ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
அல்லைபிட்டி 2ஆம் வட்டாரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குழு மோதலில் 6 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யும் நபர் பற்றி பக்கத்து வீட்டார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதால் குறித்த குடும்பத்தினரை இவர்கள் தாக்கியதாகவும், இந்த மோதல் சம்பவத்தில் 6 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதுடன் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மோதல் சம்பவத்தில் அல்லைப்பிட்டி 2 ஆம் வாட்டாரத்தை சேர்ந்த எ.சதீஸ் (வயது 25), நிசாந்தன் (வயது 25), ஜெரின் (வயது 24), ரெமிசியன் (வயது 35), ஜோரின் (வயது 23), பைசா (வயது 22) ஆகியோரே சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையி…
-
- 0 replies
- 316 views
-
-
JVP தலைவர் அநுர குமார எச்சரிக்கை:- மக்களின் எதிர்ப்புகள் வரும்போது அதனைத் தடுத்து தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ஆயுதமாக இனவாதத்தை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமது கட்சி அரசியலில் இருக்கும் வரைக்கும் நாட்டில் இனவாத மோதல் ஏற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார். நாரஹேன்பிட்டியிலுள்ள பீ.ஆர்.சி. மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஜே.வி.பி.யின் செம்மேதினக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினரும் தொழிற்சங்கங்களின் மத்திய நிலையத்தின் தலைவருமான லால்காந்…
-
- 0 replies
- 592 views
-
-
கொழும்புக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டவர் கொழும்பு மேல்நீதிமன்றினால் விடுதலை! [Friday, 2014-05-02 09:15:54] கொழும்பில் 2007-2008ம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இராணுவ அதிகாரிகளின் மரணத்திலும் தொடர்புடையவரென பொலிசாரினால் குற்றம்சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பத்மநாதன் ராஜீவ் என்பவர் மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பத்மநாதன் ராஜீவ் ஆறுவருட சிறைவாழ்க்கையிலிருந்து விடுதலையானார். புறக்கோட்டை, றெக்ளமேசன் வீதி, முதலாம் குறுக்குத் தெருவில் 24-05-2007ல் பஸ் வண்டியில் நடாத்திய குண்டு வெடிப்பில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டு 15 பொது மக்கள் படுகாயமடைந்தமை,…
-
- 3 replies
- 363 views
-
-
'இனப்படுகொலையில் - அரசியல் தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டெழுவது கடினம்' இலங்கையில் நடக்கும் அரச செயற்பாடுகள் இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலே.ஆனால் இதனை சர்வதேச விசாரணையுடன் தொடர்புபடுத்துவதில் சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன. இலங்கைப்பாராளுமன்றத்திலேயே இங்கு நடப்பது இனப்படுகொலையே என்பதை நானும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ்பிறேமச்சந்திரனுமே பேசியிருந்தோமென்பதை மறக்க கூடாதென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கை அரசு சர்வதேச விசாரணையாளர்கள் இங்கு வர அனுமதி மறுத்தாலும் சர்வதேச ரீதியினில் விசாரணைகள் நடக்கும். ஏற்கனவே பல நாடுகள் தொடர்பில் அவ்வாற…
-
- 0 replies
- 646 views
-
-
பாப்பரசர் பிரான்சிஸ் ஜனவரி 13ம் திகதி இலங்கைக்கு விஜயம்! [Wednesday, 2014-04-30 09:22:24] கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ், அடுத்த வருடம் ஜனவரி 13ம் திகதி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையின் உள்ளூர் தேவாலயங்களினதும், அரசாங்கத்தினதும் அழைப்பை ஏற்று பாப்பரசரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. இலங்கையிலுள்ள தேவாலயங்களுக்கான அதிகாரபூர்வ பேச்சாளர் வண.பிதா பெனடிக்ட் ஜோசப், பாப்பரசரின் இலங்கைக்கான பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.எனினும், பாப்பரசரின் பயண நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாப்பரசர் தனது இலங்கை பயணத்தின் போது, மடு தேவாலயத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்றும், உள்நாட்டில் இடம்பெ…
-
- 3 replies
- 525 views
-
-
