ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் 25 வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு நிதியுதவி வழங்கியவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை (19) இடம்பெற்றது. ஜேர்மன் கொடையாளிகளான மைக்கல் ஒயு, குவெந்தர் விற்றமன், ஜோர்க் பியலா, டொக்டர் உல்ரைக் ஸ்கொனேபெர்க் ஆகியோரடங்கிய குழுவினரே இதன்போது வரவேற்கப்பட்டனர். ஏறாவூர் நகர சபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா மற்றும் ஏறாவூர் சமூக அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ்.எம். நஸீர், வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் உள்ளிட்ட இன்னும் பல உள்ளுர்ப் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்தக் கிராமத்தில் ஏழை மக்களுக்காக அமைக்கப்பட்ட 25 வீடுகளுக்குமான நிதியுதவிகளை இந்த ஜேர்மன் கொடையாளிகள் தாங்கள் கிறிஸ்மஸ் பண்…
-
- 0 replies
- 366 views
-
-
மக்களை மிரட்டி பொலிஸார் பொய் வழக்கு பதிவு செய்வதாக வட மாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகன் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 'வன்னி பிரதேச மக்கள் பல கஷ்;டங்களுக்கு மத்தியில் தாங்கள் பெற்றுக்கொண்ட வீடமைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல நாள் அலைச்சலுக்கு பின் கிடைக்கும் பிரதேச செயலக மணல் அனுமதி பத்திரங்களுடன் மணல் எடுக்க செல்லும் போது வன்னி பிரதேசத்தில் கடமையில் உள்ள பொலிஸார் நயவஞ்சகதனமாக நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அனுமதிபத்திரம் இருந்தும் பொய்வழக்குப் பதிவிற்கு உட்படும் எமது மக்கள் மோசமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். சட்டம் என்ற வலைக்குள் எமது வன்னி பிரதேச மக்களின் இயலாமையை சிக்க வைத்து பொலிஸார் நீதி, நியாய…
-
- 0 replies
- 421 views
-
-
களுத்துறையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் யாழ். பஸ் நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா மற்றும் புதிய ஜனநாயக மாக்சிஸ லெனினிசக் கட்சி, முஸ்லிம் அமைப்புக்கள்…
-
- 2 replies
- 587 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள கோவில் போரதீவுக்குளம், பெரிய போரதீவுக்குளம், பழுகாமத்திலுள்ள குளம், வெல்லாவெளிக் குளம் ஆகியன தற்போது நிலவும் வறட்சியால் வற்றிவருகின்றன. இதனால், பல கிராமங்களில் தற்போது தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரிகின்றன. மேலும் கடுக்காமுனைக்குளம், தும்பங்கேணிக்குளம், கங்காணியார்குளம் ஆகிய பெரிய குளங்களின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளன. இந்நிலையில், பிரதேச சபைகள் பவுசர் மூலமாக மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றன. (படங்கள்: வடிவேல் சக்திவேல்) http://tamil.dailymirror.lk/--main/114984-2014-06-20-09-49-40.html
-
- 0 replies
- 374 views
-
-
டாக்டர் சஞ்சய ராஜாராம் இந்த ஆண்டுக்கான உலக உணவுப் பரிசு இந்தியாவில் பிறந்து, மெக்ஸிகோ குடியுரிமை பெற்றுள்ள டாக்டர் சஞ்சய ராஜாராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோதுமை ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்து, வளர்ந்து வரும் பல நாடுகள் தமது உணவுத் தேவைகளை சமாளிக்க பெரும் பங்காற்றினார் என்று வருது வழங்கும் அமைப்பு கூறியுள்ளது. இதுவரை அவர் சுமார் 500 புதிய கோதுமை ரகங்களை உற்பத்தி செய்துள்ளார் என்றும், விவசாய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கூடாது என தொடர்ச்சியாக வாதிட்டு வருவதாக, அவருடன் சில ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவரும், அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளவருமான வெங்கட்ரமணி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். டாக்டர் சஞ்சய ராஜாராமின் பங்களிப்பு குறித்து வெங்கட்ரமணியின் பேட்டியை இங்கே…
-
- 1 reply
- 879 views
-
-
(MD.Lucias) * அளுத்கம பேருவளையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் * அமைச்சுப் பதவியை துறப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. * சர்வதேச விசாரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் நாம் ஆதரவாக வாக்களிக்காமல் இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரித்ததன் ஊடாக பலமான செய்தியொன்றை உலகுக்குச் சொல்லியிருக்கிறோம். * பொலிஸார் பக்க சார்புடன் செயற்பட்டுள்ளமை வேதனையை அளிக்கிறது. * பொதுபலசேனாவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். * சர்வதேசத்திடம் முறையிட்டாவது எமது மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பேன். அமைச்சுப் பதவியை துறந்தால் எமது மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என யாராவது உத்தரவாதம் த…
-
- 10 replies
