவியேற்கவுள்ளார். 59 வயதான லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக், அடுத்த 30 மாதங்களுக்கு இந்தப் பதவியை வகிப்பார். முன்னர், அசாமிலும் காஷ்மீரிலும் பணியாற்றிய போது, பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்படக் காரணமானவர் என்று குற்றம்சாட்டப்பட்டு, பதவி உயர்வு அளிக்க, முன்னைய இராணுவத் தள…
-
- 0 replies
- 293 views
-
-
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள சின்னவெளி கண்ட விவசாயிகளின் காலபோக வேளாண்மை அறுவடை விழா சித்தாண்டி பிரதேசத்தில நேற்று புதன்கிழமை (30) நடைபெற்றது. உறுகாமம் பிரிவு திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் எம்.மகேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நீர்ப்பாசன நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஐவன் த சில்வா, நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம்; பத்ரா கமலதாஸ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ், நீர்ப்பாசனத் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்;.கோன்ராஜ், கமநலசேவை அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம், செங்கலடி பிரதேச திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஆர்.கெங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.…
-
- 0 replies
- 401 views
-
-
உடுவில் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட உடுவில் டச்சு வீதி, சண்டிலிப்பாய் வீதி என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த வீதிகளின் இருமருங்கிலும் உள்ள வெள்ள வாயக்காலை மூடி வீதி அமைக்கப்படுவதால் மழைக்காலங்களில் நெருக்கடி ஏற்படும் என்று அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். வீதிகளைப் புனரமைக்கும் பணி ஆரம்பிக்கும் போது வீதியின் இருமருங்கிலுமுள்ள வெள்ள வாய்க்கால் புனரமைப்பு செய்யப்பட்டு சிமெந்தினால் வடிகால் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி உடுவில் மகளிர் கல்லூரிக்கு அருகிலிருந்து வெள்ள வாய்க்கால் சிமெந்தினால் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப் பட்டுள்ளது. தற்போது வாய்க்காலை மூடி வீதி அமைக்கும் பணியை ஒப்பந்தகாரர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இந்த அவிருத்திக் க…
-
- 0 replies
- 275 views
-
-
இலங்கை விடயத்தில் சர்வதேச கவனமும் - அழுத்தமும் அவசியம் தேவை - இவ்வாறு வலியுறுத்திக் கூறியிருக்கின்றார் பதவியிலிருந்து விலகிச் செல்லும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை. ஓகஸ்ட் மாத இறுதியில் ஐ.நா. மனித உரிமைகள் கவுனஸிலின் ஆணையாளர் பதவியில் இருந்து பணி முடிந்து செல்லவுள்ள நவநீதம்பிள்ளை 'அல்ஜசீரா' தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை இந்த வாரம் வழங்கியிருந்தார். அந்த நேர்காணலில் இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அச்சமயம் தெரிவித்த விடயங்கள் வருமாறு:- "இலங்கை தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைத்த சில விடயங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் விதந்துரைக்கப்பட்ட விடயங்களை ஒத்துள்ளன. அவற்றையே எனது அறிக்கையி…
-
- 0 replies
- 335 views
-
-
வியாழன், ஜூலை 31, 2014 - 07:55 மணி தமிழீழம் | வேந்தன் கடன்கள் குறித்து சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம் எச்சரிக்கை! வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துள்ளது குறித்து சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவின் பொருளாதாரம் ஆசியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றது. ஆனால், வெளிநாட்டு வர்த்தகக் கடன்களின் அளவு அதிகரித்துள்ளதால், திடீர் புற அதிர்வுகளால் அது பாதிக்கப்படக் கூடும் என்று அனைத்துலக நாணய நிதியம் எச்சரித்துள்ளது. 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா பொருளாதார வெற்றிகளை ஈட்டியுள்ள போதிலும், அது பாதிப்பை சந்திக்கக் கூடிய நிலை தொடர்கிறது. அண்மையில் வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், நடப்புக் கணக்கு நி…
-
- 0 replies
- 415 views
-
-
