Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா பொதுச்சபைத் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்:- 18 ஏப்ரல் 2014 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டொக்டர் ஜோன் வில்லியம் ஆசீ (John William Ashe) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். 2014ம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பின் மிக முக்கியமான அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுச் சபையில் சகல உறுப்பு நாடுகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி அஹமட் அல்தவானி மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்களின் ஏனைய பல முக்கியஸ்தர்களும் மாநாட்டில் பங்கேற்ற உள்ளனர். ஹம்பாந்தோட்டை மாகம்புர சர்வதேச மாந…

  2. சிவா சிவானந்தன்:- முப்பது வருட யுத்தம் அது தந்துள்ள வலி என்பவற்றினை தாண்டி எமது மக்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து நான் இங்கு வரும் போது சந்தேகத்துடனேயே வந்தேன். 'மக்களின் மனநிலை எவ்வாறிருக்கும்?', மனதளவில் அவர்கள் உடைந்திருபார்களா? என்று சிந்தித்துக் கொண்டே வந்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்தபோது என்னால் நம்பமுடியவில்லை. மக்கள் எம்மால் முடியும் என்ற வைராக்கியத்தோடு பேசுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றதென தெரிவித்துள்ளார் அமெரிக்கப் பேராசிரியரும் - அமெரிக்க அரசின் அதியுயர் விருது பெற்ற தமிழருமான சிவா சிவானந்தன். நேற்று கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும…

  3. மன்னார் கூராய்கிராமத்தில் தென்பகுதியை சேர்ந்த சிங்களவர் ஒருவர் அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்தி போலி அனுமதிப்பத்திரத்தை தயார் செய்து மண் அகழ்வில் ஈடுபட்டு வருகிறார் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். குருணாகலை சேர்ந்த யூட் மாக்கஸ் பேனாண்டே என்ற சிங்களவரே என்பவரே சட்டவிரோதமாகவும் பலவந்தமாகவும் மண்அகழ்வில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. கூராய் கிராமத்தில் ம.சண்முகராசா, சி.புவனேஸ்வரன் ஆகியோருக்கு வயல் காணிகள் முறையே எல்.டி.ஓ 60, எல்.டி.ஓ 56 இலக்க வயல்காளுக்கான அனுமதிபத்தரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் தென்பகுதியை சேர்ந்த இந்த சிங்கள நபர் தன்னிச்சையாக அரசியல்வாதிகளின் செல்வாக்கினை பயன்படுத்தி கூராய் மக்களுக்கு சொந்தமான காணியில் வேறுஇடங்களில் அகழ்வு செய்யப்படும…

    • 0 replies
    • 339 views
  4. கையில் துப்பாக்கி கற்களுடன் ஆளும் தரப்பு குண்டர்கள் - 2ஆம் இணைப்பு:- 2ஆம் இணைப்பு:- கையில் துப்பாக்கி கற்களுடன் ஆளம் தரப்பு குண்டர்கள் - ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. தாக்குதல் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். ஹம்பாந்தோட்ட துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை பார்வையிடச் சென்ற ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மீது நேற்று (17) தாக்குதல் நடத்தப்பட்டது. தெற்கு விமான நிலையம் துறைமுகம் பார்க்கச் சென்ற ஐதேகவினர்மீது காவற்துறையினர் பார்த்திருக்க தாக்கு…

  5. வடக்கில் இராணுவத்தை வைத்திருக்கவே “ புலிவருது” நாடகம் அரசால் அரங்கேற்றம்; சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு ரொஷான் நாகலிங்கம் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசு இனியும் தொடர்ந்தால் சர்வதேசத்தின் உதவியை இன்னும் அதிகமாக நாட வேண்டியேற்படுமென எச்சரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்காதிருப்பதற்காக “புலிவருது” நாடகத்தை அரசு அரங்கேற்றி வருவதாக குற்றஞ்சாட்டியதுடன், அரசின் இந்த நாடகத்திற்கு அமைவாக தமிழ் இளைஞர்கள் நடந்து கொள்ளக் கூடாதெனவும் கேட்டுக்கொண்டார். அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்…