தேர்தலுக்கு முன் துதி – தேர்தலுக்குப் பின் நிந்தனை: மகிந்த சிந்தனையை அடியொற்றி வெளிப்பட்டது விக்னேஸ்வர ‘சிந்தனாவ’! மே 2, 2014 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை சர்வாதிகாரியாக வர்ணித்து வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மே தின உரையாற்றியிருப்பது உலகெங்கும் பரந்து வாழும் பத்துக் கோடித் தமிழர்களையும் கடும் சீற்றத்திற்கு ஆளாக்கியிருக்கின்றது. கடந்த ஆண்டு வட மாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைகளின் பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை ‘மாவீரன்’ என்று வர்ணித்து யாழ்ப்பாண மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு முதலமைச்சராக ‘அரியாசனம்’ ஏறிய விக்னேஸ்வரன், நேற்று 01.05.2014 வியாழக்கிழமை ஆற்றிய மே தின உரையில் ‘ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் …
-
- 2 replies
- 753 views
-
-
http://www.youtube.com/watch?v=Li3XdAJkD3Q&feature=youtu.be
-
- 0 replies
- 447 views
-
-
மாத்தளை மனித எலும்புக் கூடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன 02 மே 2014 மாத்தளையில் மீட்கப்பட்ட பாரியளவிலான மனித எலும்புக் கூடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாத்தளை மாவட்ட நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளது. மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் பாரியளவில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன. இந்த எலும்புக் கூடுகள் எந்தக் காலத்திற்கு உரியவை என்பது குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க ஆய்வகமொன்றுக்கு குறித்த எலும்புக் கூடுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. எலும்புக் கூடுகளை அமெரிக்காவின் புளொரிடா தொல்பொருள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்குமாறு மாத்தளை நீதவான், குருணாகல் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் அஜ…
-
- 0 replies
- 393 views
-
-
இலங்கையில் ஆறு ஆண்டுகளில் 11,531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள்! - திடுக்கிடும் புள்ளிவிபரம். [Friday, 2014-05-02 10:06:30] இலங்கையில் கடந்த ஆறு ஆண்டுகளில் பெண்கள் மீது 11,531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2007ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவங்கள் தொடர்பில் 12,229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயிரம் பெண்களில் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் வடக்கில் 119 பாலியல் வன்முறைச் சம்பவங்களும், 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் 256 சம்பவ…
-
- 0 replies
- 346 views
-
-
தமிழ்த்தேச தொழிலாளர் எழுச்சி நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்த்தேச தொழிலாளர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 01.05.2014 வியாழக்கிழமை, நெல்லியடி சாமியன் அரசடி வைரவ கோவில் முன்றலில் இடம் பெற்றது. இதில் பெருந்திரளான மக்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பங்கேற்றனர். நிகழ்விற்கு முன்பாக கொடிகாமம் வீதியிலிருந்து ஊர்வலம் இடம் பெற்றது. ஊர்வலத்தின் போது... இராணுவமே வெளியேறு! அரசியல் கைதிகளை விடுதலை செய்! தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மீதான அடக்கு முறைகளை நிறுத்து! தாயகம்,தேசியம்,சுயநிர்ணயத்தை அங்கிகரி! சர்வதேச கண்காணிப்பில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும்! இன அழிப்பிற்கு பக்க சார்பற்ற விசாரனை வேண்டும்! …
-
- 0 replies
- 344 views
-
-
கிளிநொச்சி அறிவியல் நகரில் பாற்பொருட்கள் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (29.04.2014) வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனைத் திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இவற்றைக் கருத்திற்கொண்டு ஐ.ஓ.எம் எனப்படும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அவுஸ்ரேலிய அரசின் நிதியுதவியுடன் சகல வசதிகளுடனும் கூடியதாக இந்தப் பால் உற்பத்தி நிலையத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. கரைச்சிப் பிரதேச கால்நடை…
-
- 9 replies
- 784 views
-
-
மாணவிகளுக்கு இராணுவம் பாலியல் தொல்லை மாணவிகளின் முன் கீழ் ஆடையைக் அவிழ்த்து நிற்கும் படையினர் - 30 ஏப்ரல் 2014 மாணவிகளுக்கு இராணுவம் பாலியல் தொல்லை மாணவிகளின் முன் கீழ் ஆடையைக் அவிழ்த்து நிற்கும் படையினர் - கிளிநொச்சி முறிப்பு பகுதியில் உள்ள தெருவோரமாக முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அந்த வழியால் போய்வரும் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அங்கிருந்து மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குறித்த வழியால் பயணம் செய்;யும் மாணவிகள் பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி முறிப்பு, கோணாவில் முதலிய பகுதிகளை அண்டி இராணுவத்தினர் காவலரண்களை அமைத்துள்ளனர். இந்த வழி மக்கள் போக்குவரத்து குறைவாக காணப்படும் பகுத…