“ஐநா மனித உரிமை கவுன்சிலில் நான் சமர்ப்பித்த அறிக்கை குறித்து இன்னமும் உறுதியாக இருக்கிறேன்” - 31 ஜூலை 2014 நவநீதம் பிள்ளை:- குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கை தொடர்பாக கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் தான் சமர்ப்பித்த அறிக்கை குறித்து இன்னமும் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை, அது பிரச்சாரம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளார். இலங்கை தன்னை புனர்நிர்மானம் செய்து கொண்டு முன்னோக்கி நகர முயல்வது உண்மை, ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் கேள்விகளுக்கு தீர்வு காண வேண்டும்,ஆகவே இது பிரச்சாரம் என்பதை நான் நிராகரிப்பேன்,என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கையிலும், தன்னுடை…
-
- 0 replies
- 408 views
-
-
வடமாகாணத்தில் ஒலிபெருக்கிப் பாவனையினைக் கட்டுப்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு புதிய நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளது. அதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒலிபெருக்கியினைப் பயன்படுத்துபவர்கள் ஏனையோரது உடல் உள மற்றும் கல்வி நடவடிக்கையினைப் பாதிக்காத வகையில் குறிக்கப்பட்ட நேர அட்டவணைகளைக் கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக ஒலிபெருக்கி பாவனை அதிகரித்துள்ள நிலையில் ஒலிபெருக்கிப் பாவனையினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று ஏ 9 வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலந்துரையாடலை அடுத்தே விவசாய அமைச்சர் இந்த தகவலை ஊடகங்களுக்…
-
- 4 replies
- 721 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இதுவரையில் பேசவில்லை என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவிலிருந்தே அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துள்ளனர். எனவே, இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி படகு மூலம் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பது குறித்து பேசுவதில் பயனில்லை என மொரிசன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாழ்ந்து வந்த அல்லது இந்தியாவிலிருந்து புறப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகே அவுஸ்திரேலியாவை வந்தடைந்தது என அவர் தெரிவித்துள்ளார். குறித்த படகில் 157 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் …
-
- 0 replies
- 340 views
-
-
இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு எதனையும் இதுவரையில் விடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்வரும் நாட்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இந்திய மத்திய அரசாங்கம் தமது நாட்டு;க்கு விஜயம் செய்யுமாறு இதுவரையில் உத்தியோகபூர்வ அழைப்பு எதனையும் விடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பந்தன் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய பிரதிநிதிகள் ஆகஸ்ட் மாத முதல் பகுதியில் இந்தியா விஜயம் செய்வார்கள் என எதிர்வு கூறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முதல் தடவையாக தமி;;ழ்த் த…
-
- 0 replies
- 327 views
-
-
மக்கள் போராட்டங்களிற்கு எதிராக தன்னிச்சையாக காவல்துறை நீதிமன்ற தடை உத்தரவு கோரி அனுமதி பெறுவதற்கு யாழ்.நீதிமன்றம் ஆணி அடித்துள்ளது. இனி வருங்காலங்களில் அவ்வாறு தடை உத்தரவு கோரும் மனுக்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் வேளை தொடர்புடைய மறுதரப்புக்களும் தமது தரப்பு நியாயங்களை முன்வைக்க ஏற்பாடு செய்யவேண்டுமென நீதிபதி காவல்துறைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அண்மையில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட இருந்த ஆர்ப்பாட்ட போராட்டத்திற்கு காவல்துறை நீதிமன்ற தடையினை பெற்றிருந்தது. குறித்த விவகாரம் தொடர்பான விசாரணை நேற்று யாழ்.நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் காவல்துறை மக்களது ஜனநாயக வழி போ…
-
- 0 replies
- 269 views
-
-
நடந்தது இது தான் .... சம்பவம் தொடர்பான எனது வாக்கு மூலம் .. கடந்த வெள்ளிக்கிழமை, ஊடக பயிற்சி நெறிக்கு ஒன்றுக்காக கொழும்பு செல்லவேண்டும் மாலை 5.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தில் இருந்து வாகனம் வெளிக்கிடும் 5.30 மணிக்கு எல்லோரும் ஊடக அமையத்தில் நிற்குமாறு அறிவித்தல் தரப்பட்டது. அதன் படி நானும் அங்கே நின்றேன். ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும் மாலை 6.30 மணியளவில் எமது நண்பர் குழாம் 6 பேர் ஒரு வாகனத்திலும் ஏனையவர்கள் 6 பேர் மற்றுமொரு வாகனத்திலுமாக அங்கிருந்து கிளம்பினோம். எம் வாகனம் மற்றைய வாகனம் கிளம்பி 10 நிமிடங்களுக்கு பிறகே அங்கிருந்து கிளம்பியது. நாம் கச்சேரியடியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எமது வாகனத்தை இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்ததை அவதானித்தோம். அவ…