    • 0 replies
    • 358 views
  6. ஒலுவில்லில் நடந்த ஆர்ப்பாட்டம் இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டம் ஒலுவில் பிரதேச முஸ்லிம்கள் வியாழக்கிழமை இரவு கடற்படையினருக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் இருக்கும் பாடசாலை கட்டிடமொன்றில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்பாட்டத்தின் போது அவர்களால் முன் வைக்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை இரவு அந்த பிரதேசத்தில் இடம் பெற்ற சம்பவமொன்றை அடுத்து பொது மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் எதிரொலியாகவே வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி இந்த ஆர்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. வியாழனன்று இரவு வீடொன்றிற்குள் நுழைந்து பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படு…

  7. குளோபல் தமிழச் செய்திகளின் விசேட செய்தியாளர் - 2ஆம் இணைப்பு:- புகைப்படம்: கிளிநொச்சி சிவபுரம்:- 17-04-2014 - 19:14am கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டு திட்ட நடவடிக்கை பாதிக் கட்டத்தையும் தாண்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இன்று நடந்த கலந்துரையாடலில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏழாயிரம் வீடுகள் இந்திய வீட்டுத்திட்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டன. அவற்றில் இதுவரையில் மூவாயிரம் வீடுகளே கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அவற்றில் பல வீடுகள் இன்னமும் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள …

    • 0 replies
    • 342 views
  8. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்:- விவசாயிகளிடம் அனுபவ அறிவும் தலைமுறை தலைமுறையாகத் திரண்டு வந்த பாரம்பரிய அறிவும் உள்ளது. இவர்களின் இந்த அறிவு, பல்கலைக்கழக ஆய்வாளர்களின் அறிவைவிட குறைந்தது இல்லை என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை (17.04.2014) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மண்டபத்தில் விவசாயிகளுடனான தொடர்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் விவசாய தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானக் கற்கைகள் நிறுவனமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும், வடமாகாண விவசாய அமைச்சும் இணைந்து நடாத்திய இந்நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து அறிமுக உரை…

    • 0 replies
    • 390 views
  9. வடக்கிலும் கிழக்கிலும் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக நீடித்த புலிவேட்டை, மூன்று பேரின் மரணங்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் பளைப் பகுதியில் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் துண்டுப்பிரசுரங்களுடன் தான் இந்தப் புலிவேட்டை ஆரம்பிக்கப்பட்டது. முதலில் கோபி என்ற செல்வநாயகம் கஜீபனைத் தேடுவதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அறிவித்தது. அடுத்தடுத்த நாட்களிலேயே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அவரைச் சுற்றிவளைத்தபோது, பொலிஸ் அதிகாரி ஒருவரைச் சுட்டுவிட்டு கோபி தப்பிச் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜெயக்குமாரி என்ற பெண்ணும் அவரது மகள் விபூசிகாவும் பிடிக்கப்பட்டனர். இதனுடன் தேடுதல் வேட்டைகளும் சுற்றிவளைப்புகளும் இராணுவக் கெடுபிடிகளும் ஆ…

    • 0 replies
    • 461 views
  10. இலங்கை ராணுவம் கையகப்படுத்தியுள்ள காணி இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் சீனன்குடாவை அண்மித்த வெள்ளைமணல் கடலோர பகுதியில் பொதுமக்கள் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி விமானப்படையினரால் திடீரென கையகப்படுத்தப்படுவதாக உள்ளுர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மபுள்பீச் தொடக்கம் கருமலையூற்று வரையிலான நிலப்பகுதியை விமானப்படை சுவீகரிப்பதற்கான எல்லைகள் அடையாளமிடப்பட்டு, முட்கம்பி வேலிகளும் போடப்பட்டு, இந்த நிலம் விமானப்படைக்குரியது என்கிற அறிவிப்பு பலகைகளும் அந்த பகுதியில் நடப்பட்டுள்ளன. இந்த காணிகள் எல்லாம் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளாக இருந்தாலும் அந்த காணிப்பிரதேசம் உள்ளுர் மக்களால் கால்நடை வளர்ப்பு , கருங்கல் உடைப்பு மற்ற…