- 839 views
-
-
ஏறத்தாள 200 வருட வரலாற்றுடனும் சிவ அடையாள நம்பிக்கைகளுடனும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த ஒதியமலை வைரவர் ஆலய வளாகத்தில் இப்போது புத்த சமய அடையாளங்கள் திணிக்கப்பட்டு வருகிறன்றன என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர் பூர்வீக இடங்களிலும் பௌத்தம் தவிர்ந்த மதங்களிலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் திணிக்கும் செயல்களுள் ஒதியமலை வைரவர் ஆலய வளாகமும் தற்போது உள்வாங்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 1984 மார்கழி மாதம் 32 தமிழரை படுகொலை செய்து தமிழர் தேசங்களை உலுக்கிய ஒதியமலை படுகொலை நிகழ்ந்ததன் பின்னர் அவ்விடங்களை விட்டு வெளியேறிய ஒதியமலை மக்கள் 2010ஆம் ஆண்டில் மீள்குடியேற்றப்பட்டு தமது நாளாந்த வாழ்க்கை செயன்மு…
-
- 0 replies
- 402 views
-
-
இரணைமடு குடிதண்ணீர் திட்டத்து நிதியை திரும்பப் பெறுகின்றது பிரான்ஸ் நிறுவனம் news இரணைமடு குடிதண்ணீர் திட்டத்துக்கு நிதி வழங்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம், திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்திருந்த 5 ஆயிரத்து 232 மில்லியன் ரூபா நிதியைத் திரும்பப் பெறப்போவதாக அறிவித்துள்ளது. அது குறித்து வடக்கு மாகாண சபையின் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது. இரணைமடுக் குடிதண்ணீர்த் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதில் ஏற்படும் கால தாமதம் மற்றும் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை என்பவற்றை அடுத்தே நிதியை மீளப் பெற்றுக் கொள் வதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது என்றும் அறியமுடிகின்றது. இந்தத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 7 ஆயிரத்து 630 மில்லியன் ரூபாவு…
-
- 0 replies
- 545 views
-
-
முள்ளிவாய்க்கால் எலும்புக்கூடுகளை தோண்டப் போகிறாராம் நவநீதம்பிள்ளை! - சிங்களப் பத்திரிகை பீதியைக் கிளப்புகிறது. [Friday, 2014-06-20 09:15:30] இலங்கையில் போர் நடந்த காலத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளை தோண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நந்திக்கடல் மற்றும் வெள்ளமுள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் மனித புதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரணை நடத்தும் முனைப்புக்களில் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளார். குறித்த இடங்களில் காணப்படும் மனித புதைகுழிகளை தோண்டும் நோக்கில் பிரதிநிதிகள் குழுவொன்றை இலக்கைக்கு அனுப்பி வைக்க நவநீதம்பிள்ளை முயற்சித்து வருகின்றார். இந்த நோக்கத்திற்காகவே விசாரணைக…
-
- 0 replies
- 514 views
-
-
"சிலர் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை பகை முரண்பாடாக விவாதிக்கிறார்கள்" கவிஞர் ஜெயபாலன்: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பிரபல தென்னிந்திய நடிகரும் ஈழத்துக் கவிஞருமான வ.ஐ.ச. ஜெயபாலன் தெரிவித்தார். இது தொடர்பில் வ.ஐ.ச. ஜெயபாலன் குளோபல் தமிழ் செய்திகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்தாவது: உலகத் தமிழர்களே தமிழ் நாடு தமிழ் உணர்வாளர்களே தமிழக அரசியல் கட்சிகளே இந்திய முற்போக்காளர்களே பொதுபல சேன போன்ற இலங்கை சிங்கள பெளத்த பாசிச சக்திகள் அழுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள இன அழிப்புத் தாக்குதல்களுக்கு எதிடராக குரல் கொடுங்கள். மேற்க்கு நாடுகளிலும் மத்தியகிழக்கிலும் வாழும் தமிழரும் முஸ்…
-
- 54 replies
- 3.2k views
-
-
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை அதீத வெற்றியை பெற்றுள்ளது. யாழ்.மாவட்டத்தில் பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி பார்த்தீனியம் விலைக்கு பெறப்பட்டு எரித்தழிக்கும் நடவடிக்கை வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 10,000 கிலோ கிராம் பார்த்தீனியம் பெறப்பட்டு அழிக்கப்பட்டது. இதனடிப்படையில் பார்த்தீனியம் ஒழிப்பு வெற்றியும் கண்டுள்ளது. எனவே எதிர்வரும் வாரமும் தொடர்ந்தும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த வாரம் 37பேர் பார்த்தீனியத்தை விற்பனை செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் 500 கிலோ கிராமுக்கு மேற்பட்ட பார்த்தீனியத்த…
-
- 2 replies
- 550 views
-
-
சமூக சேவைகள் மற்றும் பொதுநோக்கு வேலைத்திட்டங்களில் முன்னாள் போராளிகளேஅதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். அத்துடன் தாம் செய்யும் வேலைகளைச் செம்மையாகவும் வினைத்திறனுடனும் செய்கின்றனர் என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பாதீனியம் ஒழிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ பாதீனியத்துக்கு 10 ரூபா என்று பணம் கொடுத்துக் கொள்வனவு செய்யும் திட்டமொன்றை வடமாகாண விவசாய அமைச்சு முன்னெடுத்து வருகிறது. இதன் முதற்கட்ட நடவடிக்கையில் பங்கேற்றவர்களுக்குப் பணம் வழங்கும் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ. ஐங…