-
- 2 replies
- 962 views
-
-
-எஸ்.குகன் எமது சமூகத்திலுள்ள பெற்றோர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணிகளால் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இருந்தும் எம்மால் முடிந்தவரை இவ்வாறான சூழ்நிலைகளில் வாழ்கின்ற குழந்தைகளை அரவணைத்து, அவர்களுக்கான வசதி வாய்ப்புக்களை வழங்கி சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் என நேட்டோ நிறுவனத் தலைவர் செல்வராசா பத்மநாதன் (கே.பி) தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே கே.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது, 'அன்பு குழந்தை…
-
- 2 replies
- 516 views
-
-
மகிந்த அரசுக்கு கொண்டாட்டம் மக்களுக்கு திண்டாட்டமான காலம் என வவுனியாவில் வானைப்பிளக்கும் கோசங்கைள எழுப்பியவாறு மே தின ஊர்வலம் இடம்பெற்றது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியுடன் இணைந்து சுதேசிய சிறு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம், வவனியா சிறு வியாபாரிகள் சங்கம், வவுனியா நன்னீர் மீனவர் கூட்டுறவுச் சங்கம் ஸ்ரீலங்கா ஜனரய சுகாதார சேவைகள் சங்கம், வீதிப் பராமரிப்புத் தொழிலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தொழிலார்கள், தேசிய கலை இலக்கியப் பேரவை, மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, என்பன ஏற்பாடு செய்திருந்த இவ் ஊர்வலத்தில் அரசியல் கைதிகளை வாசாரணை செய் அல்லது விடுதலை செய், வடக்கு கிழக்கில் அவலப்படும் எண்பதனாயிரம் விதவைகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கு,…
-
- 1 reply
- 421 views
-
-
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை விடுதலைப் புலி உறுப்பினர்கள் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ள நாடுகளிடம் விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். முக்கிய புலி உறுப்பினர்கள் மறைந்திருக்கும் பதினெட்டு நாடுகளுக்கு ஏற்கெனவே புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலி உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து இந்த நாடுகளுக்குத் தெளிவ…
-
- 1 reply
- 630 views
-
-
தெஹியத்தகண்டிய ஹேனானிகல பிரதேசத்தில் ஆதிவாசிகளின் தலைவராக இருந்த கலுஅப்பு காலமாகும் போது 114 வயதடைந்திருந்ததோடு 14 பிள்ளைகளின் தந்தையாகவும் இருந்தார். இவருக்கு நான்கு தலைமுறையைச் சேர்ந்த பேரன் பேத்திகள் 105 பேர் உள்ளனர். முன்னர் ஆதிவாசிகளின் புராதன வசிப்பிடமான தம்பானையில் வசித்த இவர் மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணி வழங்கப்பட்டு ஹெனானிகலையில் குடியேறி உள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை இவரது இறுதிக் கிரியைகள் இடம்பெற உள்ளன. http://www.virakesari.lk/articles/2014/05/01/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E…
-
- 0 replies
- 454 views
-
-
பயங்கரவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டமானது தற்போது சாதாரண மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுவதால், அதில் உடனடியாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படவேண்டும் என்றும், அதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரி வடமாகாண சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலை மைத்துவச் சபை உறுப்பினரான லக்ஷ்மன் கிரியயல்ல மேற்கண்டவாறு கூறினார். போர்க் காலத்தில் சில சட்டங்கள் இறுக்கமாகக் கடைப்பிடிக் கப்பட்டன. தற்போது யுத்தம் முடிவு…
-
- 0 replies
- 455 views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையானது நல்லிணக்க முனைப்புக்களை மேலும் பாதிக்கும் என கனடா அறிவித்துள்ளது. 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி வருவதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் தடை கனடாவில் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் கருத்துக்களை வெளியிட கனடாவில் எவ்வித தடையும் கிடையாது என அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள கனேடியர்களிடம் கேள்வி எழுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. த்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களில் புலம்பெயர் …
-
- 0 replies
- 336 views
-
-
கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின விழா இன்று வியாழக்கிழமை எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது. ஸ்கந்தபுரத்தில் அமைந்துள்ள கரைச்சி பிரதேச சபையின் வளாகத்தில் அப்பிரதேச சபையின் உறுப்பினர் சு.தயாபரனின் தலைமையில் நடைபெற்ற இத் தமிழ்த் தேசிய மேதின விழாவில் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்கள் அ.பசுபதிப்பிள்ளை மற்றும் ப.அரியரத்தினம், கரைச்சி பிரதேச சபைத் தலைவர் நா.வை. குகராஜா, மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தலைவர் அ.தனிநாயகம் ஆகியோருடன் விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பெருமளவானோர்…
-
- 0 replies
- 278 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சியை, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தடுத்து வருவதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தல் உள்ளிட்ட சில யோசனைத் திட்டங்கள் அமைச்சர்களினால் முன்வைக்க்பபட்டது என அவர் குறி;ட்டுள்ளார். தாம் உள்ளிட்ட சில அமைச்சர்களினால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் கருத்துக்களுக்கு ஜனாதிபதி கூடுதல் ம…
-
- 0 replies
- 205 views
-
-
இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புகளும் தமிழகக் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சேர்ந்தவராகக் கருதப்படும் ஒரு நபர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 37 வயதான ஜாகிர் ஹுசைன் என்ற இந்த நபர் இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமையன்று கைதுசெய்யப்பட்ட இவர் ஒரு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சில கள்ளநோட்டுகளும் வரைபடங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிகிறது.பயங்கரவாத அமைப்பிற்காக தமிழகத்தில் ஆட்சேர்ப்புப் பணியில் ஜாகிர் ஈடுபட்டிருந்ததாக மத்திய புலனாய்வு அமைப்புகள் கொடுத்த தகவலையடுத்து, தமிழ்நாடு காவல்துறையில் அடிப்படைவாத இயக்கங்களைக்…
-
- 2 replies
- 587 views
-
-
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் குண்டு புரளியை கிளப்பிய பிரித்தானியருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை! [Thursday, 2014-05-01 09:35:15] லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் குண்டு புரளியை கிளப்பிய பிரித்தானிய பிரஜைக்கு மூன்று ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ம் திகதி கொழும்பில் இருந்து லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் குண்டு இருப்பதாக புரளியை கிளப்பியமைக்காக எலன் படேய் என்ற பிரித்தானியரும், மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் எலன் படேய் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது, மற்றையவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். குறித்த அவரது வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட போதே மேற்கூறியவாறு…
-
- 1 reply
- 369 views
-
-
http://www.youtube.com/watch?v=tbjmhMB4l4Q&feature=youtu.be
-
- 0 replies
- 404 views
-
-
கோபி, அப்பன், தேவிகனை சுட்டுக்கொன்ற தாக்குதலுக்காக 8 இராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு விருது! Top News [Thursday, 2014-05-01 09:38:28] கோபி, அப்பன் மற்றும் தேவிகன் ஆகிய மூவரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திறமையாகச் செயற்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர்கொடுக்க முனைந்தவர்கள் என்று குற்றம்சாட்டி, தேடப்படுவதாக புலனாய்வுப் பிரிவினரால் அறிவிக்கப்பட்ட இவர்கள் மூவரும், ஒரே நேரத்தில் தப்பிச்செல்ல முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக படைத்தரப்பு அறிவித்தது.இச்சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் திகதி நெடுங்கேணி, வெடிவைத்தகல்லு காட்டுப் பகுதியில் இடம்பெற்றது. இந்த நிலையில், மூவரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திறமை…
-
- 0 replies
- 489 views
-
-
யாழில் இராணுவத்திற்கான ஆட்பிடிப்பும் சலுகைகளுக்கு விலைபோன பிரமுகர்களும்- குளோபல் தமிழ்ச் செய்திகள்: வடக்கில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு என்ற வகையில் மேற்கொள்ளப்படும் ஆட்கொள்ளைக்கு பலவிதமான பேரங்கள், சலுகைகள் பேசப்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் விநியோகத்திற்கான அனுமதிப்பத்திரம், சாராய பார் அனுமதிப்பத்திரம், மசாச் கிளப் அனுமதிப்பத்திரம் எனப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டே ஆட்சேர்ப்பிற்கான முகவர்கள் செயற்பட வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வடமாராட்சி நெல்லியடிப் பிரதேச இரும்பு மதவடியைச் சேர்ந்த ஒருவரே முக்கியமானவராக செயற்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய …
-
- 0 replies
- 615 views
-