  11. பொது பலசேனாவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கேட்கிறார் அமைச்சர் ரிசாத் பதியூதீன்! [Friday, 2014-04-18 09:17:01] வில்பத்து சரணாலயத்தில் 22 ஹெக்டேயர் காட்டு பகுதியை அழித்து அரபு கொலனி ஒன்றை ஏற்படுத்தி வருவதாக பொதுபல சேனா சுமத்தி வரும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியூதீன், பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனக்கு எதிராக மேற்கொண்டுள்ள அவதூறுக்கு இழப்பீடாக 500 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனக் கோரி பொதுபல சேனாவுக்கு சட்டத்தரணி ஊடாக அறிவிப்பு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 1990 ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் வசித்து வந்த முஸ…

  12. குருநகர் யுவதியின் மரணம் குறித்து உள்ளக விசாரணை நடத்தப்படுவதாக ஆயர் இல்லம் அறிக்கை! [Friday, 2014-04-18 08:59:53] யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கிணறொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மறைக்கல்வி ஆசிரியையான இளம்பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். ஜெரோமி கொன்ஷொலிட்டா என்ற அந்த 22 வயது பெண்ணின் மரணம் தொடர்பில் உரிய சாட்சியங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவர்மீது வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டதற்கான தடயங்களும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆயினும் இந்தப் பெண்ணின் மரணம் தொடர்பில் இரு அருட் தந்தையர்கள் மீது அவருடைய பெற்றோர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர். அவர…

  13. யாழ்ப்பாணத்தில் நடக்கவிருந்த கூட்டமைப்பின் கூட்டுக் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு! – கிழக்கில் இருந்து கிளம்பிய எதிர்ப்பின் எதிரொலி. [Friday, 2014-04-18 08:46:25] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒன்றை நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் நேற்றிரவு கடைசி நேரத்தில் அதனை ஒத்தி வைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இனி, அந்தக் கூட்டத்தை எப்போது, எங்கு நடத்துவது என்பது குறித்து பெரும்பாலும் இன்று அல்லது அடுத்து வரும் நாட்களில் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இனிப் பெரும்பாலும் அந்தக் கூட்டம் திருகோணமலையிலேயே நடக்கும் எ…

  14. போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரின் குடும்பப்படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை! [Friday, 2014-04-18 08:37:09] இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய விவரங்களை பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது.இந்த அமைப்பு வெளியிட்ட விவரங்களில் இலங்கை ராணுவத்தினர் பலரது புகைப்படங்கள் மட்டுமல்லாமல், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்களில் காணப்படுவோர் உண்மையில் இந்தக் குற்றங்களை இழைத்தார்களா என்பது குறித்த ஆதாரம் ஏதும் இருக்க…

  15. (இரண்டாம் இணைப்பு) யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்.இணுவில் பகுதியைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (24) என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (முதலாம் இணைப்பு) யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தினை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞனே நேற்று கற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது யாழ்.மாவட்ட பொலிஸ் ப…

  16. பயங்கரவாதப் பட்டியலில் பொதுபல சேனா அமைப்பை இணைத்தமை சரியானதே பயங்கரவாத ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவகம் (TRAC) தெரிவித்துள்ளது. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடும்போக்குடைய மதவாதக் கொள்கைகளை இந்த அமைப்பு முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது இது தொடர்பிலான வீடியோ மற்றும் ஏனைய ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், சிறுபான்மையினத்தவரின் கடைகள் காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட அமைப்புக்களை அடையாளம் கண்டு அவற்றை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துள்ளதாகவும், இதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் தெரிவித்துள்…

  17. கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள பாட்டுக் குழுக்களில் யுவதிகளை இணைப்பதை தவிர்க்குமாறும் ஆலய கடமைகளில் வயதானவர்களை இணைக்குமாறும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கே.எக்.டக்ளஸ் தேவானந்தாவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக காணப்படும் கிணற்றிலிருந்து கடந்த திங்கட்கிழமை யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (வயது 22) சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் மரணம் தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை இச் சம…

  18. ஆதவன் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 200 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்தார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பகுதியில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்குடன் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்…