-
- 4 replies
- 584 views
-
-
அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம்கள் கடையடைப்பை மேற்கொண்டனர். இராணுவத்தினர் கெடுபிடிகளை மேற்கொண்டபோதும் எதிர்ப்புக்களை மீறி கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிநது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, களுத்துறை மாவட்டம் பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையின் பல பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் கண்டனப் போராட்டங்களையும் கதவடைப்புப் போராட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றனர். இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இன்று கதவடைப்பை மேற்கொள்வதென தீர்மானித்த யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் இது தொடர்பிலான து…
-
- 1 reply
- 763 views
-
-
தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி வவுனியா நகர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பேரணி பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியா நகரில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் முஸ்லிம் கடைகள் மாத்திரமே பூட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முஸ்லிம் வர்த்தகர்களும் பள்ளிவாசல் தலைவர்களும் நகர்ப் பகுதியில் நடத்தினர். இவர்கள் ஊர்வலமாகச் சென்று வவுனியா பஸ் நிலையத்துக்கு அருகில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்த முற்பட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியாவில் அனைத்துச் சமுகத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். அந்த அமைத…
-
- 0 replies
- 346 views
-
-
(அளுத்மகக்கு சர்வதேச விசாரணை தேவை, முள்ளிவாய்க்காலுக்குத் தேவையில்ல! அதுவேற, இது வேற!) இலங்கையில் வெட்கப்படும் அமைச்சு எண்டு ஒரு அமைச்சுப் பதவி இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியும். ஆனா அதில கணபேர் அமைச்சராய் இருக்கினம். ஹக்கீம் நானா முதல்ல தான் அமைச்சராய் இருப்பதற்கு வெட்கப்படுவதாக சொன்னார். இப்ப ரிசாத் பதியூதினும் தானும் வெட்கப்படுவதாக சொல்லுறார். பொதுவா வேற விடயங்களுக்குத்தான் வெட்கப்படுவினம். ஆனால் இவையள் கொஞ்சம் வித்தியாசம் அமைச்சராய் இருக்கிறில வெக்கப்படுறினம். இனி துக்கப்படுவினம். பிறகு துயரப்படுவினம். இத்தின பட்டும் அமைச்சுப் பதவியள விட்டு மட்டும் விலக மாட்டினம். ஹக்கீம் நானாவும், ஒரு ரிசாத் பதியூதின்தான், ஒரு அத்தாவுல்லாதன், ஒரு கிஸ்புல்லாதான், ஒரு டக்கிளஸ்…
-
- 2 replies
- 936 views
-
-
தமிழக கடற்தொழிலாளர்கள் 42 போ் சிறீலங்கா கடற்படையினரால் கைது! ஜூன் 19, 2014 பாக்கு நீரினை கடற்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களில் 42 பேரை சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். யாழ்ப்பாணம்,மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 42 இந்திய மீனவர்கள் இன்று சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை, இராமேஸ்வரம் பகுதிகளிலிருந்து இருந்து கடற்றொழிலுக்காகப் புறப்பட்ட மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். தலைமன்னார் கடற்பரப்பில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 13 பேர் 3 படகுகளுடனும், நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 29 பேர் 6 படகுகளுடனும் சிறீலங்கா கடற்படையினரால் …
-
- 5 replies
- 470 views
-
-
இலங்கை நிலைமை கவலை தருகின்றது; அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் கூறுகின்றன news இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிய, வெறுப்புணர்வுகளைத் தூண்டும் செயற்பாடுகள் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளன. தென்னிலங்கையில் அளுத்க மவிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும், கடந்த 15ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் யஇக்கி, "மதச் சிறுபான்மையர்களைப் பாதுகாக்க இலங்கைக்கு இருக்கும் கடப்பாடுகளை அது நிறைவேற்ற வேண்டும். அத்துடன், நடந்த வன்செயல்கள் குறித்து முழு விசாரணை தேவை'' என்று வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் இந்த வன்முறைகள் குறித்துத…
-
- 3 replies
- 547 views
-
-
இலங்கையில் ஐ.நா. விசாரணையை நடத்துவது குறித்து ஆராயும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் பணியாற்றும் தெற்காசியாவுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அதுல் கேசாப் இன்று இலங்கை வந்துள்ளார். இலங்கை வந்துள்ள அவர் அரச, எதிர்க்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். இதன்படி இன்று முற்பகல் 11 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்…