-
- 12 replies
- 1.1k views
-
-
இறுதி யுத்தத்தில் நிர்மூலமாக்கப்பட்ட தமிழினத்தின் அடையாளங்களை மீட்டெடுக்க அனைவரும் ஒன்று சேருமாறு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டம் முல்லைத்தீவு கள்ளப்பாடு பொதுநோக்கு மண்டப வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. அதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் அடையாளங்கள் அனைத்தும் இம்மண்ணில் மீள எழுச்சிபெறுவதற்கு பண்பான ஒழுக்கமுள்ள தூரநோக்கு சிந்தையுள்ள இளையசமுதாயமாக மாணவர்கள் உருவாகவேண்டும். யுத்தத்தின…
-
- 0 replies
- 394 views
-
-
மாதகலில் 13 கிலோ கேரள கஞ்சா வவுனியா பொலிஸாரால் மீட்பு! [Wednesday 2014-07-30 19:00] யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோ கேரள கஞ்சாவை தாம் நேற்று மாலை மீட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கஞ்சாவை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்றுபேரையும் தாம் கைதுசெய்துள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். வவுனியா பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் 2.5 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கஞ்சா மறைத்துவைக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்தது என்றும், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சண் அபயவர்த்தன தலைமையிலான பொலிஸ் கு…
-
- 0 replies
- 323 views
-
-
558 தடவைகள் ஏ.ரி.எம்.மில் பணத்தை எடுத்த போது வேடிக்கை பார்த்த சம்பத் வங்கி! - 17.5 மில்லியன் ரூபா பறிபோன பின்னரே விழித்தது. [Wednesday 2014-07-30 18:00] சம்பத் வங்கியில் 17.8 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்ததாக, 17 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். கொழும்பு கோட்டே நீதிமன்றில் குறித்த இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். பொலனறுவையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த இளைஞர் கடந்த ஜனவரி மாதம் ஜாஎல பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றில் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார். 163,000 ரூபா வைப்பிலிட்டு இந்த கணக்கை ஆரம்பித்துள்ளார். குறித்த வங்கியின் கணனி மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 17.5 மில்லியன் ரூபா பணம், இளை…
-
- 0 replies
- 493 views
-
-
பிரிவினையைத் தூண்ட அமெரிக்கா சதி! - குற்றம்சாட்டுகிறது ராவண பலய. [Wednesday 2014-07-30 18:00] இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சதித்திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக ராவண பலய அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது. இது தொடர்பாக, ராவண பலய அமைப்பு, பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் எம்.கே.பி. திஸாநாயக்கவிடம் முறைப்பாடு செய்துள்ளது. அமெரிக்கத் தூதரகம் இலங்கையில் பிரிவினைவாதத்தை தூண்டி வருவதாகவும், பிரிவினைவாத அமைப்புக்களை போஷித்து வருவதாகவும் ராவண பலய குற்றம்சுமத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சதித் திட்டங்கள் தொடர்பில், பௌத்த சாசன அமைச்சிற்கு ர…
-
- 0 replies
- 274 views
-
-
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். தேசிய வைத்தியசாலையில் இரு வைத்திய குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதையடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோகண மேலும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2014/07/30/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%…
-
- 2 replies
- 476 views
-
-
கிளாஸ்கோ பொதுநலவாய நிகழ்வில் பங்கேற்கமாட்டார் ஜனாதிபதி மகிந்த! [Wednesday 2014-07-30 10:00] கிளாஸ்கோவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள முதலாவது உலகயுத்தத்தை நினைவு கூரும் பொதுநலவாய நிகழ்வுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள பிரிட்டனின் கலாச்சார ஊடக மற்றும் விளையாட்டு திணைக்களம், இலங்கை ஜனாதிபதிக்கு பதிலாக அந்த நாட்டு தூதுவரே கலந்து கொள்வார் என தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த தகவலை யுத்தக்குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை தண்டிக்கப்பட வேண்டும் என பிரச்சாரம் செய்து வரும் அமைப்புகள் வரவேற்றுள்ளன. பொதுநலவாயத்திற்கு இலங்கை ஜனாதிபதி தலைமை தாங்குவது சர்வதேச அவமானமாகும்,அது பொதுநலவாயத்திற…