  19. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. உடுகம ஸ்ரீ புத்தரகித்தவை சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்டார். இதன் போது புத்தரின் உருவப் படங்கள் பத்திரிகைத் தாள்களில் அச்சிடப் படுவதனால் அவை குப்பை மேடுகளில் வீசப்படுவதுடன் அழுக்குகளை துடைத்தல்போன்ற நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தப்படும் போது புத்தரை அவமானப் படுத்துவதாக அமைகின்றது என மகாநாயக்கத் தேரர் தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து மகாநாயக்க தேரரால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. http://www.virakesari.lk/articles/2014/04/18/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%…

  20. புலிகளின் மீள் உருவாக்கம் என்ற போர்வையில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்திய ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசு தற்பொழுது தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியத்தின்பால் அக்கறை கொண்ட தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்தவித அச்சமும் இன்றி உலகுக்கு வெளிப்படுத்திக்கொண்டு ஈழத்திலேயே ஆதிக்க வெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் சில தமிழ் தேசிய கொள்கைகளை இறுக பற்றி பிடித்து போராடும் பாராளுமன்ற உறுப்பினர்களை குறிவைக்க தொடங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மற்றும் இந்திய அரசுகளால் இணைந்து நடத்தப்பட்ட புலிகள் மீள் வருகை என்னும் நாடகத்தின் தொடர்ச்சி இன்னும் முடியவில்லை இதன் கிளைமக்ஸ் இனித்தான் ஆரம்பம்.தமிழ்தேசிய கூட்டமைப்பின் கடும் போ…

  21. இன்டர்போல் மூலம் 96 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! – 40 பேர் புலிச் சந்தேக நபர்களாம். [Friday, 2014-04-18 10:03:55] புலி சந்தேகநபர்கள் உட்பட பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 96 பேருக்கு எதிராக இன்டர்போலினூடாக சிவப்பு எச்சரிகை அறிவிப்பு (Red Notice) விடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். புலி சந்தேகநபர்கள் 40 பேரும், கொலை, போதைப்பொருள் கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு தேடப்பட்டுவரும் 56 பேரும் இந்த அபாய அறிவிப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். புலி உறுப்பினர்களான விநாயகம், நெடியவன…

  22. இலங்கையில் பிறந்த பிபிசி செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையாவுக்கு புற்றுநோய்! [Friday, 2014-04-18 08:53:20] இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பி.பி.சி உலக சேவையின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 58 வயதான அழகையா நீண்ட காலமாக பிபிசி தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர் விரைவில் செய்தி வாசிப்பினை நிறுத்திக் கொண்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க விவகாரங்களில் சிறப்பு கவனம் செலுத்திய அவர், நெல்சன் மண்டலோ, டெஸ்மன் டுடு மற்றும் ரொபர்ட் முகாபே போன்ற பல முக்கியஸ்தர்களை செவ்வி கண்டுள்ளார். 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் ப…

  23. வன்னி, நுவரெலியாவில் எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! – மாத்தறை, குருநாகலில் குறைகிறது. [Friday, 2014-04-18 10:09:30] 2013ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி நுவரெலியா மற்றும் வன்னி மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை தலா ஒன்றினால் அதிகரித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. இது தவிர குருநாகல் மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும் உறுப்பினர் தொகை தலா ஒன்றினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் மொஹமட் குறிப்பிட்டார். 2013ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின்படி 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பட…

  24. செவ்வாய், ஏப்ரல் 15, 2014 - 13:49 மணி தமிழீழம் | சக்திவேல், தமிழ்நாடு வன்னி யுத்தத்தில் இந்திய இராணுவமும் போரிட்டதாகக் கூறி வழக்குப் பதிவு ஈழத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, இந்தியாவின் இராணுவத்தினரும் போரிட்டதாக தெரிவித்து, இந்திய உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியோ, அல்லது இந்திய ஜனாதிபதியின் அனுமதியோ இன்றி, இலங்கைக்கு எதிராக திறந்த யுத்தம் ஒன்றை பிரகடனம் செய்யாமல், எவ்வாறு இந்திய இராணுவத்தை அங்கு அனுப்ப முடியும் என்று இந்த மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. டெல்கி தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராம் சங்கர் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்…

    • 12 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.