-
- 0 replies
- 478 views
-
-
அளுத்கம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த ஆர். விஜேசேகர இடம்மாற்றப்பட்டு புதிய பொறுப்பதிகாரியாக கே.ஏ. ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர். விஜேசேகர பொறுப்பதிகாரியாக இருந்த போதே அளுத்கம பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெற்றது. எனினும் குறித்த அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கும் நிலையிலேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://virakesari.lk/articles/2014/06/19/%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE…
-
- 1 reply
- 335 views
-
-
அளுத்கம விவகாரம் தொடர்பில் நேற்று பிரதமர் டி எம் ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றி கலந்து கொண்டு அஸ்வர் எம். பி உரையாற்றினார். அவர் தனதுரையின் போது மேலும் தெரிவித்ததாவது; அளுத்கம சம்பவமானது ஒரு துரதிஷ்டமானது இதனை குறுந்தகவல் மூலமாக சர்வதேச மயப்படுத்தி அரசை வீழ்த்த உள்ளூர் சக்திகள் முற்படுவதாகவும் எனவே இதில் இருந்து ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இவாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்தார். http://metromirror.lk/?p=36401
-
- 2 replies
- 493 views
-
-
இலங்கை முஸ்லிம்களுக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: கருணாநிதி புதன்கிழமை, 18 ஜூன் 2014 13:52 இலங்கையில் தாக்குதலுக்கு ஆளாகும் முஸ்லிம்களைப் பாதுகாக்கும் வகையில்இந்திய மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக்கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையினரான தமிழர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே தொடர்ந…
-
- 9 replies
- 890 views
-
-
இலங்கைக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்ற பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய பிரச்சினைகளை விசாரிக்க, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் பிரேரணையொன்றை சமர்ப்பித்திருந்தனர். இந்த பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவேண்டும் என்று கட்சித்தலைவர்கள் கூட்டத…
-
- 1 reply
- 596 views
-
-
தமிழ் ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட செயலமர்வை பாதகாப்பு அமைச்சு ரத்து செய்ததன் பின்னணி என்ன என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். ட்ரான்பெரான்ஸி இன்டர்நெசனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் அண்மையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்காக புலனாய்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பில் இரண்டு செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு செயலமர்வுகளும் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. சட்டரீதியான ஓர் ஊடகச் செயலமர்வினை பலவந்தமான முறையில் ரத்து செய்வதன் சட்டப் பின்னணி என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த இரண்டு செயமலர்வுகளும் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கு அமையவே ரத்து செய்யப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எந்த அதி…
-
- 0 replies
- 494 views
-
-
tnaவல்வை நகர சபையில் நிர்வாகச் சீர்கேடுகள் நிலவுவதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் மட்டத்திலோ அல்லது மாகாண உறுப்பினர்கள் மட்டத்திலோ விசாரணைகளை நடத்தி சபையின் நிர்வாகம் சீரான முறையில் இடம்பெறுவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா வேண் டுகோள் விடுத்துள்ளார். அவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள் ளார். அக் கடிதத்தில், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்…
-
- 0 replies
- 479 views
-
-
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உயிரிழந்த மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப் மூலம் பார்த்த பரிதாப சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சீமோன்பிள்ளை மற்றும் எலிசபெத் 1990 ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்தினருடன் வேலூர் மேல்மொணவூர் அகதிகள் முகாமுக்கு சென்றனர். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். 2 ஆவது மகன் லியோசின் 30 வயது . இவர் கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடல்மார்க்கமாக சென்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த மாதம் முதலாம் திகதி காலையில் லியோசின் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்தியாவிலுள்ள லியோசினின் பெற்றோருக்கு தகவல் க…
-
- 0 replies
- 574 views
-