-
- 1 reply
- 250 views
-
-
எந்த வழியிலேனும் ஐ.நா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்க கூட்டமைப்பு தயார்! - சுரேஷ் பிரேமச்சந்திரன் [Wednesday 2014-07-30 10:00] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியமளிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தால் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான குழு ஏதோவொரு வழியில் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது,"தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஒரு தொக…
-
- 0 replies
- 210 views
-
-
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டு, 87 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு கொழும்பில் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சீன இராணுவத்தின் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் சிறிலங்காவில் நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். நேற்றுமுன்தினம் கொழும்பில் உள்ள ஹில்டன் விடுதியில் நடந்த இந்த நிகழ்வில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சீன இராணுவ அதிகாரியும், கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகருமான மூத்த கேணல் லீ சென்ங்லின், இதற்கு முன்பிருந்திராத வகையில் சீனா உலகின் ஏனைய பகுதிகளுடன் இணைந்து வருகிறது. சீனாவின் பாதுகாப்பும் அபிவிருத்தியும், ஒட்டுமொத்த உலகினதும் அமைதி மற்றும் செழுமையுடன் …
-
- 0 replies
- 272 views
-
-
-செல்வநாயகம் கபிலன் 18 வயதுக்கு உட்பட்ட தங்களது பிள்ளைகளின் பாவனைக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்க வேண்டாம் என்று பெற்றோர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கொன்று யாழ்ப்பாணம், இடைக்காடு மகா வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்வில் உரையாற்றிய காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் சிந்து பாமினி, மேற்கண்ட வேண்டுகோளை விடுத்தார். அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஜே.ஏ.எஸ்.எம்.கே.ஜெயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இதன்போது த…
-
- 0 replies
- 375 views
-
-
இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்டு, கந்தானை சென். செபஸ்தியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியாரின் புனித பண்டைய பொருளை திருடியவரை கைதுசெய்துள்ளதாகவும் அவரிடமிருந்து அந்த புனிதபொருளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் இன்று அதிகாலை 4 மணியளவிலேயே சந்தேகநபரை கைதுசெய்து அவரிடமிருந்து புனித பண்டைய பொருளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த பண்டைய பொருள், இத்தாலி, பாதுவா நகரிலிருந்து கடந்த ஜனவரி மாதம், கந்தானை சென். செபஸ்தியார் தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/120012-2014-07-30-03-58-19.html
-
- 0 replies
- 245 views
-
-
ஐந்து பேர் கொண்ட கூட்டமைப்புக் குழு அடுத்தமாதம் இந்தியா பயணம்! [Wednesday 2014-07-30 07:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத முற்பகுதியில் புதுடில்லிக்குப் பயணம் செய்யவிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இரா.சம்பந்தன் எம்.பி.யுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே விரைவில் இந்தியா புறப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பதவியேற்றமையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு ஒன்று புதுடில்லிக்குப் பயணம் செய்யும்…
-
- 0 replies
- 203 views
-
-
சூதாட்டத்தில் ஈடுபட்ட போது சிக்கிய பெண் படையினர்! - விசாரணைக்கு இராணுவத் தளபதி உத்தரவு. [Wednesday 2014-07-30 07:00] சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் இராணுவத்தினர் தொடர்பாக, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பனாகொடை இராணுவ முகாமிற்கு அருகாமையில் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட சூதாட்ட மையமொன்றில் பெண் இராணுவ கோப்ரல் ஒருவரும், படைச் சிப்பாய் ஒருவரும் சூதாடிக் கொண்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் காப்ரல், பனாகொட இராணுவ முகாமில் படையினருக்குப் பயிற்சி அளிக்கும் அதிகாரியாவார். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க நேற்று இராணுவப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இராணுவத்தினரின்…
-
- 0 replies
- 217 views
-